Full Circle Magazine னினுடைய #78 வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இதழில் பக்கம் எண்: 49-ல் My Desktop எனும் பகுதியில் என்னுடைய Compaq 515 மடிக்கணினியில் நிறுவப்பட்டுள்ள Ubuntu 12.04.2 LTS ன் Screenshot வெளியிடப்பட்டுள்ளது.
எனக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய உபுண்டு சமூகத்தினரால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறப்பாக வெளிவந்துக் கொண்டிருக்கும் ஒரு மாத இதழில் அதுவும் உபுண்டு லினக்ஸிற்கென வெளிவரும் இதழில் கடைகோடித் தமிழனின் மடிக்கணினியில் இருக்கும் ஒரு உபுண்டு இயங்குதளத்தின் Desktop வெளியிடப்பட்டுள்ளதென்றால் அது எனக்கு பெரும் மகிழ்விற்குரிய செய்தி ஆகும்!
இதற்கு முன்னர் மரியாதைக்குரிய தோழர் சுப.தமிழினியன் அவர்களின் Ubuntu Desktop, Full Circle Magazine -ல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிட்டமைக்காக Full Circle Magazine இதழுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுடைய Ubuntu Desktop ம் வெளிவர வேண்டும் என ஆர்வமுள்ள உபுண்டு லினக்ஸ் பயன்படுத்தக்கூடிய தோழர்கள் (Ubuntu, Kubuntu, Lubuntu, Xubuntu LinuxMint இவைகளில் ஒன்று) தங்களுடைய உபுண்டு Desktop ஐ அழகுபடுத்தி Screenshot எடுத்து(படம் பிடித்து) misc@fullcirclemagazine.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கணினியினுடைய முழு விபரங்களோடு அனுப்பி வையுங்கள்.
1 comment:
வாழ்த்துக்கள் தோழா!
Post a Comment