Jun 15, 2013

உபுண்டு 12.04 LTS ல் கணினியின் பெயரை(Host Name) மாற்றுவது எப்படி?

நமது கணினியினுடைய பெயரை உபுண்டுவில் மிகவும் எளிதாக மாற்றலாம்.  நாம் நிறுவும் பொழுது மேசைக்கணினியோ அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் இருப்பியல்பாகவே உபுண்டுவானது கணினியினுடைய பெயரை எடுத்துக்கொள்ளும்.  அதை நாம் நிறுவும் பொழுதே மாற்றிக்கொள்ளலாம் அந்த வாய்ப்பை தவறவிட்ட பட்சத்தில்  (உபுண்டு நிறுவலின் போது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடும் பொழுது கேட்கும்) எப்படி மாற்றுவது என பார்ப்போம்.

சரி, உபுண்டுவில் நமது கணினியினுடைய பெயரை தெரிந்து கொள்வது எப்படி? என கேட்கிறீர்களா மிகவும் எளிமை.

முனையத்தை திறந்து கொள்ளுங்கள் அதில் @ குறியீடுக்கு அடுத்ததாக இருப்பதுதான் கணினியினுடைய பெயர்.



கணினியின் பெயரை மாற்றுவது எப்படி?

முனையத்தை திறந்து அதில் gksu gedit /etc/hostname என கொடுத்து கட்டளையினை இயக்கவும்.



கட்டளை இயக்கப்பட்டவுடன்  உரைதிருத்தியில் இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் கணினி பெயர் இருக்கும் அதை அழித்து விட்டு உங்களுக்கு பிடித்தமான பெயரை கொடுக்கவும். கொடுத்து விட்டு சேமிக்கவும்.

அடுத்ததாக முனையத்தில் gksu gedit /etc/hosts என கொடுத்து கட்டளையை இயக்கவும். அதில் உரை திருத்தியில் பழைய பெயர் இருக்கும் அதை அழித்து விட்டு ஏற்கனவே நீங்கள் கொடுத்த பெயரையே இங்கும் கொடுத்து விட்டு சேமிக்கவும்.




முனையத்தை மூடிவிட்டு மறுமுறை திறக்கும் பொழுது மாற்றப்பட்ட புதிய பெயருடன் காண்பிக்கப்படும்.


பெயர் மாற்றத்துடன் முனையம்!

No comments: