Mar 7, 2014

உபுண்டு 14.04 LTS - Trusty Tahr


உபுண்டுவினுடைய முதல் பதிப்பான 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த பத்து வருடங்களில் உபுண்டு லினக்ஸானது ஒரு நீண்டநெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. லினக்ஸ் என்றாலே பயன்படுத்த கடினமாக இருக்குமே என நினைத்து பயந்த பயத்தை, ஆரம்ப நிலை பயனாளர்களிடமிருந்து அழித்தொழித்த பெருமை உபுண்டுவினையேச் சாரும். நானும் எத்தனையோ லினக்ஸ் வழங்கல்களை நிறுவி பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். ஆனால உபுண்டுவினைப் போன்று பயன்படுத்துவதற்கு எளிமையான, அதே நேரத்தில் ஏதாவது ஒரு பிழை ஏற்பட்டாலும் அதை சரி செய்யக்கூடிய வழிமுறைகளும், தீர்வுகளும் மிகவும் எளிமையாகக் கிடைக்கூடிய ஒரு லினக்ஸ் வழங்கலை பார்த்ததில்லை. ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு நாம் உபுண்டு லினக்ஸை உறுதியாக பரிந்துரைக்கலாம் அதில் எந்தவிதமான தயக்கமும் கொள்ள வேண்டியதில்லை. இது போன்று இன்னும் எவ்வளவோ சிறப்புகளைக் கொண்ட உபுண்டுவினுடைய அடுத்த பதிப்பான 14.04 ஆனது LTS (Long Term Support) பதிப்பாக ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. உபுண்டு 14.04 LTS வெளியீட்டு கால அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் 19 உபுண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கும் உபுண்டு 14.04 LTS ஆனது உபுண்டுவினுடைய 20-ஆவது பதிப்பாகும்.

மறுஉருவாக்கம் செய்யப்பட்ட Startup Disk Creator Tool, Unity Control Center என பல புதுமையான அம்சங்களோடு உபுண்டு 14.04 LTS ஆனது ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. ஆவலோடு இருங்கள் தோழர்களே! உபுண்டுவின் அடுத்த பதிப்பை சுவைப்பதற்கு!

மேலும் தெரிந்து கொள்ள:

2 comments:

Kumaresan Rajendran said...

கண்டிப்பாக நண்பரே,

இரா.கதிர்வேல் said...

நன்றி குமரேசன்.