Dec 18, 2018

கேஉபுண்டுவில் Number Lock பொத்தானை தொடக்க நிலையில் தானாக இயங்க செய்வது எப்படி?

இரண்டு விதமான தட்டச்சு பலககைகளுடன் மடிக்கணினிகள் சந்தையில் கிடைக்கிறது. எண்களுக்கான பொத்தான்களை தனியாக கொண்ட பலகைகள், எண்களுக்கான பொத்தான்கள் தனியாக இல்லாத பலகைகள்.

Without Numeric Keys


With Numeric Keys
எண்களுக்கான பொத்தான்களை தனியாக கொண்ட மடிக்கணினிகளில் எண்களை விரைவாகவும், எளிமையாகவும் உள்ளீடு செய்யலாம். இந்த பொத்தான்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கென 'Num Lock' என்கிற பொத்தான் பலகையில் தனியாக இருக்கும். அதை அழுத்திவிட்டு, நாம் எண்களை உள்ளீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

Num Lock பொத்தானை நாம் ஒவ்வொரு முறையும் அழுத்திவிட்டு எண்களை உள்ளீடு செய்வது கடினமாக தோன்றினால் இதை கணினியின் தொடக்க நிலையிலேயோ அல்லது இயங்குதளத்தின் தொடக்க நிலையிலேயோ தானாக செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

கணினியின் தொடக்க நிலையிலேயே கொண்டு வருவதற்கு BIOS அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டி வரும். நீங்கள் கேஉபுண்டு பயன்படுத்துபவராக இருந்தால் BIOS அமைப்பிற்குச் செல்லாமலேயே செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். எப்படி?

System Settings -> Input Devices -> Keyboard -> Hardware Tab -> Click 'Turn On' in NumLock on Plasma Startup -> Click 'Apply'


Dec 16, 2018

ஜிமெயில் மின்னஞ்சல் அறிவிப்புகளை செயல்படுத்துவது எப்படி?

தகவல் தொழில்நுட்பம் மட்டும்மல்லாது அனைத்துத்துறை வேலைகளிலும் மின்னஞ்சல் என்பது ஒரு முக்கியமான தகவல் தொடர்பு கருவி. சில மின்னஞ்சல்களுக்கு ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். நாம் ஏதாவது ஆழ்ந்த வேலைகளில் மூழ்கியிருக்கும் போது நமக்கு வந்திருக்கும் முக்கியமான மின்னஞ்சல்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடும்.

அந்த மாதிரியான சூழலில் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை அறிவிப்புகளாக கூறினால் நன்றாக இருக்குமல்லவா. ஜிமெயில் இந்த வசதியினை கொண்டிருக்கிறது.

இந்த வசதியினை செயல்படுத்த, உங்களுடைய ஜிமெயில் கணக்கின் அமைப்புக்குச்(settings) சென்று General என்பதைச் சொடுக்கி அதில் Desktop Notifications எனும் பிரிவில் உள்ள New mail notifications on என்பதைத் தேர்ந்தெடுத்து கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்தவும்.




இனிமேல் உங்களுக்கு புதிய மின்னஞ்சல் வந்தால் அது அறிவிப்பாக காட்டப்படும். நான் கேஉபுண்டு(Kubuntu) 18.04.1 LTS பயன்படுத்துகிறேன். இந்த வசதி நன்றாக வேலை செய்கிறது.

Dec 4, 2018

பணம் செய்ய விரும்பு

சிறு துளி பெரும் பணம் - எழுத்தாளர் சோம.வள்ளியப்பன்

 

பணம் செய்ய விரும்பு - நிதி.ஆலோசகர் வ.நாகப்பன்

 

நிதி நலம் - எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி  

Oct 26, 2018

தீபாவளி நட்டக் கணக்கு

தீபாவளிப் பண்டிகையால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றித் தந்தை பெரியார் எடுத்துக் காட்டும் கணக்கு விபரம்:-

1. துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர் களும் "தீபாவளி"ப் பண்டிகையை உத்தேசித்துப் புதுத் துணிகளை வாங்குவது.

2. மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று,  யோக்கியதைக்கு மேலானவும், சாதாரணமாக உபயோகப்படுத்து வதற்கு ஏற்றனவல்லாதனவுமான துணிகள் வாங்குவது.

3.அர்த்தமற்றனவும் பயனற்றனவுமான வெடி மருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகளை வாங்கிக் கொளுத்துவது.

4. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டம் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைச் சூதாட்டத்திலும், மதுக்குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது.

5. இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது.

6. அன்று ஒவ்வொருவர் வீட்டிலும் அமிதமான பதார்த்தங் களை (பலகாரங்கள் - காய்கறி, சாப்பாட்டு வகைகளை)த் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகத்தைக் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும்.

7. இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது.

Oct 22, 2018

ராஜீவ்காந்தி சாலை நாவல் - ஒரு பார்வை


எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய "ராஜீவ்காந்தி சாலை" நாவலை அண்மையில் படித்து முடித்தேன். "ராஜீவ்காந்தி சாலை" நாவல் நான் படிக்க விரும்பி நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த புத்தகம். உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு இது.

எழுத்தாளர் விநாயக முருகன்

உயிர்மை பதிப்பகத்தை அடிக்கடித் தொடர்புகொண்டு எப்போது "ராஜீவ்காந்தி சாலை" நாவல் வெளிவரும்? எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். விரைவில் வெளிவருவதாக கூறினார்கள். உயிர்மை இதழில் சென்னை புத்தகக் காட்சியில்(2018) "ராஜீவ்காந்தி சாலை" நாவல் வெளிவருவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அங்குதான்(சென்னை புத்தகக் காட்சி) இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

நான் ஐடியில் வேலை செய்வதால் படிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாகவும், ஆர்வமாகவும் இருந்தது. ஐடி என்று சொல்லக்கூடிய தகவல்தொழில்நுட்ப துறையில் நடப்பவைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார் விநாயக முருகன்.

நாவலில் வரும்  கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளக்கூடிய கருத்துக்களை வாசிக்கும் போது இதையெல்லாம் எழுவதற்கு ஒரு தைரியம் வேணும்யா என நினைத்துக்கொண்டேன்.

பார்ப்பனர்கள் - பெரியார் - காந்தி கொலை - ஐடி கம்பெனிகளுக்குள் பார்ப்பனர்கள், மலையாளிகள் செய்யும் அரசியல் என ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நாவலில்.

விநாயக முருகன் முற்போக்கானவர். அவருடைய முகநூல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும். நான் அவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். அவர் எழுதிய "சென்னைக்கு மிக அருகில்", "நீர்" ஆகிய நாவல்களை ஏற்கனவே படித்திருக்கிறேன். "சென்னைக்கு மிக அருகில்" நாவலிலும் பார்ப்பனர்கள் - பெரியார் பற்றிய உரையாடல்கள் வரும்.

உயிர்மையில் விநாயக முருகன் எழுதிய "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://marinabooks.com/category?authorid=6448

ஐடி துறையில் இருக்கும் ஒவ்வொருவரும், ஐடி துறையில் அப்படி என்னதான் நடக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

எந்த புத்தகத்தைப் படித்தாலும் அதில் எனக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைப்பது என்னுடை பழக்கம். அவ்வாறு "ராஜீவ்காந்தி சாலை" நாவலில் எனக்கு பிடித்த வரிகள் என அடிக்கோடிட்டு வைத்தவைகள்...

"உதாரணத்துக்கு அமெரிக்காவில் இருக்கும் மருந்து கம்பெனிக்கு சாஃப்ட்வேர் தேவைப்பட்டால் அவர்கள் ஆட்களைப் போட்டு அதை எழுதச் சொல்லமாட்டார்கள். இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் ஐடி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவார்கள். அவர்களுக்கு வேலைசெய்யும். சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிடும். ஆனால் சில புத்திசாலிகள் சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுத்தாலும் அதன் பிறகு பராமரிப்பு அது இதுவென்று சொல்லி டேரா போட்டு இன்னும் காசு கறப்பார்கள்."

"இங்கிருந்த காடுகளை அழித்துத்தான் இந்த மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. அதே நிறுவனங்கள் இன்று "மரங்களை" நடுவோம். மரங்களைப் பாதுகாப்போம்" எனப் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் சந்திராவுக்கு உள்ளுக்குள் சிரிக்கத் தோன்றியது."

"மற்ற எத்தனையோ தொழில்களைவிட இந்தத் தொழில் மூலமே இந்தியாவுக்கு நேர்மையான வெளிப்படையான வரிகள் கிடைக்கின்றன. அதன் வழியாகவே இந்தியாவில் சாலைகள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டப்படுகின்றன என்று சந்திரா போன வாரம்தான் என்டிடிவி பேட்டியில்கூடச் சொல்லியிருந்தார்."

"சாலைகளே தேசத்தின் அடையாளம் முன்னேறிய தேசத்தின் மனித குல வளர்ச்சியை அளக்க விரும்பினால் அதன் சாலைகளை அளந்தால் போதும். சாலைகளே மனித நாகரிகங்களை இணைக்கும் பாலங்கள். இரண்டு வெவ்வேறு கலச்சாரப் பின்னணி கொண்டவர்கள் உறவாடவும் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் சாலைகளே பெரிதும் உதவுகின்றன."

"இந்த மென்பொருள் நிறுவனங்களில் இப்படித்தான் எழுபது சதவீத ஆட்கள் உயிரைக் கொடுத்து வேலைசெய்வார்கள். மீதியுள்ள முப்பது சதவீதம் பேர் வேலை எதுவும் செய்யாமல் ஓபி அடித்துப் பொழுதை ஓட்டுவார்கள். அந்த எழுபது சதவீத ஆட்கள் இவர்கள் வேலையையும் சேர்த்துச் செய்வார்கள். ஆனால் பணி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டுகள் என்று வரும்போது மட்டும் அந்த முப்பது சதவீத ஆட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பொதி சுமக்கும் மாடுகள் மேல்தானே மேலும் மேலும் அடுக்கிவைப்பார்கள்?"

"இந்த ஐ.டி கம்பெனிகளில் எப்போது எந்த தகுதி அடிப்படையில் யாருக்கு பதவியுயர்வு வருமென்றே சொல்ல முடியாது. எம்.சி.ஏ படித்தவனைவிடப் பி.எஸ்.சி படித்தவன் அதிக சம்பளம் வாங்குவான். பத்து வருட அனுபவம் உள்ளவனைவிடப் பதினைந்து வருட அனுபவம் உள்ளவன் குறைந்த சம்பளம் வாங்குவான். தனியார் கல்லூரியைவிட ஐஐஎம்மில் படித்து வருபவனுக்கு சம்பளம் அதிகம். கலைக்கல்லூரியிருந்து கணிப்பொறியியல் படித்து வந்தால் அடிமாட்டுச் சம்பளம் கொடுப்பார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து இரண்டு வருட அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எவனாவது இன்டர்வியூவுக்கு வருவான் அவனுக்கு ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய்ச் சம்பளம் கிடைக்கும். அதுவே சின்னச் சின்ன, பேர் தெரியாத ஐடி நிறுவனங்களிலிருந்து பத்து வருட அனுபவத்தை வைத்துக்கொண்டு இன்னொருவன் இன்டர்வியூவுக்கு வருவான். அவனுக்கும் ஆண்டுக்குப் பத்து லட்ச ரூபாய் சம்பளம் தருவார்கள். காரணம் கேட்டால் இன்டர்வியூவுக்கு ஆட்கள் எடுக்கும் ஹெச்.ஆர் ஆட்கள் ஏதேதோ சொல்வார்கள். இது போன்ற ஐடி நிறுவனங்களுக்குச் குறைந்த  கூலிக்கு ஆட்களை பிடித்து தருவதில்தான் ஹெச்.ஆர் ஆட்களின் திறமையை மதிப்பிடுவார்கள். இதனாலேயே எந்தக் கம்பெனி அதிக சம்பளம் தருகிறதோ அதற்குத் தாவித் தாவிச் செல்பவர்கள் என்னும் பெயரை ஐடி ஆட்கள் எடுத்திருந்தார்கள். அரசியல் கட்சிகள்போல இப்படித் தாவித் தாவி வருபவர்களையும் நிறுவனங்கள் வரவேற்று வேலை கொடுக்கத்தான் செய்தன."

"ஒரு காலத்தில் அதிகாரம் ராசாக்களிடம் குவிஞ்சு கெடந்துச்சு. சபையில கெடந்துச்சு. ஆலோசனை சொல்றேன்னு அங்கப் பாப்பானுங்க நொழஞ்சாங்க. பொறவு அதிகாரம் ராசா சபைகளைவிட்டு வெளியே வந்து கோவிலுக்குப் போச்சு. பாப்பானுங்க அங்கயும் நகர்ந்தானுங்க. பொறவு வெள்ளைக்காரன் வந்தான். அதிகாரம் கவுருமெண்ட்டு ஆபிசருங்க கைக்குப் போச்சு. இவனுங்க அங்கயும் போய் ஜால்ரா போட்டாங்க. இப்ப அதிகாரம் டெல்லிலேயும் சாப்ட்வேர் கம்பேனிலேயும் அமெரிக்காவுலேயும் இல்ல கெடக்கு. ஆனா ஒண்ணு செட்டியார். ஆயிரந்தான் சொல்லுங்க. எங்க, எப்ப அதிகாரமும் பணமும் கெடைக்குமுன்னு  கணிக்கறதுல பாப்பானுங்கள மிஞ்ச முடியாது."

"ஒரு காலத்துல தமிழ்நாட்டுல பாப்பாரப் பசங்களத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்க. ஆனா அவங்க சத்தமே இல்லாம இந்தியும் இங்கிலீசும் படிச்சுட்டு இன்னைக்கு டெல்லிலேயும் அமெரிக்காவுலேயும் உட்கார்ந்துகிட்டுத் தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கறாங்க. இவங்க வச்சதுதான் சட்டம். ஜெயலலிதா வந்தாலும் சரி, கருணாநிதி வந்தாலும் சரி. இதுதானே நிலைமை."

"வெள்ளைக்காரன் ஒன்னும் சும்மா நாட்டை விட்டுப் போகலை. போகும்போதே இங்க அருக்கற ஜனங்களுக்கு இங்கிலீஷ் ஆசையை மூட்டிவிட்டுட்டுப் போயிட்டான். போற மாதிரி போய் இங்க இங்கிலீஷ் தெரிஞ்ச பாப்பான்களை அவன் நாட்டுக்கு வேலை செய்ய அழைச்சுட்டுப் போயிட்டான். இவனுங்களும் காசு எங்க இருக்குதுன்னு தொடையை விரிக்கிற தேவடியா கணக்கா விரிச்சுப் போட்டு கெளம்பிட்டானுங்க. திரும்ப இங்க வந்து கங்காணி வேலை செய்றாங்க. நோகாம நோம்பு கும்பிடுற பயலுங்க பாப்பானுங்க."

"உடம்பு மொத்தத்தையும் தண்ணிக்குள்ள வச்சிருந்தாலும் தலையை மேலேயே வச்சிருக்கிற தண்ணிப் பாம்பு மாதிரியில்லை இந்தப் பயலுங்க. இவனுங்க திருட்டுத்தனம், மொள்ளமாரித்தனத்தைத் தெளிவாகப் புரிஞ்சுவச்சிருந்தவங்க ரெண்டு பேரு. ஒருத்தர் காந்தி. இன்னொருந்தர் பெரியார். காந்தியைவிட்டு வச்சா இவனுங்க பொழைக்க முடியாதுன்னு அவரையும் கொன்னுட்டாங்க. பெரியாரைத்தான் இவனுங்களால மயிரக்கூடப் பிடுங்க முடியல. தன்னோட கைத்தடியால தொரத்தித் தொரத்தி இல்ல அடிச்சார்."

இந்த ஐடி கம்பெனிங்க வந்துதான் ஊருக்குள்ள ஜாதிக் கலப்பு நடந்துடுசுச்சு. எவன் என்ன ஜாதின்னே தெரியமாட்டேங்குது. பேரை வச்சு ஜாதியக் கண்டுபிடிக்கலாமுன்னு பார்த்தாக்கூட எல்லாப் பயலுகளும் ரமேசு, சுரேசுனுன்னுல்ல வச்சிக்கிட்டுத் திரியறானுங்க. சேரிப் பசங்களும் அங்கதான் வேலைசெய்றாங்க. நம்ம ஆளுங்களும் அங்கதானே வேலைசெய்யுறாங்க?

"ஆனா பெரியாருக்குதான் நாம நன்றி சொல்லணும்" என்று சந்திரா ஆரம்பித்தார். "என்னது, பெரியாரா?" ரங்கா ஆச்சரியத்தோடு கேட்டார். "அந்தாளு மட்டும் இல்லன்னா நானும் இந்நேரம் சீரங்கத்துல கோவில்ல மணியடிச்சுட்டுப் பிரசாதம்தான் சாப்பிட்டுண்டு இருந்திருப்பேன்."

"ஆனா பாரு ரங்கா. நாம இவ்வளவு தூரம் கடல் கடந்து போயி மாடர்னா மாறி வாழக் கத்துக்கிட்டோம். இவாளால இன்னும் சொந்த ஜாதியைக்கூடத் தாண்டி வர முடியல. காலையில பேப்பர் பார்த்தீயா? வன்னியப் பொண்ணை லவ் செஞ்சுட்டான்னு அவா இருந்த தலித் கிராமத்தை எரிச்சுட்டா. எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுன்னு இவாளப் பார்த்துதான் நாம சொல்லணும்."

"பெரும்பாலானோர் கல்லூரி முடித்தவுடனேயே ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். முதல் மாசமே சுளையாக நாற்பதாயிரம் கைக்கு வரும். அவ்வளவு பணத்தை நம்பி யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள். அது போன்ற ஆட்கள் நல்ல உயர்தர சென்ட் பாட்டில்கள் வாங்குவார்கள். வாரத்திற்கு இரண்டு செட் விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகளை வாங்குவார்கள். மாதம் ஐந்துமுறை அழகுநிலையம் செல்வார்கள். மிச்சம் உள்ள பணத்தைப் பார்ட்டிகளில் செலவழிப்பர்கள். சிலர் செல்ஃபோன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டில் வரும் புதுப் புது எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். செல்ஃபோனை அடிக்கடி மாற்றுவது ஒருவித மனவியாதி."

"அது ஏன் இந்தப் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தலையில் எல்லாம் பேப்பர் குல்லா வைத்து முகத்தில் கேக்கை அப்பி அலங்கோலம் செய்து பின்னர் படம் எடுக்கிறார்கள்? ஏன் சமோசா கூடத்தான் அங்கு இருக்கிறது? அதை எடுத்து முகத்தில் அப்பிக் கொள்ள வேண்டியது தானே."

"திருமணத்திற்குப் பின்பு இரவு பகலாக வேலை செய்வதைக் குறைத்துக்கொண்டான். அதுவும் வார இறுதி நாட்களில் அலுவலகம் செல்வதில்லை. தேவைப்பட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்தான். என்னதான் இந்த ஐடி நிறுவனங்களில் மாடு மாதிரி வேலை செய்தாலும் அங்கு அரசியல்  செய்யத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே எல்லாச் சலுகைகளும் கிடைக்கும் எனத் தெரிந்து விட்டது. மாடுபோல வேலை செய்தால் யாராவது அமெரிக்கன் 'குட் ஜாப்' என்று பாராட்டி மின்னஞ்சல் அனுப்புவான். பைசாவுக்குப் பிரயோசனம் இருக்காது. அதே நேரம் இரண்டு நாளில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே நாளில் செய்வதில் இன்னோர் ஆபத்தும் உண்டு. இன்னும் அதிகமாக வேலையைத் தலையில் கட்டுவார்கள். எந்த மாடு அதிகமாக பொதி சுமக்கிறதோ அதன் தலையில்தானே இன்னும் அதிகமாகச் சுமையை ஏற்றுவார்கள். கொஞ்சமாக வேலை செய். அதிகமாக அதை வெளிக்காட்டு என்பது அங்கே சர்வைவலுக்கான தந்திரம். அது தெரியாதவர்கள் அதிகமாக வேலைசெய்து பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தார்கள். கண்ணி வெடிகளில் காலை வைத்து எடுக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்தார்கள்."

"நிறுவனங்கள் கொடுக்கும் சொற்பப் பணமும் இன்ஷூரன்ஸ் பணமும் குடும்பத்துக்குச் சென்று சேரும். இது தவிர அவர்கள் வேலைசெய்திருந்த டீம் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஏதாவது தருவார்கள். என்ன இருந்தாலும் ஓர் உயிரின் மதிப்பை எதைக் கொடுத்து நிரப்ப முடியும்?"

"அதிலும் பெண்கள் எல்லாம் கொழுத்த ஆடுகள்போலவே இருந்தார்கள். ஆண் ஆடுகளுக்குத் தலை வழுக்கை விழுந்து தொந்தி கொழுத்திருந்தது. உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் இப்படித் தின்றால் எழுந்துகூட வெளியில் செல்லாமல் வேலை பார்த்தால் ஹார்ட் அட்டாக் வராமல் வேறு என்ன வரும்? இன்னும் சிலர் இருந்தார்கள். அவர்கள் இருக்கையிலிருந்து அரை மணிக்கு ஒருமுறை எழுந்து வெளியில் சென்றுவிட்டு வருவார்கள். சரி. நடந்து உடலுக்கும் மனதுக்கும் உழைப்பு தருகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் நேராக பேன்டரி செல்வார்கள். பேப்பர் குவளைகளில் தேநீர் எடுத்துக்கொண்டு லிப்ட்டில் இறங்கிச் செல்வார்கள். அலுவலகத்தின் வெளியில் சென்று தேநீர் குடித்தபடி சிகரெட் பிடிப்பார்கள். அரை மணி நேரத்துக்கு என்று கணக்கிட்டால்கூட நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் குடிப்பார்கள். அவர்களும் சீக்கிரமாக மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள்."

"முன்பெல்லாம் பொருள் பழசானால் அல்லது பழுதானால் மட்டும் அதைத் தூக்கிப் போட்டு விட்டுப் புதிதாக வேறு பொருள் வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் புதிதாக இருக்கும் பொருளையே தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்குகிறார்கள். ஒன்றை வாங்கி அதை எப்படிப் பயன்படுத்துவது என முழுதாகத் தெரிந்துகொள்வதற்குள் அடுத்த பொருளை வாங்க மனம் பறக்கிறது. இப்போதெல்லாம் பொருட்கள் பழசாவதில்லை. தொழில்நுட்பம் பழசாகிறது. அதனால்தான் புதுசு புதுசாகப் பொருட்களை வாங்குகிறார்கள் எனத் தோன்றியது."

"இந்த ஐடி கம்பெனியில் வேலைபார்த்தால் ட்ரீட் கொடுத்து கொடுத்தே சொத்து அழியும்போல."

"வேலை இருந்தால் செய். இல்லாவிட்டால் வீட்டுக்குப் போ. எட்டு மணிநேரத்தில் முடிக்க வேண்டிய வேலையப் பன்னிரண்டு மணிநேரம் செய்தால் பிரச்சினை உன்னிடம்தான் இருக்கிறது. ஏன் எட்டு மணிநேரத்தில் அதை முடிக்கவில்லை என்று யோசி. எட்டு மணிநேரத்தில் முடிக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசி."

"நாங்க அப்படி இருக்க முடியாது. மாசம் ஐம்பதாயிரம் வீட்டுக்கு லோன் கட்டுறோம். வருஷத்துக்கு ரெண்டு செல்ஃபோன் மாத்தணும். அடிக்கடி பார்ட்டி, ட்ரீட்னு வைக்கணும். பசங்கள இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கவைக்கணும். காருக்கு லோன் கட்டணும். இதுக்கு லட்ச ரூபாய் வந்தாக்கூட எங்களுக்குப் பத்தாது."

"எப்பவும் எல்லாத்துக்கும் தயாராகவே இருக்கணும். எது வேணா நடக்கலாம். ஆறு மாசத்துக்கு தேவையான பணத்தைச் சேர்த்து வச்சுக்கணும். லோன் அதிகமா வாங்காம இருந்தாலே சமாளிச்சுடலாம்."

"சமீப காலமாக மனிதர்களின் பைத்தியக்காரத்தனம் அதிகரித்து வந்ததாக அவளுக்குத் தோன்றியது. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்கிறார்கள். தானே சிரித்துக்கொள்கிறார்கள். செல் ஃபோனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். வாகனங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். காரணம் இல்லாமல் கொலை செய்கிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிக்குவிக்கிறார்கள். கடன்காரனுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருடுகிறார்கள். பொய் சொல்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார்கள். சட்டையைக் கிழித்துக்கொண்டு அலைகிறார்கள்."

"இப்போது எங்கே திரும்பினாலும் கார்பரேட் சாமியார்களின் பேனர்கள் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும் கும்பல் கும்பலாக அவர்களிடம் சென்று யோகா கற்றுக்கொள்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் ஊழியர்களுக்கு அல்ல. அந்தச் சாமியார்களுக்கு. அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. யோகா வகுப்புகளுக்கு மாதம் ஐந்தாயிரம்வரைக்கூடச் சில சாமியார்கள் வாங்குகிறார்கள்."

"இவ்வளவு செலவு செஞ்சு யோகா கத்துக்கறத்துக்குப் பதில் சாயங்காலம் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குப் போனால் என்னவென்று நினைத்தான். அதில் சில புத்திசாலிகள் மாலை ஆறு மணிவரை வேலைசெய்துவிட்டுப் பிறகு அலுவலகத்திலேயே நடத்தப்படும் யோகா வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்களைப் பார்த்தால் கார்த்திக்கிற்கு தன் ஊரில் இரவில் ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் மண்ணாந்தைகள்தான் நினைவுக்கு வரும்."

"எந்தத் தொழிலாளியை நம்பியும் முதலாளி இல்லை. எந்த முதலாளியை நம்பியும் தொழிலாளி இல்லை."

Jul 30, 2018

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

ஜூலை மாத அந்திமழை இதழ் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?' எனும் தலைப்பில் பொறியியல் கல்வியின் இன்றைய நிலைமையைப் பற்றி விவாதித்திருக்கிறது. அந்த கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு. எழுத்துக்கள் சிறியதாக தெரிந்தால், படங்களை தரவிறக்கம் செய்து பெரிதுபடுத்தி படித்துக்கொள்ளலாம்.








உபரி செய்தி:


Jun 10, 2018

உபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?

உபுண்டுவில் இணைய இணைப்பைக் கொடுக்கவும். உபுண்டுவில் இணையம் வேலைசெய்கிறதா என உறுதிசெய்துவிட்டு. முனையத்தை(Terminal) திறக்கவும்.


கீழ்காணும் கட்டளைவரியினை முனையத்தில் இயக்கவும்.

sudo apt-get update; sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk ibus-gtk3


இந்த கட்டளை வரி தமிழ் தட்டச்சுக்கு தேவையான பொதிகளை உபுண்டுவில் நிறுவும். முனையத்தை மூடிவிட்டு.


Logout செய்துவிட்டு மறுபடியும் Login செய்யவும்.


Settings -> Region & Language பிரிவுக்குச் செல்லவும். Input Source என்பதற்கு கீழே உள்ள '+' பொத்தானை அழுத்தவும்.


அதன்பிறகு மூன்று புள்ளிகளின் தோற்றத்துடன் இருக்கும் பொத்தானை அழுத்தவும். 


உள்ளீட்டுப் பெட்டியில் 'tamil' என தட்டச்சு செய்த பிறகு Other என்பதை சொடுக்கவும். அதில் உங்களுக்கு பிடித்தமான தட்டச்சு முறையை தேர்ந்தெடுத்து 'Add' பொத்தானை அழுத்தவும். நான் தமிழ் 99 உள்ளீட்டு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். உதாரணமாக நான் Tamil(tamil99(m17n)) என்பதை தேர்வு செய்து 'Add' பொத்தானை அழுத்தியுள்ளேன். 





Region & Language சாளரத்தை மூடிவிட்டு. Windows+Space பொத்தானை அழுத்தி தமிழ் தட்டச்சு செய்யலாம் அல்லது வலது பக்க மேல் மூலையில் இருக்கும் 'en' என்பதை சொடுக்கி தமிழ் உள்ளீட்டு முறையை தேர்வு செய்துவிட்டும் தமிழ் தட்டச்சு செய்யலாம். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் மேற்கண்ட முறையில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.

Text Editor ஐத் திறந்து தமிழில் தட்டச்சு செய்து மகிழுங்கள்.


May 10, 2018

சாதி இல்லை என்று கூறும் அரசாங்கம் சாதிச்சான்றிதழ் கேட்கலாமா?

வானொலி நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சியிலும் குறிப்பாக  இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்கும் இக்கேள்வி நியாயமாகக் பட்டாலும்,இது அவர்களின் அறியாமை அடையாளமாகும். சாதியில்லை என்று சொல்லிவிடிவதால் சாதி இல்லாமல் போகாது. சாதியை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போன்று,சாதியை சாதியடிப்டைச் சலுகையால் ஒழிப்பது என்பது இம் முயற்சி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எச்சமுதாயம் சாதியின் பெயரால் அடக்கப்பட்டதோ,உரிமை பறிக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்டதோ அச்சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்து உயர்த்த வேண்டுமானால் அச்சாதியின் மூலமாகத்தானே அவர்களை அடையாளங்காண வேண்டும்?

நமது நிலமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான உரத்தை நாம் போடுவதில்லை. ஒவ்வொரு நிலத்தையும் மண் பரிசோதனை செய்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பவே உரம் இடமுடியும். அதேபோல், சாதியால் அடையாளங் கண்டு, சலுகை அளிக்க சாதியைக் கேட்க வேண்டியுள்ளது. இன்றைக்கு எல்லாச் சாதியினரும் ஒரே மாதிரியான சமுதாய நிலையையும் கல்வி நிலையையும் பெற்றிக்கவில்லை.

சில சாதி இவற்றில் உயர்ந்து நிற்கின்றனர். சில சமுதாயத்தாவர் தாழ்ந்து கிடக்கின்றனர். வீழ்ந்து கிடக்கின்றவர்களை உயர்த்த ஒரு ஏற்பாடு,உதவ வேண்டும். அதுவே இடஒதுக்கீடு. உயர் சாதிப் பிள்ளையும, தாழ்ந்த சாதியில் கூலியாளின் பிள்ளையும் ஒன்றாக போட்டியிட முடியுமா? போட்டியிட்டால் உயர் சாதிப் பிள்ளையே வெற்றி பெறும். எனவே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை கைத்தூக்கிவிடும் கருவியாக இடஒதுக்கீடு அமைகிறது. அதைத் தர சாதியை அறிய வேண்டியுள்ளது. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் கேட்கப்படுகின்றது.

தாழ்த்தப்பட்டவர்களிலும் மேல்நிலையில் உள்ளவர்கள் உள்ளார்களே! அவர்களுக்கு  ஏன் சலுகை. அச்சாதியில் உள்ள கீழ்நிலை மக்களுக்குத்தானே இடஒதுக்கீடு வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி. அதற்கு அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படும் சலுகையைச் சரியாகப் பின்பற்றினாலே இக்குறை நீக்கப்படும்.

அதாவது, சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியவர்களுக்குச் சலுகை தர வேண்டும் என்கிறது சட்டம். நாம் சமுதாயத்தை மட்டும்(சாதியை மட்டும்) பார்க்கிறோம். கல்வி நிலையைப் புறக்கணிக்கிறோம். அந்நிலையை மாற்றி, இடஒதுக்கீடு பெறும் சாதியிலே கல்வியில் தாழ்ந்துள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு தந்தால் அச்சாதியில் கல்வியறிவு பெற்ற(பட்டம் பெற்று) பெற்றோரின் பிள்ளைகள் தானே ஒதுக்கப்பட்டுவிடும்.இதன் மூலம், இடஒதுக்கீடு பெறும் சாதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அப்பயன் சென்றடையும். சரியான சமூக நீதியாகவும் நிலைக்கும்.

தட்டச்சு உதவி: இரம்யா கதிர்வேல்
குறிப்பு: மஞ்சை வசந்தனின் தப்புத்தாளங்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது.

May 6, 2018

இடஒதுக்கீடு - தொடரும் விவாதம்


நலங்கிள்ளி எழுதிய 'இடஒதுக்கீடு - தொடரும் விவாதம்' புத்தகத்தை அண்மையில் கிண்டில் கருவியின் மூலமாக படித்து முடித்தேன். அற்புதமான புத்தகம். தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருப்பதற்கு தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69% இட ஒதுக்கீடுதான் காரணம். ஆனால் கொடுமை என்னவென்றால் அந்த இட ஒதுக்கீட்டின் மூலமாகவே சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பை பெற்றவர்கள் அதற்கு எதிராக பேசுவதுதான்.

அந்தவகையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களும், இட ஒதுக்கீட்டைப் பற்றி தெரியாதவர்களும் அதைப்பற்றி கொள்வதற்காகவும் கேள்வி-பதில்(கேள்விகளை கீழே கொடுத்திருக்கிறேன்) வடிவில் அருமையாக நலங்கிள்ளி அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு அச்சுப்பதிப்பாக சாளரம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் மின் பதிப்பாக, கிண்டில் பதிப்பாக இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

சமூகநீதியில் அக்கறை உள்ளவர்களும், இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்ற கேள்விகள்:

1. உயர்கல்விப் பயிலகங்கள் என்பவை யாவை? அங்கே இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளதா?

2. ஆனால் அரசின் இந்த முடிவு உயர் கல்வியை மண்டல்மயப்படுத்துவதாகும் என்று பல ஆங்கில, இந்தி ஊடகங்கள் அப்போதே விமர்சித்தன. இப்போதும் இத்தகைய விமரிசனங்கள் வெவ்வேறு சூழல்களில் எழுகின்றன. மண்டல்மயப்படுத்துவது என்றால் என்ன?

3. இந்த ஊடகங்கள் மண்டலை அன்று வி.பி.சிங் காலத்திலும் எதிர்த்தன, இன்றும் காலத்திலும் எதிர்க்கின்றன, இப்படித் தொடர்ந்து எதிர்ப்பதற்கு காரணம் என்ன?

4. தனியார்த் துறை முதலாளிகள் இந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட வேண்டிய காரணம் என்ன?

5. தில்லியில் மருத்துவ மாணவர்கள் விளக்குமாற்றால் சாலை பெருக்குவது தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பது, வண்டி இழுப்பது, "ஷூ பாலிஷ்" போடுவது என விதவிதமாக ஊடகங்களுக்குப் போஸ் கொடுத்தார்களே ஏன்?

6. அப்படியானால் இடஒதுக்கீடு என்பது முற்பட்டவர்களைப் பிற்பட்டவர்கள் ஆக்குவதா?

7. இட ஒதுக்கீட்டைக் கண்டுபிடித்தது யார்?

8. இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

9. முன்னோர்கள் செய்த தவறுக்கு இப்போதுள்ள முற்பட்ட சாதியினரைப் பழிவாங்குவது நியாயம் தானா?

10. இதற்கு ஒரு முடிவே கிடையாதா? எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்குவது?

11. இந்த உலகமயமாக்கக் காலத்தில் இன்னும் சாதி வேறுபாடு பேணப்படுவதாகச் சொல்வது சரிதானா? பொது இடங்களில் சமத்துவம் காக்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோமே? இட ஒதுக்கீடு இன்னமும் தேவைதானா?

12. இட ஒதுக்கீடின்றி உயர் கல்வி பயின்று சாதித்துக் காட்டிய தலித் மாணவர்கள் இல்லையா?

13. இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை அதிகரித்துக் கொண்டே போகலாமா? இதற்கொரு வரம்பு வேண்டாமா?

14. சட்டத்தின் முனை அனைவரும் சமம் என்னும்போது கல்வி, வேலை வாய்ப்புப் போட்டியிலும் அனைத்துச் சாதியினரையும் சமமாக நடத்த வேண்டாமா?

13. அரசு ஒரு பக்கம் சாதிவேறுபாட்டை ஒழிப்போம் என்கிறது. மறுபுறம் பள்ளிப் பிஞ்சுகளிடமே சாதி கேட்கிறது. இது முரண்பாடில்லையா?

15. அரசு சாதி கேட்பதால் நாட்டில் சாதிப் பிளவுகள் ஏற்பட்டு அமைதி கெடாதா?

16. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பவர்கள் சாதியவாதிகள் அல்லவா?

17. எல்லா மாமரங்களும் ஒன்றே போல் செழித்துக் குலுங்குவதில்லையே, மாமரங்களுக்குள்ளேயே சாதி வேறுபாடுகள் இருக்கும் போது மனிதர்களுக்குள்ள சாதி வேறுபாட்டை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்றெல்லாம் அலட்டிக்கொள்வது ஏன்?

18. பாரப்பனர்களிலும் ஏழைகள் இருக்கிறார்களே? சாதி வகையில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைவிட பொருள் வகையில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தானே சிறந்த சமூநீதியாக இருக்கும்?

19. மண்டல் குழு ஒரு பழைய மக்கள் தொகைக் கணக்கை ஆய்விற் கொண்டது உண்மை தானா?

20. மேல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பட்டியல் சாதியினராகப் பொய்ச் சான்றிதழ் காட்டி இட ஒதுக்கீடு பெறுவது முறை தானா?

21. ஏற்கனவே இட ஒதுக்கீட்டைப் அனுபவித்து முன்னேறிவிட்டவர்களில் அடுத்தடுத்த தலைமுறையினரும் இந்த உரிமையைக் கேட்பது நியாயம் தானா?

22. அரசுத் துறையில் பாட்டாளிகளுக்கு இடம் கேட்பது ஒடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு நாமே ஆள்சேர்த்துக் கொடுத்தது போல் ஆகிவிடாதா?

23. இட ஒதுக்கீட்டுக் கொள்கை வாக்கு வங்கியைக் குறிவைத்து அரசியல்வாதிகள் செய்யும் சதிதானே?

24. இட ஒதுக்கீட்டுக்குப் பாடுபடுவதாகச் சொல்லி கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களது உதவியாளர்களையும் மருத்துவர்களையும் பட்டயக் கணக்கர்களையும் பார்ப்பனர்களாகப் பார்த்துவைத்துக் கொள்வது இரட்டை வேடமில்லையா?

25. உயர் கல்வி இட ஒதுக்கீட்டுச் சிக்கலில் தில்லி அரசு அவசர அவசரமாக முடிவெடுத்து விட்டதா?

26. மார்க்சிஸ்டுக் கட்சியும் சங் பரிவாரமும் சொல்வது போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுக்கருத்தை வளர்த்தெடுத்து இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர முடியாதா?

27. இட ஒதுக்கீடு சமூகச்சிக்கல்கள் யாவற்றுக்கும் தீர்வாகுமா?

28. கல்வி, வேலை, பதவி உயர்வு என்று அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தேவைதானா?

29. கல்வி, வேலை வாய்ப்பு என இட ஒதுக்கீடு வழங்கிக் கொண்டே செல்வது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடாதா?

30. ஒடுக்குண்டோருக்குத் தொடக்க நிலையிலிருந்து தரமான சமச்சீர்கல்வி வழங்காமல் அவர்களை உயர் கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுவரப்போவதாக அரசியல்வாதிகள் சொல்வது ஏமாற்றல்லவா?

31. பெரும்பாலான தலித் மாணவர்கள் தொடக்கக்கல்வியைக்கூட முடிக்க இயலாமல் படிப்பைப் பாதியில் கைவிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்விப் பயிலகங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது?

32. உலகில் எங்கே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளது? உலகில் எங்குமில்லாத அதிசயமாக இங்கே மட்டும் இது தேவை தானா?

33. உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு என்றால் தகுதி திறமை என்னாவது?

34. மருத்துவத் துறையிலும் இடஒதுக்கீடு என்பது உயிரோடு விளையாடுவதாகாதா?

35. இட ஒதுக்கீடு மருத்துவம் போன்ற சேவையில் மனித நேயத்தை வளர்க்குமா? எப்படி?

36. சிறப்பான சில துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தகுதி திறமை வாதத்தை மெய்ப்பிக்கவில்லையா?

37. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்றால் 30 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்கள் எல்லாம் இந்திய மருத்துவப் பயிலங்களில் நுழைந்து விடமாட்டார்களா?

38. சமூகநீதி திறமை இரண்டும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வழியில்லையா?

39. நடுவணரசின் உயர் கல்விப் பயிலங்களில் நுழைவதற்கு இட ஒதுக்கீடு ஒரு குறுக்கு வழியா?

40. ஐஐடி மாதிரி பெரிய படிப்பு எல்லாம் படிப்பதற்கு இட ஒதுக்கீடு எதற்கு? நல்லாப் படிச்சு வரவேண்டியது தானே என்று கேட்கிறார்களே, இவர்கள் எப்படிக் கல்விக்கூடங்களில் நுழைந்தார்கள் தெரியுமா?

41. இதெல்லாம் பழைய கதை தானே? இன்று அவர்கள் நேர்வழியில் படித்துத்தானே உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பிடிக்கிறார்கள்?

42. இந்தப் பயிலகங்களில் ஏற்கனவே சட்டப்படி இட ஒதுக்கீடு உரிமை பெற்றுள்ள தலித்துகளின் நிலை என்ன?

43. ஏன்? பிற்பட்ட, தலித் மக்களுக்குக்காகக் குரல் கொடுக்க அங்கு அவர்கள் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் யாரும் இல்லையா?

44. படித்தவர்கள் இட ஒதுக்கீட்டினால்தான் வெளிநாடு சென்றுவிடுகிறார்களா?

45. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு தருவது உலகளவில் இந்தியாவுக்குள்ள மதிப்பைப் பாதிக்காதா?

46. நடுவணரசின் உயர் கல்விப் பயிலகங்களைக் கல்விக் கோயில்களாக மதித்துப் பாதுகாக்க வேண்டாமா?

47. நடுவணரசின் உயர் கல்விப் பயிலங்களில் சேர்ந்து படிப்பதற்குரிய ஆங்கிலப் புலமையைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களால் பெற முடியுமா?

48. பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் தரமான ஆங்கிலவழிக் கல்வி புகட்டச்சொல்லிப் போராடக்கூடாதா? தமிழில்தான் படிக்க வேண்டும் என்பது தாய்மொழிப் பற்றுக்காகவா?

49. பார்ப்பனர்களின் போராட்டம் தவறானது என்றால் அவர்கள் என்ன செய்வது சரியாக இருக்கும்?

50. சமூகநீதிக்கு எதிரான பாரப்பனிய வலைப்பின்னலை அறுத்து தமிழர்கள் வெல்வது எப்படி?

May 1, 2018

கேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?


உபுண்டு 18.04 LTS பதிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் நிகழ் அமர்வில்(Live Session) ஏதோ பிழை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதால் வெளியீடு சற்று தாமதமானது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்ங்கிற மாதிரி உபுண்டு 18.04 லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்!

இந்த முறை நான் GNOME உடன் கூடிய உபுண்டுவை(Ubuntu) நிறுவவில்லை. KDE உடன் கூடிய கேஉபுண்டுவை(Kubuntu) நிறுவியிருக்கிறேன். அருமையாக அற்புதமாக வேகமாகவும் இருக்கிறது. எனக்கு GNOME வைவிட KDE வேகமாக இருப்பதாக தெரிகிறது.

கேஉபுண்டுவில் தமிழ் தட்டச்சு வசதியை கொண்டுவருவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

கீழ்காணும் கட்டளை வரியைக் கொண்டு ibus-க்கு தேவையான பொதிகளை(packages) நிறுவிக்கொள்ளவும்.

sudo apt-get -y install m17n-db m17n-contrib ibus-m17n ibus-qt4 ibus-gtk3 ibus-gtk libreoffice-gtk3


அதன்பிறகு Dolphin File Manager -ஐத் திறந்து Ctrl+H பொத்தான்களை அழுத்தி Home அடைவிற்குள் இருக்கும் .bashrc கோப்பினைத் திறந்து கீழ்காணும் வரிகளை சேர்த்து கோப்பினை சேமித்துவிடவும்.

# For Tamil99 typing
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus 
export OOO_FORCE_DESKTOP=gnome


கணினியை மறுதொடக்கம்(restart) செய்யவும்.



IBus Preferences ஐத் திறந்து Input Method Tab க்குச் செல்லுங்கள் அங்கு Add பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான தமிழ் உள்ளீட்டு முறைகளை தேர்வு செய்து Add பொத்தானை அழுத்துங்கள். நான் Tamil99 முறையை தேர்வு செய்துள்ளேன். நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்துகொள்ளலாம். General Tab க்குச் சென்று Shortcut Key ஐ அமைத்துக்கொள்ளுங்கள். இந்த Shortcut Key அழுத்தும் போது தமிழ் தட்டச்சு வேலை செய்யும்.



Apr 17, 2018

சமையல் கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?



‘சமையலறையில் இந்தியப் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள்’. இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை! அதை யாராலும் மறுக்கவும் முடியாது. சமையலுக்குப் பயன்படும் அந்த எரிபொருள், சில நேரங்களில் பலரின் உயிரையும் பலி வாங்கிவிடுகிறது.   

சமீபத்தில் சென்னையில் நடந்தது அந்தச் சம்பவம். எரிவாயு சிலிண்டர் வெடித்த நிகழ்வில் தண்டையார்பேட்டையில் வசித்து வந்த கணவன், மனைவி இருவருமே இறந்து போனார்கள்.

இது நடந்து இரண்டே நாட்கள் கழித்து, ஆந்திராவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் அதே போன்ற விபத்து… எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரரும் அவர் மனைவியும் இறந்து போனார்கள். இப்படித் தொடர்கிற கேஸ் சிலிண்டர் விபத்துகள் நம்மைக் கலங்க வைக்கின்றன.

சமையலுக்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு என்ன காரணம், அதைத் தவிர்க்க முடியுமா, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இவையெல்லாம் சமையலறையில் புழங்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். அவற்றைப் பற்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் (எல்பிஜி) சந்திரனிடம் பேசினோம். பொறுமையாக, தெளிவாக நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார் சந்திரன்…



‘‘தமிழகம் முழுக்க இண்டேன் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒருகோடியே 7 லட்சம்பேர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புதிதாக கனெக்‌ஷன் பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் வடசென்னையில் நடந்த விபத்து மட்டுமல்ல… தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சியமே!பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை. கேஸ் சிலிண்டருக்கான புது கனெக்‌ஷனைப் பெறும்போதே அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்…எந்த பிரச்னையும் வராது’’ என்கிறார் சந்திரன்.

சிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?

‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன்   (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி  ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.

சிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும். எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.

கேஸ் லீக் ஆனால் செய்ய வேண்டியது என்ன?

‘‘உடனடியாக அடுப்பையும் ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட்டு ஜன்னல்  மற்றும் கதவுகளை திறந்து வைக்கவேண்டும். இதனால் வீட்டின் உள்ளே பரவியிருக்கும் கேஸ் வெளியே போய்விடும். ரெகுலேட்டரை சிலிண்டரில் இருந்து டிஸ்கனெக்ட் செய்து (பிரித்து) விடவேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேஃப்டி கேப்பால் லாக் செய்து விடவேண்டும்.

லீக்கேஜ் ஆன உடனே சம்பந்தப்பட்ட ஏரியா சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் தெரிவித்து விடுவது நல்லது. ஒவ்வொரு பத்தாயிரம் வாடிக்கையாளருக்கும் ஒருவர் என்ற கணக்கில் இண்டேன் கேஸ் நிறுவனத்தின் சார்பில் மெக்கானிக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து பிரச்னையை சரிசெய்து கொடுப்பார்கள். சிலிண்டரில் பிரச்னை என்றால் அதை மாற்றித் தந்துவிடுவார்கள். அதன்பிறகு பயன்படுத்தலாம். இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே. இது தவிர மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை உள்ள நேரங்களில் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால்1800425247247 என்ற டோல்ப்ரீஎண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சென்டரில் புகாரை பதிவு செய்த உடனே, அந்தத் தகவல் உங்கள் ஏரியாவில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் மெக்கானிக், சேல்ஸ் ஆபிஸர், ஏரியா மேனேஜர் ஆகியோருக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர்கள் உடனடியாக வந்து சரிசெய்து கொடுப்பார்கள்’’.

சிலிண்டர் விபத்தைத் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்?

‘‘கேஸ் சிலிண்டருக்கான புது இணைப்பைப் பெறும் போது, உங்கள் பகுதி டிஸ்ட்ரிப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கை வரவழைத்து அவர் மூலமாக சிலிண்டரை இணைப்பது முக்கியம். ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால் ‘டெமோ’ செய்து காட்டும்படி கேட்கவேண்டும். முறையாக எப்படி இணைப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் டெலிவரி ஆகும் போது, அதை அடுப்புடன் இணைத்து எரிய வைத்துப் பார்க்க வேண்டும். பிரச்னை ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சிலிண்டர் இணைப்புப் பெறும்போது, எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் சொல்லி, புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படி மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால், நீங்களாக சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களை வாங்கி எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.  இந்த தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களின் வழியாகத்தான் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகம்நடக்கின்றன. 2 அடுக்கு வயர்களால் ஆன திக்கான சுரக்‌ஷா டியூப்கள் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஒரு மீட்டர், 1.2 மீட்டர் என இரு அளவுகளில் கிடைக்கிறது. 5 வருட வாரண்டியுடனும் தருகிறார்கள். எலி கடித்தாலும் டேமேஜ் ஆகாமல் உறுதியாக இருக்கும்… ஆபத்துகளை தவிர்க்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது. ஒரு வீட்டில் 2 சிலிண்டர்களுக்கு மேல் வைத்திருப்பதும் ஆபத்தானதே. நல்ல காற்றோட்டமான இடத்தில், சிலிண்டர்களை வைப்பது நல்லது.

‘துருப்பிடித்த, மட்டமான சிலிண்டர்களை எங்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என நிறையபேர் புகார் சொல்கிறார்கள். ஒரு சிலிண்டரின் ஆயுட்காலம்10 வருடங்கள். 10 வருடங்களில் சிலிண்டர் எங்கெங்கேயோ பயணம் செய்திருக்கும். எனவே, சிலிண்டரை மேற்பார்வையாக பார்த்து அதன் தரத்தை தீர்மானிக்க முடியாது. சிலிண்டரின் மேற்பகுதியில் அது தயாரான தேதி, அதன் ஆயுள் முடிவுறும் தேதி உட்பட எல்லாமே இருக்கும். அதன் ஆயுட்காலத்தையும் தாண்டி புழக்கத்தில் இருப்பது தெரிந்தால் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். கேஸ் சிலிண்டர் தொடர்பான எல்லா புகார்களுக்கும்18002333555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் சிலிண்டரை வாங்குவதில் சிரமமும் தேவையில்லாத குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்காகவே மாலை 6 மணிக்கு மேல் சிலிண்டர் விநியோகம் செய்யும் வசதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி செய்ய வரும்போது அதன் எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். சிலிண்டரின் எடை 15 கிலோ, உள்ளிருக்கும் கேஸ் எடை 14.2  கிலோ இரண்டும் சேர்த்து 29.5 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விவரம் சிலிண்டரிலேயே குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ 100 கிராம் இருக்கலாம். அதற்கும் குறைவாக இருந்தால் சிலிண்டரை திருப்பி எடுத்துப் போக சொல்லிவிட்டு, வாடிக்கையாளர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

ஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான அடுப்பைப யன்படுத்தவேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. பர்னரை சுத்தம் செய்கிறேன் என்று அடுப்பைக் கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்யத் தேவையில்லை. அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும்.

2 வருடங்களுக்கு ஒரு முறை ஏரியா கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து அடுப்பு, கனெக்‌ஷன் ஆகியவற்றை சோதித்துக் கொள்வது அவசியம். இதற்கு கட்டணமாக ரூ.70 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.

அடுப்பருகில் நின்று சமைக்கும்போது தீ பரவாமல் இருக்க Fire Resitant Apron என்றொரு கவர் இருக்கிறது. தீப்பிடித்தாலும் எரியாத தன்மை கொண்ட இதை சமைக்கும்போது பயன்படுத்தலாம். இது இண்டேன் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமும் கிடைக்கிறது.


Feb 22, 2018

வாழ்க்கை இணையேற்பு விழா

எனது வாழ்க்கை இணையேற்பு விழாவினை 07.02.2018 புதன் அன்று எங்கள் குடும்பத் தலைவர் தமிழர் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.



Jan 7, 2018

2ஜி என்னும் சமூகநீதிப் போர்!

எழுத்தாளர் டான் அசோக் இம்மாத(ஜனவரி, 2018) 'உயிர்மை' இதழில் எழுதிய '2ஜி என்னும் சமூகநீதிப் போர்!' கட்டுரை. சும்மா தெரிக்க விட்டிருக்காப்புல. நன்றி டான் அசோக்.






Jan 1, 2018

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் பொன்மாலைப் பொழுது என்கிற நிகழ்வு நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற, முக்கியமான ஆளுமைகளை பல்வேறு துறைகளிலிருந்து அழைத்துவந்து உரையாற்ற வைக்கின்றனர். வாரம் தவறாமல் அந்த காணொளிகளை யூடியூப்பில் பார்ப்பேன். ஒரு நாள் 'தி இந்து-தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அற்புதமா பேச்சு. அந்த பேச்சு முழுவதும் திராவிடக்கட்சிகள் தமிழகத்திற்கு செய்த திட்டங்களையெல்லாம் விளக்கி, திராவிடக்கட்சிகளுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார். அற்புதமான பேச்சு. வாய்ப்பிருந்தால் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். இணைப்பு இங்கே.

அந்த உரையில் தி இந்து தமிழ் நாளிதழின் சார்பாக தமிழகமே பெருமைப்படும் அளவிற்கான ஒரு ஆய்வு பணியை செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அது புத்தகமாக வெளிவரும் என்று கூறியிருந்தார். அப்போது அது என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரித்து விட்டது. கொஞ்ச நாளில் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்' புத்தகம் பற்றிய அறிவிப்பு தி இந்துவில் வெளிவந்தது. மகிழ்ந்து போனேன். உண்மையிலேயே படித்து பாதுகாக்கப்பட்ட வேண்டிய ஆவணம்தான்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிட கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சட்டமன்ற பணியின் அறுபதாண்டு ஆகியவைகளையொட்டி இந்த புத்தகம் வெளியிட்டப்பட்டிருக்கிறது.

திராவிட இயக்கங்கள் என்ன செய்தது தமிழ்நாட்டிற்கு? திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன என திராவிடத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கும், அவதூறுக்கும் சரியான பதிலடியை கொடுக்கும் விதமாக பல்வேறு அறிஞர்கள், பல மாநிலங்களின் அரசியல் ஆளுமைகள் என அனைவரிடமிருந்தும் கருத்துக்களை சேகரித்து மிகப்பெரிய ஆவணப்பெட்டகமாக கடுமையான உழைப்போடு இந்த புத்தகத்தை தி இந்து தமிழ் குழு உருவாக்கியிருக்கிறது. இந்த புத்தகத்தை உருவாக்கிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

வைரஸ் காய்ச்சல் வந்து அலுவலகத்தில் 10 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊரில் தங்கியிருந்த நேரம். நண்பர் பிரசன்னா அழைத்து கதிர் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' புத்தகம் வாங்கி விட்டேன் என்று கூறினார். எழும்பூர் இரயில் நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்பச் சென்றுவிட்டு, அப்படியே பெரியார் திடலுக்கு போய்விட்டு திரும்பும் வழியில் ஒரு பெட்டிக்கடையில் வாங்கியிருக்கிறார்.

எனக்கு மேலும் ஆர்வம் அதிகரித்தது. அலுவலகத்திற்கு புத்தகத்தை எடுத்துவரச் சொல்லி வாங்கி பார்த்தேன். பிறகு மெரினா புக்ஸ் இணையதளத்தில் 4-புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒரு புத்தகத்தை நண்பர் ஜெகன் எடுத்துக்கொண்டார். இன்னொரு புத்தகத்தை தன்னுடைய உறவினருக்கு கொடுப்பதற்காக பிரசன்னா வாங்கி கொண்டார். எங்கள் ஊரில் இருக்கும் அண்ணன் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டேன். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் அவர். இன்னொரு புத்தகம் எனக்கு.

புத்தகம் வெளிவந்த பிறகு சில முக்கியமான கட்டுரைகளை தி இந்துவில் நடுப்பக்கத்தில் வெளியிட்டு வந்தார்கள். அதில் சண்முகநாதனின் பேட்டி பலத்த வரவேற்பை பெற்றது.

புத்தகத்தின் விலை ரூ.200 ஆனால் இருக்கும் செய்திகளோ விலைமதிப்பில்லாதது. புத்தகத்தின் எந்த பக்கத்திலும் சொல்லப்பட்ட கருத்துக்களே திரும்பவும் இடம்பெறாமல், அனைத்தும் புதிய புதிய தகவல்களாக இடம் பெற்றிருப்பது புத்தகத்தின் சிறப்பு.

தெற்கிலிருந்து ஒரு சூரியன்! - ஃபர்ஸ்ட் லுக்கை திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டார். தொடக்கமே அதிரடியாக இருந்தது. திராவிடத்தின் ஊற்றுக்கண்ணே பெரியால் திடல்தானே!


திமுக தோழர்கள், திராவிட இயக்க ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள் என அனைவரும் வாங்கி, படித்து, பாதுகாக்க வேண்டிய அரிய கருவூலம் இந்நூல் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை, இதனை பாரம்பரியம் மிக்க 'தி இந்து குழுமம்' வெளியிட்டிருப்பது பெருமைக்குரியது.  என்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.



  1. கே.அசோகன், ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  2. தே.ஆசைத்தம்பி, பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஒருங்கிணைப்பாளர், 'தி இந்து' தமிழ்
  3. வ.ரங்காசாரி, பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஆலோசகர், 'தி இந்து' தமிழ்
  4. ச.சிவசுப்பிரமணியன், பத்திரிக்கையாளர், தலைமை உதவி ஆசிரியர், 'தி இந்து' தமிழ்
  5. சமஸ், பத்திரிக்கையாளர், நடுப்பக்க ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  6. கோபாலகிருஷ்ண காந்தி, ராஜதந்திரி, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர், காந்தியின் பேரன்
  7. சுப.வீரபாண்டியன், பெரியாரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர், தமிழ்ப் பேராசிரியர்
  8. விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
  9. கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், எழுத்தாளர்
  10. தேவ கௌடா, கர்நாடக முதல்வர், முன்னாள் பிரதமர்
  11. ஆர்.விஜயசங்கர், பத்திரிக்கையாளர், ஆசிரியர், ஃபிரன்ட்லைன்
  12. அமர்த்தியா சென், பொருளியல் அறிஞர், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்
  13. ழீன் தெரெசே, பொருளியல் அறிஞர்
  14. டேவிட் ஷூல்மன், இஸ்ரேலிய அறிஞர், சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர்
  15. பிரேர்ணா சிங், ஆய்வறிஞர், ப்ரௌன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
  16. முகமது யூசுஃப் தாரிகாமி, சமூகவியல் அறிஞர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
  17. யோகேந்திர யாதவ், சமூவியல் அறிஞர், ஆம்ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்
  18. அமன்தீப் சிங் சந்து, பஞ்சாபைச் சேர்ந்த, பத்திரிக்கையாளர், எழுத்தாளர்
  19. பிரதீப் பாஞ்சுபாம், மணிப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர், 'இம்பால் ஃப்ரீ ப்ரெஸ்' நாளிதழின் ஆசிரியர்
  20. கர்க சட்டர்ஜி, வங்கத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர், இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்
  21. வைபவ் ஆப்னாவே, ஆய்வறிஞர், மாராத்தி ஆவணப்பட இயக்குநர்
  22. பால் சக்கரியா, மலையாள எழுத்தாளர், சமூவியல் அறிஞர்
  23. சித்தலிங்கையா, கன்னடக் கவிஞர், சமூவியல் அறிஞர்
  24. கல்பனா கண்ணபிரான், வரலாற்றறிஞர், இயக்குநர், சிஎஸ்டி, ஹைதராபாத்
  25. கே.கே.மகேஷ், பத்திரிக்கையாளர், சிறப்புச் செய்தியாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  26. க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்
  27. கி.வீரமணி, திராவிடர் கழக தலைவர்
  28. கலி.பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம்
  29. கே.சந்துரு, நீதித்துறை வல்லுநர், மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்
  30. ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வறிஞர், எம்ஜடிஎஸ், சென்னை
  31. வெ.சந்திமோகன், பத்திரிக்கையாளர், முதுநிலை உதவி ஆசிரியர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  32. சுபகுணராஜன், வரலாற்று ஆய்வாளர், முன்னாள் கலால் துறை அதிகாரி
  33. ஓவியா, பெண்ணியச் செயல்பாட்டாளர், எழுத்தாளர்
  34. சல்மா, கவிஞர், முன்னாள் பேரூராட்சித் தலைவர், சிறந்த நிர்வாகிக்கான விருது வென்றவர்
  35. தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
  36. எஸ்.ராஜன், வழக்கறிஞர், ஊராட்சி மன்றத் தலைவர்
  37. கோம்பை அன்வர், வரலாற்றாய்வாளர், ஆவணப்பட இயக்குநர்
  38. ராஜன் குறை, சமூக ஆய்வாளர், டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்
  39. தொ.பரமசிவன், ஆய்வாளர்
  40. அனந்த கிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
  41. வி.ஆர்.முரளிதரன், சென்னை ஐ.ஐ.டி, பொருளாதார துறைப் பேராசிரியர்
  42. ஆர்.விரப்பன், பொறியியல் நிபுணர்
  43. எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
  44. நாகநாதன், முன்னாள் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்
  45. இரா.கண்ணப்பன், ஐ.நா சபை ஈராக் பாகுரா அலுவலகத் தலைவர்
  46. மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர், செயல் தலைவர் தி.மு.க
  47. கவிஞர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர், கலைஞரின் மகள் 
  48. சண்முகநாதன், கலைஞரின் செயலாளர்
  49. யோகா, புகைப்பட கலைஞர்
  50. கரு.முத்து, பத்திரிக்கையாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  51. சிற்பி செல்வநாதன், சிற்பி கணபதி ஸ்தபதியின் சகோதரர் மகன்
  52. இமையம், எழுத்தாளர்
  53. மேனா உலகநாதன், பத்திரிக்கையாளர்
  54. ஆர்.நல்லக்கண்ணு, மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர்
  55. காதர் மொகதீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
  56. செல்வ புவியரசன், பத்திரிக்கையாளர், 'தி இந்து' தமிழ் நாளிதழ்
  57. துரைமுருகன், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்
  58. பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தின், திமுக செயலாளர்
  59. ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பத்திரிக்கையாளர், 'தி இந்து'
  60. பேராசிரியர் க.அன்பழகன், பொதுச்செயலாளர், திமுக
  61. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  62. ஹண்டே, அதிமுக
  63. பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
  64. கே.சுப்ராயன், இந்திய கம்யூனிஸ்ட்
  65. பாலபாரதி, மார்க்சிஸ்ட்
  66. வேலாயுதம், பாஜக
  67. ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்
  68. நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ்
  69. சீனிவாசன், இந்தியா சிமெண்ட்
  70. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
  71. கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்
  72. எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் கர்நாடக முதல்வர்
  73. சேகர், விவசாயி
  74. என்.ராம், மூத்த பத்திரிக்கையாளர், 'தி இந்து' பதிப்பகக் குழுமத் தலைவர்
  75. டி.ஜே.எஸ்.ஜார்ஜ், சமூகவியல் அறிஞர், மூத்த பத்திரிக்கையாளர், தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்
  76. சுகுமாரன், கவிஞர், மூத்த பத்திரிக்கையாளர், பொறுப்பாசிரியர், காலச்சுவடு
  77. வாஸந்தி, மூத்த பத்திரிக்கையாளர்
  78. நக்கீரன் கோபால்
  79. முரசொலி செல்வம்
  80. வைரமுத்து, கவிஞர், பாடலாசிரியர்
  81. கலாப்ரியா, மூத்த கவிஞர், இலக்கிய விமர்சகர்
  82. எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வரலாற்றறிஞர்
  83. ராதிகா, நடிகை

சினிமா துறையிலிருந்து.....
  1. சிவாஜி கணேசன்,
  2. கவிஞர் கண்ணதாசன்
  3. எம்.எஸ்.சுவாமிநாதன்
  4. பாரதிராஜா
  5. கமல்ஹாசன்
  6. ரஜினிகாந்த்
  7. மணி ரத்னம்
  8. ஏ.ஆர்.ரஹ்மான்

பொதுமக்கள் சார்பாக.....
  1. கொள்கை பிடிப்பு குஞ்சலம், புயந்துரை, நாகை
  2. மாசிலாமணி, செண்பகராமன்புதூர், நாகர்கோவில்
  3. கமலம், கீழப்பழுவூர், அரியலூர்
  4. டான் அசோக், மதுரை
  5. மதுரைவீரன், தஞ்சாவூர்
  6. சாம்ராஜ, கோணாங்கிநாயக்கன அள்ளி, தருமபூரி
  7. செல்வராஜ், மேட்டூர், தென்காசி
  8. மு.அப்துல்கலாம், மதுரை
  9. இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்


என மிகப்பெரிய ஆளுமைகளிலிருந்து, சாதரண பொதுமக்கள் வரை அனைவரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றியும், திராவிடர் இயக்கத்தின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துக்கூறியிருக்கின்றனர். பேட்டி, கட்டுரை, அனுபவ பகிர்வு ஒரு கலவையாக, படிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல் தமிழகத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இணையம் மூலமாக அரசியலையும், வரலாற்றையும் தெரிந்து கொள்ள முற்படும் இன்றைய இளைஞர் அனைவரும் படித்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.

கலைஞரின் பேட்டி, வணக்கம் தலைவர் இல்லம், ஆறு தருணங்கள், அறிவாலாயத்தின் கதை, மத்தியில் கூட்டாச்ச மாநிலத்தில் சுயாட்சி, கருணாதிதியின் கட்டுமானங்கள், கலைஞர் எழுதியி அண்ணா இதய மன்னா என்று தனியாக பல சிறப்பு கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் கலைஞரைப் போல வரலாறு கொண்ட ஒரு அரசியல் தலைவர் இருக்க வாய்ப்பில்லை என்பது இந்த புத்தகத்தைப் படித்த முடித்த பின்பு தெரிந்து கொண்டேன். என்ன உழைப்பு! உழைப்பு என்றால் கலைஞர்தான். கலைஞர் அடிக்கடி சொல்வாராம் ஒரு நாள் இரண்டு நாளுக்குச் சமம் என்று. நானெல்லாம் சனி, ஞாயிறு விடுமுறையை வெட்டியாகவே வீணடித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் எளிமையான அரசியல் தலைவர் என்றால் அது காமராஜர்தான் என்பது பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்று. ஆனால் தமிழகத்தில் எளிமையான தலைவரென்றால் அது அறிஞர் அண்ணாதான் என்று சமஸ் அந்த காணொளியில் கூறியிருந்தார். உண்மையும் அதுதான். சில புதிய புரட்சியாளர்கள் காமராஜரை தூக்கிப்பிடிப்பது கூட அண்ணா, கலைஞரை இருட்டடிப்பு செய்யவே. இந்த புத்தகம் அந்த இருட்டடிப்பில் சூரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். 2017 -ஆம் ஆண்டு நான் வாசித்த புத்தகங்களில் சிறந்த புத்தகமாகவும் எனக்கு பிடித்த புத்தகமாகவும் இதை கருதுகிறேன். இந்த புத்தகத்தில் நான் அடிக்கோடிட்டு வைத்துள்ள செய்திகளை தனியாக தொகுத்து ஒரு பதிவு செய்யலாம் என திட்டம் வைத்திருக்கிறேன். திராவிடர் இயக்க ஆதரவாளனாக நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகள் அனைத்திற்கும் வலுவான செய்திகளுடனும், ஆதாரத்துடனும் இதில் பதில் இருக்கிறது. 

வாழ்க திராவிடம்!

புத்தகம் வாங்க

தமிழ் திசை,
கஸ்தூரி பில்டிங்,
859 அண்ணா சாலை, சென்னை-2
விலை : ரூ.200

பிற்சேர்க்கை:

தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் 5 படிகள் வாங்கி அக்கா, தங்கை, அத்தை மகள், மச்சான் எல்லாருக்கும் அன்பளிப்பாகத் தந்தேன். ஏற்கனவே இதைப் படித்து விட்டதாகச் சொன்ன அப்பா, இன்னொரு படியை யாருக்காவது கொடுக்கலாம் என்று எடுத்துச் சென்றார். புத்தகம் பரிசு தருவதே அரிது. அதிலும் கலைஞரைப் பற்றிய புத்தகமா, உனக்கு என்ன ஆச்சு, அரசியலில் குதித்து விட்டாயா என்று புருவம் உயர்த்தினார்கள்.

"உங்களுக்குத் திமுக, கலைஞர் மேல் ஒரு அபிமானமும் இல்லையென்றாலும் தமிழக வரலாற்றை அறிந்து கொள்ளவாவது படியுங்கள். இல்லை, உங்கள் வரவேற்பறையில் சும்மாகவேனும் வைத்திருங்கள்" என்று கூறினேன்.

வேறு வழியில்லை. வீட்டில் இருந்து அரசியல் கற்பிக்க வேண்டியது தான். இல்லாவிட்டால், வாட்சாப்பின் மூலம் அரசியல் கற்பவர்கள் திமுக மோசம் என்று சொல்லி இன்னும் மோசமான கட்சியைப் பொறுப்பில் அமர்த்துவார்கள். இவர்களோடு சேர்ந்து நாமும் செத்து விளையாட வேண்டி இருக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே!

Thanks: https://www.facebook.com/ravidreams