Mar 19, 2014

உபுண்டுவிலிருந்து Mobile மூலமாக நண்பர்களுக்கு குறுஞ்செய்தி(SMS) அனுப்புதல் - Offline Method!


அண்மையில் தோழர் Mani-G அவர்கள் This Week's Experiments எனும் தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தபின் ஏற்பட்ட உந்துதலிலும், நாமும் செய்து பார்ப்போமே என்கிற ஆசையிலும் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மணி அவர்கள் எழுதியிருந்த பதிவில் அவருடைய Airtel 3G Internet Stick னுடைய இருப்பை(Balance) பார்ப்பதற்காக gammu எனும் கட்டளையை பயன்படுத்தியிருப்பதாக கூறியிருந்தார். இந்த கட்டளையை தனது பதிவின் மூலம் அறிமுகப்படுத்தியதற்காக உண்மையிலேயே மணிக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும். மணிக்கு ஒரு சல்யூட். நான் நீண்ட நாளாக எதிர்ப்பார்த்து இருந்த ஒரு விஷயம் இது.

ஆகையால், நாமும் இந்த gammu கட்டளையை  நம்முடைய மொபைலினுடைய Balance பார்ப்பதற்காக பயன்படுத்திப் பார்த்தால் என்ன என்று யோசித்தேன். நான் இரண்டு கைப்பேசி வைத்திருக்கிறேன். ஒன்று Samsung E1421 Model(AirTel SIM) தனி பயன்பாட்டிற்காக, இரண்டு Nokia 6300(AirTel SIM) இதை நான் இணையத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன். இந்த Nokia கைப்பேசி மூலமாகத்தான் நான் இணையத்தை பயன்படுத்தியும் வருகிறேன். இந்த பதிவு வெளியிடப்பட்டிருப்பதும் அதன்மூலமாகத்தான். இந்த Nokia கைப்பேசியினை நான் Bluetooth மூலமாக கணினியுடன்(உபுண்டுவுடன்) இணைத்துள்ளேன். தோழர் மணி அவர்கள் அவருடைய கணினியில் USB Port வழியாக 3G Stick ஐ நேரடியாக இணைத்திருப்பார், நாம் Bluetooth வழியாக அல்லவா இணைத்திருக்கிறோம். நம்முடைய கைப்பேசியில இந்த வழிமுறை வேலை செய்கிறதா என்னவென்று தெரியவில்லையே, இருந்தாலும் செய்து பார்ப்போம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டே வேலையை ஆரம்பித்தேன்.

முதலில் முனையத்தை(Terminal) திறந்து gammu என தட்டச்சு செய்து Enter Key ஐ அழுத்தினேன். நீங்க இந்த கட்டளையை இன்னும் நிறுவவில்லை என பதிலளித்தது. ஆகையால் முதலில் இந்த கட்டளையை நிறுவினேன்.


Gammu வை நிறுவுதல்:
முனையத்தைத்(Terminal) திறந்து sudo apt-get install gammu gammu-smsd எனக் கொடுக்கவும்.

அடுத்ததாக Bluetooth குச்சியை கணினியினுடைய USB Port இல் இணைத்தேன், அதன்பிறகு என்னுடைய Nokia 6300 கைப்பேசியிலுள்ள Bluetooth ஐ ON செய்தேன். இப்பொழுது gammu வை நம்முடைய கைப்பேசிக்கு ஏற்ப அமைக்க வேண்டும். அதற்காக முனையத்தில்(Terminal) sudo gammu-cofig என தட்டச்சு செய்து கட்டளையை இயக்கினேன்.


அடுத்தடுத்தடுத்து செய்துள்ளதை இங்கு அம்பு குறியிட்டு காண்பித்துள்ளேன்.






அடுத்ததாக முனையத்தைத் திறந்து sudo gedit /etc/gammu-smsdrc என்ற கட்டளையை இயக்கினேன்.


இதன்பின் திறக்கப்பட்ட கோப்பில் கீழ்காணும் வரிகளை அமைத்தேன்.


[gammu]
port = /dev/ttyS0
connection = blueat

# SMSD configuration
[smsd]
PIN=1234
service = sql
Driver=native_mysql
logfile = /etc/smsdlog
debuglevel = 1

User = root
Password = password
PC = localhost
Database = kalkun

# Paths where messages are stored
inboxpath = /var/spool/gammu/inbox/
outboxpath = /var/spool/gammu/outbox/
sentsmspath = /var/spool/gammu/sent/
errorsmspath = /var/spool/gammu/error/

கோப்பினை சேமித்தேன். அவ்வளவுதான் வெற்றிகரமாக வேலைகள் முடிந்து விட்டது. அப்புறம் என்ன SMS ஐ உபுண்டுவிலிருந்து நமது நண்பர்களுக்கு தட்டிவிட வேண்டியதுதானே!

நான் AirTel SIM ற்க்கு ஏற்ப கொடுத்துள்ளேன். நீங்கள் உங்களது SIM க்கு ஏற்ப கொடுத்துக்கொள்ளுங்கள். கட்டளைகளெல்லாம் ஒன்றுதான். ஆனால் *123# என்று Balance பார்ப்பதற்காக கொடுக்கப்படும் Code கள் ஒவ்வொரு SIM ற்க்கும் மாறுபடும்.

Balance பார்த்தல்:

gammu getussd *123#


Control Key + C ஐ அழுத்தினால் இந்த கட்டளையை Break செய்து கொள்ளலாம். அதாவது அடுத்தடுத்த கட்டளைகளை இயக்குவதற்காக வெளியேறலாம்.

SMS அனுப்புதல்:

echo "தமிழ்" | gammu sendsms TEXT 99xxxxxx17 -unicode


இதுல குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழில் குறுஞ்செய்தி(SMS) அனுப்ப முடிந்ததுதான். அது என்னவென்றே தெரியலைங்க கணினியில் ஒன்றை தமிழிலும் செய்ய முடியும்னா அப்பொழுது மனசுக்குள்ளே தனிமகிழ்ச்சிதான்!.

SMS அனுப்புவதற்கென்றே தனியான இடைமுகப்பும் கிடைக்கின்றது.











மேலும் தெரிந்து கொள்ள:

2 comments:

Unknown said...

Hi nice da. Its very useful to me da

இரா.கதிர்வேல் said...

Thanks Ashokraj. R Ramasamy.R