குறிப்பு: கீழே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும் Unity Environment இல் செய்யப்பட வேண்டியது. Gnome Classic Environment இல் இந்த வழிமுறைகள் வேலை செய்யாது. அதே நேரத்தில் Unity Environment இல் Configure செய்த பிறகு தமிழ் தட்டச்சை Gnome Classic Environment -லும் செய்து கொள்ளலாம்.
உபுண்டுவில் நான் அடிக்கடி செய்யும் முக்கியமான வேலைகளில் ஒன்று தமிழில் தட்டச்சு செய்தல். இன்றைக்கு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதும், தமிழைப் பயன்படுத்துவதும் அனைவரும் மகிழ்ச்சியடையும் விதத்தில் உள்ளது. விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும்தான் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். அதைவிட அருமையாக உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.
உபுண்டுவில் தமிழ் தட்டச்சு செய்வது தொடர்பாக ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன். அதுபோல என்னிடம் உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என கேட்கும் நண்பர்களுக்கு, நான் அடிக்கடி பரிந்துரைக்கும் பதிவுகளில் ஒன்று மயூரன் அவர்கள்ளுடைய பதிவு. இந்த பதிவுகளையும் ஒரு முறை படித்துக் கொண்டால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நான் தமிழ் 99 - தட்டச்சு முறையை பயன்படுத்துவதால் அதற்குரிய வழிமுறைகளை இங்கு கொடுத்துள்ளேன். ஒலியியல் முறையில் தட்டச்சு செய்பவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வழிமுறைகளை அமைத்துக் கொள்ளலாம்.
முனையத்தில்(Terminal) கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கவும்.
sudo apt-get update
sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n
இந்த கட்டளை முழுவதுமாக இயங்கி முடிந்த பின் உபுண்டுவை ஒருமுறை Logout செய்துவிட்டு Login செய்யவும். அதன்பின், கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
System Settings க்குச் சென்று Text Entry என்பதை திறந்து கொள்ளவும். அடுத்ததாக,
'+' குறியீட்டை அழுத்தவும். அடுத்ததாக,
Tamil(tamil99(m17n)) தேர்வு செய்து Add Button ஐ அழுத்தவும். ஒலியியல் முறையில் தட்டச்சு செய்பவராக இருந்தால் Tamil(phonetic(m17n)) தேர்வு செய்து Add Button ஐ அழுத்தவும். அடுத்ததாக,
Switch to nexxt source using: என்பதற்கு கீழ் உள்ள Input Box ஐ Click செய்தவுடன் New Accelerator என்று வரும் அப்பொழுது Ctrl+Space Key களை ஒரு சேர அழுத்தவும். இது எதற்கு என்றால் தமிழில் தட்டச்சு செய்வதற்கான குறுக்குவழி விசை, இந்த விசையை பயன்படுத்தித்தான் நாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி தட்டச்சு செய்ய வேண்டும். இந்த குறுக்கு விசை பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு பிடித்தமான விசையை அமைத்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான் முடிந்தது வேலை. நீங்கள் அமைத்த குறுக்கு விசையைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய தொடங்கலாம்.

4 comments:
மிக்க நன்றி திரு கதிர்வேலு அவர்களே.
நன்றி குமாரசாமி.
நன்றி தோழரே
நன்றி சரவணன்.
Post a Comment