Oct 17, 2013

KDE Desktop Environment -ல் தமிழ் தட்டச்சு ஒரு முழுமையான தீர்வு



நான் Gnome Desktop Environment ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் KDE Desktop Environment ஐ இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லையே என்ற நெருடல் என் மனதில் நீண்டகாலமாக இருந்தது. ஆகையால் என்னுடைய உபுண்டு 12.04 LTS இயங்குதளத்தில் KDE ஐ நிறுவுவது என முடிவு செய்தேன்.  தனியாக Kubuntu வை தரவிறக்கம் செய்து நிறுவுவதை விட உபுண்டுவிலேயே நிறுவி விட்டால்என்ன என முடிவு செய்தேன்.  அதற்கான உதவிகள மற்றும் வழிகாட்டுதல்கள் உபுண்டுவின் உதவிக்கனா இணையதள பக்கத்திலேயே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


இதில் சொல்லப்பட்டுள்ள படி முனையத்தில் sudo apt-get install kde-full எனக் கொடுத்து நிறுவினேன். 410 MB அளவிற்கு தரவிறக்கம் ஆனது இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது. தரவிறக்கம் முடிந்தவுடன் நிறுவுதல் தொடங்கியது. login manager ஆக எதை வைத்துக்கொள்ள வேண்டும் என நிறுவுதலின் இடையில் கேட்டது ldm, kdm என இரண்டு தெரிவுகள் கிடைத்தது. நான் kdm என்பதை தேர்வு செய்து கொடுத்தேன். கணினியை மறுதொடக்கம் செய்து KDE plasma desktop என்பதை login manager -ல் தேர்வு செய்து உள்நுழைந்தேன்(login) உள்நுழைந்தவுடன் நான் முதலில் சோதனை செய்து பார்த்தது, தமிழ் தட்டச்சு வேலை செய்கிறதா என்றுதான்.


நான் உபுண்டுவில் தமிழ் தட்டச்சு செய்ய ibus ஐ பயன்படுத்துகிறேன். KDE Desktop Environment -ல் Libreoffice Writer -ல் ibus மூலமாக தமிழ் தட்டச்சு செய்யும் பொழுது மிகவும் நன்றாக வேலை செய்தது. எழுத்துக்கள்தான் தெளிவாக தெரியவில்லை ஆனால் அதே கோப்பினை pdf கோப்பாக மாற்றும் பொழுது எப்பொழுதும் போல தெளிவாக தெரிந்தது. அதனால் அதை நான் பெரிதாக கண்டுகொள்ள வில்லை பொதுவாக gtk அடிப்படையிலான gnome desktop environment -ல் பயன்படுத்துகின்ற அனைத்து applicaiton களிலும் தமிழ் தட்டச்சு நன்றாக வேலை செய்தது.  Qt அடிப்படையிலான KDE applicaiton கள் எதிலும் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.


அப்புறம் என்ன எப்பொழுதும் போல இணையத்தில் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது அதற்கிடையில் uim என்ற ஒன்றை நிறுவி சோதித்துப் பார்த்து மண்டை உடைந்து திரும்பியது வேறு கதை.  அதைப் பிறகு பார்த்துக்கொள்வோம்.  தீர்வும் கிடைத்தது.  மிகவும் எளிதான தீர்வுதான், தேடிக்கண்டுபிடிக்கதான் நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டது.

லினக்ஸ்+தமிழ் என நாம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான நண்பர் இலங்கையிலிருந்து தீவீரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லினக்ஸ் தமிழ் ஆர்வலர் மயூரன் அவர்களின் கட்டுரையினைத்தான் நான் தமிழ் தட்டச்சு நிறுவுவதற்கு எப்பொழுதுமே பயன்படுத்துவேன்.


ibus-qt4 பொதி மேற்காணும் கட்டளை வரியில் விடுபட்டு உள்ளது.  Gnome Environment க்கு அது தேவையில்லை ஆகையால் மயூரன் அவர்கள் அதை நிறுவாமல் விட்டிருக்கலாம்.


தீர்வு:

ibus-qt4 எனும் ஒரு பொதி(package) நிறுவப்படாமல் இருந்ததே kde appliaction களில் தமிழ் தட்டச்சு வேலை செய்யாமல் இருந்ததற்கு காரணம்.

முனையத்தில் sudo apt-get install ibus-qt4 எனக்கொடுத்து அந்த பொதியினை நிறுவினேன்.
  



நிறுவிய பிறகு home அடைவிற்குள் இருக்கும் .bashrc எனும் கோப்பில் கீழ்காணும் வரிகளை சேர்த்தேன்.

export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus 
export OOO_FORCE_DESKTOP=gnome

கணினியினை மறுதொடக்கம் செய்துவிட்டு மீண்டும் KDE க்குள் உள்நுழைந்து பயன்படுத்திய பொழுது சரமாரியாக அனைத்து Applicaiton களிலும் பாரபட்சமின்றி நமது இனிய தமிழை தட்டச்சு செய்ய முடிந்தது.


சரி செய்த பின் - Kwrite Text Editor -ல் தமிழ் தட்டச்சு - இந்த பதிவு முழுவதையும் Kwriter லேயே எழுதி முடித்தேன்.

References:

5 comments:

Boovarahan S said...

How to use Tamil in PCLOS ?

இரா.கதிர்வேல் said...

நன்றி. Boovarahan S

இரா.கதிர்வேல் said...

//Boovarahan S//
ibus நிறுவிப்பாருங்கள்.

PNA said...


தமிழ் எக்காளம்


தளத்தில் வலது பாளத்தில் இருக்கும் தட்டச்சு தமிழினை எந்த இயங்குதளத்திலும் அடிக்கும் வண்ணம் உள்ளது.

இரா.கதிர்வேல் said...

நன்றி PNA சார்.