Showing posts with label உபுண்டு லினக்ஸ். Show all posts
Showing posts with label உபுண்டு லினக்ஸ். Show all posts

Mar 7, 2014

உபுண்டு 14.04 LTS - Trusty Tahr


உபுண்டுவினுடைய முதல் பதிப்பான 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த பத்து வருடங்களில் உபுண்டு லினக்ஸானது ஒரு நீண்டநெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. லினக்ஸ் என்றாலே பயன்படுத்த கடினமாக இருக்குமே என நினைத்து பயந்த பயத்தை, ஆரம்ப நிலை பயனாளர்களிடமிருந்து அழித்தொழித்த பெருமை உபுண்டுவினையேச் சாரும். நானும் எத்தனையோ லினக்ஸ் வழங்கல்களை நிறுவி பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். ஆனால உபுண்டுவினைப் போன்று பயன்படுத்துவதற்கு எளிமையான, அதே நேரத்தில் ஏதாவது ஒரு பிழை ஏற்பட்டாலும் அதை சரி செய்யக்கூடிய வழிமுறைகளும், தீர்வுகளும் மிகவும் எளிமையாகக் கிடைக்கூடிய ஒரு லினக்ஸ் வழங்கலை பார்த்ததில்லை. ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு நாம் உபுண்டு லினக்ஸை உறுதியாக பரிந்துரைக்கலாம் அதில் எந்தவிதமான தயக்கமும் கொள்ள வேண்டியதில்லை. இது போன்று இன்னும் எவ்வளவோ சிறப்புகளைக் கொண்ட உபுண்டுவினுடைய அடுத்த பதிப்பான 14.04 ஆனது LTS (Long Term Support) பதிப்பாக ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. உபுண்டு 14.04 LTS வெளியீட்டு கால அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் 19 உபுண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கும் உபுண்டு 14.04 LTS ஆனது உபுண்டுவினுடைய 20-ஆவது பதிப்பாகும்.

மறுஉருவாக்கம் செய்யப்பட்ட Startup Disk Creator Tool, Unity Control Center என பல புதுமையான அம்சங்களோடு உபுண்டு 14.04 LTS ஆனது ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. ஆவலோடு இருங்கள் தோழர்களே! உபுண்டுவின் அடுத்த பதிப்பை சுவைப்பதற்கு!

மேலும் தெரிந்து கொள்ள:

Feb 19, 2012

உபுண்டு 11.10 நிறுவுதல் கையேடு தமிழில் PDF கோப்பாக - பகுதி(1)

கோப்பினைத் தரவிறக்க இங்கு சொடுக்கவும்

உபுண்டு லினக்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பதிப்பாக வெளியிடப்படுகிறது. புதிதாக வெளியிடப்படும் ஒவ்வொரு பதிப்பும் பல சிறப்பான மாற்றங்களுடனும், அம்சங்களுடனும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

உபுண்டு லினக்ஸினுடைய 10.04 பதிப்பிலிருந்து நிறுவுதலுக்குண்டான இடைமுகப்பில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறு சிறு மாற்றங்கள் நிறுவுதலை மென்மேலும் எளிமைப் படுத்தும் விதத்தில் அமைந்து உள்ளது.

இருந்தாலும் ஏற்கனவே உள்ள கையேடுகள், வழிகாட்டிகள், காணொளிகள் (உபுண்டு 9.10 பதிப்பு வரையில் உள்ளது), உபுண்டு 11.10 பதிப்பை நிறுவ முற்படும் ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு சிறு சிறு தடுமாற்றங்களை உண்டு பண்ணும். இந்த தடுமாற்றங்களை நிவர்த்தி செய்யும் விதமாக புதிய பயனாளர்களுக்கு, இந்த நிறுவுதல் கையேடு உதவியாக அமையும்.

நான் ஏற்கனவே உபுண்டு லினக்ஸ் நிறுவுதல் தொடர்பாக இரண்டு கையேடுகளை வெளியிட்டிருக்கிறேன். நிறைய பயனாளர்கள் பயனடைந்து இருப்பார்கள் என நம்புகிறேன்.

உபுண்டு லினக்ஸ் நிறுவுதல் தொடர்பாக ஆங்கிலத்தில் நிறைய கையேடுகளும், வழிகாட்டிகளும், காணொளிகளும் உள்ளது. ஆனால் நம்முடைய தமிழ் மொழியில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த பெரிய குறைபாட்டினை சரி செய்யும் ஒரு சிறிய புள்ளியாக இது அமையும்.

அத்துடன் நம்முடைய நண்பர்கள் உபுண்டு லினக்ஸினை நிறுவுவது எப்படி எனக் கேட்கும் பொழுது, அவர்களுக்கு பரிந்துரைக்க இது ஒரு முழுமையான கையேடாகவும் அமையும்.



இந்த கையேட்டினை இரண்டு பகுதிகளாக வெளியிடுகிறேன். இந்தப் பதிவில் இணைத்திருப்பது முதல் பகுதி. இந்த பகுதியில் Gpartition Editor -னைக் கொண்டு வன்வட்டினை எவ்வாறு தயார் செய்வது எனக் கொடுத்துள்ளேன்.

இதனைத் தொடர்ந்து உபுண்டுவினை நிறுவுவது எப்படி எனக் கொடுத்துள்ளேன். அதை அடுத்த பதிவில் இந்த பகுதியினையும் சேர்த்து ஒரு முழுமையான கையேடாக வெளியிடுகிறேன்.

[வேலைப் பழு காரணம் என்று சொல்வதோடு , தனிபட்ட காரணங்களுக்காக கோப்பினை முழுமையாக தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும். விரைவில் வெளியிடுகிறேன். ]

இந்த கோப்பினைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்க்கிறேன். இதைப் பற்றி தாங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே நீங்கள் தெரிவிக்கலாம்.

Sep 14, 2010

Compaq515 மாடல் மடிக்கணினியில் ,உபுண்டு 10.10 இயங்குதளத்தில் Broadcom WiFi Wireless Driver யினை நிறுவுவது எப்படி ?

என்னுடைய மடிக்கணினி Compaq515 மாடல்.என்னவோ தெரியவில்லை உபுண்டு 9.04 ஐத்தவிர வேறு உபுண்டுவின் எந்த பதிப்பும் என்னுடைய மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை.தற்பொழுது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு 9.04 ஐ நிறுவி சரியாக ஒருவருடத்திற்கும் மேலாகி விட்டது.என்னுடைய மடிக்கணினியில் நிறுவியிருக்கும் உபுண்டு 9.04 லினக்ஸில் ஒலி வசதியும்,ATI Radeon Graphics Driver 1231 ம் வேலை செய்யவில்லை ஆனால் WiFi Wiresless வேலைசெய்கிறது (எங்களுடைய பல்கலைக்கழகத்தில் 24 மணிநேர WiFi இணையம் வசதி உள்ளது),உபுண்டு 9.04 க்குப் பிறகு வெளியிடப்பட்ட அடுத்தப் பதிப்பான உபுண்டு 9.10 ஆனது பூட்டிங்கோடு நின்றுக்கொண்டது அதற்கு அப்புறம் ஒரு அடிகூட நகரவில்லை,அதற்கு அடுத்தப் பதிப்பான 10.04 வெளியிடப்பட்டது Ubuntu 10.04 Desktop,Kubuntu 10.04 ஐயும் உபுண்டுவின் தளத்தில் விண்ணப்பித்து இரண்டு வட்டுக்களையும் பெற்றுக்கொண்டேன்.விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் ஆசையாக உபுண்டு 10.04 நிகழ்வட்டு தேர்வினை தேர்வுசெய்து இயங்கிப்பார்த்தேன் அதுவும் பூட்டிங்கோடு நின்றுக்கொண்டது.
சரி இது இருக்கட்டும் Kubuntu 10.04 ஐ நிகழ் வட்டாக இயக்கிப்பார்த்தேன் இது நன்றாக வேலைசெய்தது ஒலி வசதி வேலை செய்தது,ஆனால் WiFஇ யும் ATI Radeon Graphics Driver உம் வேலை செய்யவில்லை,இதுபோலவே Ubuntu10.04 Netbook Edition -னும் வேலை செய்தது.
இந்த பதிப்புகளிலெல்லாம் எனக்கு என்ன பிரச்சனை என்றால் ஒலி வேலை செய்தால் , WiFi வேலை செய்யாது.WiFஇ வேலை செய்தால் ,ஒலி வசதி வேலை செய்யாது.நானும் இந்த பிரச்சனைகளையெல்லாம் சரிசெய்ய முயற்சிக்கவில்லை,உள்ளதையே பயன்படுத்துவோமே என திருப்திப்பட்டுக்கொண்டு உபுண்டு 9.04 ஐ இன்றைய தேதிவரையிலும் பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த சனிக்கிழமை இரவு உபுண்டுவின் இணையத்தளத்தைப் பார்வையிட்ட பொழுது அடுத்த மாதம் வெளிடப்பட இருக்கும் உபுண்டு10.10 பதிப்பினுடைய பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யும் இணைப்பினைக் கொடுத்திருந்தனர்.சரி தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்போமே என்று தரவிறக்கம் செய்தேன்.சரியாக ஒன்னேமுக்கால் மணி நேரத்தில் தரவிறக்கம் முடிந்தது(695 MB). தரவிறக்கம் செய்த ISO ‍கோப்பினை என்னிடம் இருந்த DVD/RW ‍ வட்டில் எழுக்கொண்டேன்.
உபுண்டு10.10 இயங்குதளம் தயாராகி விட்டது,மடிக்கணினியினுடைய BIOS ‍ ற்க்கு சென்று F9 ‍ பொத்தானை அழுத்தி First Bootting Device , CD/DVD ‍ ஆக மாற்றி சேமித்துக்கொண்டேன்.மடிக்கணினியினை மறுதொடக்கம் செய்தேன் மடிக்கணினி வட்டில் இருந்து தொடங்கியது ,அட என்னங்க உபுண்டுவின் முதல் திரையே மிகவும் அழகாக இருந்தது,ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு நிறுவுதலின் திரை வந்தது அதில் Try Ubuntu ,Installation ‍ நிகழ்வட்டாக இயக்கிப் பார்ப்போம் என்று Try Ubuntu எனும் தேர்வினை தேர்வு செய்தேன்.
உபுண்டு Desktop வந்துவிட்டது,மிக அருமை,சரி முதலில் ஒலி வசதி வேலை செய்கிறதா என்று பார்ப்போம் என்று உபுண்டு லினக்ஸிற்கென மாற்றி வைத்திருந்த .wav வடிவ பாடலில் இருந்து ஒரு பாடலினை இயக்கிப் பார்த்தேன் ஆச்சரியம் ஒலி வசதி மிகச் சரியாக வேலை செய்தது.சரி முதல் பிரச்சனை தீர்ந்தது.அடுத்து Graphics Display Driவெர் அட அதுவும் முகவும் சரியாக வேலை செய்தது,Desktop Preferences -> Visual Effects -> Normal,Extra இரண்டும் வேலை செய்த்தது அட அடுத்தப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி ,இதையெல்லாம் விட எனக்கு மிகவும் முக்கியமானது WiFi இங்கேதான் வந்தது பிரச்சனை எப்பொழுதும் போல WiFi வேலை செய்யவில்லை.சரி பார்த்துக்கொள்வோம் என்று உபுண்டு10.10 ன் மூலமே உபுண்டு10.10 உள்ள Startup Disk Creator உதவியின் மூலம் பென்டிரைவில் இருந்து இயங்குமாறு தயார் செய்துக்கொண்டேன்.
அட இப்படியே போய்கிட்டு இருந்தா இதுக்கு என்னதான்யா முடிவு,இப்படியே விடக்கூடாது என நினைத்து அன்று இரவே கூகுள் பெரியவரிடமும் ஐடியா கேட்டேன்.அவரும் தெளிவான இணைப்புகளைக் கொடுத்தார் அதில் ஒன்றிரண்டு இணைப்புகளைச் சொடுக்கி படித்துப் பார்த்தேன் ஓரளவு ஐடியா கிடைத்தது.அதில் ஒரு சிறப்பான இணைப்புக் கிடைத்தது.அந்த இணைப்பு http://wireless.kernel.org/en/users/Drivers/b43#devicefirmware இந்த இணைப்பில் அனைத்து WiFi Driver களையும் எப்படி லினக்ஸில் பயன்படுத்துவது எனும் வழிமுறைகளை கொடுத்திருக்கின்றனர்.
இதில் கொடுக்கப்பட்டிருந்த வழிமுறைகள் மிகவும் எளிமையாக இருந்தது. இதில் என்ன முக்கியமா பார்க்க வேண்டியது என்னவென்றால் உபுண்டு10.10 லினக்ஸில் இணையத்தைப் பயன்படுத்த முடியாது,ஆகையால் என்னுடைய உபுண்டு 9.04 லினக்ஸில் உள்ள இணையவசதி மூலம் இதற்கு தேவையான வழிமுறைகள்,மென்பொருள்கள் அனைவற்றையும் தரவிறக்கம் செய்துக்கொண்டேன்.தேவையான கருவிகள்,மென்பொருள்கள்,வழிமுறைகள் இவற்றையெல்லாம் தயார்படுத்திக்கொண்டு வேலையில் இறங்க ஆரம்பித்தேன்.

என்னுடைய மடிக்கணினியில் உள்ள WiFi வன்பொருளின் விபரம்:
06:00.0 Network controller [0280]: Broadcom Corporation BCM4312 802.11b/g [14e4:4315] (rev 01).நீங்கள் உங்கள் கணினியினுடைய WiFi வன்பொருளின் விபரம் அறிய lspci -vnn | grep 14e4 எனும் கட்டளையை முனையத்தில் கொடுக்கவும்.
நான் என்னுடைய மடிக்கணியில் WiFi யினை இணைக்கத் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொதிகளையும்(Packages) தரவிறக்கம் செய்துகொண்டேன்.இந்த இரண்டு பொதிகளையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
  1. b43-fwcutter-013.tar.bz2
  2. broadcom-wl-4.178.10.4.tar.bz2
இந்த இரண்டு மென்பொருள்களை மட்டும் வைத்து கொடுக்கப்பட்டிருந்த வழிமுறைகளுடன் சரியாக பதினைந்தே நிமிடத்தில் உபுண்டு10.10 லினக்ஸில் WiFi பிரச்சனையினை சரிசெய்து,WiFi மூலம் இணையத்தை இணைத்து விட்டேன்.

நான் எப்படி இணைத்தேன் அதற்கான வழிமுறைகள்:
  1. Startup Disk Creater மூலம் உருவாக்கிய உபுண்டு 10.10 இயங்குதளம் உள்ள பென்டிரைவினை யூ.எஸ்.பி Port ல் இணைத்தேன்.கணினியினை பென்டிரைவில் இருந்து தொடங்குமாறு BIOS ல் மாற்றம் செய்து சேமித்து விட்டு,கணினியினை மறுதொடக்கம் செய்தேன்.கணினி பென்டிரைவில் இருந்து பூட் ஆகியது,சரியாக இரண்டே நிமிடத்தில் உபுண்டு 10.10 ன் அழகான Desktop கிடைத்தது.(இதில் நான் சொல்லியிருக்கும் அனைத்தும் லைவ் பதிப்பில் செய்து பார்த்தது).
  2. அடுத்து இந்த வேலைகளையெல்லாம் செய்ய கண்டிப்பாக root பயனாளரும்,root பயனாளர் அனுமதியும் வேண்டுமல்லவா,அதனால் புதியதாக ஒரு Administrator Rights உள்ள ஒரு பயனாளரை உருவாக்கினேன்.அதற்க்குப்பிறகு root account ஐ Enable செய்தேன்.

படம்-1
Administrator Rights உடன் ஒரு பயனாளரை உருவாக்க: System=>Administration=>Users and Groups என்பதை click செய்தவுடன் படம்-1 ல் உள்ளது போன்ற ஒரு திரைக் கிடைக்கும் அதில் Add எனும் Buttton ஐ அழுத்தவும்,அழுத்தியவுடன் படம்-1 ல் உள்ளதுபோன்ற ஒரு திரைக்கிடைக்கும் அதில் Name மற்றும் User name ஆகியவைகளை உள்ளிட்டு OK button ஐ அழுத்தவும்.இப்பொழுது ஒரு புதிய பயனாளர் உருவாகியிருக்கும்.(பார்க்க படம்-3)

படம்-2

படம்-3
இப்பொழுது புதிதாக உருவாக்கிய பயனாளர் பெயரும் காட்டப்படும்,அந்த பயனாளரை தேர்வு செய்து Account Type என்பதற்கு நேராக உள்ள change எனும் button ஐ அழுத்தவும் அதில் Administrator எனபதை தேர்வு செய்து ok button ஐ அழுத்தவும்.அவ்வளவுதான் பயனாளர் உருவாக்கும் வேலை முடிந்தது.அடுத்து root account ஐ enable செய்யும் வேலை

படம்-4
  1. இதை செய்ய Liver Session User லிருந்து logout ஆகவும்,logout ஆகிய பிறகு புதியதாக உருவாக்கிய பயனாளருக்குள் நுழையவும் (அதாங்க பயனாளர் பெயரையும்,கடவுச்சொல்லையும் உள்ளிட்டு செல்வோமல்லவா அதுதான்).
  2. நாம் உருவாக்கிய புதிய பயனாளருக்குள் நுழைந்த பிறகு Applications=>Accessories =>Terminal சென்று முனையத்தை திறந்து கொள்ளவும்.
  3. முனையத்தில் sudo passwd root என கட்டளை கொடுக்கவும்,கொடுத்தவுடன் Enter New Unix Password : என்று கேட்கும் இப்பொழுது root account க்கான கடவுச்சொல்லை உள்ளிடவும்,உள்ளிட்டு Enter key யினை அழுத்தவும் அழுத்தியவுடன் Retype new Unix Password: என்று கேட்கும் இதில் ஏற்கனவே உள்ளிட்ட கடவுச்சொல்லை மீண்டும் தட்டச்சு செய்து Enter key யினை அழுத்தவும்.root account ஐ Enable செய்யும் வேலை முடிந்து விட்டது.
படம்-5
  1. முனையத்தில் su எனக்கொடுத்து Enter key யினை அழுத்தவும்,அழுத்தியபிறகு கடவுச்சொல்லை உள்ளிடச்சொல்லிக் கேட்கும் இதில் root account ற்க்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்தவும்.இப்பொழுது முனையத்தின் $ குறியீடானது # என மாறியிருக்கும்.
  2. இப்பொழுது தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் b43-fwcutter-013.tar.bz2, broadcom-wl-4.178.10.4.tar.bz2 இரண்டு கோப்புகளையும் எங்கு தரவிறக்கி வைத்திருக்கிறீர்களோ அங்கிருந்து copy செய்து Places => Home Folder க்குள் சென்று Paste செய்து கொள்ளவும்.
  3. முதலில் நாம் நிறுவவேண்டிய package, b43-fwcutter-013.tar.bz2 இதை நிறுவ முனையத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
tar xjf b43-fwcutter-013.tar.bz2
cd b43-fwcutter-013
make
cd ..
படம்-6
இந்த கட்டளைகளை கொடுத்து முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை முனையத்தில் கொடுக்கவும்.
export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"

படம்-7

அடுத்து broadcom-wl-4.178.10.4.tar.bz2 package ஐ நிறுவ வேண்டும்.இதை நிறுவ முனையத்தில் கீழேகொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.

tar xjf broadcom-wl-4.178.10.4.tar.bz2

cd broadcom-wl-4.178.10.4/linux

sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta.o

இறுதியாக உள்ள இந்த கட்டளையை முனையத்தில் ஒரே வரியில் கொடுக்கவும்.ஒரு வேளை உங்கள் உலாவியில் மடங்கி இரண்டு வரியாக தெரிந்தால் நீங்கள் இரண்டு வரியில் உள்ளிட முயற்சிக்காதீர்கள்.

பல்கலைக்கழகத்தின் WiFi Detect ஆகியபொழுது

Connection Establish ஆகியபொழுது

Connectin Establish ஆகிய இணையத்துடன் இணைந்து என்னுடைய வலைப்பூவை பார்வையிட்டபொழுது
நான் என்னுடைய மடிக்கணினிக்கு மிகவும் பொருத்தமான உபுண்டு லினக்ஸை தேர்வு செய்ய ஒரு வருடம் காத்துக்கொண்டிருந்தேன்.இப்பொழுது அனைத்து வசதிகளுடன் உபுண்டு 10.10 லினக்ஸ் வந்து விட்டது.எங்கள் பல்கலைக்கழகத்தில் 500 பேர்களுக்கு மேல் Compaq515 மாடல் மடிக்கணினி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு இந்த பதிவு ஒரு கையேடாக அமையும் என நம்புகிறேன்.இதை நான் செய்து முடித்தபொழுது லினக்ஸில் எதையுமே மிகவும் எளிமையாக செய்து முடிக்கலாம் என நம்பிக்கை அதிகமாகியது.என்னைப் போன்ற பயனாளர்களுக்கு உபுண்டு10.10 பதிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

Sep 4, 2010

உபுண்டு லினக்ஸிற்கான கூகுள் தேடுபொறி

Googl ubuntu என்பது உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்திற்க்கான கூகுள் நிறுவனத்தினுடைய தேடுபொறி ஆகும்.நாம் இந்த தேடுபொறியில் இருந்து உபுண்டு லினக்ஸ் தொடர்பான செய்திகள்,பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,உதவிக்குறிப்புகள்,வழிகாட்டிகள்,இன்னும்.... போன்றவற்றைப் பெறலாம்.இந்த தேடுபொறியில் இருந்து கிடைக்கும் தகவல்களை நாம் ஆங்கிலம்,ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளிலும் படித்துக்கொள்ளலாம்.

Googl Ubuntu - தேடுபொறியினுடைய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களிலிருந்து பெறப்படுகிறது.
Ubuntu.com, Kubuntu.com, Edubuntu.org, Launchpad.net, ubuntuforums.org, Kubuntuforums.net, ubuntuguide.org, getdeb.net, google groups «ubuntulinux» and «kubuntu», ubuntu-es.org, kubuntu-es.org, planetubuntu.es, ubuntips.com.ar, guia-ubuntu.org, cesarius.net, tuxpepino.wordpress.com, ubuntulife.wordpress.com, google groups on spanish.

நாம் நெருப்பு நரி உலாவியில் Google,WikePedia,Yahoo,Creative Commons போன்றவற்றிற்கான கருவிகளை இயல்பிருப்பாக பயன்படுத்துவொமல்லவா அதுபோல் Googl Ubuntu தேடுபொறிக்கு உண்டான கருவியையும் இவைகளுடன் இணைத்துக்கொண்டு,Googl Ubuntu கருவியை தேர்வு செய்து கொண்டு நமக்கு தேவையான தகவல்களை நேரடியாக இந்த கருவியில் உள்ளிட்டு தேடலாம். இந்த Googl Ubuntu கருவியை நெருப்பு நரியில் நிறுவுவதற்க்கான இணைப்பு GooglUbuntu னுடைய முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்ம அனைவரும் பயன்படுத்தும் நண்பர் உபுண்டு அவர்களுக்காக தனியாக ஒரு தேடுபொறியே உருவாக்கப்பட்டு விட்டது.ரொம்ப மகிழ்ச்சி தேடுபொறியினை உருவாக்கி அளித்த கூகுள் நிறுவனத்துக்கும் நன்றி.

Jun 10, 2010

உபுண்டு 10.4 Netbook Edition எனது அனுபவம்

Netbook Edition னுடைய Desktop
எனக்கும் ரொம்ப நாளாக Ubuntu Netbook Edition ஐ எனது Compaq 515 மடிக்கணினியில் நிறுவி பார்த்துவிடவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது.

Ubuntu 10.04 Netbook Edition 699 MB அளவு கொண்டது.இதை தரவிறக்கம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான வேலைதான் ஏனென்றால் இணையத்தினுடைய வேகப் பிரச்சனைதான்.Linux Mint (Elyssa) ற்கு அடுத்து என்னுடைய மடிக்கணினிக்கு எந்த லினக்ஸ் இயங்குதளமும் அனைத்து வசதிகளுடன் அமையவில்லை.

நான் தற்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு 9.04 கூட ஒலி வசதி இல்லாமல் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
Netbook Edition -ல் இணையம்
இந்த மாத LINUX For You Magazine உடன் வந்த DVD யில் Ubuntu 10.04Desktop Edition,Kubuntu 10.04,Ubuntu Netbook Edition மூன்றையும் சேர்த்து கொடுத்திருந்தார்கள்.

Ubuntu Netbook Edition ஐ ISO கோப்பாக கொடுத்திருந்தார்கள்.எனது மடிக்கணினியில் நிறுவியிருந்த உபுண்டு 9.04 -ல் Startup Disk Creater மூலம் Pendrive -ல் Ubuntu 10.04 Netbook Edition னுடைய ISO கோப்பினை Live Bootable ஆக மாற்றினேன்.Pendrive -னை USB port -ல் சொருகினேன்.BIOS -ல் F9 key யினை அழுத்தி USB Hard Drive என்பதை தேர்வு செய்து Pendrive -ல் இருந்து boot செய்தேன்.

இதை நான் பென்டிரைவில் வைத்து Live ஆக தான் பயன்படுத்திப் பார்த்தேன்.தொடக்கமே நன்றாக இருந்தது இரண்டு நிமிடத்திலேயே தயாரகி Desktop வந்தது.Desktop னை அட்டகாசமாக வடிமைத்திருக்கிறார்கள்.

Wallpapers களெல்லாம் மிக அழகாக இருக்கிறது.ஒலி வசதி கனகச்சிதமாக வேலைசெய்தது,Bluetooth நன்றாக வேலை செய்தது
Netbook Edition -ல் Aircel,Tata Docoma ற்கான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது
அடுத்த முக்கியமான விஷயம் Mobile Wireless Broadband உபுண்டு 9.04 ல் Aircel, Tata docoma ற்கான தேர்வுகள் கொடுக்கப்படவில்லை ஆனால் Ubuntu 10.04 Netbook Edition -ல் இதையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள்.(உபுண்டு 10.04 லும் சேர்க்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் நான் உபுண்டு 10.04 ல் இந்த வசதியினை ஏற்படுத்திப்பார்க்கவில்லை)Mobile Broadband ற்க்கான வசதிகளை ஏற்படுத்துவதற்க்கான வழிமுறைகள் எளிமைபடுத்தியிருக்கிறார்கள்.(Airce Sim card ற்கான வழிமுறைகளை வைத்துக்கூறுகிறேன்)
Netbook Edition -ல் இந்த பதிவு எழுதப்பட்டப்பொழுது
WiFi வசதியினை சோதனைச் செய்துப் பார்க்க முடியவில்லை நான் இப்பொழுது பல்கலைக்கழ்கத்தினுடைய தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருப்பதால் நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றால்தான் WiFi வசதியினை சோதனைச்செய்துப்பார்க்க முடியும்.மின்கலனினுடைய (Battery) மின்சக்தியினை ரொம்ப நேரம்(1மணி நேரம் 40 நிமிடங்கள்) பயன்படுத்த முடிந்தது.

ஆனால் என்னுடைய விண்டோஸ் இயங்குதளத்தில் 1 மணி நேரம்தான் பயன்படுத்த முடியும்.இப்பொழுது அமலில் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்கும் உபுண்டு லினக்ஸ் உகந்ததாக இருக்கிறது.

உபுண்டு 9.04 ஐ விட உபுண்டு 10.04 Netbook Edition னில் Mobile Broadband (அதாங்க செல்பேசியில் உள்ள GPRS வசதியினை பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்துவது.) னுடைய இணையத்தின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. Netbook Edition -ஐ உபுண்டு 8.04 ("Hardy Heron") லிருந்து வெளியிட்டு வருகிறார்கள்.

Netbook Edition -ல் Gimp சேர்க்கப்படவில்லை. விளையாட்டுகள் ஐந்துதான் இருந்தது.

OpenOffice Suite இருக்கிறது.மொத்தத்தில் Ubuntu 10.04 Netbook Edition என்னைக்கவர்ந்து விட்டது.மடிக்கணினி வைத்திருப்பவர்கள் ஒரு முறை Live ஆக பயன்படுத்திபாருங்கள்.

Netbook Edition -ஐப் பற்றிய Wikipedia வின் கட்டுரை

Netbook Edition ஐ தரவிறக்க

May 26, 2010

உபுண்டு லினக்ஸினுடைய டெஸ்க்டாப்பில் Computer,Home Folder, Trash icon ஆகியவைகளை தோன்றச்செய்வது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள ஒவ்வொரு கோலனையும் உபுண்டு லினக்ஸில் திறக்கும் பொழுது அந்த ஒவ்வொரு கோலனும் Desktop -ல் Hard Disk icon னுடன் தோன்றும் இவ்வாறு தோன்றுவதை நாம் டெஸ்க்டாப்பில் தோன்றாமல் செய்யலாம்.அத்துடன் உபுண்டு லினக்ஸில் இயல்பிருப்பாக Computer, Home Folder, Trash ஆகியவைகளினுடைய icon -கள் டெஸ்க்டாப்பில் இருக்காது இவற்றையும் நாம் டெஸ்க்டாப்பில் கொண்டு வரலாம்.சரி எப்படி என்று பார்ப்போமா.முதலில் டெஸ்க்டாப்பில் கோலனுடைய icon -கள் தோன்றாமல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


Applications => Accessories => Terminal சென்று முனையத்தைத் திறந்துக்கொள்ளுங்கள்.முனையத்தில் gconf-editor என்று தட்டச்சு செய்து Enter Key -யினை அழுத்துங்கள்.அழுத்தியவுடன் Configuration Editor என்ற பெயருடன் ஒரு சாளரம் தோன்றும்.அதில் இடதுகைப் பக்கமாக இருக்கும் பகுதியில் apps என்பதின் மீது வைத்து Double Click (அதாவது இரண்டுமுறை சொடுக்கவும்) செய்யுங்கள் சொடுக்கியவுடன் விரியும் பகுதியில் nautilus என்பதின் மீது வைத்து Double Click செய்யுங்கள் சொடுக்கியவுடன் விரியும் பகுதியில் Desktop என்பதின் மீது வைத்து Click செய்யுங்கள் வலது புறமாக இருக்கும் பகுதியில் volumes_visible என்பது இயல்பிருப்பாக டிக் செய்யப்பட்டு இருக்கும்.அந்த டிக் கினை நீக்கிவிட்டால் கோலன்கள் டெஸ்க்டாப்பில் தோன்றாது.
இந்த பகுதியிலேயே computer_icon_visible, home_icon_visible, trash_icon_visible ஆகியவற்றை டிக் செய்து விட்டால் Computer, Home Folder, Trash ஆகியவைகளினுடைய icon -கள் டெஸ்க்டாப்பில் தோற்றமளிக்கும்.

May 13, 2010

webcam மும் உபுண்டு 9.10 லினக்சும் எனது நண்பரினுடைய மடிக்கணினியும்

எனது நண்பர் சிவா அவர்கள் Acer TravelMate 5720 மாடல் மடிக்கணினி வைத்திருக்கிறார்.அவர் லினக்ஸ் பயனாளர் கிடையாது இயந்திரவியல் துறையைச் சேர்ந்தவர்.என்னுடைய மடிக்கணினியில் webcam வசதி கிடையாது ஆனால் எனக்கு லினக்சில் webcam இயக்கிப் பார்த்து விடவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.இதை நான் நிகழ் வட்டாக(Live CD) இயக்கித்தான் செய்துப்பார்த்தேன்.என்னிடம் ubuntu 9.10 வட்டு இருந்தது.நண்பரினுடைய Acer TravelMate 5720 மடிக்கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் உபுண்டு 9.10 லினக்சில் மிகவும் நன்றாக இயங்கியது.
  • உபுண்டு 9.10 லினக்சில் நான் webcam இயக்க cheese மென்பொருளைப்பயன்படுத்தினேன்.விண்டோஸ் இயங்குதளத்தில் தெரிந்ததைவிட உபுண்டுவில் மிகவும் அருமையாக படம்பிடுத்துக் காட்டியது.
  • Ubuntu Software Center சென்று cheese மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.
  • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தானாகவே படம் பிடித்து தருவது,வீடியோ கோப்பாக பிடிப்பது,படத்திற்கு Effects கொடுப்பது என தனித்தன்மையுடன் cheese மென்பொருள் இருக்கிறது.
  • நீங்களும் உங்கள் கணினியில் செய்துபாருங்கள்.
  • webcam ஐ இயக்க cheese மென்பொருளை நிறுவியது தவிர நான் வேறு எந்த சிரமமும் படவில்லை.
இந்த பதிவு என் நண்பர் சிவா அவர்களினுடைய Acer TravelMate 5720 மடிக்கணினியில் உபுண்டு 9.10 லினக்சை நிகழ் வட்டாக (Live CD) இயக்கி பதிவிடப்பட்டது.நன்றி சிவா

எப்பவும் நாங்க (லினக்ஸ் ) கலக்கிகிட்டு இருப்போமுல்ல....


உபுண்டு 9.10 லினக்சில் முனையத்தின் மூலமாக PNG வடிவிலிருக்கும் படக்கோப்பினை JPG அல்லது JPEG வடிவத்திற்கு மாற்றுவது எப்படி?

எங்களது பல்கலைக்கழகத்தில் விடுதியில் உள்ள WiFi இணைய வசதி இணைப்பில் மட்டும் PNG வடிவ படக்கோப்புகளை வலைப்பூவில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.ஆனால் JPG அல்லது JPEG வடிவ படக்கோப்புகளை வலைப்பூவில் பதிவேற்றம் செய்ய முடிந்ததது.லினக்சைப் பொறுத்த வரை Screenshot இல்லாமல் பதிவுகள்எழுதுவது என்பது அவ்வளவு நன்றாக இருக்காது.Screenshot உடன் கொடுத்தால் எளிதில் புரியும்.அதற்காக உபுண்டு லினக்சில் Screenshot எடுக்கும் போது இருப்பியல்பாக .png வடிவத்திலேயே சேமிக்கும்.இந்த வடிவத்தில் உள்ள படக்கோப்பினை வலைப்பூவில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.அதற்க்கு ஒரு மென்பொருள் வேண்டுமல்லவா அந்த மென்பொருள் கட்டளை வடிவில் முனையத்தில் இயக்குமாறு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எனக்கு லினக்சில் முனையத்தின் வழியாக லினக்சை பயன்படுத்த மிகவும் பிடிக்கும்.சரி முனையத்தின் வழியாக படக்கோப்பினை எவ்வாறு மாற்றலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.அப்புறம் என்ன கூகுள் பெரியவரின் உதவினை நாடினேன்.கூகுள் பெரியவரும் உதவி செய்துவிட்டார்.
  • convert கட்டளையின் மூலம் இந்த வேலையினை செய்யலாம் என கூகுள் மூலம் தெரிந்தது.
  • உடனே முனைத்தை திறந்து convert கட்டளையினை கொடுத்தேன்.imagemagick என்ற மென்பொருளை நிறுவச்சொல்லிக் கூறியது.
  • முனையத்தில் apt-get install imagemagick எனக் கொடுத்து imagemagick மென்பொருளை நிறுவினேன்.நிறுவி முடித்தவுடன் convert எனக் கொடுத்து சோதனைச்செய்துப் பார்த்துக்கொண்டேன் நன்றாக வேலை செய்தது.
சரி கோப்பினை எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்:
  • முனையத்தை திறந்து கொள்ளுங்கள்
  • su எனக் கொடுத்து root பயனாளரினுடைய கடவுச்சொல்லை உள்ளிட்டு root பயனாளராக மாறிக்கொள்ளுங்கள்.
  • apt-get install imagemagick எனக் கொடுத்து imagemagick மென்பொருளை நிறுவிடவும்.நிறுவிய பிறகு
  • cd கட்டளையின் உதவியுடன் நீங்கள் படக்கோப்பினை வைத்திருக்கும் அடைவிற்குள் சென்றுக்கொள்ளுங்கள்.
  • உதாரணமாக 1.png என்ற படக் கோப்பினை வைத்திருக்கிறீர்கள் என்றால் இதை jpg (அல்லது) jpeg கோப்பாக மாற்ற முனையத்தில்
  • convert 1.png 1.jpg என்று கட்டளையினை கொடுங்கள்.அவ்வளவுதான் ஒரு வினாடியில் கோப்பினை மாற்றிவிடும்.
  • இங்கு 1.png என்பது நான் வைத்திருக்கும் படக்கோப்பின் பெயர் இதில் நீங்கள் என்ன பெயருடன் வைத்திருக்கிறீர்களோ அதைக் கொடுத்துக்கொள்ளுங்கள்.
  • 1.jpg என்பதில் 1 என்பது நான் சேமிக்க விரும்பிய பெயர் அதற்க்கு பதிலாக நீங்கள் உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு:இந்த பதிவில் இடப்பட்டிருக்கும் படங்கள் convert கட்டளையினைப் பயன்படுத்தி மாற்றப்பட்டது.

Apr 25, 2010

உபுண்டு 9.10 ல் root account ஐ Enable செய்வது எப்படி?

உபுண்டு லினக்ஸ் லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கிடையில் ஒரு செல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறது.நானும் உபுண்டு லினக்சில் தினம் தினம் எதையாவது புதிது புதிதாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.இன்னும் ஒரு சில தினங்களில் உபுண்டு 10.4 வெளியிடப்பட்டு விடும்.அனைவரும் மிகவும் ஆவலாக இருக்கிறோம்.உபுண்டு லினக்ஸின் தற்போதைய பதிப்பு உபுண்டு 9.10.உபுண்டு 9.10 லினக்சை நிறுவும்பொழுது root account மற்றும் root password பற்றிய எந்த தகவலையும் நம்மிடம் கேட்க்காது.ஆகையால் நாம் நிறுவும் பொழுது கொடுத்த பயனாளர் பெயருடன் தான் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொண்டு இருப்போம். லினக்சை பொறுத்த வரையில் root பயனாளரால்தான் கணினியினுடைய முக்கியமான வேலைகளை செய்ய முடியும்.ஆகையால் நாம் root account enable செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் முனையத்தை திறந்துக்கொள்ளுங்கள்.முனையத்தில் கீழ்க்கண்டவாறு கட்டளை அமையுங்கள்.

sudo passwd root

நீங்கள் root பயனாளருக்கு கொடுக்க விரும்பும் கட்டளையை கொடுங்கள்.கட்டளையை கொடுத்து முடித்தவுடன் root account enable செய்யப்படும்.இப்பொழுது முனையத்தில்

su root

என கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.கடவுச்சொல்லை கேட்க்கும்.கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்.கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு நீங்கள் root பயனாளராக முனையத்தில் மாறியிருப்பீர்கள்.login screen மூலமும் நீங்கள் root பயனாளராக செல்ல முடியும்.இதற்கென நீங்கள் எதையும் தனியாக மாற்றம் செய்ய வேண்டியதில்லை.படத்தை பெரிது படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்.

உபுண்டு 9.10 லினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யும்,தமிழில் உள்ளீடு செய்யும் வசதியை உருவாக்குவது எப்படி

படம்-1
உபுண்டு 9.04 லினக்ஸில் தமிழை தட்டச்சு செய்ய SCIM input method ஐ பயன்படுத்த வேண்டும்.இதை நிறுவ உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும். இணைய இணைப்பு மூலமே இதை நிறுவ முடியும்.ஆனால் உபுண்டு 9.10 ல் iBus என்ற வசதியை இருப்பியல்பாக கொடுத்திருக்கிறார்கள்.அதை அமைத்து எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று பார்ப்போம்.
  • System => Preferences => iBus Preferences ஐ திறந்து கொள்ளுங்கள்.படம்-1 ஐ பாருங்கள்.
  • iBus ஐத் திறந்தவுடன் படம்-2 ல் உள்ளது போன்ற திரையினைக் காட்டும்.அதில் Yes என்பதை click செய்யுங்கள்.

படம்-2
  • நீங்கள் Yes என்பதை click செய்தவுடன் படம்-3 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.அதில் ok யினை click செய்யுங்கள்
படம்-3
  • ok யினை click செய்தவுடன் iBus preferences என்பதுடன் படம்-4 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.அதில் Input Method எனும் Tab ஐ click செய்யுங்கள்.
படம்-4
  • அதில் Select an input method என்பதுடன் ஒரு combo box இருக்கும்.அதன் மீது click செய்யுங்கள்.click செய்தவுடன் drop down list இல் அனைத்து மொழிகளும் காட்டப்படும்.
  • அதில் Tamil என்பதை click செய்து கிடைக்கும் வரிசையில் Phonetic என்பதை தேர்வு click செய்யுங்கள். பார்க்க படம் -5
  • click செய்தவுடன் Add பொத்தானை அழுத்துங்கள்.பொத்தானை அழுத்தியவுடன் படம்-6 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.
படம்-5

படம்-6
  • படம்-6 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்பட்ட பிறகு படம்-6 உள்ளது போன்ற திரையிலேயே General எனும் Tab ஐ click செய்யுங்கள்.General Tab ஐ click செய்தவுடன் படம்-7 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.
  • அதில் Keyboard Shortcuts என்பதில் தமிழ் தட்டச்சு வசதியை Enable அல்லது Disable செய்ய Shortcut Key அமைக்க வேண்டும்.நான் Alt+8 key யினை அமைத்துள்ளேன்.
படம்-7
  • நீங்கள் உங்களுக்கு விருப்பமான key யினையும் அமைத்துக்கொள்ளலாம்.அவ்வாறு அமைக்க விரும்பினால் Enable or Disable என்பதற்கு நேராக ஒரு Text Box இருக்கிறதா அதை ஒட்டி ஒரு சிறிய Button (... யுடன் கூடிய) இருக்கிறதா அதை click செய்யுங்கள்.click செய்தவுடன் படம் -8 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கபடும்.இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான் key யினை அமைத்துக் கொள்ளலாம்.
  • நான் அமைத்ததை சொல்கிறேன் நீங்கள் அதை உங்களுக்கு தேவையானவாறு அமைத்துக்கொள்ளுங்கள்.
  • Key Code எனபதற்கு நேராக ஒரு Text Box இருக்கிறதா அதை ஒட்டி ஒரு சிறிய Button உள்ளதா அதை click செய்யுங்கள்.click செய்தவுடன் படம்-9 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.அபொழுது 8 key யினை அழுத்தி பிடித்து விட்டேன் Alt என்பதை மட்டும் தேர்வு செய்து Add Button ஐ அழுத்தினேன்.keyboard Shortcuts என்பதற்குள் Alt+8 என்று இருக்கும்.OK button ஐ அழுத்தவும்.
  • இப்பொழுது Shortcut Key அமைத்து விட்டாச்சு அவ்வளவுதான் இனிமேல் தமிழில் உள்ளீடு செய்ய இதுதான் Short key.எனக்கு Alt +8, உங்களுக்கு நீங்கள் அமைத்தது.
படம்-8

படம்-9
  • சரி வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது தட்டச்சு செய்ய தொடங்குவோமா.Applications => Accessories => gedit Text Editor ஐ திறந்து கொள்ளுங்கள்.இப்பொழுது நீங்கள் தமிழ் தட்டச்சு செய்ய கொடுத்த Shortcut Key யினை கொடுங்கள்.நான் Alt+8 கொடுத்தேன்.நீங்கள் உங்களினுடைய Shortcut key யினை கொடுங்கள்.
  • அப்புறம் என்ன தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியதுதானே.
படம்-10
குறிப்பு: இந்த பதிவு முழுவதும் உபுண்டு 9.10 ல் உள்ள iBus வசதியை பயன்படுத்தி எழுதினேன்.இதில் சந்தேகம் எதேனும் இருந்தால் படத்தை பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.

Apr 9, 2010

உபுண்டு லினக்ஸில் பயனாளருக்கு புகைப்படம் அமைப்பது எப்படி?

எனக்கு உபுண்டு லினக்ஸில் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.நானும் லினக்ஸை பொறுத்தவரை ஒரு மாணவன் தானே.அந்த சந்தேகம் என்னவென்றால் விண்டோஸ் இயங்குதளத்தில் பயனாளரை தேர்வு செய்யும் விண்டோவில் பயனாளர் பெயருடன் ஒரு புகைப்படம் இருக்குமல்லவா.அது போல உபுண்டு லினக்ஸில் அமைக்க முடியுமா என்பதுதான்.உபுண்டால் முடியாததா அதற்கான வழியும் உபுண்டுவில் இருந்தது அதை கண்டுபிடிக்கதான் இவ்வளவு நாள்.சரி செய்முறைக்கு போவோம் வாருங்கள்.முதலில் உபுண்டு லினக்ஸின் இருப்பியல்பாக உள்ள பயனாளர் திரையை மாற்ற வேண்டும்.ஏன் மாற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது.இருப்பியல்பாக உள்ள திரையில் பயனாளர் பெயரை உள்ளிடுவது போல் மட்டுமே அமைத்து இருப்பார்கள்.சரி பயனாளர் திரையினை மாற்றுவோம் அதற்கு
System=>Administration=>Login window செல்லுங்கள்.root பயனாளரினுடைய கடவுச்சொல்லை உள்ளிடச் சொல்லி கேட்கும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.பயனாளர் திரையினை மாற்றுவது எப்படி என்று ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன் இங்கு சென்று ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.அதில் Human list என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.தேர்வு செய்த பிறகு Login windows prefrences window வினை மூடி விடுங்கள்.முதல் படி கச்சிதம்மாக முடிந்து விட்டது.
அடுத்து System => Preferences => About me யினை சொடுக்குங்கள்.சொடுக்கியவுடன் படம் இரண்டில் உள்ளது போன்ற திரை கிடைக்கும்.அதில் ஒரு சிறிய படத்துடன் ஒரு icon இருக்கும்.அதின் மேலே வைத்து click செய்யுங்கள்.இங்கு நான் கொடுத்துள்ள படத்தில் kathirvel.R என்பதற்கு பக்கத்தில் விலங்கின் கண்ணுடன் கூடிய ஒரு படம் உள்ளது.
நீங்கள் படத்தின் மீது வைத்து click செய்தவுடன் அடுத்த window ல் நிறைய படங்களுடன் கூடிய ஒரு திரை கிடைக்கும்.அதில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து open கொடுங்கள்.கொடுத்தவுடன்.உங்களுக்கு தேவையான படம் தேர்வு செய்யப்படு விடும்.
படம் தேர்வு செய்யபட்ட பிறகு படம்-4 ல் உள்ள திரையினை close செய்து விடுங்கள்.இப்பொழுது உங்களினுடைய கணினியினை logout செய்யுங்கள் செய்த பிறகு பயனாளர் திரையில் நீங்கள் பயனாளருக்காக தேர்வு செய்த புகைப்படம் பயனாளர் பெயருடன் அமைக்கப்பட்டு இருக்கும்.

Mar 17, 2010

உபுண்டு 10.04 -இன் கொள்ளை கொள்ளும் அழகு

New Gtk Theme

New Gtk theme

ubuntu 10.4 splash screen
இந்த படங்கள் நான் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது பார்த்தது.என் மனதிற்கு பிடித்து இருந்தது.ஆகையால் இதை பதிவு செய்கிறேன்.

மேலும் தெரிந்து கொள்ள :
இங்கு சொடுக்கவும்

Mar 2, 2010

உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி நான் உருவாக்கியுள்ள PDF வடிவிலான கோப்பு

எனக்கு தெரிந்த,எட்டிய அறிவினை வைத்து உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி என்று தமிழில் PDF கோப்பாக உருவாக்கியுள்ளேன்.இந்த PDF கோப்பினை படிக்க,தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள் .

கோப்பில் தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.இந்த கோப்பினை பற்றிய கருத்துக்களை நீங்கள் தயங்காமல் தெரிவிக்கவும்.

Feb 23, 2010

உங்கள் கணினி எவ்வளவு நினைவகம்,எவ்வளவு cpu வளத்தை பயன்படுத்துகிறது என்று உபுண்டு லினக்சில் பார்ப்பதற்கு

System -> Administration ->System Monitor சென்று System Moniter திறந்து கொள்ளவும் அதில் Resources என்ற Tab -இன் கீழ் அனைத்து விபரங்களையும் காண்பிக்கும்.இன்னும் இதர விபரங்களை மீதமுள்ள Tab - இன் கீழ் காணலாம்.

Feb 21, 2010

எனது மடிக்கணினியில் உபுண்டு 9.10


நான் உபுண்டு 9.10 வெளியிடுவதற்கு முன்பே மடிக்கணினி வாங்கி விட்டேன்.அப்பொழுது என்னிடம் உபுண்டு 9.04 வட்டு தான் இருந்த்தது.ஏற்க்கனவே நான் பெடோரா, டெபியன், சபையான் போன்ற நிறுவல்களை மடிக்கணியில் நிறுவியிருப்பதால் வன்வட்டு தாங்காது என நினைத்து உபுண்டு 9.04 லினக்ஸினை Install Inside Windows என்ற முறையின் மூலம் நிறுவினேன்.

மிகவும்
நன்றாக இயங்கியது ஆனால் ஒலி வசதி (Sound Card) பிரச்சனை ஆனால் நான் அதை சரிசெய்ய முயற்ச்சிக்கவில்லை.காரணம் என்னுடைய மடிக்கணியில் WiFi நன்றாக உபுண்டு 9.04 ல் இயங்கியது.அதனால் உபுண்டு 9.10 ற்காக காத்திருந்தேன்.உபுண்டு 9.10 beta பதிப்பு வெளியிட்டவுடன் என் பல்கலைகழகத்தில் உள்ள இனைய தள அறையில் இருந்து உபுண்டு 9.10 யினை தரவிறக்கம் செய்து வந்து அந்த ISO கோப்பினை பூட்டபிள் வட்டாக மாற்றினேன் மாற்றிவிட்டு உபுண்டு 9.10 யினை live வட்டாக பயன்படுத்தி பார்த்தேன்.அப்பொழுது ஒரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது ,உபுண்டு 9.10 பூட்ட்டாகி மொழி தேர்வுக்காக காத்திருந்ததது அதில் ஆங்கிலம் என தேர்வு செய்து விட்டு,அடுத்து live விற்க்காக உபுண்டு 9.10 யினை தேர்வு செய்து Enter key அழுத்தினேன்.ஒரு சிறிய சுட்டியுடன் வந்து நின்று கொண்டு அதற்க்கு மேல் செல்லவில்லை,நானும் அதில் பலமுறை தோல்வியடைந்தேன்.ஒரு வழி யாக சமாதான மாகிக்கொண்டு உபுண்டு 9.10 முழு பதிப்பிற்காக அடுத்து காத்திருந்தேன்.

வெளியிட்டவுடன் உபுண்டு 9.10 ற்கு விண்ணப்பித்தேன்.விண்ணப்பித்து உபுண்டு 9.10 வட்டு கிடைத்தவுடன்,ஆசையுடன் கணினியில் லைவ் வட்டாக இயக்கி பார்த்தேன்.அப்பொழுதும் ஒரு சிறிய சுட்டியுடன் வந்து நின்றுக்கொண்டு அதற்க்கு மேல் செல்லவில்லை அத்துடன் நான் உபுண்டு 9.10 பயன்படுத்திப் பார்ப்பதை கைவிட்டேன் .

ஒரு நாள் எந்தர்த்தமாக உபுண்டு 9.04 ல் இருந்து Ubuntu Startup Disk Creater என்ற வசதி மூலம் என்னுடைய நண்பனின் Pendrive வினை வாங்கி உபுண்டு 9.10 வட்டினை உருவாக்கினேன் உருவாக்கிக்கொண்டு ,bios -ல் usb hard disk என்ற தேர்வின் மூலம் உபுண்டு 9.10 - ஐ live வட்டாக இயக்கினேன் என்ன ஆச்சரியம் உபுண்டு 9.10 மிகவும் விரைவாக பூட் ஆகி இயக்கத்திற்கு வந்தது.

ஒலி வசதியும் மிகவும் நன்றாக வேலை செய்தது.WiFi வசதி வேலை செய்ய வில்லை.Bluetooth வசதி நன்றாக வேலை செய்தது .

நன்றி: புகைப்படம் பிடித்து தந்த என்னுடைய நண்பர்கள் மின்னியல் & மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரகுபதி மற்றும்உங்கள் அன்புச்செல்வன் .பாண்டியராஜன் அவர்களுக்கு.

Feb 7, 2010

லினக்சில் கடவுச்சொல்லுடன் ஒரு கோப்பினை (Folder or File) சுருக்க (Compress)


உங்களுக்கு எந்த கோப்பினை சுருக்க வேண்டுமோ அந்த கோப்பின் மீது வைத்து வலது கிளிக் செய்யவும் (Right Click).கிடைக்கும் மெனுவில் Create Archive என்பதை click செய்யவும்.



அடுத்து உங்களுக்கு கிடைக்கும் சாளரத்தில் (Window) Archive: என்பதில் உங்களுக்கு தேவையான பெயரினை கொடுத்துக்கொள்ளவும்.

அதற்க்கு நேராக உள்ள Combo பாக்ஸில் .zib,.tar,.tar.gz,.. என compress file format களை
காட்டும் உங்களுக்கு பிடித்தமான File Format யினை தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்து create என்ற பொத்தானை (Button) அழுத்தவும்.

கடவுச்சொல்லுடன் சுருக்க :

படி ஒன்று : File Format -ல் .zib என்பதை தேர்வு செய்யவும்.
படி இரண்டு : Other Options என்பதில் முன்னில் உள்ள ஒரு சிறிய அம்புக் குறி வலது கை நோக்கி இருக்கம்.அதை கிளிக் செய்தால் Password: என்று உள்ளத்தில் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை உள்ளீடு செய்து Create என்ற பொத்தானை (command) அழுத்தவும்.