Showing posts with label ubuntu. Show all posts
Showing posts with label ubuntu. Show all posts

Oct 26, 2013

Fullcircle Magazine -ல் எனது Ubuntu Desktop


Full Circle Magazine னினுடைய #78 வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இதழில் பக்கம் எண்: 49-ல் My Desktop எனும் பகுதியில் என்னுடைய Compaq 515 மடிக்கணினியில் நிறுவப்பட்டுள்ள Ubuntu 12.04.2 LTS ன் Screenshot வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய உபுண்டு சமூகத்தினரால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறப்பாக வெளிவந்துக் கொண்டிருக்கும் ஒரு மாத இதழில் அதுவும் உபுண்டு லினக்ஸிற்கென வெளிவரும் இதழில் கடைகோடித் தமிழனின் மடிக்கணினியில் இருக்கும் ஒரு உபுண்டு இயங்குதளத்தின் Desktop வெளியிடப்பட்டுள்ளதென்றால் அது எனக்கு பெரும் மகிழ்விற்குரிய செய்தி ஆகும்!

இதற்கு முன்னர் மரியாதைக்குரிய தோழர் சுப.தமிழினியன் அவர்களின் Ubuntu Desktop, Full Circle Magazine -ல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிட்டமைக்காக Full Circle Magazine இதழுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுடைய Ubuntu Desktop ம் வெளிவர வேண்டும்  என ஆர்வமுள்ள உபுண்டு லினக்ஸ் பயன்படுத்தக்கூடிய தோழர்கள் (Ubuntu, Kubuntu, Lubuntu, Xubuntu LinuxMint இவைகளில் ஒன்று) தங்களுடைய உபுண்டு Desktop ஐ அழகுபடுத்தி Screenshot எடுத்து(படம் பிடித்து) misc@fullcirclemagazine.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கணினியினுடைய முழு விபரங்களோடு அனுப்பி வையுங்கள். 

Jun 15, 2013

உபுண்டு 12.04 LTS ல் கணினியின் பெயரை(Host Name) மாற்றுவது எப்படி?

நமது கணினியினுடைய பெயரை உபுண்டுவில் மிகவும் எளிதாக மாற்றலாம்.  நாம் நிறுவும் பொழுது மேசைக்கணினியோ அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் இருப்பியல்பாகவே உபுண்டுவானது கணினியினுடைய பெயரை எடுத்துக்கொள்ளும்.  அதை நாம் நிறுவும் பொழுதே மாற்றிக்கொள்ளலாம் அந்த வாய்ப்பை தவறவிட்ட பட்சத்தில்  (உபுண்டு நிறுவலின் போது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடும் பொழுது கேட்கும்) எப்படி மாற்றுவது என பார்ப்போம்.

சரி, உபுண்டுவில் நமது கணினியினுடைய பெயரை தெரிந்து கொள்வது எப்படி? என கேட்கிறீர்களா மிகவும் எளிமை.

முனையத்தை திறந்து கொள்ளுங்கள் அதில் @ குறியீடுக்கு அடுத்ததாக இருப்பதுதான் கணினியினுடைய பெயர்.



கணினியின் பெயரை மாற்றுவது எப்படி?

முனையத்தை திறந்து அதில் gksu gedit /etc/hostname என கொடுத்து கட்டளையினை இயக்கவும்.



கட்டளை இயக்கப்பட்டவுடன்  உரைதிருத்தியில் இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் கணினி பெயர் இருக்கும் அதை அழித்து விட்டு உங்களுக்கு பிடித்தமான பெயரை கொடுக்கவும். கொடுத்து விட்டு சேமிக்கவும்.

அடுத்ததாக முனையத்தில் gksu gedit /etc/hosts என கொடுத்து கட்டளையை இயக்கவும். அதில் உரை திருத்தியில் பழைய பெயர் இருக்கும் அதை அழித்து விட்டு ஏற்கனவே நீங்கள் கொடுத்த பெயரையே இங்கும் கொடுத்து விட்டு சேமிக்கவும்.




முனையத்தை மூடிவிட்டு மறுமுறை திறக்கும் பொழுது மாற்றப்பட்ட புதிய பெயருடன் காண்பிக்கப்படும்.


பெயர் மாற்றத்துடன் முனையம்!

Oct 31, 2012

LibreOffice 3.6.2.2 உபுண்டுவில் நிறுவுதல்

நான் உபுண்டு 10.10 இயங்குதளம் பயன்படுத்தி வருகிறேன்.  உபுண்டுவின் அண்மைய பதிப்பு 12.10 ஆக இருந்தாலும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்திற்காக உபுண்டு இயங்குதளத்தை அண்மைய பதிப்பிற்கு புதிப்பிக்க வில்லை.

உபுண்டு 10.10 -ல் இருப்பியல்பாகவே OpenOffice Suite தான் நிறுவப்பட்டிருக்கும்.  LibreOffice எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஆகையால் நான் OpenOffice -னை நீக்கி விட்டு LibreOffice -னை நிறுவலாம் என முடிவு செய்தேன்.

முதலில் LibreOffice - னை  


இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்தேன்.

 படம் - 1

தரவிறக்கம் செய்த கோப்பு tar.gz வடிவில் இருக்கும்.  முதலில் அதனை Extract செய்ய வேண்டும்.   தரவிறக்கம் செய்த tar.gz கோப்பின் மீது வைத்து Right Click செய்து Extract Here கொடுத்து Extract செய்து கொண்டேன்.

Extract ஆகி முடிந்த பிறகு, முனையத்தை திறந்து LibreOffice கோப்பு Extract ஆன Location க்குச் சென்று dpkg கட்டளையின் மூலம் LibreOffice -னை நிறுவினேன்.

நிறுவுவதற்கான கட்டளை:

sudo dpkg -i LibO_3.6.2.2_Linux_x86_install-deb_en-US/DEBS/*

sudo dpkg -i LibO_3.6.2.2_Linux_x86_install-deb_en-US/DEBS/desktop-integration/*

இரண்டாவதாக இருக்கும் கட்டளை Applications Menu -வில் LibreOffice Suite -னை இணைப்பதற்கான கட்டளை.  (இரண்டு கட்டளைகளும் அவசியம்)

பார்க்க படம்-2 & 3


 படம் - 2


படம் - 3


Oct 25, 2012

Xubuntu -ல் உள்ள LibreOffice Writer -ல் தமிழ் தட்டச்சு பிரச்சனையினை சரி செய்வது எப்படி?


Xubuntu -ல் இருப்பியல்பாகவே LibreOffice நிறுவப்பட்டிருக்காது.  ஆகையால் நாம் தான் LibreOffice னை நிறுவிக்கொள்ள வேண்டும்.

Synaptic Package Manager மூலம் LibreOffice Writer னை நிறுவிக் கொண்டேன் மற்றவைகள் (Impress, Calc, Drawing) எதையும் நிறுவிக்கொள்ள வில்லை. Writer மட்டும் போதுமானதாக இருந்தது. தோழரினுடைய பயன்பாடு அவ்வளவுதான்.  தோழரினுடைய கணினியில் Xubuntu நிறுவிய கதையினை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.

Xubuntu -ல் தமிழில் தட்டச்சு செய்ய ibus னை நிறுவினேன்.  ibus -னை பயன்படுத்தி LibreOffice Writter -ல் தமிழில் தட்டச்சு செய்த பொழுது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே தட்டச்சு செய்ய முடிந்தது.  தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை.

இந்த பிரச்சனையினை சரி செய்ய libreoffice-gtk பொதியினை நிறுவ வேண்டும் என்ற செய்தி இணையத்தில் தேடிய பொழுது கிடைத்தது.


Synaptic Package Manager மூலம் libreoffice-gtk பொதியினை நிறுவினேன்.  Logout செய்து விட்டு மறுபடியும் Login செய்த பொழுது LibreOffice Writer -ல் தமிழில் எழுத முடிந்தது.