Showing posts with label KDE. Show all posts
Showing posts with label KDE. Show all posts

Feb 23, 2019

KDE neon



ஓராண்டு காலமாக நான் Kubuntu இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறேன். Gnome சூழலை விட KDE சூழலே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று customization. கேடீஇ சூழலை நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி customize(தனிப்பயனாக்கலாம்) செய்து கொள்ளலாம்.

லினக்ஸ் இயங்குதளங்களில் குறிப்பிடத்தக்க சூழல்கள் Gnome, KDE, XFCE, LXDE. இந்த நான்கு சூழல்களிலும் நான் லினக்ஸை பயன்படுத்தியிருக்கிறேன். இறுதியில் என்னை கவர்ந்துள்ளது KDE தான்.
உபுண்டு இயங்குதளத்திற்கான KDE சூழல் KUbuntu(KDE + Ubuntu) எனும் பெயரில் கிடைக்கிறது. நன்றாக இருக்கிறது. அண்மையில் இணையத்தில் உலாவியபோது KDE குழுவினர் தனியாக KDE neon எனும் பெயரில் இயங்குதளம் வெளியிட்டு இருப்பதாக அறிந்தேன். KDE குழுவினரின் மேம்படுத்துதல் உடனுக்குடன் அதில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அது Ubuntu வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

KDE neon வெளியீடுகளை உபுண்டுவின் LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிடுகிறார்கள். KDE neon 2019 ஆண்டிற்கான வெளியீட்டை உபுண்டு 18.04 LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

லினக்ஸ் ஆரம்பநிலை பயனர்களைவிட, ஓரளவிற்கு லினக்ஸை பயன்படுத்தியவர்களுக்கு மிகவும் ஏற்ற இயங்குதளம் KDE neon. என்னுடைய தேவைகளை அனைத்தையும் KDE neon இல் செய்ய முடிகிறது.

  • தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாக தோற்றமளிக்கிறது.
  • IBus உதவியுடன் தமிழ்99 முறையில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது.
  • பிழைச்செய்திகள் தோன்றுவதில்லை.
  • உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறது.
  • KDE இன் மேம்படுத்துதல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

தரவிறக்கம் செய்ய KDE neon தளத்திற்குச் செல்லவும். Developer Edition, User Edition என்று இரண்டு விதமாக கிடைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்த விரும்புவர்கள் User Edition ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

KDE neon பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு FAQ பகுதியில் பதில்சொல்லியிருக்கிறார்கள்.

Jul 6, 2014

Restore KDE


குபுண்டுவை பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வத்தில் KDE அமைப்பை கண்டபடி மாற்றி அமைத்து குளறுபடி செய்துவிட்டேன். ஒரு கட்டத்தில் என்னென்னவற்றில் மாற்றம் செய்தோம் என்று என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் குபுண்டுவை நிறுவும் போது எப்படி இருந்தததோ அது போலவே இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

கீழ்காணும் கட்டளையை முனையத்தில் கொடுத்ததன் மூலம் அதை செய்ய முடிந்தது.

mv /.kde/ ~/.kde.old

குபுண்டுவை மறுதொடக்கம்(Restart) செய்து உள்நுழைந்த போது புத்தம் புதிய KDE Desktop கிடைத்தது. குபுண்டு Desktop இல் என்னத்தை வேண்டுமானாலும் மாற்றி அமைத்து விட்டு, இந்த கட்டளையை கொடுத்து விட்டால் பழையபடி KDE Desktop கிடைத்து விடும். இருந்தாலும் என்னுடைய KDE Settings ஐ மாற்றி அமைத்து வெட்டு/குத்து செய்யும் படலம் தொடரும். அதன்பிறகு இந்த கட்டளையை கொடுத்து Restore செய்யும் படலுமும் தொடரும்.


Reference:

Oct 23, 2013

KDE Desktop Environment -ல் Dolphin File Manager க்குள் ~ கூடிய backup files உருவாவதை தடுப்பது எப்படி?


Kate மற்றும் Kwrite ஆகிய இரண்டு Text Editor களைக் கொண்டும் கோப்புக்களை உருவாக்கும் பொழுது நாம் கோப்பை எங்கு சேமிக்கிறோமோ அந்த இடத்தில் கோப்பின் பெயருடன் ~ குறியீடும் சேர்ந்து(கோப்பு பெயரின் இறுதியில்) ஒரு கோப்பு உருவாகிறது. அதிகமாக கோப்புக்களை நாம் உரை எழுதியில் உருவாக்கும் பொழுது இந்த backup கோப்புக்கள் தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்குவதோடு வன்வட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது.  இதை மிகவும் எளிதான முறையில் சரி செய்யலாம்.

Kate Text Editor -ல்



Menubar -> Settings -> Configure Kate ஐ சொடுக்கி Editor Component என்பதன் கீழ் இருக்கும் Open/Save தேர்வினை சொடுக்கி Advanced Tab என்பதை Click செய்து Backup and Save என்பதற்குள்ளே இருக்கும் Local Files எனும் Check Box -ல் இருக்கும் டிக் குறியினை நீக்கி விட்டு Apply Button சொடுக்கிய பிறகு Kate ஐ ஒரு முறை மூடி விட்டு மறுமுறை திறந்து நீங்கள் கோப்புக்களை உருவாக்கும் பொழுது இந்த Backup File கள் உருவாகாது.

Kwrite Text Editor - ல்



Oct 18, 2013

KDE Environment -ல் GTK Applications(gnome applications) அழகாக மற்றும் தெளிவாக தெரிய


oxygen-gtk widget நிறுவுவதற்கு முன் Mozilla Firefox 


                                    oxygen-gtk widget நிறுவிய பின் Mozilla Firefox

                                   
                                   oxygen-gtk widget நிறுவுவதற்கு முன் Libreoffice Writer


                                   oxygen-gtk widget நிறுவிய பின்  Libreoffice Writer 

Libreoffice, Chromium, Google Chrome, gEdit TextEditor ஆகியவைகள் GTK அடிப்படையிலான பயன்பாடுகள் என்பதால் oxygen theme ஐ பயன்படுத்தாமல் ஒரு மாதிரியாக windows 98 காலத்து Theme மைப்போல பழமையாக தெரிந்தது.  இந்த பிரச்சனையினை எப்படி சரி செய்வது என்று மறுபடியும் தேடுதல் வேட்டையில் இறங்கினேன்.   அதற்கும் கிடைத்தது தீர்வு.


Software Management -ல் oxygen எனத் தேடி oxygen-molecule என்பதை நிறுவிக்கொள்ளவும். 

oxygen-gtk எனும் Theme ஐ நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து GTK+Appearance பயன்பாட்டை KDE menu மூலமாக திறந்து Widget style என்பதில் oxygen-gtk என்பதை தேர்வு செய்து Apply button ஐ சொடுக்க(click) வேண்டும்.



இதை கொடுத்த பின்பு Gnome application களும் KDE யில் பயன்படுத்தப்படும் oxygen theme போல மிகவும் அழகாக தெரியும்.

இந்த settings ஐ மாற்றிய பிறகு Libreoffice Writer -ல் மட்டும் தமிழ் தட்டச்சு வேலை செய்யாது ஆகையால் home அடைவிற்குள் இருக்கும் .bashrc கோப்பினைத் திறந்து அதில் கீழ்காணும் ஒற்றை வரியினை சேர்க்க வேண்டும்.

export OOO_FORCE_DESKTOP=gnome

.bashrc கோப்பினை சேமிக்கவும்.  .bashrc கோப்பினை மூடிவிட்டு, ஒரு முறை logout செய்து விட்டு login செய்யவும்.  இப்பொழுது Libreoffice Writer அழகாக தோன்றுவதுடன், தமிழில் தட்டச்சும் செய்ய முடியும்.


Oct 17, 2013

KDE Desktop Environment -ல் தமிழ் தட்டச்சு ஒரு முழுமையான தீர்வு



நான் Gnome Desktop Environment ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் KDE Desktop Environment ஐ இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லையே என்ற நெருடல் என் மனதில் நீண்டகாலமாக இருந்தது. ஆகையால் என்னுடைய உபுண்டு 12.04 LTS இயங்குதளத்தில் KDE ஐ நிறுவுவது என முடிவு செய்தேன்.  தனியாக Kubuntu வை தரவிறக்கம் செய்து நிறுவுவதை விட உபுண்டுவிலேயே நிறுவி விட்டால்என்ன என முடிவு செய்தேன்.  அதற்கான உதவிகள மற்றும் வழிகாட்டுதல்கள் உபுண்டுவின் உதவிக்கனா இணையதள பக்கத்திலேயே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


இதில் சொல்லப்பட்டுள்ள படி முனையத்தில் sudo apt-get install kde-full எனக் கொடுத்து நிறுவினேன். 410 MB அளவிற்கு தரவிறக்கம் ஆனது இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது. தரவிறக்கம் முடிந்தவுடன் நிறுவுதல் தொடங்கியது. login manager ஆக எதை வைத்துக்கொள்ள வேண்டும் என நிறுவுதலின் இடையில் கேட்டது ldm, kdm என இரண்டு தெரிவுகள் கிடைத்தது. நான் kdm என்பதை தேர்வு செய்து கொடுத்தேன். கணினியை மறுதொடக்கம் செய்து KDE plasma desktop என்பதை login manager -ல் தேர்வு செய்து உள்நுழைந்தேன்(login) உள்நுழைந்தவுடன் நான் முதலில் சோதனை செய்து பார்த்தது, தமிழ் தட்டச்சு வேலை செய்கிறதா என்றுதான்.


நான் உபுண்டுவில் தமிழ் தட்டச்சு செய்ய ibus ஐ பயன்படுத்துகிறேன். KDE Desktop Environment -ல் Libreoffice Writer -ல் ibus மூலமாக தமிழ் தட்டச்சு செய்யும் பொழுது மிகவும் நன்றாக வேலை செய்தது. எழுத்துக்கள்தான் தெளிவாக தெரியவில்லை ஆனால் அதே கோப்பினை pdf கோப்பாக மாற்றும் பொழுது எப்பொழுதும் போல தெளிவாக தெரிந்தது. அதனால் அதை நான் பெரிதாக கண்டுகொள்ள வில்லை பொதுவாக gtk அடிப்படையிலான gnome desktop environment -ல் பயன்படுத்துகின்ற அனைத்து applicaiton களிலும் தமிழ் தட்டச்சு நன்றாக வேலை செய்தது.  Qt அடிப்படையிலான KDE applicaiton கள் எதிலும் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.


அப்புறம் என்ன எப்பொழுதும் போல இணையத்தில் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது அதற்கிடையில் uim என்ற ஒன்றை நிறுவி சோதித்துப் பார்த்து மண்டை உடைந்து திரும்பியது வேறு கதை.  அதைப் பிறகு பார்த்துக்கொள்வோம்.  தீர்வும் கிடைத்தது.  மிகவும் எளிதான தீர்வுதான், தேடிக்கண்டுபிடிக்கதான் நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டது.

லினக்ஸ்+தமிழ் என நாம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான நண்பர் இலங்கையிலிருந்து தீவீரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லினக்ஸ் தமிழ் ஆர்வலர் மயூரன் அவர்களின் கட்டுரையினைத்தான் நான் தமிழ் தட்டச்சு நிறுவுவதற்கு எப்பொழுதுமே பயன்படுத்துவேன்.


ibus-qt4 பொதி மேற்காணும் கட்டளை வரியில் விடுபட்டு உள்ளது.  Gnome Environment க்கு அது தேவையில்லை ஆகையால் மயூரன் அவர்கள் அதை நிறுவாமல் விட்டிருக்கலாம்.


தீர்வு:

ibus-qt4 எனும் ஒரு பொதி(package) நிறுவப்படாமல் இருந்ததே kde appliaction களில் தமிழ் தட்டச்சு வேலை செய்யாமல் இருந்ததற்கு காரணம்.

முனையத்தில் sudo apt-get install ibus-qt4 எனக்கொடுத்து அந்த பொதியினை நிறுவினேன்.
  



நிறுவிய பிறகு home அடைவிற்குள் இருக்கும் .bashrc எனும் கோப்பில் கீழ்காணும் வரிகளை சேர்த்தேன்.

export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus 
export OOO_FORCE_DESKTOP=gnome

கணினியினை மறுதொடக்கம் செய்துவிட்டு மீண்டும் KDE க்குள் உள்நுழைந்து பயன்படுத்திய பொழுது சரமாரியாக அனைத்து Applicaiton களிலும் பாரபட்சமின்றி நமது இனிய தமிழை தட்டச்சு செய்ய முடிந்தது.


சரி செய்த பின் - Kwrite Text Editor -ல் தமிழ் தட்டச்சு - இந்த பதிவு முழுவதையும் Kwriter லேயே எழுதி முடித்தேன்.

References: