சாதாரண மேசைக்கணினி, மடிக்கணினிகளிலிருந்து, உயர்தர வழங்கிகள்(server) வரை இப்போது வெளிவரும் அனைத்து கணினிகளும் UEFI வசதியுடன்தான் வருகின்றன.
உபுண்டு இயங்குதளம் மட்டுமல்ல, அனைத்து லினக்ஸ் இயங்குதளத்தையுமே நீங்கள் விரும்பிய வகையில் Partition செய்து நிறுவிக் கொள்ளலாம். அதற்கு 'Customized Partition' என்று பெயர். இந்த வசதி உபுண்டுவில் 'Something Else' என்ற தெரிவுடன் இருக்கும்.
இப்போது வெளிவரும் கணினிகளின் BIOS-ஐ பொறுத்தமட்டில் இரண்டுவிதமான mode கள் இருக்கிறது. ஒன்று Legacy mode, இன்னொன்று UEFI mode.
Legacy mode -இல் கணினி இயங்க தனியாக எந்த Partition னும் Hard Disk இல் தேவையில்லை. ஆனால் UEFI mode -இல் கணினி இயங்குவதற்கு EFI எனும் Partition தனியாக Hard Disk இல் தேவைப்படுகிறது. அந்த EFI partition FAT32 கோப்பு முறைமையையில் இருக்க வேண்டும். முக்கியமாக Hard Disk இன் Partition Table GPT வடிவில் இருக்க வேண்டும்.
உங்களுடைய கணினியில் முக்கியமான கோப்புகள் இருந்தால் அதை backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழே நாம் பார்க்க போகும் வழிமுறைகள் Hard Disk இல் இருக்கும் மொத்த தகவல்களையுமே அழித்துவிட்டு புதிதாக உபுண்டுவை நிறுவும்.
உபுண்டுவை UEFI முறையில் நிறுவுவது எப்படி?
இரண்டு விதமாக நீங்கள் உபுண்டுவை UEFI mode இல் நிறுவலாம்.
- ஏற்கனவே UEFI mode இல் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்துடன் உபுண்டுவை நிறுவுவது. இதற்காக தனியாக EFI Partition ஐ உருவாக்க வேண்டியதில்லை. ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இயங்குதளம் அதனை உருவாக்கி வைத்திருக்கும்.
- புதிதாக உபுண்டுவை UEFI mode இல் நிறுவுவது. இதற்காக EFI Partition ஐ நாம் தனியாக உருவாக்க வேண்டும். நாம் பார்க்க போவது இதைதான்.
தேவையானவை:
UEFI mode இல் தயார் செய்யப்பட்ட உபுண்டு bootable pendrive.
செயல்முறை:
- Hard Disk Partition Table GPT வடிவில் இருக்க வேண்டும்.
- Hard Disk இன் முதல் Partition EFI Partition ஆக இருக்க வேண்டும். அது FAT32 கோப்பு முறைமையில் இருக்க வேண்டும்.
- esp, boot ஆகிய flag கள் அந்த EFI Partition -இல் enable ஆகி இருக்க வேண்டும்.
Hard Disk Partition Table ஐ GPT வடிவில் உருவாக்குதல்:
கணினியை உபுண்டு Live Mode இல் இயக்குங்கள். Gpartition application ஐக் திறந்து கொள்ளுங்கள். Device -> Create Partition Table -> gpt -> Apply
Hard Disk இன் முதல் Partition ஐ EFI Partition ஆக உருவாக்குவதல்:
Unallocated என்பதன் மீது வைத்து Right Click செய்து New என்பதை Click செய்து.
New size(MiB) : 512
Create as: Primary Partition
File System: fat32
என்று உள்ளிட்டு Add பொத்தானை அழுத்துங்கள். அதன்பிறகு Toolbar பகுதியில் இருக்கும் பச்சை நிற டிக் குறியீட்டை அழுத்தி Apply செய்து கொள்ளுங்கள்.
esp, boot flag-களை enable செய்தல்:
புதிதாக உருவாக்கிய அந்த பார்ட்டிசியன் மீது வைத்து Right Click செய்து Manage Flags என்பதை Click செய்யுங்கள்.
'esp' என்பதை click செய்யுங்கள். அது தானாகவே 'boot' என்பதை தேர்வு செய்து கொள்ளும்.
அவ்வளவுதான். இதன்பிறகு எப்போதும் போல Install Ubuntu கொடுத்து /, /home, swap ஆகிய மூன்று Partition கள் உருவாக்கி நீங்கள் உபுண்டுவை நிறுவிக்கொள்ளலாம். /boot Partition ஐ தனியாக உருவாக்க வேண்டியதில்லை.
பொதுவாக Desktop, Laptop கணினி பயன்பாட்டிற்காக லினக்ஸ் நிறுவ வேண்டுமானால் /, /home, swap ஆகிய மூன்று Partition கள் போதுமானது.
No comments:
Post a Comment