Mar 27, 2014

உபுண்டுவில் Mac Theme நிறுவுதல்
நான் உபுண்டு 12.04.2  LTS பயன்படுத்துவதால் கீழகண்ட இணைப்பின் உதவியோடு செய்து முடித்தேன்.

உபுண்டு 13.10 என்றால் கீழ்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.

Mar 19, 2014

My Desktop


உபுண்டுவிலிருந்து Mobile மூலமாக நண்பர்களுக்கு குறுஞ்செய்தி(SMS) அனுப்புதல் - Offline Method!


அண்மையில் தோழர் Mani-G அவர்கள் This Week's Experiments எனும் தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தபின் ஏற்பட்ட உந்துதலிலும், நாமும் செய்து பார்ப்போமே என்கிற ஆசையிலும் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மணி அவர்கள் எழுதியிருந்த பதிவில் அவருடைய Airtel 3G Internet Stick னுடைய இருப்பை(Balance) பார்ப்பதற்காக gammu எனும் கட்டளையை பயன்படுத்தியிருப்பதாக கூறியிருந்தார். இந்த கட்டளையை தனது பதிவின் மூலம் அறிமுகப்படுத்தியதற்காக உண்மையிலேயே மணிக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும். மணிக்கு ஒரு சல்யூட். நான் நீண்ட நாளாக எதிர்ப்பார்த்து இருந்த ஒரு விஷயம் இது.

ஆகையால், நாமும் இந்த gammu கட்டளையை  நம்முடைய மொபைலினுடைய Balance பார்ப்பதற்காக பயன்படுத்திப் பார்த்தால் என்ன என்று யோசித்தேன். நான் இரண்டு கைப்பேசி வைத்திருக்கிறேன். ஒன்று Samsung E1421 Model(AirTel SIM) தனி பயன்பாட்டிற்காக, இரண்டு Nokia 6300(AirTel SIM) இதை நான் இணையத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன். இந்த Nokia கைப்பேசி மூலமாகத்தான் நான் இணையத்தை பயன்படுத்தியும் வருகிறேன். இந்த பதிவு வெளியிடப்பட்டிருப்பதும் அதன்மூலமாகத்தான். இந்த Nokia கைப்பேசியினை நான் Bluetooth மூலமாக கணினியுடன்(உபுண்டுவுடன்) இணைத்துள்ளேன். தோழர் மணி அவர்கள் அவருடைய கணினியில் USB Port வழியாக 3G Stick ஐ நேரடியாக இணைத்திருப்பார், நாம் Bluetooth வழியாக அல்லவா இணைத்திருக்கிறோம். நம்முடைய கைப்பேசியில இந்த வழிமுறை வேலை செய்கிறதா என்னவென்று தெரியவில்லையே, இருந்தாலும் செய்து பார்ப்போம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டே வேலையை ஆரம்பித்தேன்.

முதலில் முனையத்தை(Terminal) திறந்து gammu என தட்டச்சு செய்து Enter Key ஐ அழுத்தினேன். நீங்க இந்த கட்டளையை இன்னும் நிறுவவில்லை என பதிலளித்தது. ஆகையால் முதலில் இந்த கட்டளையை நிறுவினேன்.


Gammu வை நிறுவுதல்:
முனையத்தைத்(Terminal) திறந்து sudo apt-get install gammu gammu-smsd எனக் கொடுக்கவும்.

அடுத்ததாக Bluetooth குச்சியை கணினியினுடைய USB Port இல் இணைத்தேன், அதன்பிறகு என்னுடைய Nokia 6300 கைப்பேசியிலுள்ள Bluetooth ஐ ON செய்தேன். இப்பொழுது gammu வை நம்முடைய கைப்பேசிக்கு ஏற்ப அமைக்க வேண்டும். அதற்காக முனையத்தில்(Terminal) sudo gammu-cofig என தட்டச்சு செய்து கட்டளையை இயக்கினேன்.


அடுத்தடுத்தடுத்து செய்துள்ளதை இங்கு அம்பு குறியிட்டு காண்பித்துள்ளேன்.


அடுத்ததாக முனையத்தைத் திறந்து sudo gedit /etc/gammu-smsdrc என்ற கட்டளையை இயக்கினேன்.


இதன்பின் திறக்கப்பட்ட கோப்பில் கீழ்காணும் வரிகளை அமைத்தேன்.


[gammu]
port = /dev/ttyS0
connection = blueat

# SMSD configuration
[smsd]
PIN=1234
service = sql
Driver=native_mysql
logfile = /etc/smsdlog
debuglevel = 1

User = root
Password = password
PC = localhost
Database = kalkun

# Paths where messages are stored
inboxpath = /var/spool/gammu/inbox/
outboxpath = /var/spool/gammu/outbox/
sentsmspath = /var/spool/gammu/sent/
errorsmspath = /var/spool/gammu/error/

கோப்பினை சேமித்தேன். அவ்வளவுதான் வெற்றிகரமாக வேலைகள் முடிந்து விட்டது. அப்புறம் என்ன SMS ஐ உபுண்டுவிலிருந்து நமது நண்பர்களுக்கு தட்டிவிட வேண்டியதுதானே!

நான் AirTel SIM ற்க்கு ஏற்ப கொடுத்துள்ளேன். நீங்கள் உங்களது SIM க்கு ஏற்ப கொடுத்துக்கொள்ளுங்கள். கட்டளைகளெல்லாம் ஒன்றுதான். ஆனால் *123# என்று Balance பார்ப்பதற்காக கொடுக்கப்படும் Code கள் ஒவ்வொரு SIM ற்க்கும் மாறுபடும்.

Balance பார்த்தல்:

gammu getussd *123#


Control Key + C ஐ அழுத்தினால் இந்த கட்டளையை Break செய்து கொள்ளலாம். அதாவது அடுத்தடுத்த கட்டளைகளை இயக்குவதற்காக வெளியேறலாம்.

SMS அனுப்புதல்:

echo "தமிழ்" | gammu sendsms TEXT 99xxxxxx17 -unicode


இதுல குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழில் குறுஞ்செய்தி(SMS) அனுப்ப முடிந்ததுதான். அது என்னவென்றே தெரியலைங்க கணினியில் ஒன்றை தமிழிலும் செய்ய முடியும்னா அப்பொழுது மனசுக்குள்ளே தனிமகிழ்ச்சிதான்!.

SMS அனுப்புவதற்கென்றே தனியான இடைமுகப்பும் கிடைக்கின்றது.மேலும் தெரிந்து கொள்ள:

Mar 18, 2014

Triple Booting - இரண்டிற்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவுதல் - Windows7 + Ubuntu 12.04 LTS + Fedora 20 + CentOS 6.5

ஒரு வன்வட்டில் அதிகபட்சமாக எத்தனை இயங்குதளங்களை நிறுவ முடியும்? இரண்டு இயங்குதளங்களுக்கு மேல் நிறுவமுடியாதா? அப்படி நிறுவினால் அனைத்து இயங்குதளங்களையும் ஏன் அணுகமுடியவில்லை? Dual Booting மூலம் விண்டோஸ்+லினக்ஸ் என இரண்டு இயங்குதளங்கள் மட்டும்தான் சாத்தியமா? இது போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் இயல்பாகவே எழும். ஒரு வன்வட்டில் இரண்டு இயங்குதளங்களுக்கு மேல் நிறுவமுடியாது என்றில்லை, எத்தனை இயங்குதளங்களை வேண்டுமானாலும் நிறுவ முடியும். அதிகபட்சமாக எவ்வளவு என்று கேட்டீர்களேயானால், அதற்கான பதில், ஒரு வன்வட்டில் எத்தனை பார்ட்டிசியன்கள் அதிகபட்சமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்து நாம் அத்தனை இயங்குதளங்களையும் நிறுவிக்கொள்ள முடியும். எண்ணிக்கையில் வேண்டுமானால் ஒன்றிரண்டு குறையலாம். அவ்வளவுதான்.

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் நாம் அனைவரும் பெரும்பாலும் நம்முடைய கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்துடன் சேர்த்து லினக்ஸை நிறுவி பயன்படுத்துவோம். ஆக மொத்தம் ஒரு வன்வட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் விண்டோஸ்+லினக்ஸ் என இரண்டு இயங்குதளங்களை நிறுவி பயன்படுத்த முடியும். இந்த செய்தி பெரும்பாலும் அனைவருக்கும் அறிந்த ஒன்றே.

ஆனால் இதையும் மீறி மூன்று, நான்கு, ஐந்து என எத்தனை லினக்ஸ் இயங்குதளங்களை வேண்டுமானாலும் நிறுவி பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். நமது தோழர்களில் பலபேருக்கு நிறைய லினக்ஸ் வழங்கல்களை பயன்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களுக்கு இந்த வழிமுறை உதவும் என நினைக்கிறேன்.

என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் 7 + உபுண்டு 12.04 + பெடோரா 20 ஆகிய மூன்று இயங்குதளங்களை நிறுவி வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் இன்னும் மூன்று இயங்குதளங்களை(லினக்ஸ்)க்கூட நிறுவ முடியும்.

இயல்பாக நாம் என்ன செய்வோம், முதலில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவோம் அதன்பிறகு உபுண்டு லினக்ஸை நிறுவுவோம். உபுண்டுவினுடைய GRUB Boot Loader Menu மூலமாக Windows அல்லது உபுண்டு இந்த இரண்டில் எந்த இயங்குதளத்திற்குள் செல்ல வேண்டுமோ அதை தேர்வு செய்து அந்த இயங்குதளத்திற்குள் உள்நுழைவோம்.

அதுபோல விண்டோஸ் மற்றும் உபுண்டு தவிர்த்து மூன்றாவதாக ஒரு லினக்ஸ் நிறுவும் போது அதனுடைய Boot Loader ஐ Hard Disk இன் Master Boot Record(MBR) இல் நிறுவாமல் எந்த பார்ட்டிசியனில் மூன்றாவது லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவுகிறோமோ அந்த பார்ட்டிசியனிலேயே Boot Loader ஐயும் நிறுவ வேண்டும். உதாரணமாக மூன்றாவதாக /dev/sda4 பார்ட்டிசியனில் பெடோராவை நிறுவினால் Boot Loader ஐ /dev/sda வில் நிறுவாமல் /dev/sda4 லேயே நிறுவ வேண்டும். அதன்பின் மூன்றாவதாக நிறுவிய இயங்குதளத்தை உபுண்டுவினுடைய GRUB Boot Loader Menu வில் இணைக்க வேண்டும். நான்காவதாக ஒரு லினக்ஸை நிறுவினாலும் இதே முறைதான். ஐந்தாவதாக ஒரு லினக்ஸை நிறுவினாலும் இதே முறைதான். முக்கியமான செய்தி என்னவென்றால் /dev/sda வில் MBR ஐ நிறுவக்கூடாது அவ்வளவுதான்.மூன்றாவதாக நிறுவிய லினக்ஸ் இயங்குதளத்தின் GRUB Boot Loader ஐ Master Boot Record இல் நிறுவாததால். நிறுவல் முடிந்தவுடன் கணினியை மறுதொடக்கம் செய்து பார்த்தால் எப்பொழுதும் போல உபுண்டுவினுடைய GRUB Menu வே உங்களுக்கு கிடைக்கும். அதில் நாம் மூன்றாவதாக நிறுவிய பெடோரா இருக்காது. அதற்காக உபுண்டு லினக்ஸிற்குள் சென்று Terminal இல் sudo nautilus என தட்டச்சு செய்து Enter Key ஐ அழுத்தவும். அதன்பிறகு /boot/grub/ அடைவிற்குச்(Folder) சென்று grub.cfg கோப்பினைத் திறந்து கீழ்காணும் வரிகளை இணைக்க வேண்டும்.

நீங்கள் மூன்றாவதாக நிறுவிய லினக்ஸ் இயங்குதளம்,

CentOS ஆக இருந்தால்

### END /etc/grub.d/40_custom ### வரிக்கு கீழே கீழ்காணும் வரிகளைச் சேர்க்கவும்

menuentry "Cent OS 6.5" {
         set root=(hd0,4)
         linux /boot/vmlinuz-2.6.32-431.el6.i686 root=/dev/sda4
initrd /boot/initramfs-2.6.32-431.el6.i686.img
}

Fedora வாக இருந்தால்

### END /etc/grub.d/40_custom ### வரிக்கு கீழே கீழ்காணும் வரிகளைச் சேர்க்கவும்

menuentry "Fedora 20" {
         set root=(hd0,4)
         linux /boot/vmlinuz-3.11.10-301.fc20.x86_64 root=/dev/sda4
initrd /boot/initramfs-3.11.10-301.fc20.x86_64.img
}இங்கு root=/dev/sda4 , set root=(hd0,4) என நான் என்னுடைய மடிக்கணினிக்கு ஏற்ப கொடுத்திருக்கிறேன். நீங்கள் உங்களது வன்வட்டில் நிறுவும் போது எந்த partition னில் நிறுவுகிறீர்களோ அதை கொடுக்கவும். அதுபோல மேல குறிப்பிட்டு இருப்பதில் vmlinuz<...> மற்றும் initramfs<...> ஆகியவற்றின் கோப்புகளின் சரியான பெயரை கொடுக்க நீங்கள் எந்த partition னில் இயங்குதளத்தை நிறுவினீர்களோ அங்கு சென்று /boot அடைவிற்குள் இருக்கும் பெயரை Copy செய்து எழுத்துப்பிழையில்லாமல் கொடுக்கவும்.

grub.cfg கோப்பினைச் சேமிக்கவும். கணினியை மறுதொடக்கம் செய்யவும். கிடைக்கும் GRUB Menu வில் நீங்கள் பொடோராவை நிறுவியிருந்தால் பெடோராவுக்கான தேர்வும், CentOS நிறுவியிருந்தால் அதற்கான தேர்வும் கிடைக்கும்.
அப்புறம் ஏன் சும்மா இருக்குறீங்க? அடுத்த வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதானே!

மேலும் தெரிந்து கொள்ள:
http://www.linuxforu.com/2009/03/install-linux-straight-from-an-iso/
https://help.ubuntu.com/community/Grub2/ISOBoot
https://help.ubuntu.com/community/Grub2/ISOBoot/Examples

Mar 12, 2014

Ubuntu Gnome Classic - அழகுஎன்னவோ தெரியவில்லை எனக்கு Unity Environment கொஞ்சம் ஒத்துப்போகவில்லை. உபுண்டு 9.04 லிருந்தே மேலேயும், கீழேயும் Panel இருக்கக்கூடிய Gnome சூழலே எனக்கு பிடிக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆகையால் என்னுடைய மடிக்கணினியில் நிறுவியிருக்கும் உபுண்டு 12.04.2 LTS ஐ Gnome Classic அமைப்பில் மாற்றிவிட்டேன்.

மேலும் தெரிந்து கொள்ள :

என்னுடைய பழைய உபுண்டு Desktop இன் தோற்றம்


Mar 10, 2014

VirtualBox இல் Windows7 இயங்குதளம் நிறுவுதல் - பகுதி-2

VirtualBox தொடர்பாக ஏற்கனவே இரண்டு பதிவுகளை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை பதிவு செய்கிறேன். இந்த பதிவை படிப்பதற்கு முன், நான் ஏற்கனவே எழுதிய இரண்டு பதிவுகளையும் அவசியம் படித்து விடவும். அதற்கான சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


VirtualBox ற்குள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை நிறுவுதல் பற்றி இங்கு காண்போம்.
Base Memory Size ஐ பொறுத்தவரையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கணினியில் இருக்கக்கூடிய RAM(முதன்மை நினைவகம்) இன் அளவைப் பொறுத்து இங்கு கொடுக்கப்படும் மதிப்புகள் மாறுபடும். உதாரணமாக என்னுடைய மடிக்கணினியில் 2GB RAM உள்ளது. உபுண்டு இயங்குதளத்திற்கு 1GB போதுமானது என்பதால், VirtualBox ற்குள் நிறுவப்போகும் விண்டோஸ் இயங்குதளத்திற்கு 984 MB ஐ Base Memory Size ஆக கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் 3GB, 4GB என RAM இருந்தால் நீங்கள் தாராளமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு 2GB கொடுத்துக்கொள்ளலாம்.  பொதுவாக பச்சை வண்ணத்தின் எல்லையை மீறி கொடுக்க வேண்டாம். அதுதான் உங்களது கணினிக்கு பரிந்துரைக்கப்படும் Base Memory Size இன் அளவு. அதாவது RAM Size. கொடுத்து விட்டு Next Button அழுத்தவும்.


இதில் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஏற்கனவே ஒரு கணினியில் இருக்கும் VirtualBox இன் Hard Disk இதில் பயன்படுத்துவதாக இருந்தால் Use existing hard disk என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த தேர்வின் மூலம் உங்கள் நண்பரினுடைய கணினியில் இருக்கும் Windows7 இயங்குதளத்தில் Virtual Disk Image ஐ பிரதி எடுத்து வந்து உங்களுடைய Virtual Box ற்குள் அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு நாம் புதிதாக நிறுவ இருப்பதலால், Create new hard disk Option ஐ தேர்வு செய்துள்ளோம். Create new hard disk என்பதை தேர்வு செய்த பிறகு Next Button ஐ அழுத்தவும்.Storage Details என்பதற்கு கீழே Dynamically allocated, Fixed size என இரண்டு தேர்வுகள் உள்ளது. Dynamically Allocated என்பதை தேர்வு செய்வதன் மூலம் Hard Disk இல் இடத்தை சேமிக்கலாம். உதாரணமாக நாம் உருவாக்கப் போகும் Windows7 க்கான Hard Disk ற்கு 10 GB கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். 10GB யில் விண்டோஸ்7 இயங்குதளமானது 6GB ஐத்தான் பயன்படுத்துகிறது எனில், மீதமுள்ள 4GB அளவினை விண்டோஸ்7 இயங்குதளம் பயன்படுத்தாதவரையில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு தேவைப்படும் போது அது பயன்படுத்திக்கொள்ளும். யார் முந்தியோ அவர்களுக்கு அந்த இடம். Fixed size என்பதை தேர்வு செய்தால் ஒதுக்கப்பட்ட இடம் முழுவதையும் Virtual Box பயன்படுத்திக் கொள்ளும். தேர்வு செய்தபின் Next Button ஐ அழுத்தவும்.


Virtual Disk எங்கு சேமிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கான அளவுகள் போன்றவற்றை இங்கு கொடுக்க வேண்டும். Size என்பதன் கீழ் இருக்கும் Slider ஐ இழுப்பதன் மூலம் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். அளவுகளை கொடுத்த பின் Next Button ஐ அழுத்தவும்.


Create Button ஐ அழுத்தவும்.


Create Button ஐ அழுத்தவும்.


Summary பக்கத்தில் உள்ள Create Button ஐ அழுத்திய பிறகு மேற்காணும் திரை போல உங்களுக்கு கிடைக்கும். இந்த திரை கிடைத்து விட்டால், நீங்கள் Virtual Box இல் இயங்கக்கூடிய Windows 7 Machine ஐ வெற்றிகரமாக உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

Machine ஐ உருவாக்கியாச்சு. அடுத்து நாம் செய்ய வேண்டியது, இயங்குதளத்தை நிறுவ வேண்டும். அதற்கு Boot Sequence, Boot Device போன்றவைகளை நாம் தயார் செய்ய வேண்டும். அதன்பின் அவைகளை Configure செய்ய வேண்டும். Virtual Box ஐ பொறுத்தமட்டிலே இரண்டு வழிகளிலே விண்டோஸ் 7 இயங்குதளத்தை நிறுவலாம். இயங்குதளத்தை நீங்கள் எதில் வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து Configure செய்வதில் மாற்றம் இருக்கும். CD/DVD களில் வைத்திருந்தால் அதிலிருந்து நீங்கள் நேரடியாக Boot செய்துகொள்ளலாம். ISO கோப்பாக வைத்திருந்தால் ISO கோப்பிலிருந்து நேரடியாக Boot செய்து கொள்ளலாம்.

நான் விண்டோஸ் 7 இயங்குதளத்தை ISO கோப்பு வடிவில் வைத்திருப்பதால், இங்கு அது தொடர்பான செய்திகளை விளக்கி இருக்கிறேன்.

Virtual Box இல் Windows 7 Settings க்குச் சென்று, Storage என்பதை Click செய்யவும். அதில் வலது புறமாக Storage Tree என்பதற்கு கீழ் இருக்கும் IDE Controller என்பதில் அதன் கீழ் இருக்கும், Empty என்பதை Click செய்யவும்.Attributes என்பதன் கீழ் இருக்கும் CD/DVD Drive: என்பதற்கு நேரில் அமைந்திருக்கும் வட்டு போன்ற Icon இல் ஒரு கீழ் நோக்கிய முக்கோண வடிவ குறியீடு இருக்கும். அதை Click செய்யவும். அதில் Choose Virtual CD/DVD disk file என்பதை Click செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் திரையில் மூலம் உங்களது Windows7 ISO கோப்பினை தேர்வு செய்யவும். தேர்வு செய்த பின் Open Button ஐ அழுத்தவும்.


அடுத்ததாக windows 7 -settings இன் திரையின் Ok Button ஐ அழுத்தவும்.
அதன்பின் முதன்மைத்திரைத் தெரியும் அதில் Windows 7 ஐ அழுத்தி அதன்பின் Start Button ஐ அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களது Windows 7 Virtual Machine boot ஆக ஆரம்பிக்கும். அதன்பின் நீங்கள் எப்பொழுதும் போல விண்டோஸ் 7 இயங்குதளத்தை எப்படி நிறுவ வேண்டுமோ அதுபோல நிறுவிக்கொள்ளலாம்.


இது தொடர்பாக எந்தவிதமான சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அல்லது மின்னஞ்சல் செய்யுங்கள். என்னால் இயன்றவரையில் சந்தேகங்கங்களுக்கு பதிலளிக்கிறேன். யாரும் தயக்கம் கொள்ள வேண்டாம்!