எனது நண்பர் சிவா அவர்கள் Acer TravelMate 5720 மாடல் மடிக்கணினி வைத்திருக்கிறார்.அவர் லினக்ஸ் பயனாளர் கிடையாது இயந்திரவியல் துறையைச் சேர்ந்தவர்.என்னுடைய மடிக்கணினியில் webcam வசதி கிடையாது ஆனால் எனக்கு லினக்சில் webcam ஐ இயக்கிப் பார்த்து விடவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.இதை நான் நிகழ் வட்டாக(Live CD) இயக்கித்தான் செய்துப்பார்த்தேன்.என்னிடம் ubuntu 9.10 வட்டு இருந்தது.நண்பரினுடைய Acer TravelMate 5720 மடிக்கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் உபுண்டு 9.10 லினக்சில் மிகவும் நன்றாக இயங்கியது.
உபுண்டு 9.10 லினக்சில் நான் webcam ஐ இயக்க cheese மென்பொருளைப்பயன்படுத்தினேன்.விண்டோஸ் இயங்குதளத்தில் தெரிந்ததைவிட உபுண்டுவில் மிகவும் அருமையாக படம்பிடுத்துக் காட்டியது.- Ubuntu Software Center சென்று cheese மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தானாகவே படம் பிடித்து தருவது,வீடியோ கோப்பாக பிடிப்பது,படத்திற்கு Effects கொடுப்பது என தனித்தன்மையுடன் cheese மென்பொருள் இருக்கிறது.
- நீங்களும் உங்கள் கணினியில் செய்துபாருங்கள்.
- webcam ஐ இயக்க cheese மென்பொருளை நிறுவியது தவிர நான் வேறு எந்த சிரமமும் படவில்லை.
எப்பவும் நாங்க (லினக்ஸ் ) கலக்கிகிட்டு இருப்போமுல்ல....
2 comments:
அருமையான பதிவு,
பகிர்விற்கு நன்றி.
அப்புறம் சிவா லினக்சுக்கு மாறினாரா?
Post a Comment