Showing posts with label லினக்ஸில் WiFi. Show all posts
Showing posts with label லினக்ஸில் WiFi. Show all posts

Feb 11, 2017

TP-LINK WN823N WiFi USB Adapter

சென்னையில் எங்கள் அறையில் ACT நிறுவனத்தின் இணைய இணைப்பு கொடுத்திருக்கிறோம். அவர்கள் இணைப்பு கொடுத்த போது RJ45 LAN Connector மட்டும் கொடுத்தனர். அதனைக்கொண்டு ஒரு கணினியில் மட்டும்தான் இணையத்தை பயன்படுத்த முடியும். எங்கள் அறையில் ஐந்து பேர் இருக்கிறோம். அனைவரிடமும் மடிக்கணினி, திறன்பேசி இருக்கிறது. எப்படி சமாளிப்பது? ஆகையால் WiFi Router வாங்கினோம். RJ45 LAN Connector ஐ WiFi router இல் இணைத்தோம். பிரச்சனை முடிந்தது ஆனால் என்னால் இணையத்தை பயன்படுத்த முடியவில்லை. என்னுடைய மடிக்கணினியில் WiFi வசதி இல்லை. ஆகையால் ஒரு USB WiFi Adapter வாங்கலாம் என முடிவு செய்தேன்.

நான் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்துவதில் ஆகையால் கணினி தொடர்பாக எது வாங்கினாலும் அது உபுண்டுவில் வேலை செய்யுமா என உறுதிசெய்துவிட்டே வாங்குவேன். அப்படித்தான் WiFi Adapter -க்கும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். TP-LINK WN823N மாடல் உபுண்டுவில் நன்கு வேலே செய்வதாக கூறியிருந்தார்கள். அதை Amazon தளத்தின் மூலமாக வாங்கினேன். அந்த தளத்திலும் உபுண்டு 16.04 LTS உடன் இது நன்கு வேலை செய்யும் என போட்டிருந்தனர். 

ஓரிரு நாட்களில் கைக்கு அது கிடைத்தது. கிடைத்த அடுத்த நிமிடமே என்னுடைய உபுண்டு 14.04 LTS இல் இணைத்துப் பார்த்தேன் வேலை செய்யவில்லை. அப்போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. இது லினக்ஸில் வேலை செய்யாது என நினைத்துக்கொண்டேன். ஒருவேளை 16.04 LTS இல் வேலை செய்யலாம் என நினைத்து 16.04 இல் இணைத்துப் பார்த்தேன் அதிலும் வேலை செய்யவில்லை. இதை நினைத்து ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இதை எப்படியாவது உபுண்டுவில் வேலை செய்ய வைத்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அன்று முழுவதும் இது தொடர்பாக இணையத்தில் தேடினேன். ஒருவழியாக தீர்வு கிடைத்தது.

இந்த இணைப்பில் வழிமுறைகள் உள்ளது.

TP-LINK WN823N-க்குத் தேவையான driver ஐ உபுண்டுவில் நிறுவ

sudo apt-get update
sudo add-apt-repository ppa:hanipouspilot/rtlwifi
sudo apt-get update
sudo apt install rtl8192eu-dkms

மேற்கண்ட  package இன் நிறுவுதல் முடிந்தவுடன் கணினியை மறுதொடக்கம்(restart) செய்துவிட்டு உள்நுழைந்தால். அற்புதமாக WiFi குச்சி வேலை செய்தது.




உபுண்டு 16.04 -க்கு WiFi குச்சி வாங்க வேண்டும் என நினைத்தால் TP-LINK WN823N குச்சியை வாங்கலாம். நான்கு வேலை செய்கிறது. Amazon-இல் வாங்க இங்கு செல்லவும்.

Sep 14, 2010

Compaq515 மாடல் மடிக்கணினியில் ,உபுண்டு 10.10 இயங்குதளத்தில் Broadcom WiFi Wireless Driver யினை நிறுவுவது எப்படி ?

என்னுடைய மடிக்கணினி Compaq515 மாடல்.என்னவோ தெரியவில்லை உபுண்டு 9.04 ஐத்தவிர வேறு உபுண்டுவின் எந்த பதிப்பும் என்னுடைய மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை.தற்பொழுது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு 9.04 ஐ நிறுவி சரியாக ஒருவருடத்திற்கும் மேலாகி விட்டது.என்னுடைய மடிக்கணினியில் நிறுவியிருக்கும் உபுண்டு 9.04 லினக்ஸில் ஒலி வசதியும்,ATI Radeon Graphics Driver 1231 ம் வேலை செய்யவில்லை ஆனால் WiFi Wiresless வேலைசெய்கிறது (எங்களுடைய பல்கலைக்கழகத்தில் 24 மணிநேர WiFi இணையம் வசதி உள்ளது),உபுண்டு 9.04 க்குப் பிறகு வெளியிடப்பட்ட அடுத்தப் பதிப்பான உபுண்டு 9.10 ஆனது பூட்டிங்கோடு நின்றுக்கொண்டது அதற்கு அப்புறம் ஒரு அடிகூட நகரவில்லை,அதற்கு அடுத்தப் பதிப்பான 10.04 வெளியிடப்பட்டது Ubuntu 10.04 Desktop,Kubuntu 10.04 ஐயும் உபுண்டுவின் தளத்தில் விண்ணப்பித்து இரண்டு வட்டுக்களையும் பெற்றுக்கொண்டேன்.விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் ஆசையாக உபுண்டு 10.04 நிகழ்வட்டு தேர்வினை தேர்வுசெய்து இயங்கிப்பார்த்தேன் அதுவும் பூட்டிங்கோடு நின்றுக்கொண்டது.
சரி இது இருக்கட்டும் Kubuntu 10.04 ஐ நிகழ் வட்டாக இயக்கிப்பார்த்தேன் இது நன்றாக வேலைசெய்தது ஒலி வசதி வேலை செய்தது,ஆனால் WiFஇ யும் ATI Radeon Graphics Driver உம் வேலை செய்யவில்லை,இதுபோலவே Ubuntu10.04 Netbook Edition -னும் வேலை செய்தது.
இந்த பதிப்புகளிலெல்லாம் எனக்கு என்ன பிரச்சனை என்றால் ஒலி வேலை செய்தால் , WiFi வேலை செய்யாது.WiFஇ வேலை செய்தால் ,ஒலி வசதி வேலை செய்யாது.நானும் இந்த பிரச்சனைகளையெல்லாம் சரிசெய்ய முயற்சிக்கவில்லை,உள்ளதையே பயன்படுத்துவோமே என திருப்திப்பட்டுக்கொண்டு உபுண்டு 9.04 ஐ இன்றைய தேதிவரையிலும் பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த சனிக்கிழமை இரவு உபுண்டுவின் இணையத்தளத்தைப் பார்வையிட்ட பொழுது அடுத்த மாதம் வெளிடப்பட இருக்கும் உபுண்டு10.10 பதிப்பினுடைய பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யும் இணைப்பினைக் கொடுத்திருந்தனர்.சரி தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்போமே என்று தரவிறக்கம் செய்தேன்.சரியாக ஒன்னேமுக்கால் மணி நேரத்தில் தரவிறக்கம் முடிந்தது(695 MB). தரவிறக்கம் செய்த ISO ‍கோப்பினை என்னிடம் இருந்த DVD/RW ‍ வட்டில் எழுக்கொண்டேன்.
உபுண்டு10.10 இயங்குதளம் தயாராகி விட்டது,மடிக்கணினியினுடைய BIOS ‍ ற்க்கு சென்று F9 ‍ பொத்தானை அழுத்தி First Bootting Device , CD/DVD ‍ ஆக மாற்றி சேமித்துக்கொண்டேன்.மடிக்கணினியினை மறுதொடக்கம் செய்தேன் மடிக்கணினி வட்டில் இருந்து தொடங்கியது ,அட என்னங்க உபுண்டுவின் முதல் திரையே மிகவும் அழகாக இருந்தது,ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு நிறுவுதலின் திரை வந்தது அதில் Try Ubuntu ,Installation ‍ நிகழ்வட்டாக இயக்கிப் பார்ப்போம் என்று Try Ubuntu எனும் தேர்வினை தேர்வு செய்தேன்.
உபுண்டு Desktop வந்துவிட்டது,மிக அருமை,சரி முதலில் ஒலி வசதி வேலை செய்கிறதா என்று பார்ப்போம் என்று உபுண்டு லினக்ஸிற்கென மாற்றி வைத்திருந்த .wav வடிவ பாடலில் இருந்து ஒரு பாடலினை இயக்கிப் பார்த்தேன் ஆச்சரியம் ஒலி வசதி மிகச் சரியாக வேலை செய்தது.சரி முதல் பிரச்சனை தீர்ந்தது.அடுத்து Graphics Display Driவெர் அட அதுவும் முகவும் சரியாக வேலை செய்தது,Desktop Preferences -> Visual Effects -> Normal,Extra இரண்டும் வேலை செய்த்தது அட அடுத்தப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி ,இதையெல்லாம் விட எனக்கு மிகவும் முக்கியமானது WiFi இங்கேதான் வந்தது பிரச்சனை எப்பொழுதும் போல WiFi வேலை செய்யவில்லை.சரி பார்த்துக்கொள்வோம் என்று உபுண்டு10.10 ன் மூலமே உபுண்டு10.10 உள்ள Startup Disk Creator உதவியின் மூலம் பென்டிரைவில் இருந்து இயங்குமாறு தயார் செய்துக்கொண்டேன்.
அட இப்படியே போய்கிட்டு இருந்தா இதுக்கு என்னதான்யா முடிவு,இப்படியே விடக்கூடாது என நினைத்து அன்று இரவே கூகுள் பெரியவரிடமும் ஐடியா கேட்டேன்.அவரும் தெளிவான இணைப்புகளைக் கொடுத்தார் அதில் ஒன்றிரண்டு இணைப்புகளைச் சொடுக்கி படித்துப் பார்த்தேன் ஓரளவு ஐடியா கிடைத்தது.அதில் ஒரு சிறப்பான இணைப்புக் கிடைத்தது.அந்த இணைப்பு http://wireless.kernel.org/en/users/Drivers/b43#devicefirmware இந்த இணைப்பில் அனைத்து WiFi Driver களையும் எப்படி லினக்ஸில் பயன்படுத்துவது எனும் வழிமுறைகளை கொடுத்திருக்கின்றனர்.
இதில் கொடுக்கப்பட்டிருந்த வழிமுறைகள் மிகவும் எளிமையாக இருந்தது. இதில் என்ன முக்கியமா பார்க்க வேண்டியது என்னவென்றால் உபுண்டு10.10 லினக்ஸில் இணையத்தைப் பயன்படுத்த முடியாது,ஆகையால் என்னுடைய உபுண்டு 9.04 லினக்ஸில் உள்ள இணையவசதி மூலம் இதற்கு தேவையான வழிமுறைகள்,மென்பொருள்கள் அனைவற்றையும் தரவிறக்கம் செய்துக்கொண்டேன்.தேவையான கருவிகள்,மென்பொருள்கள்,வழிமுறைகள் இவற்றையெல்லாம் தயார்படுத்திக்கொண்டு வேலையில் இறங்க ஆரம்பித்தேன்.

என்னுடைய மடிக்கணினியில் உள்ள WiFi வன்பொருளின் விபரம்:
06:00.0 Network controller [0280]: Broadcom Corporation BCM4312 802.11b/g [14e4:4315] (rev 01).நீங்கள் உங்கள் கணினியினுடைய WiFi வன்பொருளின் விபரம் அறிய lspci -vnn | grep 14e4 எனும் கட்டளையை முனையத்தில் கொடுக்கவும்.
நான் என்னுடைய மடிக்கணியில் WiFi யினை இணைக்கத் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொதிகளையும்(Packages) தரவிறக்கம் செய்துகொண்டேன்.இந்த இரண்டு பொதிகளையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
  1. b43-fwcutter-013.tar.bz2
  2. broadcom-wl-4.178.10.4.tar.bz2
இந்த இரண்டு மென்பொருள்களை மட்டும் வைத்து கொடுக்கப்பட்டிருந்த வழிமுறைகளுடன் சரியாக பதினைந்தே நிமிடத்தில் உபுண்டு10.10 லினக்ஸில் WiFi பிரச்சனையினை சரிசெய்து,WiFi மூலம் இணையத்தை இணைத்து விட்டேன்.

நான் எப்படி இணைத்தேன் அதற்கான வழிமுறைகள்:
  1. Startup Disk Creater மூலம் உருவாக்கிய உபுண்டு 10.10 இயங்குதளம் உள்ள பென்டிரைவினை யூ.எஸ்.பி Port ல் இணைத்தேன்.கணினியினை பென்டிரைவில் இருந்து தொடங்குமாறு BIOS ல் மாற்றம் செய்து சேமித்து விட்டு,கணினியினை மறுதொடக்கம் செய்தேன்.கணினி பென்டிரைவில் இருந்து பூட் ஆகியது,சரியாக இரண்டே நிமிடத்தில் உபுண்டு 10.10 ன் அழகான Desktop கிடைத்தது.(இதில் நான் சொல்லியிருக்கும் அனைத்தும் லைவ் பதிப்பில் செய்து பார்த்தது).
  2. அடுத்து இந்த வேலைகளையெல்லாம் செய்ய கண்டிப்பாக root பயனாளரும்,root பயனாளர் அனுமதியும் வேண்டுமல்லவா,அதனால் புதியதாக ஒரு Administrator Rights உள்ள ஒரு பயனாளரை உருவாக்கினேன்.அதற்க்குப்பிறகு root account ஐ Enable செய்தேன்.

படம்-1
Administrator Rights உடன் ஒரு பயனாளரை உருவாக்க: System=>Administration=>Users and Groups என்பதை click செய்தவுடன் படம்-1 ல் உள்ளது போன்ற ஒரு திரைக் கிடைக்கும் அதில் Add எனும் Buttton ஐ அழுத்தவும்,அழுத்தியவுடன் படம்-1 ல் உள்ளதுபோன்ற ஒரு திரைக்கிடைக்கும் அதில் Name மற்றும் User name ஆகியவைகளை உள்ளிட்டு OK button ஐ அழுத்தவும்.இப்பொழுது ஒரு புதிய பயனாளர் உருவாகியிருக்கும்.(பார்க்க படம்-3)

படம்-2

படம்-3
இப்பொழுது புதிதாக உருவாக்கிய பயனாளர் பெயரும் காட்டப்படும்,அந்த பயனாளரை தேர்வு செய்து Account Type என்பதற்கு நேராக உள்ள change எனும் button ஐ அழுத்தவும் அதில் Administrator எனபதை தேர்வு செய்து ok button ஐ அழுத்தவும்.அவ்வளவுதான் பயனாளர் உருவாக்கும் வேலை முடிந்தது.அடுத்து root account ஐ enable செய்யும் வேலை

படம்-4
  1. இதை செய்ய Liver Session User லிருந்து logout ஆகவும்,logout ஆகிய பிறகு புதியதாக உருவாக்கிய பயனாளருக்குள் நுழையவும் (அதாங்க பயனாளர் பெயரையும்,கடவுச்சொல்லையும் உள்ளிட்டு செல்வோமல்லவா அதுதான்).
  2. நாம் உருவாக்கிய புதிய பயனாளருக்குள் நுழைந்த பிறகு Applications=>Accessories =>Terminal சென்று முனையத்தை திறந்து கொள்ளவும்.
  3. முனையத்தில் sudo passwd root என கட்டளை கொடுக்கவும்,கொடுத்தவுடன் Enter New Unix Password : என்று கேட்கும் இப்பொழுது root account க்கான கடவுச்சொல்லை உள்ளிடவும்,உள்ளிட்டு Enter key யினை அழுத்தவும் அழுத்தியவுடன் Retype new Unix Password: என்று கேட்கும் இதில் ஏற்கனவே உள்ளிட்ட கடவுச்சொல்லை மீண்டும் தட்டச்சு செய்து Enter key யினை அழுத்தவும்.root account ஐ Enable செய்யும் வேலை முடிந்து விட்டது.
படம்-5
  1. முனையத்தில் su எனக்கொடுத்து Enter key யினை அழுத்தவும்,அழுத்தியபிறகு கடவுச்சொல்லை உள்ளிடச்சொல்லிக் கேட்கும் இதில் root account ற்க்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்தவும்.இப்பொழுது முனையத்தின் $ குறியீடானது # என மாறியிருக்கும்.
  2. இப்பொழுது தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் b43-fwcutter-013.tar.bz2, broadcom-wl-4.178.10.4.tar.bz2 இரண்டு கோப்புகளையும் எங்கு தரவிறக்கி வைத்திருக்கிறீர்களோ அங்கிருந்து copy செய்து Places => Home Folder க்குள் சென்று Paste செய்து கொள்ளவும்.
  3. முதலில் நாம் நிறுவவேண்டிய package, b43-fwcutter-013.tar.bz2 இதை நிறுவ முனையத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
tar xjf b43-fwcutter-013.tar.bz2
cd b43-fwcutter-013
make
cd ..
படம்-6
இந்த கட்டளைகளை கொடுத்து முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை முனையத்தில் கொடுக்கவும்.
export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"

படம்-7

அடுத்து broadcom-wl-4.178.10.4.tar.bz2 package ஐ நிறுவ வேண்டும்.இதை நிறுவ முனையத்தில் கீழேகொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.

tar xjf broadcom-wl-4.178.10.4.tar.bz2

cd broadcom-wl-4.178.10.4/linux

sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta.o

இறுதியாக உள்ள இந்த கட்டளையை முனையத்தில் ஒரே வரியில் கொடுக்கவும்.ஒரு வேளை உங்கள் உலாவியில் மடங்கி இரண்டு வரியாக தெரிந்தால் நீங்கள் இரண்டு வரியில் உள்ளிட முயற்சிக்காதீர்கள்.

பல்கலைக்கழகத்தின் WiFi Detect ஆகியபொழுது

Connection Establish ஆகியபொழுது

Connectin Establish ஆகிய இணையத்துடன் இணைந்து என்னுடைய வலைப்பூவை பார்வையிட்டபொழுது
நான் என்னுடைய மடிக்கணினிக்கு மிகவும் பொருத்தமான உபுண்டு லினக்ஸை தேர்வு செய்ய ஒரு வருடம் காத்துக்கொண்டிருந்தேன்.இப்பொழுது அனைத்து வசதிகளுடன் உபுண்டு 10.10 லினக்ஸ் வந்து விட்டது.எங்கள் பல்கலைக்கழகத்தில் 500 பேர்களுக்கு மேல் Compaq515 மாடல் மடிக்கணினி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு இந்த பதிவு ஒரு கையேடாக அமையும் என நம்புகிறேன்.இதை நான் செய்து முடித்தபொழுது லினக்ஸில் எதையுமே மிகவும் எளிமையாக செய்து முடிக்கலாம் என நம்பிக்கை அதிகமாகியது.என்னைப் போன்ற பயனாளர்களுக்கு உபுண்டு10.10 பதிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

Aug 28, 2010

என்னுடைய பல்கலைக்கழகத்தில் உள்ள WiFi வசதியினை எப்படி எனது மடிக்கணினியில் உள்ள உபுண்டு 9.04 லினக்ஸ் இயங்குதளளத்தில் இணைத்தேன்

எனது பல்கலைக்கழ்கத்தில் 24 மணி நேர WiFi இணையதள வசதி உள்ளது.நான் வலைப்பூ ஆரம்பித்தது முதற்க்கொண்டு , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளில் 75% சதவிகித பதிவுகள் பல்கலைக்கழகத்தின் WiFi வசதியின் உதவியுடன்தான் எழுதியிருக்கிறேன்.இந்த பதிவுகூட பல்கலைக்கழ்கத்தில் உள்ள WiFi இணையதள வசதியின் மூலம்தான் எழுதினேன்.விடுதியிலும் WiFi வசதி 24 மணி நேரமும் உண்டு.நான் விடுதியில் இருப்பதால் இணைய வசதியினை பெரும்மளவு பயன்படுத்திக்கொள்கிறேன்.
கடந்த ஒரு வருடமாக WiFi இணைய வசதியினை மாணவர்கள் மடிக்கணினியில் எந்த விதமான அமைப்புகளையும் அமைக்கமால் பயன்படுத்திக்கொண்டிருந்தோம்.தற்பொழுது புதிதாக மடிக்கணினியில் அமைப்புகளை மேற்கொண்டால் மட்டுமே பயன்படுத்த முடியும்.நான் Windows XP இயங்குதளமும்,உபுண்டு இயங்குதளமும் பயன்படுத்தி வருகிறேன்.எங்கள் பல்கலைக்கழகத்தில் WiFi யினை மடிக்கணியில் இணைப்பதற்க்காக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டி கோப்பில் (Guide File in PDF Format) Windows XP,Windows-7,Windows Vista இந்த மூன்று இயங்குதளத்திற்கு உள்ள வழிகள் மட்டுமே இருந்தது.லினக்ஸ் இயங்குதளத்திற்கு உள்ள வழிகாட்டிகள் எதுவுமே கொடுக்கப்படவில்லை.என்னைப் போன்று லினக்ஸ் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயம்தான்.
படம்-1
Windows XP இயங்குதளத்தில், வழிகாட்டியில் கொடுத்துள்ளதுபடி செய்து பார்த்தேன்.ஏனோ தெரியவில்லை WiFi Configuration சரியாக அமையவில்லை.
சரி உபுண்டு லினக்ஸில் முயற்சி செய்துப்பார்ப்போமே என முயற்சி செய்தபொழுது மிக எளிதாக WiFi யின் மூலம் இணையதள வசதியினை இணைத்துவிட்டேன்.இதை எப்படி செய்தேன் என்பதை பகிர்ந்துக்கொள்கிறேன்.இது எனது பல்கலைக்கழ்கத்தில் உபுண்டு லினக்ஸைப்பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறேன்.

செய்முறை:
  1. மடிக்கணினியில் WiFi க்கு உண்டான Power Button ஐ அழுத்தினேன்.
  2. Power Button ஐ அழுத்தியவுடன் உபுண்டு லினக்ஸில் மேல்புற பட்டையில் (Top Panel) Network Configuration னுடைய Icon இல் PERIYAR MANIAMMAI UNIVERSITY என்றுக் காட்டியது.
  3. PERIYAR MANIAMMAI UNIVERSITY என்பதைக் கிளிக் செய்தேன்.
  4. படம்-1 -ல் உள்ளதைப் போன்ற ஒரு சாளரம்(Window) தோன்றியது.மேலே படம்-1 கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
அந்த சாளரத்தில்,

Wireless Security -------: என்பதில் WPA & WPA2 Enterprise... என்றுக்கொடுத்தேன்.
Authentication ------------: என்பதில் Protected EAP (PEAP) என்றுக்கொடுத்தேன்.
Anonymous Identity ----: என்பதில் எதுவும் கொடுக்கவில்லை
CA Certificate ------------: என்பதிலும் எதுவும் கொடுக்கவில்லை
PEAP Version -------------: என்பதில் Automatic என கொடுத்தேன்.
Inner Authentication----: என்பதில் MSCHAPv2 எனக்கொடுத்தேன்.
User Name ----------------: என்பதில் என்னுடைய பயனாளர் பெயரினையும்
Password -------------------: என்பதில் என்னுடைய கடவுச்சொல்லையும் கொடுத்தேன்
மேலே கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்தபிறகு Connect Button ஐ அழுத்தினேன்.இதைத் தொடர்ந்து அடுத்ததாக தோன்றிய Window வில் Ignorance எனும் Button ஐ அழுத்தினேன்.அவ்வளவுதான் மிக அருமையாக WiFi மூலம் இணைய வசதி இணைப்புக்கிடைத்தது.இந்த பதிவு முழுவதையும் இவ்வாறு செய்து கிடைத்த இணைப்பின் மூலமே எழுதினேன்.
என்னதான் இருந்தாலும் லினக்ஸ் லினக்ஸ் தாங்க , லினக்ஸைப் பயன்படுத்துவோம் நேரத்தை மிச்சப்படுத்துவோம்,மகிழ்ச்சியடைவோம்.

இணைப்புக் கிடைத்தவுடன்