Nov 11, 2012

மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS -னை நிறுவினேன்




நான் முழுமையாக லினக்ஸைப் பயன்படுத்த தொடங்கியது நான்  பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயில தொடங்கியபொழுதுதான்.  2009 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.   முதன்முதலாக நான் நிறுவி பயன்படுத்திய உபுண்டு லினக்ஸ் 9.04 அதன் பின்பு வந்த எந்த பதிப்பினையும் எனது மடிக்கணினியில்  நிறுவ முடியவில்லை.  உபுண்டு 10.04 LTS நிறுவ முற்பட்டும் முடியவில்லை காரணம் Video Driver பிரச்சனை.

அதன் பிறகு வெளியிடப்பட்ட உபுண்டு 10.10 னைத் தான் நிறுவ முடிந்தது, உபுண்டு 10.10 நிறுவியதிலிருந்து நவம்பர்-8-2012 வரை உபுண்டு 10.10 பதிப்பைத் தான் பயன்படுத்தி வந்தேன்.

உபுண்டு 10.10 லினக்ஸ் பதிப்பில் எவ்வளவோ வேலைகள் செய்து பலனடைந்தேன்.  எந்த நிரல்களையும், மென்பொருளையும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நிறுவ முடிந்தது.  இரண்டு வருடங்களாக எனக்கு எந்த வித தொல்லையும் தராமல் சொன்னதைச் செய்யும் குழந்தை போல் அவ்வளவு அருமையாக இயங்கியது.  உபுண்டு 10.10 பதிப்பினை  நீக்க மனமில்லாமல் நீக்கினேன்.  என்னுடைய நண்பர்களில் ஒருவராகவே உபுண்டு 10.10 இயங்குதளம் இருந்தது.  இரண்டு வருட பயன்பாட்டில் எந்த ஒரு தொல்லையும் என்னை சங்கடப்படுத்தும் அளவிற்கு ஏற்படவில்லை..அவ்வளவு அற்புதமாக இயங்கியது.

உபுண்டு 12.04 LTS பதிப்பினை நேற்று (நவம்பர் - 10 - 2012) நிறுவினேன். கடுமையான மின்வெட்டின் காரணமாக இரண்டு முறை நிறுவுதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது மின்சாரம் நின்று போனது, ஆகையால் மீண்டும் முதலிலிருந்து நிறுவ வேண்டிய நிலை.

மூன்றாவது முறை தொடங்கி வெற்றிகராமாக உபுண்டு 12.04 LTS  பதிப்பினை எனது Compaq 515 மாடல் மடிக்கணினியில் நிறுவி முடித்தேன்.  காரணம் மூன்று மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து வந்தது...

உபுண்டு 12.04 LTS பதிப்பு பயன்படுத்த மிகவும் அற்புதமாகவும் , ஆர்வமாகவும் இருக்கிறது.

அகலக்கற்றை இணைய இணைப்பு அண்ணன் நீலகண்டன் அவர்கள் வைத்திருக்கிறார் அவரினுடைய உதவியால் தேவையான மென்பொருள்களை நிறுவி முழுப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தேன்.

தற்போதைய உபுண்டு 12.04 LTS :


No comments: