Showing posts with label முனையம் (Terminal) மூலமாக செய்பவைகள். Show all posts
Showing posts with label முனையம் (Terminal) மூலமாக செய்பவைகள். Show all posts

Aug 9, 2014

Color Code of Terminal

Mac Theme தோற்றத்தில் Terminal(முனையம்)
உபுண்டுவில் அடிக்கடி நமக்கு பிடித்தமான Theme களை மாற்றும் போது அந்த Theme க்கு ஏற்ப முனையத்தின் பின்புல நிறமும், அதிலுள்ள எழுத்துக்களின் நிறமும் மாறிவிடும். ஆனால் எனக்கு பிடித்தமான நிறம் உபுண்டுவுடன் இயல்பாகவே வரும் நிறம்தான்.
உபுண்டுவின் இயல்பான தோற்றத்தில் Terminal(முனையம்)
அண்மையில் உபுண்டு 14.04 இல் Mac Theme ஐ நிறுவினேன். மிகவும் அழகா இருந்தது. ஆனால் முனையத்தின் நிறத்தோற்றம் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை அதனால் Profile Preferences, Color க்குச் சென்று Custom என்பதைச் சொடுக்கி கீழ்காணும் Color Code ஐ உள்ளீடு செய்தேன். அவ்வளவுதான் முனையத்தின் பழைய தோற்றம் கிடைத்தது. RGB Code: (48, 10, 36) இந்த RGB Code ஐ இந்த தளத்திற்குச் பதினாறு அடிமான(Hexadecimal) எண்ணாக மாற்றினேன்.

Color Code: #300A24

Color Code ஐ உள்ளீடு செய்தல்

Feb 8, 2012

உபுண்டு லினக்ஸ் நிறுவிய தேதியினை தெரிந்துகொள்வோம்

நாம் எல்லோரும் மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று, நான் இந்த பொருளை இத்தனை வருடங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்பது. அட இதுநாள் வரையிலும் எந்த பிரச்சனையுமே வந்ததுயில்லீங்க!!!. என கூறக் கேட்டிருப்போம்.(இது நாம் பல்துலக்க பயன்படுத்தும் பிரஷிலிருந்து , செல்போன் வரை)

அதுபோல, நாம் பயன்படுத்தும் உபுண்டு லினக்ஸினையும் நிறுவி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என தெரிந்துகொள்ளவும் நமக்கெல்லாம் ஆசையாக இருக்கும். தெரிந்துக்கொண்டு என்ன தம்பி பண்ணுறதுனு கேட்கிறீங்களா, மற்றவர்களிடம் கூறி பெருமைப் பட்டுக்கொள்ளளாமில்லையா !!!.

நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு லினக்ஸ் நிறுவிய தேதியினை தெரிந்துக்கொள்ள நிறைய வழிகள் இருக்கிறது. அதில் இரண்டு வழிகளினை மட்டும் இங்கு பார்ப்போம்.

வழி ஒன்று:

sudo ls -al /var/log/installer/syslog என்ற கட்டளையின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். படம் - 1 னைப் பார்க்கவும்.


படம் -1

வழி இரண்டு:

sudo cat /var/log/installer/syslog | less

கட்டளையின் மூலம் தெரிந்துக்கொள்வது. இந்த கட்டளையினை கொடுத்தவுடன் உங்களுக்கு நிறைய செய்திகள் கிடைக்கும் அதில் முனையத்தினுடைய இடதுபுறமாக தேதி காண்பிக்கப்படும். அதுதான் நாம் உபுண்டு நிறுவிய தேதி. பார்க்க படம் -2 மற்றும் படம் -3

படம் -2

படம் -3
படம் -3 -ல் உள்ளதுப் போன்ற செய்திகள் கிடைக்கும் திரையினை விட்டு வெளியேற Q - Key -னை அழுத்தவும்.

நான் உபுண்டு 10.10 பதிப்பு பயன்படுத்துகிறேன். நிறுவிய தேதி 21/05/2011 . அட என்னோட உபுண்டு நிறுவி முழுமையாக 8-மாதம் ஆகியிருச்சுங்க. அட இதுவரையிலும் எந்த பிரச்சினையும் இல்லீங்க!!!!!!!.

சரி விண்டோஸ் இயங்குதளம்? அட இந்த 8-மாதத்திற்குள் 3-முறை மறு நிறுவல் செய்து விட்டேங்க. விண்டோஸ் இயங்குதளம் 3-மாதத்திற்கு மேல் தாங்குவதெல்லாம் ஒரு பெரிய சாதனைங்க!!

Nov 3, 2011

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?

படம்-1
படம்-2
படம் - 3
என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தையும், உபுண்டு லினக்ஸ் 10.10 இயங்குதளத்தையும் இரட்டை நிறுவலாக நிறுவி வைத்திருந்தேன். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி இரண்டு வருடமாகிவிட்டது, விண்டோஸ் இயங்குதளத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை, அவ்வப்போது ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்திற்காக பயன்படுத்துவேன். ஒரு பொறியியல் படிக்கும் மாணவன் என்ற முறையில் உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் எனக்கு போதுமானதாக இருக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனமே பயனாளர்களுக்கு பரிந்துரைக்கிறது. அப்படி இருக்கையில் நான் விண்டோஸ் இயங்குதளத்தை இரண்டு வருடம் வரை மாற்றாமல் வைத்திருந்ததெல்லாம் , விண்டோஸ் இயங்குதளத்திற்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

என்னதான் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள்களை நாம் நிறுவி வைத்திருந்தாலும், வைரஸ் தொல்லை என்பது விண்டோஸிற்கு உடன்பிறப்பாகவே ஆகிவிட்டது. உருவத்துடன் வரும் நிழல் போல.

அத்துடன் நீலத்திரை மரணம் என்பது விண்டோஸில் இயல்பானது. என்னுடைய மடிக்கணினியில் இருந்த விண்டோஸிற்கு இந்த மரணம் வந்துவிட்டது. ஆகையால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்த முடியவில்லை.

எனவே விண்டோஸ் இயங்குதளத்தை மீண்டும் நிறுவலாம் என முடிவு செய்தேன். ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. விண்டோஸ் இயங்குதளதை நிறுவினால் ஏற்கனவே நிறுவியுள்ள உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் காணாமல் போய்விடும்.


விண்டோஸ் இயங்குதளத்துடன் லினக்ஸை நிறுவும் பொழுது, கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளைத்தை லினக்ஸ் கண்டறிந்து, தன்னுடன் சேர்த்துக்கொண்டு பயனாளருக்கு இரண்டு இயங்குதளத்தையும் காட்டும். அதில் பயனாளருக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இந்த விண்டோஸ் இயங்குதளம் மட்டும் கணினியில் உள்ள எந்த இயங்குதளத்தையும் கண்டுகொள்ளாது அது மட்டும் வன்வட்டில் இருந்து கொள்ளும். (என்ன கொடுமை சார் இது. இப்படியும் ஒரு இயங்குதளமா!!!)

மறுபடியும் உபுண்டு லினக்ஸை நிறுவி , இணையத்தை இணைத்து நம்முடைய பயன்பாட்டிற்குண்டான மென்பொருள்களை நிறுவி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் நம்முடைய நிறைய நேரம் விரையாமாகியிருக்கும்.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உபுண்டு லினக்ஸை மீண்டும் புதிதாக நிறுவாமல் ஏற்கனவே நிறுவி வைத்திருப்பதையே கொண்டு வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என யோசித்தேன்.

இது தொடர்பாக ஏற்கனவே தோழர் மு.மயூரன் அவர்கள் "வின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்" என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த பதிவு ஓரளவு அடிப்படையினை புரிந்து கொள்ள உதவியது.



படம்-4

தோழர் மயூரன் எழுதியிருக்கும் வழிமுறைகள் உபுண்டு 9.04 வரையிலும் செல்லுபடியாகும். உபுண்டு 9.10 லிருந்து, உபுண்டு வினுடைய GRUB Boot Loader Upgrade செய்யப்பட்டுள்ளது.

நான் நிறுவியுள்ளது உபுண்டு 10.10. ஆகையால் மயூரன் எழுதியிருந்த வழிமுறைகள் வேலை செய்யவில்லை. அப்புறம் என்ன இருக்கவே இருக்கிறார் கூகுளார், அவரிடமே கேட்டேன் கொடுத்தார் வழிமுறைகளை.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருக்கும் உபுண்டுவினை கொண்டு வருவது மிக மிக எளிமையான ஒன்று. எனவே நாம் உபுண்டு போய்விடுமோ, மறுபடியும் நிறுவ வேண்டி வருமோ என பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இதற்கு தேவையானவை:

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகுதான், நாம் உபுண்டுவை திரும்பப் பெறும் வேலையை ஆரம்பிக்க போகிறோம்.

உபுண்டு 9.10 அல்லது அதற்கு பிறகு வெளிவந்த உபுண்டு வில் ஏதாவது ஒரு உபுண்டு வட்டு (Ubuntu CD). இது மிகவும் முக்கியம்.

உபுண்டுவினை நிறுவியிருக்கும் Partition னினுடைய Partition Number. இதை நீங்கள் உபுண்டுவில் System => Administration => Disk Utility சென்று தெரிந்து கொள்ளலாம். அல்லது Gpartition Editor மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.

Root Mount Point னுடைய Number னை மட்டும் குறித்துக்கொண்டால் போதுமானது.

Boot Mount Point யினை தனியாக பிரித்து இருந்தால் /boot னுடைய Partition Number ஐயும் குறித்துக்கொள்ளுங்கள் (கண்டிப்பாக).

அவ்வளவுதான் முதற்கட்ட வேலைகள் முடிந்தது.

இப்பொழுது உபுண்டு வட்டினை (9.04 க்கு பிறகு வெளியிடப்பட்ட பதிப்பு) சி.டி டிரைவினுள் நிழைத்து சி.டி யிலிருந்து கணினியினை Boot செய்யுங்கள். நிகழ் வட்டாக பூட் செய்ய வேண்டும். அதாவது Live CD யாக.

சி.டி யிலிருந்து கணினி Live ஆக Boot ஆகிய பிறகு. உபுண்டு வினுடைய Desktop உங்களுக்கு கிடைக்கும், கிடைத்த பிறகு

Applications => Accessories => Terminal சென்று Terminal ஐ திறந்துக்கொள்ளுங்கள். முனையம் திறந்த வுடன் கீழ்கண்ட கட்டளைகளை கொடுங்கள்.

sudo mount /dev/sdaX /mnt

இங்கு /dev/sdaX என்பதில் X என்னுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே உபுண்டு நிறுவியிருக்கும் root Partition னினுடைய எண்ணினை குறித்து வைத்திருப்பீர்கள் இல்லையா அதை கொடுக்கவும்.

உதாரணமாக என்னுடைய வன்வட்டில் root partition னுடைய எண் /dev/sda9 ஆகையால், நான் /dev/sda9 என கொடுத்திருக்கிறேன். (sudo, mount, /dev/sdaX, /mnt இவற்றுக்கு இடையில் single space கட்டாயாம் இருக்க வேண்டும்.)

நீங்கள் /boot ற்கென தனியாக ஒரு partition உருவாக்கியிருந்தால் கீழே உள்ள கட்டளையினை கொடுங்கள், இல்லையென்றால் வேண்டாம்.

sudo mount /dev/sdaY /mnt/boot

இங்கு /dev/sdaY என்பதில் Y என்னுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே உபுண்டு நிறுவியிருக்கும் boot Partition னினுடைய எண்ணினை குறித்து வைத்திருப்பீர்கள் இல்லையா அதை கொடுக்கவும்.

உதாரணமாக என்னுடைய வன்வட்டில் boot partition னுடைய எண் /dev/sda10 ஆகையால், நான் /dev/sda10 என கொடுத்திருக்கிறேன். (sudo, mount, /dev/sdaY, /mnt/boot இவற்றுக்கு இடையில் single space கட்டாயாம் இருக்க வேண்டும்.)

மேலே உள்ள கட்டளைகளைக் கொடுத்த பிறகு இறுதியாக இந்த கட்டளையினைக் கொடுக்கவும்.

sudo grub-install --root-directory=/mnt/ /dev/sda


இந்த கட்டளையினைக் கொடுத்து முடித்தவுடன். Installation Finished. No error reported. என ஒரு வெளியீட்டு செய்தி கிடைக்கும். அவ்வளவுதான் முனையத்தை மூடி விட்டு, கணினியினை Restart செய்யவும்.

Restart செய்து கணினியினை ஆரம்பித்தவுடன் உங்களுக்கு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டுவினுடைய GRUB Boot Loader கிடைக்கும்.

நான் மேலே கொடுத்துள்ள படம் -4 னை பெரிதுப்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எளிமையாக இருக்கும்.

உங்களுக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். உபுண்டு வேண்டுமென்றால் உபுண்டு , விண்டோஸ் வேண்டுமென்றால் விண்டோஸ்.

குறிப்பு:

இங்கு /dev/sda என குறிப்பிட்டுள்ளது Serial ATA தொழில்நுட்பம் கொண்ட வன்வட்டிற்குண்டானது. இன்றைக்கு பெரும்பாலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட வன்வட்டுதான் பயன்பாட்டில் உள்ளது. ஒரு வேளை உங்களுடைய வன்வட்டு IDE தொழில்நுட்பம் கொண்டதாக இருந்தால் /dev/hda என வரும்.


Oct 1, 2010

முனையத்தின் மூலம் நாம் Folder மற்றும் Sub-Folder னுடைய அளவுகளைக் கண்டுபிடிக்கலாம்

முனையத்தின் மூலம் நாம் Folder மற்றும் Sub-Folder னுடைய அளவுகளைக் கண்டுபிடிக்கலாம்.முனையத்தில் நீங்கள் எந்த Folder னுடைய அளவினை கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த Folder க்குள் மாறிக்கொள்ளுங்கள்.மாறிக்கொண்டு முனையத்தில் Folder Size ஐக் கண்டுபிடிக்க du -sh எனக் கொடுங்கள்.Sub-Foler Size ஐக் கண்டுபிடிக்க du * -sh எனக் கொடுங்கள்.

-sh என்பதில்

s என்பது Summarise என்பதையும், h என்பது human readable format என்பதையும் குறிக்கிறது.

Jan 12, 2010

லினக்சில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 2

இந்த தொடரில் நாம் பார்க்கபோகும் கட்டளை pwd -> Print Working Directory

இந்த கட்டளையானது நீங்கள் தற்பொழுது இருக்கும் directory யை print செய்யும்


$pwd என கொடுத்து Enter Key அழுத்தவும். நீங்கள் home directory இனுள் இருந்தால்
/home என print செய்யும்

$cd /home/kathirvel என கொடுத்து வேறொரு directory க்குள் மாறியப்பிறகு $pwd என கொடுத்தால்

/home/kathirvel என print செய்யும்.

இதுபோல் நீங்கள் வெவ்வேறு directory க்குள் மாறிக்கொண்டு $pwd கட்டளையை செயல்படுத்திப்பாருங்கள்

$pwd கட்டளையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துக்கொள்ள விரும்பினால்
$man pwd என கொடுத்து Enter key யை அழுத்தினால் pwd என்ற கட்டளையை பற்றி அதிகமாக தெரிந்துக்கொள்ளலாம்.
$man கட்டளை யானது நீங்கள் எந்த கட்டளையை பற்றி தெரிந்து கொள்ள விருப்ப படுகிறிர்களோ அந்த கட்டளையினுடைய manual பக்கத்தை கொடுக்கும்.

உதாரணமாக top கட்டளையின் manual உங்களுக்கு வேண்டுமானால் கட்டளையினை இவ்வாறு அமைக்கலாம்.

$ man top

குறிப்பு:கொடுத்திருக்கும் $ குறியீடானது முனையத்தில் (terminal) காட்டுவது அதையும் கட்டளையுடன் சேர்த்து கொடுத்து விடாதீர்கள்.

Jan 10, 2010

டெர்மினல் மூலம் CD-Drive யினை Eject செய்வதற்கு


Applications -> Accessories ->Terminal சென்று முனையத்தை (Terminal) திறந்து கொள்ளவும்.

முனையத்தில் சென்று $eject /dev/cdrom என்று தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.

இப்பொழுது CD-Drive திறக்கும்.

Jan 8, 2010

உபுண்டு லினக்சில் சி மொழியை எவ்வாறு இயக்குவது

முதலில் Applications -> Accessories -> Terminal சென்று டெர்மினலை கொள்ளவும் .
டெர்மினலில் சுட்டி
$ இவ்வாறு வந்து நிற்கும் அதற்கு பிறகு நிரலை தட்டச்சு செய்ய nano என்கிற எடிட்டர்ஐ பயன்படுத்தி நாம் சி நிரலை தட்டச்சு செய்ய வேண்டும் அதற்கு
டெர்மினலில் இவ்வாறு தட்டச்சு செய்யவும்.
$nano tamilan.c என தட்டச்சு செய்து ENTER பொத்தானை அழுத்தவும்.

உங்களுடைய நிரலை தட்டச்சு செய்து முடித்தவுடன் நிரலை சேமிக்க Control key + O (Ctrl+O) அழுத்தவும் அழுத்தி முடித்தவுடன் Enter key அழுத்தவும்.
எடிட்டரை விட்டு வெளியேற Ctrl + X key அழுத்தவும்.


நிரலை compile செய்வதற்கு டெர்மினலில் gcc tamilan.c என தட்டச்சு செய்து Enter key அழுத்தவும்.நிரலில் பிழை இல்லை என்றால் சுட்டி $ இவ்வாறு வந்து நிற்கும்.

நிரலின் வெளியீட்டை பார்ப்பதற்கு டெர்மினலில் ./a.out என தட்டச்சு செய்து Enter key அழுத்தவும்.

சுருக்கமாக.

$nano tamilan.c

save = Ctrl+O
exit = Ctrl+X

$gcc tamilan.c
$./a.out