Dec 28, 2012
Dec 11, 2012
Dec 9, 2012
மு.மயூரனின் வலைப்பூவில் இருக்கும் லினக்ஸ் மற்றும் கணினி தொடர்பான கட்டுரைகளின் தொகுப்புகள்
மரியாதைக்குரிய மு.மயூரன் அவர்கள் இலங்கையினைச் சேர்ந்தவர். http://tamilgnu.blogspot.in எனும் வலைப்பூவில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கையில் இருந்து வருகைதந்து தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய செய்தி.
தமிழ் கணினி உலகிற்கு நிறைய பங்களிப்புகளையும் அதையும் தாண்டிய உதவிகளையும் செய்திருக்கிறார் என்பதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி. இவரை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. எனக்கு மு.மயூரன் அவர்களைப் பற்றி தெரிந்த சிறிய விஷயங்களை இங்கு பகிர்ந்துள்ளேன். அவ்வளவுதான்.
நான் இந்த வலைப்பூவைத் தொடங்க காரணமே மரியாதைக்குரிய மு.மயூரன் என்றுகூட சொல்லலாம். இவரினுடைய வலைப்பூவில் இருந்துதான் நமது மரியாதைக்குரிய அமாச்சு என்று அனைவராலும் அறியப்பட்டிருக்கும் இராமதாஸ் அவர்கள் எழுதிய 'கட்டற்ற மென்பொருள்' எனும் புத்தகத்தினைப் பற்றிய தகவலினைப் படித்தேன். இந்த புத்தகமும் நான் வலைப்பூவினை எழுதுவதற்கு பெரும் உந்துசக்தியாக இருந்தது.
மயூரன் அவர்கள் http://tamilgnu.blogspot.in எனும் வலைப்பூவில் லினக்ஸ் தொடர்பாக எழுதி வந்தாலும், அதற்கு முன்பிலிருந்தே லினக்ஸைப் பற்றி எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரினுடைய சொந்த பகிர்தல் தளமான http://mauran.blogspot.com தளத்தில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார். அந்தக் கட்டுரைகள் மிகவும் செறிவு மிக்க, கருத்தாழமிக்கவையாக உள்ளன.
இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்கள் எவ்வவளவு முன்னேற்றத்துடன், அனைத்து வசதிகளுடனும் வெளிவந்துக் கொண்டிருக்கிறது என்பதை அந்தப் பழைய பதிவுகளைப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆகையால் அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் மயூரனின் தொடக்ககால லினக்ஸ் கட்டுரைகளை படித்து அறிந்து தெரிந்து கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து கட்டுரைகளும் படிக்க, படிக்க சுவைக்கும் கட்டுரைகள். கீழிருக்கும் கட்டுரைகளின் இணைப்புகளை நான் அடிக்கடி வாசித்து தெளிந்துக் கொள்வேன். அதற்காகவும் இந்த இணைப்புகளை தொகுத்துள்ளேன்.(இதில் என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. கோபப்படாதீங்க தோழர்களே.)
மயூரன் அவர்கள் http://tamilgnu.blogspot.in எனும் வலைப்பூவில் லினக்ஸ் தொடர்பாக எழுதி வந்தாலும், அதற்கு முன்பிலிருந்தே லினக்ஸைப் பற்றி எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரினுடைய சொந்த பகிர்தல் தளமான http://mauran.blogspot.com தளத்தில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார். அந்தக் கட்டுரைகள் மிகவும் செறிவு மிக்க, கருத்தாழமிக்கவையாக உள்ளன.
இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்கள் எவ்வவளவு முன்னேற்றத்துடன், அனைத்து வசதிகளுடனும் வெளிவந்துக் கொண்டிருக்கிறது என்பதை அந்தப் பழைய பதிவுகளைப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆகையால் அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் மயூரனின் தொடக்ககால லினக்ஸ் கட்டுரைகளை படித்து அறிந்து தெரிந்து கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து கட்டுரைகளும் படிக்க, படிக்க சுவைக்கும் கட்டுரைகள். கீழிருக்கும் கட்டுரைகளின் இணைப்புகளை நான் அடிக்கடி வாசித்து தெளிந்துக் கொள்வேன். அதற்காகவும் இந்த இணைப்புகளை தொகுத்துள்ளேன்.(இதில் என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. கோபப்படாதீங்க தோழர்களே.)
கணினி தொடர்பான கட்டுரைகளையும் தவிர்த்து, சில பொதுவான கட்டுரைகளின் இணைப்புகளையும் இங்கு கொடுத்துள்ளேன். கட்டுரையின் சுவைக்கருதிதான். வேறொன்றுமில்லை.
Labels:
மயூரனின் லினக்ஸ் கட்டுரைகள்,
மயூரன்,
மு.மயூரன்
Dec 5, 2012
LINUX For You (Dec-2012) Magazine -ல் எனது feedback
கடந்த ஐந்து வருடங்களாக நான் LINUX For You Magazine னினுடைய சந்தாதாரராக இருந்துகொண்டிருக்கிறேன். லினக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸை விரும்புகிறவர்களுக்கும் , ஓப்பன் சோர்ஸ் வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ள பிடித்தமான ஒரு இதழ்.
இந்த இதழ் ஆரம்பித்தது 2003-ம் ஆண்டில், ஆனால் நான் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர்ந்தது 2007 ஆம் ஆண்டில்தான். ஒரு முறை புதுக்கோட்டையில் புதிய போருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையில் March-2003 இதழ் ஒன்று கிடைத்தது. அந்த ஒரு இதழில் மட்டுமே லினக்ஸ் தொடர்பாக அவ்வளவு விஷயங்கள் இருந்தது. 2008 ஆண்டு வாக்கில் இந்த பழைய இதழ் கிடைத்தது என நினைக்கிறேன்.
உண்மையிலேயே அந்த பழைய இதழ் கிடைத்ததிலிருந்து நானும் எல்லா பழைய புத்தகக் கடைகளிலும் தேடிப் பார்ப்பேன் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஒரு நாள் முழுவதும் திருச்சியில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் LFY புத்தகத்தை தேடி அலைந்தேன். கிடைக்கவில்லை , கிடைத்தது ஏமாற்றம்தான்.
அது தொடர்பாக LINUX For You Magazine -னினுடைய ஆசிரியரிடமே கேட்டேன். அந்த கருத்துதான் இதழில் வெளியாகியிருக்கிறது.
உண்மையிலேயே அகம் மகிழ்ந்தேன். ஒரு வாசகனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எதுவென்றால் அவன் தொடர்ந்து வாசிக்கும் இதழில் அவனுடைய கேள்வியும், கருத்தும் வெளியிடப்படுவதுதான். அந்த வாசகன் அடையும் மகிழ்ச்சியினை நானும் அடைந்தேன்.
Dec 3, 2012
உபுண்டு 12.04 - Unity 2D -யில் Show Desktop Shortcut Key
உபுண்டு 12.04 LTS Unity 2D சுழலில் Show Desktop க்கான குறுக்கு விசை Ctrl+Win+D.
Ctrl+Super+D என போட்டிருந்தால் , Super=Windows Key
Labels:
Shortcut key,
ubuntu 12.04,
unity,
unity 2d,
உபுண்டு 12.04
Dec 2, 2012
ஒற்றை வரிக் கட்டளையில் LAMP Server -ஐ உபுண்டு 12.04 -ல் நிறுவுதல்
Linux Apache MySQL PHP - என்பதன் சுருக்கமே LAMP ஆகும். LAMP எனபது மிகவும் பிரபலமானதொரு இணையதள உருவாக்க/வடிவமைப்புச் சூழல்.
இதில் Linux என்பது லினக்ஸ் இயங்குதளம் (எந்தவொரு லினக்ஸ் வழங்கலாகவும் இருக்கலாம்), Apache என்பது இணைய வழங்கி(Web Server), MySQL என்பது RDBMS தகவல்தளம், PHP என்பது மாறக்கூடிய இணையப் பக்கங்களுக்கான (Dynamic Web Page)Scripting Language.
LAMP -ல் நாம் நிறுவ வேண்டியவை Apache, MySQL, PHP ஆகியவைகள் மட்டுமே. நம்மிடம்தான் உபுண்டு இயங்குதளம் இருக்கே. இவையனைத்தையும் தனித்தனியாக நிறுவவேண்டியதில்லை, அப்படி நிறுவ முற்பட்டாலும் அது நமக்கு கொஞ்சம் களைப்பான செயலாகத்தான் அமையும் ஆகையால் இவையனைத்தையும் ஒரே வரிக் கட்டளையில் நிறுவ முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா!
ஒற்றை வரி கட்டளையின் மூலம் LAMP Server னை நிறுவக்கூடிய வசதில் உபுண்டு 12.04 LTS - ல் இருக்கிறது. அது எப்படி என பார்ப்போம்.
கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும் அதுதான் இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நான் பாலிடெக்னிக் படித்த காலத்தில் LINUX For You Magazine -ல் மென்பொருள்கள் நிறுவக் கொடுத்திருக்கும் கட்டளைகளை அப்படியே முனையத்தில் தட்டச்சு செய்வேன் ஆனால் மென்பொருள் நிறுவப்படாது. காரணம் தெரியவில்லை, இணைய இணைப்பின் மூலம்தான் இந்தக் கட்டளை வேலை செய்யும் என காலப்போக்கில் தான் எனக்கு தெரியும். இப்பபொழுது இருக்கக்கூடிய இணையவசதியெல்லாம் அப்பொழுது இல்லை. இப்பொழுது இணையவசதியினை மிகவும் எளிதாக GPRS மூலம் லினக்ஸிற்குள் கொண்டு வந்து விடலாம். அறியாத வயசுதானே அத விடுங்க.
முதல் படி:
முனையத்தை திறந்து கொள்ளவும், அதில் கீழ்கண்ட கட்டளைகளைக் கொடுக்கவும்.
sudo apt-get update
sudo apt-get install lamp-server^
கவனிக்க: ^ இந்தக் குறியிடு Keyboard -ல் இருக்கும் Number key - 6 -ல் இருப்பது இதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும்
உங்களின் இணைய இணைப்பின் வேகத்தினைப் பொறுத்து நிறுவுதல் முடியும். நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும். நிறுவுதல் முடியும் தருவாயில் MySQL Database னுடைய root பயனாளருக்கான கடவுச்சொல்(password) கேட்கும், கடவுச்சொல்லை உள்ளிடவும்.
நிறுவுதல் முடிந்தபின் அனைத்தும் சரியாக நிறுவப்பட்டிருக்கிறதா என சோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியமல்லவா!
Apache Server -னை சோதனை செய்து பார்க்க:
முனையத்தில் sudo service apache2 restart கட்டளையினை இயக்கவும். இந்தக் கட்டளையினைக் கொடுத்தவுடன், Apache Server மறுதொடக்கம் செய்யப்படும்.
உங்கள் கணினியில் இருக்கும் ஏதாவதொரு இணைய உலாவியினைத் திறந்து, முகவரிப் பட்டையில் http://localhost/ எனக் கொடுத்து இயக்கவும், இயக்கியவுடன் கீழ்காணுவது உலாவியில் தெரிந்தால் சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்.
PHP - யினை சோதனை செய்து பார்க்க:
முதலில் /var அடைவிற்குள் www எனும் பெயருடன் ஒரு அடைவு உருவாக்கப் பட்டிருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி உருவாகி இருக்கவில்லையென்றால்
முனையத்தில்,
cd /var
sudo mkdir www
எனக் கொடுத்து www எனும் அடைவினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு, முனையத்தில் கீழ்காணும் கட்டளையினைக் கொடுங்கள்,
echo "" | sudo tee /var/www/testing.php
முனையத்தில் sudo service apache2 restart கட்டளையினைக் கொடுத்து ஒருமுறை Apache Server -னை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, இணைய உலாவி ஏதாவது ஒன்றைத் திறந்து முகவரிப் பட்டையில் கீழ்காணும் முகவரியினைக் கொடுங்கள்,
http://localhost/testing.php
படத்தில் உள்ளது போன்று உங்களுக்கு செய்தி கிடைத்தால் PHP -யும் சரியாக நிறுவப்பட்டிருக்கிறது என முடிவு செய்துக் கொள்ளலாம்.
வெற்றிகரமாக இப்பொழுது LAMP Server -னை உபுண்டு வில் நிறுவியிருப்போம்.
Labels:
Apache,
Internet,
LAMP,
LTS,
MySQL,
MySQL தகவல்தளம்,
PHP,
ubuntu 12.04,
Website
Dec 1, 2012
Nov 15, 2012
உபுண்டு 13.04 -ன் பெயர் "Raring Ringtail"
உபுண்டு வினுடைய தற்போதைய பதிப்பு உபுண்டு 12.10, அடுத்த பதிப்பு உபுண்டு 13.04 , அதனுடைய பெயர் "Raring Ringtail" என்று மரியாதைக்குரிய Mark Shuttleworth அவர்கள் அறிவித்திருக்கிறார்.
ஆதாரம் மற்றும் மேலும் தெரிந்து கொள்ள:
Nov 11, 2012
மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS -னை நிறுவினேன்
நான் முழுமையாக லினக்ஸைப் பயன்படுத்த தொடங்கியது நான் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயில தொடங்கியபொழுதுதான். 2009 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். முதன்முதலாக நான் நிறுவி பயன்படுத்திய உபுண்டு லினக்ஸ் 9.04 அதன் பின்பு வந்த எந்த பதிப்பினையும் எனது மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை. உபுண்டு 10.04 LTS நிறுவ முற்பட்டும் முடியவில்லை காரணம் Video Driver பிரச்சனை.
அதன் பிறகு வெளியிடப்பட்ட உபுண்டு 10.10 னைத் தான் நிறுவ முடிந்தது, உபுண்டு 10.10 நிறுவியதிலிருந்து நவம்பர்-8-2012 வரை உபுண்டு 10.10 பதிப்பைத் தான் பயன்படுத்தி வந்தேன்.
உபுண்டு 10.10 லினக்ஸ் பதிப்பில் எவ்வளவோ வேலைகள் செய்து பலனடைந்தேன். எந்த நிரல்களையும், மென்பொருளையும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நிறுவ முடிந்தது. இரண்டு வருடங்களாக எனக்கு எந்த வித தொல்லையும் தராமல் சொன்னதைச் செய்யும் குழந்தை போல் அவ்வளவு அருமையாக இயங்கியது. உபுண்டு 10.10 பதிப்பினை நீக்க மனமில்லாமல் நீக்கினேன். என்னுடைய நண்பர்களில் ஒருவராகவே உபுண்டு 10.10 இயங்குதளம் இருந்தது. இரண்டு வருட பயன்பாட்டில் எந்த ஒரு தொல்லையும் என்னை சங்கடப்படுத்தும் அளவிற்கு ஏற்படவில்லை..அவ்வளவு அற்புதமாக இயங்கியது.
உபுண்டு 12.04 LTS பதிப்பினை நேற்று (நவம்பர் - 10 - 2012) நிறுவினேன். கடுமையான மின்வெட்டின் காரணமாக இரண்டு முறை நிறுவுதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது மின்சாரம் நின்று போனது, ஆகையால் மீண்டும் முதலிலிருந்து நிறுவ வேண்டிய நிலை.
மூன்றாவது முறை தொடங்கி வெற்றிகராமாக உபுண்டு 12.04 LTS பதிப்பினை எனது Compaq 515 மாடல் மடிக்கணினியில் நிறுவி முடித்தேன். காரணம் மூன்று மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து வந்தது...
உபுண்டு 12.04 LTS பதிப்பு பயன்படுத்த மிகவும் அற்புதமாகவும் , ஆர்வமாகவும் இருக்கிறது.
அகலக்கற்றை இணைய இணைப்பு அண்ணன் நீலகண்டன் அவர்கள் வைத்திருக்கிறார் அவரினுடைய உதவியால் தேவையான மென்பொருள்களை நிறுவி முழுப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தேன்.
தற்போதைய உபுண்டு 12.04 LTS :
லினக்ஸ் கேள்வி-பதில்கள் - பகுதி - I
கேள்வி : லினக்ஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவ குறைந்தது எத்தனை Partition -கள் தேவை?
பதில் : ஒன்று. லினக்ஸை கணினியில் நிறுவுவதற்கும் மற்றும் பூட் ஆவதற்கும் குறைந்தது ஒரு partition இருந்தால் போதுமானது. அந்த ஒரு partition , root partition ஆகும் ( / என்று குறிப்பிடப்படும்). இருந்தாலும் குறைந்தது root, swap ஆகிய இரண்டு partition -கள் நிறுவுதலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கேள்வி : Booting Messages (பூட்டிங் செய்திகள்) களை எந்த கட்டளைக் கொண்டு பார்வையிட முடியும்?
பதில் : dmesg , நமது லினக்ஸ் இயங்குதளம் கணினியில் Boot ஆகி முடிந்த உடன் முனையத்தில் (Terminal) கொடுத்தால், Booting Messages களை காணமுடியும்.
கேள்வி : கடைசியாக நாம் இயக்கிய ஐந்து கட்டளைகளை தெரிந்துக் கொள்ள பயன்படுத்தப்படும் கட்டளை?
பதில் : history | tail -5
கேள்வி : Mail Server -னை வன்வட்டில் (HDD) உருவாக்க எந்த partition அவசியம் உருவாக்கி இருக்க வேண்டும்? root, swap, boot இந்த மூன்றும் அல்லாமல்.
பதில் : /var
கேள்வி : அனைத்து வழங்கல்களிலும் கிடைக்கக் கூடிய Partition Tool (பார்ட்டிசிய கருவி) எது?
பதில் : fdisk, parted . இவையிரண்டும் பொதுவாக அனைத்து வழங்களிலும் கிடைக்கிறது.
Labels:
fdisk,
parted,
Terminal,
கேள்வி-பதில்,
முனையம்,
லினக்ஸ் கேள்வி-பதில்
Nov 5, 2012
பெரும்பாலான விண்டோஸ் 8 இயங்குதளங்கள் நிறுவியிருக்கும் கணினிகளில் நாம் லினக்ஸைப் பயன்படுத்தலாம், Linux Foundation அதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கிறது
Linux Foundation -னுக்கு நன்றி
Unified Extensible Firmware Interface (UEFI) :
UEFI என்பது இயங்குதளத்திற்கும், Firmware க்கும் இடையில் உள்ள ஒரு மென்பொருள் இடைமுகப்பு ஆகும். இது BIOS Firmware இடைமுகைப்புக்கான ஒரு மாற்று. BIOS க்கான மாற்று என்றுக்கூட எடுத்துக் கொள்ளலாம்.
அனைத்துவிதமான IBM-PC களிலும் இது தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டு ரீதியாக பார்க்கும் பொழுது பெரும்பாலான UEFI Images -கள் BIOS Services க்கு மரபு ரீதீயான ஆதரவை வழங்குகிறது.
மற்றொரு இயங்குதளத்தினுடைய உதவிகள் இல்லாமலையே கணினியினுடைய பழுது மற்றும் கண்டறிதல் வேலைகளினை தூரத்திலிருந்தே செய்ய அனுமதிக்கிறது.
EFI (Extensible Firmware Interface) னினுடைய உண்மையான விவர குறிப்புகள் இன்டெல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
இதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த சுட்டிக்கு செல்லவும்.
மைக்ரோசாப்டின் குறுக்குப் புத்தி:
மைக்ரோசாப்ட் நிறுவனம் UEFI தொழில்நுட்பத்தினை தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே விண்டோஸ் 8 இயங்குதளம் நிறுவியுள்ள கணினியில், லினக்ஸ் இயங்குதளத்தினை இரட்டை நிறுவுதாலாக நிறுவிப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும்,
இனி வரும் காலங்களில் லினக்ஸை இரட்டை நிறுவுதலாக நிறுவிப் பயன்படுத்தும் முறையினை தடை செய்வதற்க்காகவுமேயாகும்.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் என்ன நியாயம் கற்பிக்கிறது என்றால், திருட்டு மென்பொருள்கள் மற்றும் இயங்குதளங்கள் பயன்படுத்துவதினை தடுப்பதற்குத்தான் இந்த UEFI தொழில்நுட்பம் எனக் கூறுகிறது.
இந்த பிரச்சனை ஒரு 7-8 மாதங்களுக்கு முன்பே ஆஸ்திரேலிய லினக்ஸ் பயனாளர்கள் குழுக்களால் விவாதிக்கப்படு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. தீர்வு என்னவோ இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டதன் மூலம் இனி வரும் காலம் லினக்ஸிற்குத்தான் என்பதை வெள்ளோட்டமாக உலகுக்கு மெய்பித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது.
UEFI பிரச்சனைக்கு Linux Foundation தீர்வு கண்டுபிடித்து முடிவு கட்டியிருக்கிறது:
முன்னிருப்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளம் நிறுவி வரும் கணினிகளில் , பெரும்பாலான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களை பயனாளர்கள் இரட்டை நிறுவுதலாக பயன்படுத்துவதற்கு Linux Foundation தீர்வு கண்டுபிடித்திருக்கிறது.
UEFI அல்லாத BIOS உள்ள கணினியில் அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களையும் மிகவும் எளிதாக எந்த பிரச்சனையுமின்றி விண்டோஸ் இயங்குதளத்துடன் நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால் UEFI தொழில்நுட்பத்துடன் முன்னிருப்பாக நிறுவி வரும் விண்டோஸ் 8 உள்ள கணினிகளில் லினக்ஸை நிறுவுவது கொஞ்சம் கடினம்.
இந்த UEFI Secure Boot தொழில்நுட்பம் gatekeeper -ரைப் போல செயல்படும். security key உள்ள இயங்குதளத்தினை மட்டுமே Boot ஆக அனுமதிக்கும்.
Gate pass இல்லையென்றால் உள்ளே நுழைய அனுமதியில்லாதது போல , security key இல்லையென்றாலும் உள்ளே நுழைய அனுமதியில்லை.
Secure Boot னுடைய மற்றுமொரு Advantage என்ன வென்றால், கணினி Boot ஆகும் பொழுது செயல்படும் வைரஸ் மற்றும் மால்வேர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.
ஆனால், பிரச்சனை என்னவென்றால் இந்த கடுமையான பாதுகாப்பு அம்சத்தினால் , Unsigned மென்பொருள்கள் , லினக்ஸை நிறுவுவதற்கு பயன்படும் நிரல்கள் போன்றவைகளையும் சேர்த்து தடை செய்கிறது. இதற்குத்தான் Linux Foundation தீர்வு கண்டுபிடித்திருக்கிறது.
Labels:
BIOS,
linux,
linux foundation,
secure boot,
UEFI,
Windows 8,
பாதுகாப்பான தொடக்கம்,
விண்டோஸ் 8
Oct 31, 2012
LibreOffice 3.6.2.2 உபுண்டுவில் நிறுவுதல்
நான் உபுண்டு 10.10 இயங்குதளம் பயன்படுத்தி வருகிறேன். உபுண்டுவின் அண்மைய பதிப்பு 12.10 ஆக இருந்தாலும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்திற்காக உபுண்டு இயங்குதளத்தை அண்மைய பதிப்பிற்கு புதிப்பிக்க வில்லை.
உபுண்டு 10.10 -ல் இருப்பியல்பாகவே OpenOffice Suite தான் நிறுவப்பட்டிருக்கும். LibreOffice எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகையால் நான் OpenOffice -னை நீக்கி விட்டு LibreOffice -னை நிறுவலாம் என முடிவு செய்தேன்.
முதலில் LibreOffice - னை
இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்தேன்.
படம் - 1
தரவிறக்கம் செய்த கோப்பு tar.gz வடிவில் இருக்கும். முதலில் அதனை Extract செய்ய வேண்டும். தரவிறக்கம் செய்த tar.gz கோப்பின் மீது வைத்து Right Click செய்து Extract Here கொடுத்து Extract செய்து கொண்டேன்.
Extract ஆகி முடிந்த பிறகு, முனையத்தை திறந்து LibreOffice கோப்பு Extract ஆன Location க்குச் சென்று dpkg கட்டளையின் மூலம் LibreOffice -னை நிறுவினேன்.
நிறுவுவதற்கான கட்டளை:
sudo dpkg -i LibO_3.6.2.2_Linux_x86_install-deb_en-US/DEBS/*
sudo dpkg -i LibO_3.6.2.2_Linux_x86_install-deb_en-US/DEBS/desktop-integration/*
இரண்டாவதாக இருக்கும் கட்டளை Applications Menu -வில் LibreOffice Suite -னை இணைப்பதற்கான கட்டளை. (இரண்டு கட்டளைகளும் அவசியம்)
படம் - 2
படம் - 3
Labels:
dpkg,
libreoffice,
Office,
ubuntu,
ubuntu 10.10,
Ubuntu Installation
Oct 26, 2012
Oct 25, 2012
Xubuntu -ல் உள்ள LibreOffice Writer -ல் தமிழ் தட்டச்சு பிரச்சனையினை சரி செய்வது எப்படி?
Xubuntu -ல் இருப்பியல்பாகவே LibreOffice நிறுவப்பட்டிருக்காது. ஆகையால் நாம் தான் LibreOffice னை நிறுவிக்கொள்ள வேண்டும்.
Synaptic Package Manager மூலம் LibreOffice Writer னை நிறுவிக் கொண்டேன் மற்றவைகள் (Impress, Calc, Drawing) எதையும் நிறுவிக்கொள்ள வில்லை. Writer மட்டும் போதுமானதாக இருந்தது. தோழரினுடைய பயன்பாடு அவ்வளவுதான். தோழரினுடைய கணினியில் Xubuntu நிறுவிய கதையினை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.
Xubuntu -ல் தமிழில் தட்டச்சு செய்ய ibus னை நிறுவினேன். ibus -னை பயன்படுத்தி LibreOffice Writter -ல் தமிழில் தட்டச்சு செய்த பொழுது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே தட்டச்சு செய்ய முடிந்தது. தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை.
Oct 21, 2012
Xubuntu 12.04 LTS மூலம் பழைய கணினிக்கு உயிர் கொடுத்தேன்
என்னுடைய பாசமிகு தோழர் நீலகண்டன் அவர்கள் ஒரு பழைய மேசைக்கணினி வைத்திருக்கிறார். கணினியில் தோழருடைய அன்றாட வேலை என்னவென்றால் இணையத்தைப் பயன்படுத்தி நாளிதழ்கள் பார்ப்பது, Youtube - ல் அறிவுப்பூர்வமான, பயனுள்ள வீடியோக்களைப் பார்ப்பது தேவைப்பட்டால் அதை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது, பாடல் கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது இவைகள்தான். MS-Office கூட பயன்படுத்துவதில்லை, கணினியில் இருக்கும் Windows XP இயங்குதளத்தில் நிறுவியும் வைத்திருக்க வில்லை.
512-MB RAM னை வைத்துக் கொண்டு விண்டோஸ் இயங்குதளத்துடன் அவர் மிகவும் போராடிதான் பயன்படுத்திக் கொண்டிருந்தார். நெருப்பு நரி உலாவியினைத்தான் இணையத்தில் உலாவா பயன்படுத்திக்கொண்டிருந்தார் இரண்டு, மூன்று Tab களுக்கு மேல் திறந்து விட்டால் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடும். இது இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது உள்ள பிரச்சனை,
அடுத்த பிரச்சனை கோப்புகள் எதையாவது கணினிக்கு பிரதியெடுத்தாலோ அல்லது கணினியிலிருந்து வேறு கருவிகளுக்கு கோப்புகளை பிரதியெடுத்தாலோ காரணமே இல்லாமல் ஸ்தம்பித்து நின்று விடும்.
512-MB RAM னை வைத்துக் கொண்டு விண்டோஸ் இயங்குதளத்துடன் அவர் மிகவும் போராடிதான் பயன்படுத்திக் கொண்டிருந்தார். நெருப்பு நரி உலாவியினைத்தான் இணையத்தில் உலாவா பயன்படுத்திக்கொண்டிருந்தார் இரண்டு, மூன்று Tab களுக்கு மேல் திறந்து விட்டால் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடும். இது இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது உள்ள பிரச்சனை,
அடுத்த பிரச்சனை கோப்புகள் எதையாவது கணினிக்கு பிரதியெடுத்தாலோ அல்லது கணினியிலிருந்து வேறு கருவிகளுக்கு கோப்புகளை பிரதியெடுத்தாலோ காரணமே இல்லாமல் ஸ்தம்பித்து நின்று விடும்.
512-MB RAM, Pentium IV Processor,80GB Hard Disk, 14 Inch அளவு கொண்ட Samsung Monitor, மற்றவைகள் இவைதான் அந்தக் கணினியினுடைய அமைப்பு.
இந்தக் கணினியில் உபுண்டுவை நிறுவினால் என்ன? என்று யோசித்தேன். ஆனால் நினைவகம் குறைவாக இருக்கிறதே என்ன செய்யலாம் ஏதாவது ஒரு மெலிதான லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவலாம் என மனதில் நினைத்துக் கொண்டு இணையத்தில் ஒரு ஆலோசனைக் கேட்டு விடுவோம் என முடிவு செய்ததில் அகப்பட்டதுதான் xubuntu.
அனைவரும் விரும்பி பயன்படுத்தும் ஒரு இயங்குதளமாக உபுண்டு இயங்குதளம் இருந்து வருகிறது. உபுண்டு இயங்குதளம் பல்வேறு Desktop Environment -களுடன் வெளிவருகிறது. பெடோரா போன்ற இயங்குதளங்களில் அனைத்து Desktop Environment -களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. DVD யாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். நிறவும் பொழுது நமக்குத் தேவையானவற்றை நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் உபுண்டு லினக்ஸில் அப்படியில்லை, ஒவ்வொரு Desktop Environment க்கும் தனித்தனிப் பதிப்பாகவே உபுண்டுவை கனோனிக்கல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. பொதுவாக வெறும் உபுண்டுவானது Gnome உடன் வெளிவருகிறது. அதுபோல,
Kubuntu - KDE
Xubuntu - XFCE
Lubuntu - LXDE, Desktop Environment உடன் வெளிவருகிறது.
GNOME - Desktop Environment - ன் தற்போதைய பதிப்பு நன்றாக செயல்பட அதிகமான முதன்மை நினைவகம்(RAM) தேவை. குறைந்தபட்சம் 1-GB தேவை. அதுபோலவே Processor-ம் Pentium IV -க்கு பின் வெளிவந்த Processor ஆக இருக்க வேண்டும். காரணம் Unity, 3D மற்றும் பலவிதமான Desktop Effects கள் Gnome Environment-ல் பயன்பாட்டில் உள்ளது.
பழைய மேசைக் கணினிகளில் உபுண்டுவை GNOME Desktop Environment உடன் நிறுவிப் பயன்படுத்துவது என்பது நடக்காத காரியம். ஆகையால் குறைவான நினைவகத்தில் சிறப்பாக செயல்படும் ஒரு லினக்ஸ் இயங்குதளம் தேவை அதாவது, lightweight Linux.
Light Weight லினக்ஸில் முதன்மையானது Damm Small Linux (DSL). DSL இயங்குதளத்தினுடைய மொத்த அளவே 50-60MB தான். 128 MB RAM இருந்தாலே மிகச்சிறப்பாக செயல்படும். மொத்த இயங்குதளமும் முதன்மை நினைவகத்தில் இருந்துக் கொண்டே இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் நான் DSL ஐ தேர்வு செய்யவில்லை.
அடுத்து Lubuntu , Lubuntu க்கு 128 MB RAM , Pentium II Processor போதும். இதையும் நான் தேர்வு செய்யவில்லை காரணம். Application - கள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக பழக்கப்படாததாக இருந்தது.
அடுத்து Xubuntu, Zenwalk, Knoppix, என நிறைய இருந்தது. இந்த வரிசையில் எனக்குப் பிடித்தது Xubuntu. காரணம் உபுண்டு இயங்குதளத்தினைப் போலவே பயன் படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் Light Weight ஆகவும் இருக்கிறது. Xubutnu - வின் தோற்றமும் எனக்குப் பிடித்துப் போய்விட்டது.
ஆகையால் Xubuntu வை நிறுவி விடுவது என ஒரு வழியாக முடிவு செய்தேன். சரி இயங்குதளத்திற்கு எங்கே போவது.
Xubuntu - வை எங்கே தேடிப் பிடிப்பது. தரவிறக்கம் செய்வதுதான் ஒரே வழி. இதற்கிடையில் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது, நான் கடந்த 5-வருடங்களுக்கு மேலாக LINUX For You Magazine னினுடைய சந்தா தாரராக இருந்து வருகிறேன். அதனுடன் இணைப்பாக வரும் DVD - யில் வந்திருக்கும் என நினைத்து தேடிப் பார்த்தேன். Xubutnu கிடைக்கவில்லை.
சரி தரவிறக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. தோழர் நீலகண்டன் அவர்கள் அகலகற்றை இணைய இணைப்பு வைத்துள்ளார். அதை என் மடிக்கணினியில் இணைத்து நான் வைத்திருக்கும் உபுண்டு இயங்குதளம் மூலம் தரவிறக்கினேன்.
தரவிறக்கம் செய்த விதம்:
பொதுவான தரவிறக்கமாக செய்யவில்லை நேரம்தான் வீணாகும் மின்வெட்டு பிரச்சனை, Vuze Torrent Client னைப் பயன்படுத்தி Torrent மூலம் தரவிறக்கினேன்.காரணம் கடுமையான மின்வெட்டு எங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று மணி நேரம் கழித்துதான் மின்சாரம் வரும். இடையிடையே என்னுடைய அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரண்டு நாட்களில் தரவிறக்கம் செய்து முடித்தேன்.
Xubuntu தயார்:
தரவிறக்கம் செய்த xubuntu கோப்பினை ஒரு CD -யில் Bootable இயங்குதளமாக மாற்றினேன்.
Xubuntu நிறுவுதல்:
கணினியினை வட்டிலிருந்து பூட் செய்தேன் சரியாக 8-நிமிடங்களில் Desktop கிடைத்தது Live என்பதால் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. முதலில் Live ஆக பயன்படுத்தி வன்வட்டினுடைய கடைசி விண்டோஸ் கோலனை Gparted மூலம் லினக்ஸிற்காக தயார் செய்தேன்.
மறுபடியும் கணினியினை மறுதொடக்கம் செய்து எப்பொழுதும் போலவே xubuntu வை கணினியில் நிறுவி முடித்தேன்.
அற்புதமான வேகம், அருமையான அமைப்பு:
மறு தொடக்கம் செய்த 1நிமிடம் 5 வினாடிகளில் xubuntu வினுடைய Desktop கிடைத்தது. நல்ல வேகம். வெறும் 138 MB RAM த்தான் முழுமையான Desktop கிடைக்க பயன்படுத்துகிறது.
பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்தேன் காரணம் தோழர் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்தி பழக்கப் பட்டவர். ஆகையால் அவர்க்கு ஏற்றது போல எளிமையாக மாற்றினேன்.
Chromium Browser, Libre Office Writter, ibus (தமிழில் எழுத), Totem Media Player , Adobe Flash plugin, VLC, Aducity, gEdit, Eye of Gnome Imager viewer ஆகியவைகளை நிறுவினேன்.
உண்மையிலேயே குறைவான RAM னைக் கொண்ட பழைய கணினிகளுக்கு அற்புதமானதொரு இயங்குதளம்.
உங்கள் தோழர்கள், தோழியர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்த நண்பர்கள் யாரிடமாவது பழைய கணினியிருந்தால் Xubuntu னை நிறுவி, உயிர்கொடுத்து அற்புதமாக இயங்க செய்யுங்கள். குறைவான நினைவகத்தில் மிகவும் அற்புதமாக இயங்குகிறது.
தரவிறக்கம் செய்த விதம்:
பொதுவான தரவிறக்கமாக செய்யவில்லை நேரம்தான் வீணாகும் மின்வெட்டு பிரச்சனை, Vuze Torrent Client னைப் பயன்படுத்தி Torrent மூலம் தரவிறக்கினேன்.காரணம் கடுமையான மின்வெட்டு எங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று மணி நேரம் கழித்துதான் மின்சாரம் வரும். இடையிடையே என்னுடைய அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரண்டு நாட்களில் தரவிறக்கம் செய்து முடித்தேன்.
Xubuntu தயார்:
தரவிறக்கம் செய்த xubuntu கோப்பினை ஒரு CD -யில் Bootable இயங்குதளமாக மாற்றினேன்.
Xubuntu நிறுவுதல்:
கணினியினை வட்டிலிருந்து பூட் செய்தேன் சரியாக 8-நிமிடங்களில் Desktop கிடைத்தது Live என்பதால் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. முதலில் Live ஆக பயன்படுத்தி வன்வட்டினுடைய கடைசி விண்டோஸ் கோலனை Gparted மூலம் லினக்ஸிற்காக தயார் செய்தேன்.
மறுபடியும் கணினியினை மறுதொடக்கம் செய்து எப்பொழுதும் போலவே xubuntu வை கணினியில் நிறுவி முடித்தேன்.
அற்புதமான வேகம், அருமையான அமைப்பு:
மறு தொடக்கம் செய்த 1நிமிடம் 5 வினாடிகளில் xubuntu வினுடைய Desktop கிடைத்தது. நல்ல வேகம். வெறும் 138 MB RAM த்தான் முழுமையான Desktop கிடைக்க பயன்படுத்துகிறது.
பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்தேன் காரணம் தோழர் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்தி பழக்கப் பட்டவர். ஆகையால் அவர்க்கு ஏற்றது போல எளிமையாக மாற்றினேன்.
Chromium Browser, Libre Office Writter, ibus (தமிழில் எழுத), Totem Media Player , Adobe Flash plugin, VLC, Aducity, gEdit, Eye of Gnome Imager viewer ஆகியவைகளை நிறுவினேன்.
உண்மையிலேயே குறைவான RAM னைக் கொண்ட பழைய கணினிகளுக்கு அற்புதமானதொரு இயங்குதளம்.
உங்கள் தோழர்கள், தோழியர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்த நண்பர்கள் யாரிடமாவது பழைய கணினியிருந்தால் Xubuntu னை நிறுவி, உயிர்கொடுத்து அற்புதமாக இயங்க செய்யுங்கள். குறைவான நினைவகத்தில் மிகவும் அற்புதமாக இயங்குகிறது.
138 MB RAM னை எடுத்துக்கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கும் Xubuntu
Subscribe to:
Posts (Atom)