இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் லினக்ஸ் இயங்குதளங்கள் பெரும்பாலும் ISO கோப்புகளாகவே கிடைக்கின்றது. அவ்வாறு ISO கோப்புகளாக தரவிறக்கம் ஆகும் இயங்குதளங்களை CD அல்லது DVD அல்லது பென்டிரைவ் இவைகளில் ஏதாவது ஒன்றில் பூட்டபிளாக எழுதி(Burning), அதன்மூலம் கணினியினை பூட் செய்து இயங்குதளத்தை நிறுவலாம் அல்லது லைவ் மோடில்(நிகழ் வட்டு) பயன்படுத்தலாம். CD/DVD யாக இருக்கும் பட்சத்தில் Nero, Brasero, K3B அல்லது ஏதாவது ஒரு ISO Image Burner மென்பொருள் கொண்டு ISO கோப்பினை CD/DVD எழுதலாம். பென்டிரைவின் வருகைக்குப் பிறகு, CD/DVD யின் ஆதிக்கம் மிகவும் குறைந்து விட்டது. பாடல்கள் கேட்பதற்கே இப்பொழுதெல்லாம் பென்டிரைவினைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்கையில் இன்றைக்கு இயங்குதங்களங்களை நிறுவுவதற்கு பெரும்பாலும் Pendrive தான் பயன்படுத்தப்படுகின்றது. விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்த மட்டிலே பென்டிரைவில் எழுதிக்கொள்ளவதற்கென தனியாகவே USB Creating Tool கிடைக்கிறது.
அதுபோல உபுண்டுவை பொறுத்தவரையில் Startup Disk Creator Tool இருக்கிறது. இதன்மூலம் நாம் உபுண்டு இயங்குதளத்தின் ISO கோப்புகளை Pendrive இல் Bootable ஆக எழுதி உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவதற்காகவோ அல்லது Live ஆக பயன்படுத்தி பார்ப்பதற்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
dd கட்டளை மூலமாக, உபுண்டு இயங்குதளத்தில் இருந்து கொண்டோ அல்லது வேறு ஏதாவது ஒரு லினக்ஸ் வழங்கல்களில் இருந்து கொண்டோ, அனைத்து லினக்ஸ் வழங்கல்களையுமே(Ubuntu, Kubuntu, Xubuntu, Lubuntu, Fedora, CentOS, OpenSUSE, etc....) பென்டிரைவில் Bootable ஆக மாற்ற முடியும். நாம் dd கட்டளையினை முனையத்தின் மூலமாகதான் செயல்படுத்த வேண்டும். dd கட்டளை மூலம் பென்டிரைவினை Bootable ஆக மாற்றி பயன்படுத்தும் போது மிகவும் விரைவாக செயல்படுகிறது. அதிகபட்சமாக 40 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளுக்குள் உபுண்டு Live Desktop கிடைத்து விடுகிறது. அதுபோலவே Fedora, CentOS மற்றும் OpenSUSE வழங்கல்களும்.
dd கட்டளையின் மூலமாக பென்டிரைவினை Bootable ஆக மாற்ற முடியும் என்ற விஷயம் எனக்கு ரொம்ப நாளாக தெரியாது. கடந்த ஜனவரி மாத Open Source For You(Linux For You) இதழில் OpenSUSE 13.1 இன் ISO கோப்புகளை கொடுத்திருந்தார்கள். அது எப்படி செயல்படுகிறதென மடிக்கணினியில் சோதித்துப் பார்ப்போமே என நினைத்தேன். அதனால் பென்டிரைவில் பூட்டபிளாக மாற்றி பயன்படுத்திப் பார்ப்போமே என முடிவு செய்தேன். உதவிகளைப் பெறுவதற்காக OpenSUSE இன் இணையதளத்திற்குச் சென்றேன். அங்குதான் dd கட்டளையினைப் பயன்படுத்தி பென்டிரைவில் Bootable மாற்றும் வழிமுறைகளை கொடுத்திருந்தார்கள். உடனே dd கட்டளையினைக் கொண்டு OpenSUSE 13.1 ஐ பென்டிரைவில் Bootable ஆக மாற்றினேன். அற்புதமாக வேலை செய்தது, கடுமையான வேகமாகவும் இருந்தது.
நமக்குத்தான் மூளை சும்மாவே இருக்காதே. அதனாலே இதே dd கட்டளை Ubuntu, Fedora, CentOS, Kubuntu, Xubuntu, Lubuntu மற்றும் Remastersys மூலமாக தயார் செய்த Customize Ubuntu ஆகிய வழங்கல்களின் ISO கோப்புகளுக்கு வேலை செய்கிறதா என சோதித்துப் பார்த்தேன். மேற்கண்ட அனைத்து வழங்கல்களுமே அற்புதமாக வேலை செய்தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன். காரணம்? ஒவ்வொரு வழங்கல்களுக்கெனவும் ஒரு USB Creator Tool ஐ தேடிக்கிட்டு, இல்லேனா ஏதாவது ஒரு Graphical USB tool ஐக் கொண்டு Bootable ஆக மாற்றிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக ஒரே கட்டளையின் மூலமாக அனைத்து வழங்கல்களையும் பென்டிரைவில் பூட்டபிளாக மாற்றி விடலாம் என்பது வசதியான ஒன்றுதேனே, இதான் காரணம். dd கட்டளை, அனைத்து வழங்கல்களுக்கும் ஒரே Tool ஆக இருப்பதோடு, மிகவும் வேகமாகவும் இருக்கிறது.
ஆகையால் இனிமேல் தோழர்கள் அனைவரும் பென்டிரைவில் லினக்ஸ் வழங்கல்களை பூட்டபிளாக மாற்ற வேண்டுமென்றால் dd கட்டளையையே பயன்படுத்துங்கள். உங்களுக்கு நேரம் மிச்சமாகும்!
dd கட்டளை மூலமாக பென்டிரைவினை Bootable ஆக மாற்றுதல்:
படி ஒன்று:
முதலில் Disk Utility மூலமாக பென்டிரைவினுடைய Device Identification ஐ கண்டுபிடிக்கவும். அடுத்ததாக பென்டிரைவினை Unmount செய்யவும்.
படி இரண்டு:
முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள், அதன்பின் கீழ்காணும் கட்டளையினை இயக்குங்கள்.
sudo dd if=/location/of/your/ISO/Image of=/Device/Identification/of/Pendrive
உதாரணமாக நான் /home/kathirvel/Azureus Downloads எனும் அடைவிற்குள்(Folder) CentOS-6.5 னுடைய ISO கோப்பினை வைத்திருந்தேன். Disk Utility இல் காட்டியுள்ளதுபடி என்னுடைய பென்டிரைவின் Device Identification /dev/sdb . ஆகையால்,
நான் முனையத்தில் கீழ்கண்டவாறு கட்டளையினை கொடுத்துள்ளேன்.
sudo dd if=/home/kathirvel/Azureus\ Downloads/CentOS-6.5-i386-LiveCD/CentOS-6.5-i386-LiveCD.iso of=/dev/sdb
9 comments:
நான் உபுன்டு தான் உபயோகப்படுத்துகிறேன். உங்களின் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் படித்து வருகிறேன். இப்பதிவில் ஓர் ஐயம்.
sudo dd if=/home/saamy/Home/Downloads/VL7.0-STD-GOLD.iso/VL7.0-STD-GOLD.iso of=/dev/sdb என்ற கட்டளைக்கு
dd: opening `/home/saamy/Home/Downloads/VL7.0-STD-GOLD.iso/VL7.0-STD-GOLD.iso': No such file or directory
என்ற பிழை செய்தி கிடைக்கிறது. என்னுடைய iso file Downloads கோப்பில் இருக்கிறது. தயவு செய்து உதவுங்கள்.
அன்பருக்கு வணக்கம். தங்கள் பதிவுகள் அனைத்தையும்த தவறாமல் படித்து வருகிறேன்.
"dd கட்டளை - முனையத்தில் ஒரு அற்புதமான Startup Disk Creator Tool" இப்பதிவில்
sudo dd if=/home/saamy/Home/Downloads/VL7.0-STD-GOLD.iso/VL7.0-STD-GOLD.iso of=/dev/sdb என்றவாறு கட்டளை கொடுத்தேன். என்னுடைய ISO கோப்பினை Downloads வைத்திருந்தேன்.
dd: opening `/home/saamy/Home/Downloads/VL7.0-STD-GOLD.iso/VL7.0-STD-GOLD.iso': No such file or directory
என்றவாறு பிழை செய்தி வருகிறது.
தயவு செய்து உதவுங்களேன்.
அன்பருக்கு வணக்கம். தங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் படித்து வருகிறேன்.
"dd கட்டளை - முனையத்தில் ஒரு அற்புதமான Startup Disk Creator Tool" இப்பதிவில்
sudo dd if=/home/saamy/Home/Downloads/VL7.0-STD-GOLD.iso/VL7.0-STD-GOLD.iso of=/dev/sdb என்றவாறு கட்டளை கொடுத்தேன். என்னுடைய ISO கோப்பினை Downloads வைத்திருந்தேன்.
dd: opening `/home/saamy/Home/Downloads/VL7.0-STD-GOLD.iso/VL7.0-STD-GOLD.iso': No such file or directory
என்றவாறு பிழை செய்தி வருகிறது.
தயவு செய்து உதவுங்களேன்.
Thanks Shivadaasan.
sudo dd if=/home/saamy/Downloads/VL7.0-STD-GOLD.iso of=/dev/sdb
எனக்கொடுத்து முயற்சித்துப் பாருங்களேன்.
Thanks for your help.
again.. awesome dude
நன்றி Mani.
helpful
Thanks Sridhar.
Post a Comment