Jan 26, 2010

லினக்சில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 3


இந்த தொடரில் நாம் பார்க்கபோகும் கட்டளை mv
இந்த கட்டளை ஒரு file யினை நகர்த்த (move) செய்ய பயன்படுகிறது
எடுத்துக்காட்டாக $mv file1 file2 என்று கட்டளை கொடுத்தால் file1 ல் உள்ளதை file2 விற்கு நகர்த்திவிடும் .நகர்த்திவிட்டு file1 ஐ அழித்துவிடும் .விண்டோ சில் cut பண்ணி paste செய்வது போல.

கட்டளை அமைத்தல் :

Terminal ஐ திறந்து கொள்ளுங்கள் கீழ்கண்டவாறு கட்டளையை கொடுத்து செயல்படுத்தி பாருங்கள்

$cat > file1
PERIYAR VAAZHKA
TAMIL VAAZHKA

போன்று உங்களுக்கு தேவையான தகவலை உள்ளீடு செய்து கொள்ளுங்கள் .
உள்ளீடு செய்து முடித்தவுடன் Ctrl+D key யினை ஒரு சேர அழுத்துங்கள் இப்பொழுது நீங்கள் உள்ளீடு செய்த தகவலானது file1 என்ற பெயருடன் சேமிக்கப்படும். இப்பொழு நீங்கள் வெற்றிகரமாக ஒரு file யினை உருவாகிவிட்டிர்கள் . நீங்கள் இந்த file1 என்னும் file யினை file2 என்ற பெயருக்கு நகர்த்த வேண்டுமானால்

$mv file1 file2

என்று கொடுங்கள் .

குறிப்பு: (cat கட்டளையை பற்றி பின்வரும் தொடர்களில் பார்க்கலாம் . Ctrl+d யானது file யினை சேமிக்க உதவுகிறது .)

file1 file2 என்று நான் கொடுத்திருக்கும் பெயர்களுக்கு பதிலாக நீங்கள் உங்களுக்கு தேவையான, பிடித்தமான பெர்யர்களை கொடுத்துக்கொள்ளலாம் .
mv கட்டளையை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள file களையும் வேறொரு பெயர்களுக்கு நகர்த்திக்கொள்ளலாம் .

Jan 13, 2010

உபுண்டு லினக்சில் நமக்கு விருப்பமான Theme ஐ மாற்றிக்கொள்வது எப்படி .



இரண்டு வழிகளில் நாம் உபுண்டு வில் Theme யினை மாற்றிக்கொள்ளலாம்.முதல் முறை
System -> Preferences ->Appearance சென்று கிடைக்கும் Appearance Preferances
window இன் மூலம் மாற்றிக்கொள்ளலாம் . அலலது
Desktop மீது வைத்து வலது கிளிக்
செய்து கிடைக்கும் Window இல் Theme எனும் tab ஐ கிளிக் செய்து காட்டும் themes களில்
உங்களுக்கு விருப்பமான theme இன் மீது வைத்து கிளிக் செய்தல் உங்களுக்கு விருப்பமான theme மாறிக்கொள்ளும்

உபுண்டு லினக்சில் உங்களுக்கு பிடித்தமான Shortcut key க்களை நீங்களே அமைக்கலாம்.


விண்டோஸ் இயங்குதளத்தில் windows explore ஐ திறப்பதற்கு windows-key+E
start பொத்தான் செல்வதற்கு windows key ,கோப்பினை தேடுவதற்கு(Search) F3 key
ஒரு application ஐ மூடுவதற்கு Alt+F4 key போன்று

உபுண்டு இயங்குதளத்திலும் நாமே Shortcut key க்களை அமைக்கலாம் .அதற்க்கு
System -> Preferences -> Keyboard Shortcuts சென்று Keyboard Shortcuts என்பதை திறந்து கொள்ளவும்.
Keyboard Shortcuts என்ற விண்டோ திறந்து விடும் அதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான Shortcut key க்களை நீங்களே அமைக்கலாம் .
நீங்கள் எந்த பயன்பாட்டிற்கு Shortcut key னை அதின் மேல் வைத்து கிளிக் செய்தவுடன்
newshortcuts.. என வந்து நிற்கும் இப்பொழுது உங்களுக்கு தேவையா key யினை அழுத்தினால் அந்த key ஆனது அந்த பயன்பாட்டுக்கு shortcut key ஆக அமையும்.
எடுத்துக்காட்டாக நான் workspace Swithcher க்கு முதல் Workspace Switcher க்கு Alt+1
எனவும் இரண்டாவது Workspace Switcher க்கு Alt+2 எனவும் ,மூன்றாவது Workspace Switcher க்கு Alt+3 எனவும் நான்காவது Workspace Switcher க்கு Alt+4 எனவும் அமைத்துள்ளேன் இதுபோல் நீங்களும் உங்களுக்கு விருப்பமானதை அமைத்து பயன்படுத்துங்கள் .

Jan 12, 2010

விண்டோசில் Swithc User கொடுத்து வேறொரு பயனாளருக்குள் மாறுவது போல உபுண்டு லினக்சில் எவ்வாறு அதை செய்வது

விண்டோசில் Swithc User கொடுத்து வேறொரு பயனாளருக்குள் மாறுவது போல உபுண்டு லினக்சில் செய்வதற்கு திரையின் மேல்புற பேனலில் வலது கை ஓரத்தில் நீங்கள் தற்பொழு
பணியாற்றிக்கொண்டு இருக்கும் பயனாளர் பெயருடன் கூடிய ஒரு சிறிய icon இருக்கும்
அதில் நீங்கள் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பயனாளர்களை வைத்து இருந்தால் அதை கிளிக்
செய்து கிடைக்கும் சிறிய drop down list இல் நீங்கள் மாற விரும்பும் பயனாளர் பெயர்
இருக்கும் அதை கிளிக் செய்தால் பயனாளர் பெயர் ,கடவுச்சொல் ஆகியவற்றை கொடுத்து நீங்கள் தற்பொழுது பணியாற்றிக்கொண்டு இருக்கும்
பயனாளரை மூடாமலே வேறொரு பயனாளருக்குள் மாறிக்கொள்ளலாம்

லினக்சில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 2

இந்த தொடரில் நாம் பார்க்கபோகும் கட்டளை pwd -> Print Working Directory

இந்த கட்டளையானது நீங்கள் தற்பொழுது இருக்கும் directory யை print செய்யும்


$pwd என கொடுத்து Enter Key அழுத்தவும். நீங்கள் home directory இனுள் இருந்தால்
/home என print செய்யும்

$cd /home/kathirvel என கொடுத்து வேறொரு directory க்குள் மாறியப்பிறகு $pwd என கொடுத்தால்

/home/kathirvel என print செய்யும்.

இதுபோல் நீங்கள் வெவ்வேறு directory க்குள் மாறிக்கொண்டு $pwd கட்டளையை செயல்படுத்திப்பாருங்கள்

$pwd கட்டளையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துக்கொள்ள விரும்பினால்
$man pwd என கொடுத்து Enter key யை அழுத்தினால் pwd என்ற கட்டளையை பற்றி அதிகமாக தெரிந்துக்கொள்ளலாம்.
$man கட்டளை யானது நீங்கள் எந்த கட்டளையை பற்றி தெரிந்து கொள்ள விருப்ப படுகிறிர்களோ அந்த கட்டளையினுடைய manual பக்கத்தை கொடுக்கும்.

உதாரணமாக top கட்டளையின் manual உங்களுக்கு வேண்டுமானால் கட்டளையினை இவ்வாறு அமைக்கலாம்.

$ man top

குறிப்பு:கொடுத்திருக்கும் $ குறியீடானது முனையத்தில் (terminal) காட்டுவது அதையும் கட்டளையுடன் சேர்த்து கொடுத்து விடாதீர்கள்.

Jan 11, 2010

உபுண்டுவில் Login Screen ஐ மாற்றிக்கொள்வது எப்படி.

உபுண்டு லினக்சில் நாம் நமக்கு தேவையான Login Screen ஐ மாற்றிக்கொள்ளலாம் .
அதற்க்கு System -> Administration -> Login Window சென்று login window ஐ
கிளிக் செய்து அதை திறந்துக்கொள்ளவும்.

Login Window Preferances எனும் window கிடைக்கும்
அதில் local எனும் tab ஐ கிளிக் செய்யவும் அதில் உங்களுக்கு தேவையான login screen ஐ
தேர்வு செய்து கொள்ளவும்.
தேர்வு செய்து முடித்த பிறகு Login Window Preferences எனும் window ஐ மூடி விடவும்.

நீங்கள் Ubuntu Linux யினை விண்டோஸ் மூலமா நிறுவியிருந்தால் root account ஐ எப்படி Enable செய்வது.


System -> Administration -> Users and Groups என்பதை கிளிக் செய்யவும் கடவுச்சொல்
கேட்டால் தற்பொழுது நீங்கள் Login ஆகியிருக்கும் account யினுடைய கடவுச்சொல்லை
உள்ளீடு செய்யவும்.

அதை தொடர்ந்து வரும்
விண்டோ இல் root என்பதை கிளிக் செய்து Unlock என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து கிடைக்கும் Window இல் கடவுச்சொல்லை உள்ளீடாக கேட்கும் Window கிடைக்கும்
அதில் தற்பொழுது நீங்கள் நுழைந்து இருக்கும் பயனாளரினுடைய கடவுச்சொல்லை
உள்ளீடு செய்து Athenticate எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.



அடுத்து Users Settings எனும் window தோன்றி கொண்டு இருக்கும் அதில் root என்பதனை
கிளிக் செய்து Properties எனும் பொத்தானை கிளிக் செய்யவும்
அடுத்து வரும் Account 'ரூட்' properties எனும் விண்டோ கிடைக்கும் அதில்
set password by hand என்பதில் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை உள்ளீடு செய்து
ok எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.User settings எனும் விண்டோவை மூடி விடவும்.
இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக root account ஐ enable செய்திருப்பீர்கள்

Jan 10, 2010

டெர்மினல் மூலம் CD-Drive யினை Eject செய்வதற்கு


Applications -> Accessories ->Terminal சென்று முனையத்தை (Terminal) திறந்து கொள்ளவும்.

முனையத்தில் சென்று $eject /dev/cdrom என்று தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.

இப்பொழுது CD-Drive திறக்கும்.

உபுண்டு லினக்சில் புதிதாக ஒரு பயனாளரை(User Account) Terminal மூலம் உருவாக்க .


Applications -> Accessories -> Terminal சென்று முனையத்தை திறந்துகொள்ளவும்.
சுட்டி $ வந்து நிற்கும் .
நீங்கள் ஒரு புது பயனாளரை உருவாக்க root அனுமதி பெற்று இருக்க வேண்டும் .
அதற்கு முனையத்தில் $su எவ்வாறு கட்டளை கொடுத்து ENTER கியினை அழுத்தவேண்டும்.
இப்பொழுது root account கடவுச்சொல் கேட்க்கும் கடவுச்சொல்லை உள்ளிடு செய்து enter
key கியினை அழுத்தவும்.

அழுத்தியபிறகு டெர்மினலில் சுட்டி # இவ்வாறு மாறியிருக்கும் இப்பொழுது
$useradd periyar என கொடுத்து Enter key யினை அழுத்தவும் .இப்பொழுது நாம் உருவாக்கிய பயனாளர்களுக்கு கடவுச்சொல் அமைக்கவேண்டும்.
அதற்க்கு
$passwd periyar என கொடுத்து ENTER key யினை அழுத்தவும்.
தற்பொழுது நீங்கள் ஒரு புது பயனாளரை உருவாக்கியிருப்பீர்கள்.

உபுண்டுவில் Workspace Switcher அதிகப்படுத்த



உபுண்டு லினக்சில் அடியில் உள்ள பேனலில் வலது கை ஓரத்தில் Workspace Switcher
இருக்கும்.ஒவ்வொரு workspace உம் ஒரு புதிய Desktop ஆக செயல்பாடும.

அதன் மீது வைத்து வலது கிளிக் செய்யவும் .காட்டும் மெனுவில் preferences என்பதை
கிளிக் செய்யவும் அடுத்து வரும் Workspace Switcher Preferences சாளரத்தில்
Number Of Workspace என்பதில் உங்களுக்கு தேவையான அளவு அதிகப்படுத்தி கொள்ளவும்.
உபுண்டு லினக்சில் Default ஆக 2 -Workspace Switcher கள் இருக்கும் இதை
நீங்கள் மேற்கண்ட முறையில் அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

Jan 8, 2010

உபுண்டு லினக்சில் சி மொழியை எவ்வாறு இயக்குவது

முதலில் Applications -> Accessories -> Terminal சென்று டெர்மினலை கொள்ளவும் .
டெர்மினலில் சுட்டி
$ இவ்வாறு வந்து நிற்கும் அதற்கு பிறகு நிரலை தட்டச்சு செய்ய nano என்கிற எடிட்டர்ஐ பயன்படுத்தி நாம் சி நிரலை தட்டச்சு செய்ய வேண்டும் அதற்கு
டெர்மினலில் இவ்வாறு தட்டச்சு செய்யவும்.
$nano tamilan.c என தட்டச்சு செய்து ENTER பொத்தானை அழுத்தவும்.

உங்களுடைய நிரலை தட்டச்சு செய்து முடித்தவுடன் நிரலை சேமிக்க Control key + O (Ctrl+O) அழுத்தவும் அழுத்தி முடித்தவுடன் Enter key அழுத்தவும்.
எடிட்டரை விட்டு வெளியேற Ctrl + X key அழுத்தவும்.


நிரலை compile செய்வதற்கு டெர்மினலில் gcc tamilan.c என தட்டச்சு செய்து Enter key அழுத்தவும்.நிரலில் பிழை இல்லை என்றால் சுட்டி $ இவ்வாறு வந்து நிற்கும்.

நிரலின் வெளியீட்டை பார்ப்பதற்கு டெர்மினலில் ./a.out என தட்டச்சு செய்து Enter key அழுத்தவும்.

சுருக்கமாக.

$nano tamilan.c

save = Ctrl+O
exit = Ctrl+X

$gcc tamilan.c
$./a.out

Jan 6, 2010

ஐரோப்பிய நாடுகள் லினக்சுக்கு

பல்வேறு நாடுகளின் அரசுகள் லினக்சுக்கு மாறுவது போலவே ஐரோப்பிய நாடுகளும் லினக்சுக்கு மாறத் தொடங்கிவிட்டன .ஏற்கனவே அமெரிக்கா லினக்சை பயன்படுத்த தொடங்கிவிட்டது ஐரோப்பிய அரசுகள் இந்த முடிவு எடுப்பதற்கு சாதகமாக அமைந்துவிட்டது.ஸ்பெயின் அரசு இதுவரை 7500 கணினிகளை லினக்சுக்கு மாற்றி விட்டது பிரான்சின் சட்டத்துறை லினக்சுக்கு மாறுகிறது.

நன்றி:தமிழ் கம்ப்யூட்டர் பிப்ர 1-15-2007 பக்கம் எண்-33

Jan 5, 2010

உபுண்டுவில் ரூட் account -ஐ enable செய்வதற்கு.

  1. System -> Administration -> Loginwindow செல்லவும்.
  2. கடவுச்சொல் (password ) கேட்டால் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
  3. அதில் Security எனும் Tab -ஐ Click செய்யவும்.
  4. Allow local system administrator login என்பதில் உள்ள check box -ல் டிக் செய்யவும்.
  5. இனிமேல் நீங்கள் login screen மூலமாகவே root account ற்குள் செல்லலாம்.

லினக்ஸ் கற்றுக்கொள்ள விரும்பு.....

1.ஏதாவதொரு நல்ல சிறப்பான லினக்ஸ்ஐ நிறுவ கற்றுக்கொள்ளவும்.(உங்கள் நண்பர்களில் யாருக்காவது லினக்ஸ் பற்றி தெரியுமானால் அவர்களிடம் தெளிவாக எப்படி நிறுவுவது என்று தெரிந்து கொள்ளவும்)
2.நம்முடைய இந்த வலைப்புவில் கொடுக்கப்பட்டிருக்கும் (தமிழில் லினக்ஸ் கற்றுக்கொள்ள என்ற தலைப்பின் கீழ் ) வலைப்பூவினை நன்றாக படித்து தெரிந்துகொள்ளவும் .
3.தொடக்க நிலை லினக்ஸ் பயனாளர்களுக்கு உபுண்டு லினக்ஸ் சரியான தேர்வாகும் .
4.இணையத்தில் லினக்ஸ் சம்பந்தமான தகவலினை தேடவும்.
5.முடிந்தால் LINUX FOR YOU என்ற இதழினை படித்துவரவும்.
5.லினக்ஸ் கமண்டினை செயல்படுத்தி பயிற்சி எடுக்கவும்.

Jan 3, 2010

குனு என்றால் என்ன ?

  • யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திட்டம் குனு (GNU). இதனை துவக்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் . இந்த இயங்கு தளம் ஒரு கட்டற்ற மென்பொருளாகும்(Free Software). இதற்கு குனு அமைப்பென்று பெயர்.
  • குனுவின் கரு (Kernal) பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்றுபல கோடி பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினசின் கூட்டமைப்பிற்கு குனு / லினக்ஸ் என்று பெயர்.
  • "குனு யுனிக்ஸ் அல்ல" (Gnu's Not Unix) என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு - நூ என
  • இது உச்சரிக்கப்படுகிறது. விளங்கு எனும் போது எழும் குற்றியலுகரத்தை போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.
  • இணையத்தளம்: www.gnu.org
குறிப்பு: இந்த தகவல் கட்டற்ற மென்பொருள் - ரிச்சர்ட் ஸ்டால்மன் - தமிழாக்கம் - ம.ஸ்ரீ.ராமதாஸ் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.