Aug 18, 2013

UUID பிழையினை சரி செய்வது எப்படி?


விண்டோஸ்+லினக்ஸ் இருக்கும் கணினிகளில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பின் லினக்ஸை மீட்டெடுத்தப் பிறகு ,  விண்டோஸ் இயங்குதளத்தை GRUB மெனுவில் தேர்வு செய்து உள் நுழையும் போது மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று ஒரு சிறிய பிழைச் செய்தி நமக்கு பெரும்பாலும் கிடைக்கிறது.  அந்த பிழைச்செய்தியினை எப்படி சரி செய்வது என்பதை இங்கு காண்போம்.முனையத்தை திறந்து sudo blkid எனும் கட்டளையைக் கொடுத்து இயக்கவும். நீங்கள் எந்த கோலனில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவியுள்ளீர்களோ அந்த கோலனின் UUID யினைக் Copy செய்யவும், இரட்டை மேற்கோள் குறியில்லாமல் Copy செய்யவும்.

குறிப்பு: பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளங்கள் /dev/sda1 அல்லது /dev/sda2 இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் நிறுவப்பட்டிறுக்கும்.


grub.cfg கோப்பினை திறக்கவேண்டும்.  அதற்கு sudo nautilus என முனையத்தில் கொடுத்து இயக்கவும். Nautilus File Manager திறக்கப்படும் அதில் File System -> boot -> grub.cfg  திறக்கவும்.


menuentry "Windows 7 (loader)" எனும் வரியினைக் கண்டுபிடித்து அதன் தொடர்ச்சியாக கீழே இருக்கும் வரிகளில் --set-root  என்பதை தொடர்ந்து இருக்கும் பழைய UUID ஐ அழித்துவிட்டு மேலே முனையத்தில் blkid கட்டளை மூலம் கண்டுபிடித்து Copy செய்து வைத்திருக்கும் UUID யினை பழைய UUID இருந்த இடத்தில் Paste செய்யவும்.

கவனம்:  --set-root என்பதற்கும் UUID என்பதற்கும் இடையில் single space இருக்க வேண்டும்.


Paste செய்த பின் கோப்பினை சேமித்த பிறகு கணினியினை மறுதொடக்கம்(Restart) செய்தால் நீங்கள் எப்பொழுதும் போல விண்டோஸ் இயங்குதளத்தை தேர்வு செய்யும் போது பிழைச்செய்தி கிடைக்காமல் இயங்குதளத்தைப் பயன்படுத்தலாம்.

===========

Aug 1, 2013

க்னு/லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

http://www.kaniyam.com/gnulinux-installfest/

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு/லினக்ஸ் (ILUGC) குழுவின்
முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை
முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில்
பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 - 31 , 2013).

க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த
நிறுவல் விழாவினை நடத்துகிறோம்.  எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
GNU/Linux Users Group Chennai http://www.ilugc.in பக்கம் செல்லுங்கள்

நீங்கள் ஏற்கனவே க்னு/லினக்ஸ் பயன்படுத்தினாலோ, பலர் க்னு/லினக்ஸ்
பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளவராகவோ இருந்தால்.. தயக்கம்
வேண்டாம்.. வாங்க... பதிவு செய்து  http://bit.ly/gnulinux-installfest
சங்கத்தில் இணையுங்கள்!!

விழா நோக்கம்:

க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவ உதவுவதன் மூலம், மக்களிடையே
க்னு/லினக்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின்
க்னு/லினக்ஸ் பற்றிய மனக்கலக்கத்தை நீக்குதல்.

நீங்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்?

க்னு/லினக்ஸ் நிறுவி முயற்சிக்க அருமையான ஐந்து காரணங்கள்:
1. சுதந்திரம்
2. நச்சு நிரல் (Virus, Malware & Spyware) பற்றிய கவலை இல்லை
3. விலையில்லா இயங்குதளம்
4. சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு அருமையான குழுக்களின் ஆதரவுடன்
ஏதேனும் நன்மை செய்தல்
5. உங்களுக்கு மிகவும் பிடித்த பகிர்ந்தளிப்புடன் விளையாடலாம்.
இதற்கு மேலும் காரணங்கள் வேண்டுமா?? இதைப் பாருங்க!
http://www.whylinuxisbetter.net/

'இப்ப பயன்படுத்தும் விண்டோஸை (Windows) விட முடியாது!! ஆனாலும்,
க்னு/லினக்ஸ் முயற்சிக்க விரும்புகிறேன்' என்கிறீர்களா? கவலையை விடுங்க!!
நம்ம நண்பர்கள் அதைப் பார்த்துக்குவாங்க!!

உங்களுக்கு க்னு/லினக்ஸ் நிறுவ உதவுவதற்காக நன்கு அனுபவமுள்ள தன்னார்வல
நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறனர். 'நிறுவல் விழா ஆர்வலர்கள்'
http://ilugc.in/content/install-fest-2013-volunteers  பக்கம் சென்றால்,
அவர்களின் விவரம் கிடைக்கும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நண்பரை
அணுகி நீங்களும் லினக்ஸ் பயன்படுத்துங்கள்.

க்னு/லினக்ஸ் நிறுவுங்க.... கொண்டாடுங்க!!

தொடர்பிற்கு:
சிவகார்த்திகேயன்
ஸ்ரீனிவாசன்

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge