Jan 10, 2010

உபுண்டு லினக்சில் புதிதாக ஒரு பயனாளரை(User Account) Terminal மூலம் உருவாக்க .


Applications -> Accessories -> Terminal சென்று முனையத்தை திறந்துகொள்ளவும்.
சுட்டி $ வந்து நிற்கும் .
நீங்கள் ஒரு புது பயனாளரை உருவாக்க root அனுமதி பெற்று இருக்க வேண்டும் .
அதற்கு முனையத்தில் $su எவ்வாறு கட்டளை கொடுத்து ENTER கியினை அழுத்தவேண்டும்.
இப்பொழுது root account கடவுச்சொல் கேட்க்கும் கடவுச்சொல்லை உள்ளிடு செய்து enter
key கியினை அழுத்தவும்.

அழுத்தியபிறகு டெர்மினலில் சுட்டி # இவ்வாறு மாறியிருக்கும் இப்பொழுது
$useradd periyar என கொடுத்து Enter key யினை அழுத்தவும் .இப்பொழுது நாம் உருவாக்கிய பயனாளர்களுக்கு கடவுச்சொல் அமைக்கவேண்டும்.
அதற்க்கு
$passwd periyar என கொடுத்து ENTER key யினை அழுத்தவும்.
தற்பொழுது நீங்கள் ஒரு புது பயனாளரை உருவாக்கியிருப்பீர்கள்.

No comments: