Showing posts with label gmail. Show all posts
Showing posts with label gmail. Show all posts

Dec 16, 2018

ஜிமெயில் மின்னஞ்சல் அறிவிப்புகளை செயல்படுத்துவது எப்படி?

தகவல் தொழில்நுட்பம் மட்டும்மல்லாது அனைத்துத்துறை வேலைகளிலும் மின்னஞ்சல் என்பது ஒரு முக்கியமான தகவல் தொடர்பு கருவி. சில மின்னஞ்சல்களுக்கு ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். நாம் ஏதாவது ஆழ்ந்த வேலைகளில் மூழ்கியிருக்கும் போது நமக்கு வந்திருக்கும் முக்கியமான மின்னஞ்சல்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடும்.

அந்த மாதிரியான சூழலில் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை அறிவிப்புகளாக கூறினால் நன்றாக இருக்குமல்லவா. ஜிமெயில் இந்த வசதியினை கொண்டிருக்கிறது.

இந்த வசதியினை செயல்படுத்த, உங்களுடைய ஜிமெயில் கணக்கின் அமைப்புக்குச்(settings) சென்று General என்பதைச் சொடுக்கி அதில் Desktop Notifications எனும் பிரிவில் உள்ள New mail notifications on என்பதைத் தேர்ந்தெடுத்து கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்தவும்.




இனிமேல் உங்களுக்கு புதிய மின்னஞ்சல் வந்தால் அது அறிவிப்பாக காட்டப்படும். நான் கேஉபுண்டு(Kubuntu) 18.04.1 LTS பயன்படுத்துகிறேன். இந்த வசதி நன்றாக வேலை செய்கிறது.

May 8, 2013

என்னுடைய Gmail Account எப்பொழுது உருவாக்கப்பட்டது?

இன்று மாலை 6.00 மணியளவில் தோழர் மயூரேசனினுடைய என்னருமை காதலி கணினி கட்டுரையினை படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் 

அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது.
என்று எழுதியிருந்தார்.  உடனே எனக்கு ஒரு சிந்தனை வந்தது, நாம எப்பொழுது நம்மோட Gmail கணக்கை ஆரம்பித்து மின்னஞ்சலை பயன்படுத்த தொடங்கியிருபோம்? தெரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே என நினைத்தேன்.

உடனே கூகுளில் தேடினேன் அதில் ஒரு வழி மட்டும் எனக்கு புரியும்படி இருந்தது.

அதன் படி செய்துபார்த்ததில் கிடைத்த விடை.

என்னுடைய ஜிமெயில் கணக்கு துவங்கியது 18/02/2010 அன்றைக்கு.

நீங்களும் செய்து பார்க்கலாம் வழிமுறை கீழே:


உங்கள் Gmail Account ற்குள் சென்று Settings -> Forwarding and POP/IMAP -> POP Download செல்லவும் அதில்,

1.Status: POP is enabled for all mail that has arrived since XX/XX/XXXX என நாம் கணக்கு துவங்கிய தேதி காண்பிக்கப்படும்.

இது சரியான வழியாஎன்று எனக்குத் தெரியவில்லை. வேறு ஏதாவது சரியான வழியிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் அனைவரும் தெரிந்து கொள்வோம்.