Apr 2, 2021
Feb 27, 2021
Nov 5, 2020
KDE Plasma 5.20 - Manjaro Linux
Oct 3, 2020
Samsung G3815 மொபைலும் ஜியோ சிம் கார்டும்
Aug 24, 2020
முழு விடுதலைக்கான வழி - டாக்டர் அம்பேத்கர்
Aug 22, 2020
DELL மடிக்கணினியும் உபுண்டு லினக்ஸ் நிறுவுதலும்
என்னுடைய நண்பன் சிலம்பரசன் Aeronautical Engineering படித்துவிட்டு விமானம் தொடர்பான பணியில் பெங்களூருவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். கொரோனா என்பதால் கிராமத்திற்கு வந்து வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருக்கிறான்(Work From Home). அவனுடைய பணிக்கு தேவையான ஒரு மென்பொருள் லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளதால் அதை எப்படி நிறுவலாம் என என்னை தொடர்புகொண்டான். அந்த மென்பொருளுக்கு 8GB RAM உள்ள மடிக்கணினி வேண்டும் என்பதால் அதை இணையத்தில் வாங்கி 4GBயை 8GBயாக மாற்றி விட்டான். அவனுடைய மடிக்கணினியில் விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே இருந்தது.
இப்போது இரண்டு வழிகள் உள்ளன. முதல்வழி VMwareஐ விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவி அதனுள் லினக்ஸை நிறுவி பயன்படுத்தலாம். ஆனால் 30 நாட்களுக்கு மேல் VMWare ஐ பயன்படுத்த முடியாது. இரண்டாவது வழி Dual Booting முறையில் லினக்ஸை நிறுவுவது. இந்த இரண்டு வழிகளையும் விளக்கி கூறினேன். அவன் இரண்டாவது வழியை தேர்வு செய்தான். VMwareஐப் பற்றி அவனே கூறியதால் நான் VirtualBoxஐ பரிந்துரைக்கவில்லை. VMware, VirtualBox மூலமாக லினக்ஸை நிறுவுவதை விட நேரடியாக நிறுவிவிடுவதுதான் நல்லது.
அந்த மென்பொருளுக்கு Xubuntu 18.04 பதிப்புத்தான் தேவை என்பதால் அதை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டான். நிறுவுவதற்கு என்னென்ன தேவை என்று கேட்டான். 4GB அல்லது அதற்கு மேல் கொள்ளவு கொண்ட ஒரு பென்டிரைவ். Xubuntu 18.04 ISO file. இந்த ISO கோப்பை bootable ஆக பென்டிரைவில் மாற்ற விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் Rufus மென்பொருள். 100GB Disk space ஆகியவைகள் தேவையென கூறினேன். தயார் செய்தான். அவனுக்கு தேவையான மென்பொருளுக்கு 70GB disk space தேவைப்படும் என கூறியிருந்தான். அதனால் நான் லினக்ஸை நிறுவ 100GB பரிந்துரைத்தேன்.
512GB Hard Disk கொண்ட மடிக்கணினி அவனுடையது. Legacy Booting முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. MS-DOS Partition Tableஐ கொண்டு பார்ட்டிசியன் செய்யப்பட்டிந்தது. MS-DOS Partition Tableலில் நான்கு primary paritition களுக்கு மேல் பிரிக்க முடியாது. ஐந்தாவதாக ஒரு பார்ட்டிசியன் வேண்டுமென்றால் Extendend Partition பிரிந்து அதனுள் Logical Partition உருவாக்கித்தான் பயன்படுத்த முடியும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த Extendend Partitionனே ஒரு primary Partitionனாகத்தான் உருவாகும்.
நண்பனுடைய கணினியில் லினக்ஸ் நிறுவுவதற்கான வேலையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது இதுதான். ஏற்கனவே அவனுடைய கணினியில் நான்கு பார்ட்டிசியன்கள் இருந்தது. அனைத்தும் primary partitionகள் லினக்ஸிற்கு தேவையான ஒரு தனி பார்ட்டிசியனை உருவாக்க வேண்டுமென்றால் Extendend Partition உருவாக்கிவிட்டுத்தான் அதை உருவாக்க முடியும். அப்படியென்றால் ஏற்கனவே நன்பணுடைய கணினியில் இருக்கு நான்கு primary partitionகளில் ஏதாவது ஒரு பார்ட்டிசியனை நீக்க வேண்டும். எதை நீக்குவது? இங்குதான் மிகவும் குழம்பி போனோம். ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் லினக்ஸை நிறுவிவிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
விண்டோஸை நிறுவி அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது ராக்கெட்டில் செயற்கைகோளை வைத்து சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதைப்போல கஷ்டமான வேலை. எப்படினு கேட்கிறீங்களா. முதலில் விண்டோஸை நிறுவ வேண்டும். அடுத்ததாக அனைத்து டிரைவர்களையும் நிறுவ வேண்டும். அடுத்து ஆன்டிவைரஸ், ஆன்டிமால்வேர், ஆன்டிரூட்கிட் நிறுவ வேண்டும். அடுத்து MS-OFFICE நிறுவ வேண்டும். அடுத்து இணையத்தில் உலாவ Firefox அல்லது Google Chrome நிறுவ வேண்டும். ஒரு நல்ல உரைதிருத்தி(Text Editor) நிறுவ வேண்டும். அதுபோக உங்களது தேவைக்களுக்கு ஏற்ப மற்ற மற்ற மென்பொருள்களையெல்லாம் நிறுவ வேண்டும். இதையெல்லாம் நீங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும் அதுதான் கொடுமையாக இருக்கும்.
கீழ்காணும் முறையில் பார்ட்டிசியன் செய்யப்பட்டிருந்தது.
/dev/sda1-System Reserved-992KB
/dev/sda2-DIAG-300MB-diag flag set
/dev/sda3-BOOT-500MB-boot flag set
/dev/sda4-NewVolume-198GB
இதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும். System Reserved(/dev/sda1) பார்ட்டிசியன் விண்டோஸ் இயங்குதளம் நிறுவும் போது தானாகவே உருவாக்கப்படுவது. DIAG(/dev/sda2) பார்ட்டிசியன் DELL Diagnostics பயன்பாடுகள், Recovery கோப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். BOOT(/dev/sda3) விண்டோஸ் இயங்குதளத்தினுடைய பூட்டிங் கோப்புகள் இருக்கும். /dev/sda4 பார்ட்டிசியனில் C: and D: இரண்டும் இருந்தது. Dynamic Partitionனாக இருந்தது. 260GB unallocated ஆக இருந்தது.
இதில் எந்த பார்ட்டிசினை தூக்கினாலும் விண்டோஸ் இயங்காமல் போய்விட வாய்ப்புண்டு. அதனால் DIAG Partitionனை நீக்கிவிடலாம் என முடிவு செய்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதைப்பற்றி கூகுளில் தேடி படித்து அதை நீக்கினால் எந்த பிரச்சனையும் வராது என முடிவு செய்தேன். Xubuntuஐ Live mode இல் boot செய்து GParted மூலமாக அதை நீக்கிவிட்டு Extendend Partition பிரித்து Logical Partition உருவாக்கி Xubuntuஐ வெற்றிகரமாக நிறுவி முடித்தோம்.
Aug 2, 2020
Youtube வீடியோவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கான பகுதியை மட்டும் தரவிறக்கம் செய்வது எடுப்பது எப்படி?
youtube-dl --postprocessor-args "-ss 0:2:25 -to 0:10:25" https://www.youtube.com/watch?v=PNPgTb323lE
Jun 10, 2020
Arch Linux-ல் IBus தமிழ் தட்டச்சு பிரச்சனையும் - தீர்வும்
May 3, 2020
பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை
பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம்
தாராளமாகப் படிக்கலாம். உங்கள் கல்விப் பின்னணி இதற்குத் தடையில்லை.
கணினியும் நல்ல இணைய வசதியும் மட்டுமே போதும். வேறெதுவும் தேவையில்லை.
ஐடி துறையில் அனுபவம் வாய்ந்த மென்பொறியாளர்கள் பயிற்றுவிப்பார்கள்.
கொரோனா காலத்தில் ஒடிந்து போய் இருக்கும் சமூகத்திற்குக் கைகொடுக்கும் முயற்சியே இது. எனவே முற்றிலும் இலவசம்.
ஒரு மாதம் - தினமும் ஒரு மணி நேரம்
Apr 30, 2020
KDE Desktop Zoom பிரச்சினை
நிரந்தரமாக நீக்க
Apr 10, 2020
பிறந்த நாள்
என்னுடைய தினசரி வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்தினார். அதில் இரண்டு முக்கியமானவைகள். ஒன்று முதல்நாள் அணிந்த ஆடைகளை மறுநாள் காலையிலேயே துவைத்து விட வேண்டும். அழுக்குத்துணிகள் சேரக்கூடாது. நான் மறந்துவிட்டு சென்றாலும் ரம்யா எடுத்துக்கொண்டு வந்து தந்துவிடுவார். இரண்டு என்ன வேலை இருந்தாலும் இரவு 9:30 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாது. 9:00 - 9:30 -க்குள் தூங்கச் சென்றுவிட வேண்டும். இதனால் காலை 5:30 - 6:00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். தினசரி நடைப்பயிற்சி செல்வேன். இப்போது இதையெல்லாம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்காதீர்கள். ரம்யா இப்போது சென்னையில் இல்லை. அன்புச்செல்வனுடன் ஊரில் இருக்கிறார். அதனால் மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இப்போது நான் கடைபிடிக்கவில்லை. ரம்யா வந்தவுடன் கண்டிப்பாக எல்லாம் ஒழுங்காக நடக்கும்.
என்றைக்காவது இரவு நேரத்தில் அலுவலக வேலைகள் இருந்தால் என்னுடன் சேர்ந்து அவரும் கண்விழித்துக்கொண்டிருப்பார்.
ரம்யா துணைவராக அமைந்தது எனக்கு கிடைத்த பெரும் பேறு.
Mar 22, 2020
Arch Linux - a simple lightweight distribution
Jan 31, 2020
Aug 18, 2019
பெடோரா லினக்ஸ் - Fedora Linux
- Fedora, Redhat, CentOS, openSUSE, SUSE Enterprise Linux ஆகியவைகள் RPM based வழங்கல்கள்
- Debian, Ubuntu, Linux Mint, KDE neon ஆகியவைகள் DEB based வழங்கல்கள்
என்னுடைய மடிக்கணினியிலும், அலுவலகத்திலும் உபுண்டுதான் பயன்படுத்தி வந்தேன். உபுண்டு பயன்படுத்தி பயன்படுத்தி போரடித்துவிட்டது. ஆகையால், உபுண்டு அல்லாத வழங்கல்களின் பக்கமாக எனது கவனத்தைத் திருப்பினேன். உபுண்டுவிலிருந்து, KDE Neon பக்கம் திரும்பி, அப்படியே ஓப்பன் சுசீ க்குப் போயி, அதன்பிறகு டெபியானுடன் கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு. இறுதியாக பெடோராவிற்கு வந்து சேர்ந்தேன்.
நான் ஏன் பெடோரா லினக்ஸைத் தேர்ந்தெடுத்தேன்?
- முதலில் எனக்கு உபுண்டு பயன்படுத்தி போரடித்துவிட்டது. பாம்பு தோலுரிப்பதைப் போல முழுவதுமாக உபுண்டுவிலிருந்து முற்றிலும் விலகி வேறு ஒரு சரியான வழங்கலைத் தேடினேன். அதற்காக பெடோராவைத் தேர்ந்தெடுத்தேன்.
- முழுக்க முழுக்க ஓப்பர் சோர்ஸ், சுதந்திர மென்பொருள் அடிப்படையிலானது
- 6-மாதங்களுக்கு ஒருமுறை புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது
- GNOME சூழலின் அண்மைய பதிப்புடன் பெடோராவின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது
- நிறுவனங்களில், தொழில்முறைப் பயன்பாட்டிற்கு Redhat Linux அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Redhat Linux பொடோராவை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் Fedora வைப் பயன்படுத்தினால் அது Redhat ஐ பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
பெடோராவின் default Desktop Environment GNOME 3. நீங்கள் KDE, XFCE, LXDE, LxQT, MATE, CINNAMON போன்ற Desktop Environment களை பயன்படுத்த விரும்பினால் Fedora Spins தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்.
Fedora Magazine தளத்தில் கட்டுரைகள் வெளியிடுகிறார்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Fedora 30 யில் Python 3 default நிறுவப்பட்டுள்ளது. Python 2 வேண்டுமென்றால் 'sudo dnf install python' கட்டளை வரிக்கொடுத்து நிறுவிக்கொள்ளலாம்.
Fedora வைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
Jul 7, 2019
Debian 10 Buster - ஒரு பார்வை
டெபியான் இயங்குதளம் சர்வர் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் டெஸ்க்டாப், மடிக்கணினி பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றது.
* தமிழ் எழுத்துருக்கள் அற்புதமாக தெரிகிறது
* தமிழ் தட்டச்சு செய்ய முடிகிறது
* மொசில்லா பயர்பாக்ஸ் மூலமா இணையத்தில் உலவ முடிகிறது
* பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக Shutter Screenshot கருவிக்கான ஆதரவை டெபியான் 10 பதிப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதற்கு இணையான Flameshot எனும் கருவியை நிறுவிக்கொள்ளலாம். அற்புதமாக வேலை செய்கிறது
டெபியான் இயங்குதளம் நிலைத்தன்மை அதிகமுள்ள இயங்குதளம். தாரளமாக நீங்கள் தரவிறக்கி பயன்படுத்தலாம். தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
Jun 19, 2019
டெபியான் லினக்ஸில்(Debian 9) தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?
Windows + Space பொத்தான்களை அழுத்தி நீங்கள் தமிழ் தட்டச்சை செய்யலாம்.
May 30, 2019
OpenSUSE Leap 15.1 இயங்குதளத்தில் தமிழ் எழுத்துருக்கள்
KDE Neon பயன்படுத்திய போது தமிழ் எழுத்துருக்களுக்கு Noto வகை எழுத்துருக்கள் பயன்படுத்தி இருந்ததை பார்த்திருக்கிறேன். ஆகையால் அந்த எழுத்துருக்களை இணையத்தில் இருந்து தரவிறக்கி /usr/share/fonts/truetype/ எனும் இடத்தில் சேமித்தேன். சேமித்துவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்த போது தமிழ் எழுத்துருக்கள் நன்றாகத் தெரிந்தது.
NotoSans Tamil எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
NotoSans Tamil எழுத்துருக்களை நிறுவும் முன்
NotoSans Tamil எழுத்துருக்களை நிறுவிய பின்
Apr 21, 2019
UEFI முறையில் உபுண்டு நிறுவுவது எப்படி?
- ஏற்கனவே UEFI mode இல் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்துடன் உபுண்டுவை நிறுவுவது. இதற்காக தனியாக EFI Partition ஐ உருவாக்க வேண்டியதில்லை. ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இயங்குதளம் அதனை உருவாக்கி வைத்திருக்கும்.
- புதிதாக உபுண்டுவை UEFI mode இல் நிறுவுவது. இதற்காக EFI Partition ஐ நாம் தனியாக உருவாக்க வேண்டும். நாம் பார்க்க போவது இதைதான்.
- Hard Disk Partition Table GPT வடிவில் இருக்க வேண்டும்.
- Hard Disk இன் முதல் Partition EFI Partition ஆக இருக்க வேண்டும். அது FAT32 கோப்பு முறைமையில் இருக்க வேண்டும்.
- esp, boot ஆகிய flag கள் அந்த EFI Partition -இல் enable ஆகி இருக்க வேண்டும்.
Hard Disk இன் முதல் Partition ஐ EFI Partition ஆக உருவாக்குவதல்:
'esp' என்பதை click செய்யுங்கள். அது தானாகவே 'boot' என்பதை தேர்வு செய்து கொள்ளும்.
அவ்வளவுதான். இதன்பிறகு எப்போதும் போல Install Ubuntu கொடுத்து /, /home, swap ஆகிய மூன்று Partition கள் உருவாக்கி நீங்கள் உபுண்டுவை நிறுவிக்கொள்ளலாம். /boot Partition ஐ தனியாக உருவாக்க வேண்டியதில்லை.
பொதுவாக Desktop, Laptop கணினி பயன்பாட்டிற்காக லினக்ஸ் நிறுவ வேண்டுமானால் /, /home, swap ஆகிய மூன்று Partition கள் போதுமானது.
Mar 30, 2019
கேடீஇ(KDE) சூழலில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான IBus வசதியை தொடக்க நிலையில்(startup) கொண்டுவருவது எப்படி?
Mar 3, 2019
நிம்மதி தரும் நிதித் திட்டம்
என்னுடைய அப்பாவும், அம்மாவும் 5-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள். கூலி வேலைப் பார்த்துதான் என்னை Diploma, Engineering, MBA என படிக்க வைத்தார்கள். என் தம்பியை M.Com., M.Phil என படிக்க வைத்தார்கள். அதுபோக குடும்பத்தையும் நடத்தினார்கள்.
- அறம் பொருள் இன்பம் - வ.நாகப்பன்
- பணம் செய்ய விரும்பு - நாகப்பன் புகழேந்தி
- வீட்டுக் கணக்கு - சோம.வள்ளியப்பன்
- பணமே ஓடி வா - சோம.வள்ளியப்பன்
- பணவளக்கலை - டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
- சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்
- முதலீட்டு மந்திரம் 108 - சி.சரவணன்
- மணி மணி மணி! - அனிதா பட்
- மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.: ஒரு சிறு அறிமுகம் - சுரேஷ் பரதன்
- பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி
- ஷேர் மார்க்கெட் A-Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
- நாணயம் விகடன் - வார இதழ்.(ஆன்லைன் சந்தா வசதி உள்ளது. ஓராண்டுச் சந்தா ரூ.1,500 மட்டுமே. 2006-ஆம் ஆண்டிலிருந்து உள்ள பழைய இதழ்களையும் படித்துக்கொள்ளலாம். விகடன் குழுமத்தில் இருந்து வரும் 11-இதழ்களுக்கும் சேர்த்து ஆன்லைனில் படிப்பதற்கு ஆண்டுச்சந்தா ரூ.1,500 மட்டுமே)
- Mutual Funds: The Money Multiplier - Lalitha Thamaraipandy
- Let's Talk Money: You've Worked Hard for It, Now Make It Work for You - Monika Halan
- 108 Questions & Answers on Mutual Funds & SIP - Yadnya Investments
- 16 Personal Finance Principles Every Investor Should Know (Master Your Financial Life Book 1) - Manish Chauhan
- 3 Pillars of Financial Security - Manish Chauhan
- காப்பீடு என்பது முதலீடு கிடையாது.
- டேர்ம் இன்ஷூரன்ஸைத் தவிர வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுக்கக் கூடாது.
- சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய வருமானத்தை உங்கள் மனைவியோ, பெற்றோரோ, அல்லது உறவினர்களோ யாராவது நம்பியிருந்தால் உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 அல்லது 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
- நீங்கள் வாங்கும் சம்பளத்தில் உங்களுடைய வயதின் சதவீதத்திற்கு மேல் சேமிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 30 என்றால் உங்கள் சம்பளத்தில் 30% தொகையை சேமிக்க வேண்டும். அதற்கு மேலும் சேமித்தால். அது அற்புதம்.
- தங்கம், ரியல் எஸ்டேட் என்பது முதலீட்டிற்கு ஏற்றதல்ல. அது ஒரு நல்ல முதலீடும் கிடையாது.
- உங்களுடைய முதலீடு, சேமிப்பு, காப்பீடு, கடன் விபரங்களை உங்கள் மனைவியுடன் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்
- கிரெடிட் கார்டு தேவையில்லை.
- ஒவ்வொரு நாளும் ஆகும் செலவை தனியாக ஒரு நோட்டுப்போட்டு குறித்து வைக்க வேண்டும். மாத இறுதியில் அன்றைய மாதத்திற்கான மொத்த செலவை கணவன், மனைவி இருவரும் அமர்ந்து கணக்கீட்டுப் பார்க்க வேண்டும்.
- பிள்ளைகளின் படிப்பு, உயர்கல்வி, திருமணம் போன்றவைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும்.
- ஓய்வு காலத்திற்கான சேமிப்பை முதல்மாத சம்பளம் வாங்கிய தேதியிலிருந்தே தொடங்க வேண்டும்.
- பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மாதச் சம்பளதாரர்கள் SIP முறையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்
- வரிச்சேமிப்பிற்கு ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே திட்டமிட வேண்டும்.
- வரிச்சேமிப்பிற்காக தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கக்கூடாது.
- இது போன்ற இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? மேற்கண்ட புத்தகங்களை படித்துப்பாருங்கள். எல்லா புத்தகங்களும் சேர்த்து ரூ.3,000 க்குள்தான் வரும். மூவாயிரம் ரூபாயா??? ஆமாம். நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனின் விலையில் கால்பங்கு.




































