Sunday, December 9, 2012

மு.மயூரனின் வலைப்பூவில் இருக்கும் லினக்ஸ் மற்றும் கணினி தொடர்பான கட்டுரைகளின் தொகுப்புகள்


மரியாதைக்குரிய மு.மயூரன் அவர்கள் இலங்கையினைச் சேர்ந்தவர். http://tamilgnu.blogspot.in எனும் வலைப்பூவில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறார்.  உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கையில் இருந்து வருகைதந்து தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய செய்தி.

தமிழ் கணினி உலகிற்கு நிறைய பங்களிப்புகளையும் அதையும் தாண்டிய உதவிகளையும் செய்திருக்கிறார் என்பதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.  இவரை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. எனக்கு மு.மயூரன் அவர்களைப் பற்றி தெரிந்த சிறிய விஷயங்களை இங்கு பகிர்ந்துள்ளேன். அவ்வளவுதான்.

நான் இந்த வலைப்பூவைத் தொடங்க காரணமே மரியாதைக்குரிய மு.மயூரன் என்றுகூட சொல்லலாம்.  இவரினுடைய வலைப்பூவில் இருந்துதான் நமது மரியாதைக்குரிய அமாச்சு என்று அனைவராலும் அறியப்பட்டிருக்கும் இராமதாஸ் அவர்கள் எழுதிய  'கட்டற்ற மென்பொருள்' எனும் புத்தகத்தினைப் பற்றிய தகவலினைப் படித்தேன்.  இந்த புத்தகமும் நான் வலைப்பூவினை எழுதுவதற்கு  பெரும் உந்துசக்தியாக இருந்தது.

மயூரன் அவர்கள் http://tamilgnu.blogspot.in எனும் வலைப்பூவில் லினக்ஸ் தொடர்பாக எழுதி வந்தாலும்,  அதற்கு முன்பிலிருந்தே லினக்ஸைப் பற்றி எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்.  அவரினுடைய சொந்த பகிர்தல் தளமான http://mauran.blogspot.com தளத்தில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார்.  அந்தக் கட்டுரைகள் மிகவும் செறிவு மிக்க, கருத்தாழமிக்கவையாக உள்ளன.

இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்கள் எவ்வவளவு முன்னேற்றத்துடன், அனைத்து வசதிகளுடனும் வெளிவந்துக் கொண்டிருக்கிறது என்பதை அந்தப் பழைய பதிவுகளைப் பார்த்தால்தான் தெரிகிறது.  ஆகையால் அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் மயூரனின் தொடக்ககால லினக்ஸ் கட்டுரைகளை படித்து அறிந்து தெரிந்து கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து கட்டுரைகளும் படிக்க, படிக்க சுவைக்கும் கட்டுரைகள்.  கீழிருக்கும் கட்டுரைகளின் இணைப்புகளை நான் அடிக்கடி வாசித்து தெளிந்துக் கொள்வேன்.  அதற்காகவும் இந்த இணைப்புகளை தொகுத்துள்ளேன்.(இதில் என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. கோபப்படாதீங்க தோழர்களே.)

கணினி தொடர்பான கட்டுரைகளையும் தவிர்த்து, சில பொதுவான கட்டுரைகளின் இணைப்புகளையும் இங்கு கொடுத்துள்ளேன்.  கட்டுரையின் சுவைக்கருதிதான்.  வேறொன்றுமில்லை.


Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?
வலை பதிய வந்த கதை : விளையாட்டு ஆரம்பம்...
DRM: காப்புரிமை எவர் உரிமை? (இருக்கிறம்)
23-11-1983
இருக்கிற தண்ணியை எங்கே இறைப்பது? - உத்தமம் அமையத்துக்கு - கணிநீதிக் கதைகள்
வணிக நிறுவனங்களுக்குத் தன்னார்வ உழைப்பைத் தருவது சரியா? - ரவி
Apertium: an open-source machine translation engine and toolbox
தமிழில் ஒரு கோட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொருள்
படிக்கும் உரிமை - புனைகதை (மூலப்பிரதிக்கு நேர்மையாக அமையாத மொழியாக்கம்)
படிக்கும் உரிமை (புனைகதை)
ரிச்சர்ட் ஸ்டால்மன் - தமிழ் விக்கிப்பீடியா
ரிச்சர்ட் ஸ்டால்மன் : இலங்கை வருகை
மாம்பழம்-லினக்ஸ்-பிரபாகரன்
நூறுவீத லினக்ஸ் பதிவு - இதுவரை.
richard stallman உடனான நேர் காணல்.- யோசனைகளுக்கான உரிமம்
தமிழ் கணினி- பார்க்க மறந்த பக்கங்கள்
லினக்சில் தமிழில் எழுதுவது
கணினிக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாது!
"ம்..."
சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?
(99+) விக்சனரி - Google Groups
கேரளம்: தொழிநுட்பத்தின் அரசியல்
எனது இன்னுமொரு வலைப்பதிவு!
(2) விக்கிபீடியா என்ன கொம்பா?
கட்டறுக்கும் அறிவு - கட்டற்ற பகிர்வு
உமர் தம்பி பற்றிய விக்கிபீடியா கட்டுரை
தமிழ் மண யாவாரம்.
உலகின் முதல் 'திருட முடியாத' திரைப்படம்.
இந்த சர்வதேச சமூகம் எண்டால் யார் மச்சான்?
Being a man is not about having a DICK!
இப்பெருந்தொழில் நாட்டியோர்
விக்கிபீடியர்களுக்கான உலாவி.. Firefox..!
உலகை "திறந்து" காட்டும் நாசா
பத்ரி சேஷாத்ரிக்கு...
தகவல் சரிதானா?
இலங்கையில் திறந்த ஆணைமூல வாரம்
இலக்கமுறை தமிழ் சினிமா
அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை
ஒரு துறவியின் கதை
They say talk is cheap.
"ரீ" பிரச்சனை
தமிழில் ஒத்த சொல் இருக்கிறதா?
தமிழ் மணம் சமுதாயத்துக்கு வணக்கம்
மயூரனுக்கு இப்போது சரியான சந்தோசம்.
அந்த பெண்ணின் பிள்ளைகளை நான் பர்த்திருக்கிறேன்...
நாளேடுகளில் பெண்கள் பக்கம் - பலவீனமா, பாதுகாப்பா?
தளையறுக்கும் சினிமா..... வரப்போகிறது "திறந்த திரைப்படம்"
நாய்க்கு சிறுநீர், நமக்கு கடவுள்.
ஈழத்து அறிவுஜீவிகள், நவீன சடங்குகள்.
லினக்ஸ் பல்வகைமையில் இலங்கையும் இணைகிறது.
தமிழை வாசிக்கும் செயலி?
Fedora 3 அனுபவங்கள்
வசீகரனின் பதில்..!
அது எமது எதிரியின் சவங்களை மூடும் துணி
கையைக்கட்டி NETஇல் விட்டால்....!
Microsoft இன் ஏகபோகத்திற்கெதிராக 497 மில்லியன் யூரோ தண்டம்..
Adobe Reader 7.0 வந்துவிட்டது.
Microsoft Spaces அதாவது வலைக்குறிப்புக்களின் உலகளாவிய வெற்றி.
என் பெயர் மு.மயூரன்
"ம்...": நான் என்ன செய்வது?
முதலிலிருந்து தொடங்குதல்
வலைக்குறிப்பு வலைக்குறிப்பு...
இலங்கை வானொலியில் தமிழ் கணினி இயல் நிகழ்ச்சி.
இலங்கையில் ஒரு மின்னூல் திட்டம்
இயங்கு எழுத்துருவில் என் வலைக்குறிப்பு.
தமிழ்க் கணினிக் கருத்தாடல்களுக்கான ஒரு குழு.
"என் கண் பட்டுவிட்ட" இரு வலைத்தளங்கள் - யுனிகோட்டுக்கு...
"தினக்குரல்" யுனிகோட்டுக்கு..இதுவரை முடிவடைந்த பணிகள்
என்னுடைய முகம்
தமிழ் வலைக்குறிப்புக்களுக்கான விபரக்கொத்து
திருக்கோணமலையிலிருந்து மற்றுமொரு வலைக்குறிப்ப
நீண்ட நாளைக்குப்பிறகு
தமிழ் மணம் வலைத்தளத்துக்கு வாழ்த்துக்கள்
"திரு" - தேவை தீர்ந்ததுவோ?
இதோ தமிழ் கையெழுத்துணரி
யுனிகோடா, தனிக்கோடா?
இனி என் குரலையும் கேட்கலாம்.
தமிழ் இயக்குதளம்

படியுங்கள் ! கட்டுரைகளை படித்து சுவையுங்கள்!

Wednesday, December 5, 2012

LINUX For You (Dec-2012) Magazine -ல் எனது feedbackகடந்த ஐந்து வருடங்களாக நான் LINUX For You Magazine னினுடைய சந்தாதாரராக இருந்துகொண்டிருக்கிறேன். லினக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸை விரும்புகிறவர்களுக்கும் , ஓப்பன் சோர்ஸ் வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ள பிடித்தமான ஒரு இதழ்.

இந்த இதழ் ஆரம்பித்தது 2003-ம் ஆண்டில், ஆனால் நான் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர்ந்தது 2007 ஆம் ஆண்டில்தான்.  ஒரு முறை புதுக்கோட்டையில்  புதிய போருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையில் March-2003 இதழ் ஒன்று கிடைத்தது.  அந்த ஒரு இதழில் மட்டுமே லினக்ஸ் தொடர்பாக அவ்வளவு விஷயங்கள்  இருந்தது.  2008 ஆண்டு வாக்கில் இந்த பழைய இதழ் கிடைத்தது என நினைக்கிறேன்.

உண்மையிலேயே அந்த பழைய இதழ் கிடைத்ததிலிருந்து நானும் எல்லா பழைய புத்தகக் கடைகளிலும் தேடிப் பார்ப்பேன் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  ஒரு நாள் முழுவதும் திருச்சியில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் LFY புத்தகத்தை தேடி அலைந்தேன்.  கிடைக்கவில்லை , கிடைத்தது ஏமாற்றம்தான்.

அது தொடர்பாக LINUX For You Magazine -னினுடைய ஆசிரியரிடமே கேட்டேன். அந்த கருத்துதான் இதழில் வெளியாகியிருக்கிறது.

உண்மையிலேயே அகம் மகிழ்ந்தேன். ஒரு வாசகனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எதுவென்றால் அவன் தொடர்ந்து வாசிக்கும் இதழில் அவனுடைய கேள்வியும், கருத்தும்  வெளியிடப்படுவதுதான்.  அந்த வாசகன் அடையும் மகிழ்ச்சியினை நானும் அடைந்தேன்.


Monday, December 3, 2012

உபுண்டு 12.04 - Unity 2D -யில் Show Desktop Shortcut Key

உபுண்டு 12.04 LTS Unity 2D சுழலில் Show Desktop க்கான குறுக்கு விசை Ctrl+Win+D.

Ctrl+Super+D என போட்டிருந்தால் , Super=Windows Key


Sunday, December 2, 2012

ஒற்றை வரிக் கட்டளையில் LAMP Server -ஐ உபுண்டு 12.04 -ல் நிறுவுதல்

Linux Apache MySQL PHP - என்பதன் சுருக்கமே LAMP ஆகும்.  LAMP எனபது மிகவும் பிரபலமானதொரு இணையதள உருவாக்க/வடிவமைப்புச் சூழல்.

இதில் Linux என்பது லினக்ஸ் இயங்குதளம் (எந்தவொரு லினக்ஸ் வழங்கலாகவும் இருக்கலாம்),  Apache என்பது இணைய வழங்கி(Web Server), MySQL என்பது RDBMS தகவல்தளம், PHP என்பது மாறக்கூடிய இணையப் பக்கங்களுக்கான (Dynamic Web Page)Scripting Language.

LAMP -ல் நாம் நிறுவ வேண்டியவை Apache, MySQL, PHP ஆகியவைகள் மட்டுமே.  நம்மிடம்தான் உபுண்டு இயங்குதளம் இருக்கே.  இவையனைத்தையும் தனித்தனியாக நிறுவவேண்டியதில்லை, அப்படி நிறுவ முற்பட்டாலும் அது நமக்கு கொஞ்சம் களைப்பான செயலாகத்தான் அமையும் ஆகையால் இவையனைத்தையும் ஒரே வரிக் கட்டளையில் நிறுவ முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா!  

ஒற்றை வரி கட்டளையின் மூலம் LAMP  Server னை நிறுவக்கூடிய வசதில் உபுண்டு 12.04 LTS - ல் இருக்கிறது.  அது எப்படி என பார்ப்போம்.

கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும் அதுதான் இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நான் பாலிடெக்னிக் படித்த காலத்தில் LINUX For You Magazine -ல் மென்பொருள்கள் நிறுவக் கொடுத்திருக்கும் கட்டளைகளை அப்படியே முனையத்தில் தட்டச்சு செய்வேன் ஆனால் மென்பொருள் நிறுவப்படாது.   காரணம் தெரியவில்லை, இணைய இணைப்பின் மூலம்தான் இந்தக் கட்டளை வேலை செய்யும் என காலப்போக்கில் தான் எனக்கு தெரியும். இப்பபொழுது இருக்கக்கூடிய இணையவசதியெல்லாம் அப்பொழுது இல்லை.  இப்பொழுது இணையவசதியினை மிகவும் எளிதாக GPRS மூலம் லினக்ஸிற்குள் கொண்டு வந்து விடலாம். அறியாத வயசுதானே அத விடுங்க.

முதல் படி:
முனையத்தை திறந்து கொள்ளவும், அதில் கீழ்கண்ட கட்டளைகளைக் கொடுக்கவும்.

sudo apt-get update

sudo apt-get install lamp-server^

கவனிக்க: ^  இந்தக்  குறியிடு Keyboard -ல் இருக்கும் Number key - 6 -ல் இருப்பது இதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும்


உங்களின் இணைய இணைப்பின் வேகத்தினைப் பொறுத்து நிறுவுதல் முடியும். நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும். நிறுவுதல் முடியும் தருவாயில் MySQL Database னுடைய root பயனாளருக்கான கடவுச்சொல்(password) கேட்கும், கடவுச்சொல்லை உள்ளிடவும்.நிறுவுதல் முடிந்தபின் அனைத்தும் சரியாக நிறுவப்பட்டிருக்கிறதா என சோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியமல்லவா!

Apache Server -னை சோதனை செய்து பார்க்க:

முனையத்தில் sudo service apache2 restart  கட்டளையினை இயக்கவும்.  இந்தக் கட்டளையினைக் கொடுத்தவுடன், Apache Server மறுதொடக்கம் செய்யப்படும்.

உங்கள் கணினியில் இருக்கும் ஏதாவதொரு இணைய உலாவியினைத் திறந்து, முகவரிப் பட்டையில் http://localhost/  எனக் கொடுத்து இயக்கவும், இயக்கியவுடன் கீழ்காணுவது உலாவியில் தெரிந்தால் சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்.

PHP -  யினை சோதனை செய்து பார்க்க:

முதலில் /var அடைவிற்குள் www எனும் பெயருடன் ஒரு அடைவு உருவாக்கப் பட்டிருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.  அப்படி உருவாகி இருக்கவில்லையென்றால்

முனையத்தில்,

cd /var
sudo mkdir www

எனக் கொடுத்து www எனும் அடைவினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதன்பிறகு, முனையத்தில் கீழ்காணும் கட்டளையினைக் கொடுங்கள்,

echo "" | sudo tee /var/www/testing.php

முனையத்தில் sudo service apache2 restart கட்டளையினைக் கொடுத்து ஒருமுறை Apache Server -னை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, இணைய உலாவி ஏதாவது ஒன்றைத் திறந்து முகவரிப் பட்டையில் கீழ்காணும் முகவரியினைக் கொடுங்கள், 

http://localhost/testing.php

படத்தில் உள்ளது போன்று உங்களுக்கு செய்தி கிடைத்தால் PHP  -யும் சரியாக நிறுவப்பட்டிருக்கிறது என முடிவு செய்துக் கொள்ளலாம்.


வெற்றிகரமாக இப்பொழுது LAMP Server -னை உபுண்டு வில் நிறுவியிருப்போம்.