Showing posts with label LINUX For You Magazine. Show all posts
Showing posts with label LINUX For You Magazine. Show all posts

May 2, 2014

LINUX For You (LINUX For You is Now Open Source For You) Magazine இல் - எனது வேண்டுகோள்


CentOS 6.5 இயங்குதளம் எனக்கு தேவைப்பட்டது. ஆகையால் அதை Linux For You Magazine க்கு ஒரு வேண்டுகோளாக வைத்தேன். அந்த வேண்டுகோள் May-2014 Linux For You(Open Source For You) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Open Source For You குழுவினருக்கு நன்றி !

Dec 5, 2012

LINUX For You (Dec-2012) Magazine -ல் எனது feedback



கடந்த ஐந்து வருடங்களாக நான் LINUX For You Magazine னினுடைய சந்தாதாரராக இருந்துகொண்டிருக்கிறேன். லினக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸை விரும்புகிறவர்களுக்கும் , ஓப்பன் சோர்ஸ் வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ள பிடித்தமான ஒரு இதழ்.

இந்த இதழ் ஆரம்பித்தது 2003-ம் ஆண்டில், ஆனால் நான் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர்ந்தது 2007 ஆம் ஆண்டில்தான்.  ஒரு முறை புதுக்கோட்டையில்  புதிய போருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையில் March-2003 இதழ் ஒன்று கிடைத்தது.  அந்த ஒரு இதழில் மட்டுமே லினக்ஸ் தொடர்பாக அவ்வளவு விஷயங்கள்  இருந்தது.  2008 ஆண்டு வாக்கில் இந்த பழைய இதழ் கிடைத்தது என நினைக்கிறேன்.

உண்மையிலேயே அந்த பழைய இதழ் கிடைத்ததிலிருந்து நானும் எல்லா பழைய புத்தகக் கடைகளிலும் தேடிப் பார்ப்பேன் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  ஒரு நாள் முழுவதும் திருச்சியில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் LFY புத்தகத்தை தேடி அலைந்தேன்.  கிடைக்கவில்லை , கிடைத்தது ஏமாற்றம்தான்.

அது தொடர்பாக LINUX For You Magazine -னினுடைய ஆசிரியரிடமே கேட்டேன். அந்த கருத்துதான் இதழில் வெளியாகியிருக்கிறது.

உண்மையிலேயே அகம் மகிழ்ந்தேன். ஒரு வாசகனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எதுவென்றால் அவன் தொடர்ந்து வாசிக்கும் இதழில் அவனுடைய கேள்வியும், கருத்தும்  வெளியிடப்படுவதுதான்.  அந்த வாசகன் அடையும் மகிழ்ச்சியினை நானும் அடைந்தேன்.


Sep 18, 2010

LINUX For Yor Magazine -ல்வெளிவந்த GIMP தொடரின் PDF கோப்புகள்

நான் கடந்த மூன்று வருடமாக LINUX For You Magazine க்கு சந்தாதாரராக இருக்கிறேன்.இந்த இதழை முதன் முதலில் எங்கள் பாலிடெக்னிக்னினுடைய(அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி,அறந்தாங்கி,புதுக்கோட்டை மாவட்டம்) நூலகத்தில் பார்த்தேன்.அப்பொழுது இந்த இதழை படிக்கும் பொழுதெல்லாம் ஒன்றும் புரியாது ஆனால் இதழில் உள்ள படங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவேன்.ஏனென்றால் கணினி என்றாலே விண்டோஸ் இயங்குதளத்தினுடைய சாளாரங்களைப் பார்த்து போரடித்து போன எனக்கு ஏதோ புதிதாக ஒரு அதிசயத்தைப் பார்த்தது போன்ற உணர்வு இருக்கும்.இந்த இதழை நூலகர் கணினி துறை மாணவர்களுக்கும்,மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களுக்கு மட்டுமே கொடுப்பார் படித்துவிட்டு அவரிடமே திருப்பி ஒப்படைத்து விட வேண்டும்.பாலிடெக்னிக் இறுதியாண்டு படிக்கும் பொழுது சந்தாதாரராக ஆகினேன் ஏனென்றால் கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டால் இதழை படிக்க முடியாது அல்லவா.

ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியிலிருந்து 12-ம் தேதிக்குள் எங்கள் கிராமத்தினுடைய தாபால் காரர் மூலம் எனக்கு கிடைத்து விடும்.லினக்ஸை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள இதழ்,வசதியுள்ள மாணவர்கள் சந்தாதாரகிக்கொள்ளலாம்.ஒவ்வொரு மாதமும் இதழுடன் DVD+CD சேர்த்து வழங்குகிறார்கள்.

சென்னை,கோயம்புத்தூர்,திருச்சி போன்ற முக்கியமான இடங்களில் கண்டிப்பாக கிடைக்கும்.ஒரு தனி இதழின் விலை 100 ரூபாய்.இதழுடன் வரும் DVD யில் ஒரு சிறந்த,முக்கியமான லினக்ஸ் இயங்குதளத்தை கொடுக்கின்றனர் இயங்குதளத்தின அளவு 4.GB க்கு மேல் இருக்கும்,இந்த இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார்பது என்பது முடியாத காரியம் தரவிறக்கம் செய்ய நேரமும்,செலவும் அதிகம் பிடிக்கும்.CD யில் Kernel னுடைய புதிய பதிப்புக்குண்டான Package யும் , பயனுள்ள மென்பொருள்களையும் ,தொடராக வெளிவந்த கட்டுரைகளையும் PDF கோப்பாகவும் கொடுக்கின்றனர்.இதழில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையாக உள்ளது.

இதழின் இணையதள முகவரி மற்றும் சந்தா விபரம் தெரிந்து கொள்ள http://www.linuxforu.com
என்னப்பா பதிவுக்கு கொடுத்த தலைப்புக்கும் நீ சொலவதற்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீங்க,ரொம்ப நாளாக சொல்லனும்னு நினைத்தது.அவ்வளவுதான்.

நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தும் Photoshop மென்பொருளைப் போல GIMP -ம்(Gnu IMage Manipulation) லினக்ஸில் பயன்படுத்தும் ஒரு மென்பொருள்.இதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள பிரபு சாரினுடைய சுதந்திர கிம்ப் வலைப்பூவிற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த GIMP மென்பொளைப் பற்றிய தொடர் LINUX For You Magazine -ல் பிப்ரவரி-2009 லிருந்து ஜூலை -2010 வரை தொடராக வெளிவந்தது.எனக்கு வந்த இந்த மாத இதழில் அனைத்து தொடர்களையும் PDF கோப்பாக CD -யில் கொடுத்திருந்தனர் இவையனைத்தையும் இணையத்தில் ஏற்றி அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன்.தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
  1. அறிமுகம்
  2. தொடர்-1
  3. தொடர்-2
  4. தொடர்-3
  5. தொடர்-4
  6. தொடர்-5
  7. தொடர்-6
  8. தொடர்-7
  9. தொடர்-8
நான் இங்கு கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் முழு உரிமையுடன் நீங்கள் தெரிவிக்கலாம்.சுதந்திரம் மனிதனின் உரிமை