Showing posts with label OSFY. Show all posts
Showing posts with label OSFY. Show all posts

Jan 27, 2016

Open Source For You(OSFY) நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பதில்

பழைய CD/DVD-க்களை என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக இதற்கு முன் ஒரு பதிவை எழுதியிருந்தேன். நான் 2008-லிருந்து Open Source For You Magazine ஐ சந்தாதாரராக இணைந்து வாங்கிகொண்டிருக்கிறேன். CD/DVD-க்களை ஒழிக்கும் நடவடிக்கையாக 'இனிமேல் எனக்கு DVD யை OSFY இதழுடன் இணைத்து அனுப்ப வேண்டாம்' என்று OSFY நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் செய்து வைத்திருந்தேன். அதற்கு OSFY நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பதிலை நீங்கள் கீழே காணலாம்.


OSFY இதழ்கள் மொத்தமாக அனுப்பி வைக்கப்படுவதால், எனக்கு அனுப்பி வைக்கும் ஒரே ஒரு இதழிலிருந்து மட்டும் DVD யை நீக்கிவிடுவதற்கு வாய்ப்பில்லை என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள். என்ன செய்வது? வாங்கி வைத்திருந்து மறுபடியும் எடைக்குப் போட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்?

Dec 5, 2012

LINUX For You (Dec-2012) Magazine -ல் எனது feedback



கடந்த ஐந்து வருடங்களாக நான் LINUX For You Magazine னினுடைய சந்தாதாரராக இருந்துகொண்டிருக்கிறேன். லினக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸை விரும்புகிறவர்களுக்கும் , ஓப்பன் சோர்ஸ் வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ள பிடித்தமான ஒரு இதழ்.

இந்த இதழ் ஆரம்பித்தது 2003-ம் ஆண்டில், ஆனால் நான் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர்ந்தது 2007 ஆம் ஆண்டில்தான்.  ஒரு முறை புதுக்கோட்டையில்  புதிய போருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையில் March-2003 இதழ் ஒன்று கிடைத்தது.  அந்த ஒரு இதழில் மட்டுமே லினக்ஸ் தொடர்பாக அவ்வளவு விஷயங்கள்  இருந்தது.  2008 ஆண்டு வாக்கில் இந்த பழைய இதழ் கிடைத்தது என நினைக்கிறேன்.

உண்மையிலேயே அந்த பழைய இதழ் கிடைத்ததிலிருந்து நானும் எல்லா பழைய புத்தகக் கடைகளிலும் தேடிப் பார்ப்பேன் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  ஒரு நாள் முழுவதும் திருச்சியில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் LFY புத்தகத்தை தேடி அலைந்தேன்.  கிடைக்கவில்லை , கிடைத்தது ஏமாற்றம்தான்.

அது தொடர்பாக LINUX For You Magazine -னினுடைய ஆசிரியரிடமே கேட்டேன். அந்த கருத்துதான் இதழில் வெளியாகியிருக்கிறது.

உண்மையிலேயே அகம் மகிழ்ந்தேன். ஒரு வாசகனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எதுவென்றால் அவன் தொடர்ந்து வாசிக்கும் இதழில் அவனுடைய கேள்வியும், கருத்தும்  வெளியிடப்படுவதுதான்.  அந்த வாசகன் அடையும் மகிழ்ச்சியினை நானும் அடைந்தேன்.