Showing posts with label உபுண்டு. Show all posts
Showing posts with label உபுண்டு. Show all posts
Jul 26, 2016
Mar 7, 2014
உபுண்டு 14.04 LTS - Trusty Tahr
உபுண்டுவினுடைய முதல் பதிப்பான 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த பத்து வருடங்களில் உபுண்டு லினக்ஸானது ஒரு நீண்டநெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. லினக்ஸ் என்றாலே பயன்படுத்த கடினமாக இருக்குமே என நினைத்து பயந்த பயத்தை, ஆரம்ப நிலை பயனாளர்களிடமிருந்து அழித்தொழித்த பெருமை உபுண்டுவினையேச் சாரும். நானும் எத்தனையோ லினக்ஸ் வழங்கல்களை நிறுவி பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். ஆனால உபுண்டுவினைப் போன்று பயன்படுத்துவதற்கு எளிமையான, அதே நேரத்தில் ஏதாவது ஒரு பிழை ஏற்பட்டாலும் அதை சரி செய்யக்கூடிய வழிமுறைகளும், தீர்வுகளும் மிகவும் எளிமையாகக் கிடைக்கூடிய ஒரு லினக்ஸ் வழங்கலை பார்த்ததில்லை. ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு நாம் உபுண்டு லினக்ஸை உறுதியாக பரிந்துரைக்கலாம் அதில் எந்தவிதமான தயக்கமும் கொள்ள வேண்டியதில்லை. இது போன்று இன்னும் எவ்வளவோ சிறப்புகளைக் கொண்ட உபுண்டுவினுடைய அடுத்த பதிப்பான 14.04 ஆனது LTS (Long Term Support) பதிப்பாக ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. உபுண்டு 14.04 LTS வெளியீட்டு கால அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் 19 உபுண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கும் உபுண்டு 14.04 LTS ஆனது உபுண்டுவினுடைய 20-ஆவது பதிப்பாகும்.
மறுஉருவாக்கம் செய்யப்பட்ட Startup Disk Creator Tool, Unity Control Center என பல புதுமையான அம்சங்களோடு உபுண்டு 14.04 LTS ஆனது ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. ஆவலோடு இருங்கள் தோழர்களே! உபுண்டுவின் அடுத்த பதிப்பை சுவைப்பதற்கு!
மேலும் தெரிந்து கொள்ள:
Nov 21, 2013
பழைய கணினியில் உபுண்டு லினக்ஸ்
அண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் ஒரு பழைய HCL நிறுவன மேசைக்கணினி வைத்திருக்கிறார். அந்த கணினியில் அவர் செய்யும் அதிக பட்ச வேலைகள் கணினியில் வட்டுகளைப் போட்டு திரைப்படம் பார்ப்பது, பாடலகள் கேட்பது, மின்னஞ்சல் அனுப்புவது, யூடியூப்பில் காணொளிகள் காண்பது, இணையத்தில் நாளிதழகள் படிப்பது ஆகியவைகள் தான்.
40 GB Hard Disk, Pentium 4 Processor, 512 MB RAM இதுதான் அவருடைய கணினியின் வன்பொருள் விபரம்.
அவர் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தைதான் பயன்படு வந்தார். அவரிடம் லினக்ஸ் இயங்குதளத்தின் சிறப்புக்களையும், பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும், அவரினுடைய பயன்பாட்டிற்கு உபுண்டு லினக்ஸ் எந்தளவிற்கு ஒத்துழைக்கும் என்பதையும் எடுத்துக் கூறினேன். அவரும் ஏற்றுக்கொண்டு உபுண்டுவை நிறுவச்சொன்னார்.
உபுண்டு 12.04.1 LTS பதிப்பை நிறுவினேன். அவர் நீண்டகாலமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி வந்தார் என்பதால் gnome-classic ஐ நிறுவினேன். அதன்பின் ubuntu-restricted-extras, Mobile Media Converter, Google Chrome, Chromium, தமிழ் தட்டச்சு வசதி ஆகியவைகளை நிறுவினேன். பழைய கணினியாக இருந்தாலும் சிறப்பாக உபுண்டு இயங்குகிறது. 166 MB RAM நினைவகத்தை மட்டுமே தொடக்கத்தில் எடுத்துக்கொள்கிறது.
Google Chrome மிகவும் மெதுவாகத்தான் இயங்குகிறது. முகநூல் போன்றவைகளை பார்வையிட்டால் இன்னும் மெதுவாக வேலை செய்கிறது. ஆனால் Chromium சிறப்பாகவும் வேகமாகவும் இயங்குகிறது. ஆகையால் Google Chrome ஐ அந்த கணினியில் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.
கணினியின் விபரங்களையும் மற்றவைகளையும் மேலே Screenshot எடுத்து போட்டுள்ளேன் பாருங்கள். நமது தோழர்கள், நண்பர்கள் வீட்டில் இருக்கும் பழைய கணினிகளில் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் போராடி வந்தால் அவர்களுக்கும் உபுண்டு லினக்ஸை நிறுவிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தலாமே!
Nov 2, 2013
May 14, 2013
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உபுண்டு லினக்ஸ்
நேற்று காலை (13.05.2013 திங்கள்) நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். திங்கள் கிழமையன்று வழக்கமாக மனுநீதி நாள் நடைபெறும். பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளையும், தேவைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி கொடுப்பார்கள்.
அந்த மனுக்கள் முதலில், மனுக்கள் பெறும் இடங்களில் பெறப்பட்டு அலுவலர்களால் வாசிக்கப்பட்டு கணினியில் பதியப்பட்டு பிறகு நமக்கு ஒரு ஒப்புகை சீட்டு (Acknowledgment) கொடுக்கப்படும்.
அப்பொழுது அங்கு கணினியில் நடந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் காரணம், அந்த கணினியில் உபுண்டு 10.04 LTS இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது.
நெருப்புநரி உலாவி (Online மூலம்தான் கோரிக்கைகள் பதியப்படுகின்றன) மூலம் பொதுமக்களின் மனுக்களில் உள்ள கோரிக்கைகள்,
மனுதாரரின் பெயர்,
தந்தை பெயர்,
முகவரி,
வட்டம்,
பிரச்சனையின பிரிவு,
தொடர்பு அலுவலர்,
கோரிக்கை எண்,
என பலசெய்திகள் விவரங்களோடு பதிவு செய்யப்பட்டு பிறகு மனுதாரருக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படுகிறது. விவரங்களை உள்ளிட ibus பயன்படுத்தப்படுகிறது.
ஒப்புகைச் சீட்டிற்காக பிரிண்ட் கொடுக்கும் பொழுது அது ஒரு PDF கோப்பாக வருகிறது. அதன்பிறகு அந்த PDF கோப்பு பிரிண்ட் செய்யப்படுகிறது.
அங்கு பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் HP Printer. எந்த பிரச்சனையும் இல்லாமல் பிரிண்ட் வருகிறது.
HP நிறுவன Printer கள் லினக்ஸ் இயங்குதளத்துடன் நன்றாக ஒத்துழைப்பதாக தெரிகிறது. குறிப்பாக உபுண்டு லினக்ஸுடன் நன்றாக ஒத்துழைக்கிறது.
எனது அருமை தோழர் ம.பாண்டியராஜன் அவர்களுக்கு ஒரு HP Officejet பிரிண்டர் வாங்கினோம். தோழரும் லினக்ஸ் பயனாளர்தான். அவருடைய மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS நிறுவியிருந்தோம். மிகவும் நன்றாகவே அந்த பிரிண்டர் உபுண்டுவுடன் வேலை செய்கிறது.
தமிழக அரசினுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இவ்வளவு பெரிய புரட்சி நடந்ததே மகிழ்ச்சியான விஷயம்தான்.
இதென்ன பெரிய புரட்சி என்கிறீர்களா வேறென்ன செய்வது இந்தியாவைப் பொறுத்தமட்டில் மனிதகுலத்தில் இயல்பாக நடக்க வேண்டிய விஷயங்களெல்லாம் எப்பொழுதும் புரட்சியாகவும் , புரட்சி செய்தும்தான் பெற வேண்டியுள்ளது.
இதுபோன்று தமிழக அரசின் அத்தனை நடவடிக்கைகளும் லினக்ஸு மூலமும் , Open Source தொழில்நுட்பம் மூலமும் மேற்கொள்ளப்பட்டால் மிகவும் மகிழ்ச்சிதான்.
இதைத்தவிர,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டண பெறுவத்தற்காக இருக்கும் கணினிகளில் Redhat Linux பயன்படுத்தப்பட்டு வருகிறது. (5-நாட்கள் மட்டும் நண்பருக்காக Data Entry செய்தேன்)
Labels:
TN Government with Linux,
உபுண்டு,
தமிழக அரசு,
லினக்ஸ்
Apr 27, 2013
உபுண்டு 13.04 (Raring Ringtail) வெளியிடப்பட்டுள்ளது
உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய: http://www.ubuntu.com/download/desktop
உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர். உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய Getting Started With Ubuntu : http://ubuntu-manual.org/
தரவிறக்கம் செய்ய Getting Started With Ubuntu : http://ubuntu-manual.org/
உபுண்டு 13.04 -ன் சில காட்சிகள்:
Subscribe to:
Posts (Atom)










