கடந்த ஐந்து வருடங்களாக நான் LINUX For You Magazine னினுடைய சந்தாதாரராக இருந்துகொண்டிருக்கிறேன். லினக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸை விரும்புகிறவர்களுக்கும் , ஓப்பன் சோர்ஸ் வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ள பிடித்தமான ஒரு இதழ்.
இந்த இதழ் ஆரம்பித்தது 2003-ம் ஆண்டில், ஆனால் நான் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர்ந்தது 2007 ஆம் ஆண்டில்தான். ஒரு முறை புதுக்கோட்டையில் புதிய போருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையில் March-2003 இதழ் ஒன்று கிடைத்தது. அந்த ஒரு இதழில் மட்டுமே லினக்ஸ் தொடர்பாக அவ்வளவு விஷயங்கள் இருந்தது. 2008 ஆண்டு வாக்கில் இந்த பழைய இதழ் கிடைத்தது என நினைக்கிறேன்.
உண்மையிலேயே அந்த பழைய இதழ் கிடைத்ததிலிருந்து நானும் எல்லா பழைய புத்தகக் கடைகளிலும் தேடிப் பார்ப்பேன் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஒரு நாள் முழுவதும் திருச்சியில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் LFY புத்தகத்தை தேடி அலைந்தேன். கிடைக்கவில்லை , கிடைத்தது ஏமாற்றம்தான்.
அது தொடர்பாக LINUX For You Magazine -னினுடைய ஆசிரியரிடமே கேட்டேன். அந்த கருத்துதான் இதழில் வெளியாகியிருக்கிறது.
உண்மையிலேயே அகம் மகிழ்ந்தேன். ஒரு வாசகனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எதுவென்றால் அவன் தொடர்ந்து வாசிக்கும் இதழில் அவனுடைய கேள்வியும், கருத்தும் வெளியிடப்படுவதுதான். அந்த வாசகன் அடையும் மகிழ்ச்சியினை நானும் அடைந்தேன்.
2 comments:
Waiting to read your article soon.
நன்றி ந.ர.செ.ராஜ்குமார்.
தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் பாசமிகு தோழரினுடைய அன்பான வேண்டுகோள் விரைவில் நிறைவேறும்.
Post a Comment