இந்த கட்டளையானது நீங்கள் தற்பொழுது இருக்கும் directory யை print செய்யும்
$pwd என கொடுத்து Enter Key அழுத்தவும். நீங்கள் home directory இனுள் இருந்தால்
/home என print செய்யும்$cd /home/kathirvel என கொடுத்து வேறொரு directory க்குள் மாறியப்பிறகு $pwd என கொடுத்தால்
/home/kathirvel என print செய்யும்.
இதுபோல் நீங்கள் வெவ்வேறு directory க்குள் மாறிக்கொண்டு $pwd கட்டளையை செயல்படுத்திப்பாருங்கள்
$pwd கட்டளையை பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துக்கொள்ள விரும்பினால்
$man pwd என கொடுத்து Enter key யை அழுத்தினால் pwd என்ற கட்டளையை பற்றி அதிகமாக தெரிந்துக்கொள்ளலாம்.
$man கட்டளை யானது நீங்கள் எந்த கட்டளையை பற்றி தெரிந்து கொள்ள விருப்ப படுகிறிர்களோ அந்த கட்டளையினுடைய manual பக்கத்தை கொடுக்கும்.
உதாரணமாக top கட்டளையின் manual உங்களுக்கு வேண்டுமானால் கட்டளையினை இவ்வாறு அமைக்கலாம்.
$ man top
குறிப்பு:கொடுத்திருக்கும் $ குறியீடானது முனையத்தில் (terminal) காட்டுவது அதையும் கட்டளையுடன் சேர்த்து கொடுத்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment