Showing posts with label தமிழக அரசு. Show all posts
Showing posts with label தமிழக அரசு. Show all posts

Oct 4, 2016

ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள 90% அரசு இணையதளங்கள்: தமிழில் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு


தமிழக அரசு இணையதளங்களில் 90 சதவீதத்துக்கும் மேலான இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களை அளிக் கின்றன. அவை தமிழில் இல்லாததால் சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத அவலநிலை உள்ளது.

ஆட்சி, நிர்வாகம், சட்டம், கல்வி, மக்கள் நல்வாழ்வு, செய்தித் தொடர்பு என நாள்தோறும் அரசு இணையதளங்களின் தேவை பெருகி வருகிறது. அதே வேளையில், எந்தவொரு அரசும் தன் மக்களின் மொழியில் செய்தித்தொடர்பை மேற்கொள் வது காலத்தின் தேவையாகும். தமிழக அரசைப் பொருத்தவரை 37-க்கும் மேற்பட்ட அரசுத் துறை கள், அதன் சார்பு நிறுவனங்கள், 20 அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட அரசு இணைய தளங்கள் உள்ளன. இவற்றில் மிகக்குறைந்த இணையதளங்கள் மட்டுமே தமிழில் தகவல்களை அளிக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி கூறியதாவது:

தமிழக அரசு இணையதளங் களை ஆய்வு செய்ததில் அவற்றில் தமிழின் பயன்பாடு 8.97 சதவீதம் மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் ஆங்கி லத்தில்தான் தகவல்கள் இடம்பெற் றுள்ளன. உதாரணமாக, தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக சட்டப் பேரவை, பதிவுத்துறை உள்ளிட்ட இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கலைக்கழக இணையதளம் தவிர வேறு எந்தவொரு பல்கலைக்கழக இணையதளமும் தமிழில் இல்லை. மேலும், தமிழில் தகவல் உள்ள சில இணையதளங்களிலும் முகப்புப் பக்கம் ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழில் தகவல்கள் இல்லாததால் மக்கள் தகவல் பெறுவது தடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு துறையின் வெளிப்படைத் தன் மையும், பொறுப்புத்தன்மையும் மறைக்கப்படுகிறது.

மத்திய அரசின் 90 சதவீத இணையதளங்களில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழி களிலும் தகவல்கள் உள்ளன. இலங்கையில்கூட எல்லா அரசு இணையதளங்களும் தமிழில் தகவல்களை அளித்து வரு கின்றன.

ஆனால், தமிழக அரசின் இணையதளங்கள் தமிழில் இல்லை என்பது பெரும் குறை யாக உள்ளது. எனவே, 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் ‘தமிழக அரசின் இணைய தளங்கள் நிச்சயம் தமிழில் இருக்க வேண்டும்’ என்று சிறு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அரசு இணையதளங்களில் தமிழில் தகவல்கள் இடம்பெறுவதை தகவல் தொழில்நுட்பத்துறை அல்லது தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கணிப்பொறியியல் ஆய்வாளர் துரைப்பாண்டி இது பற்றி கூறும்போது, “இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் உள்ளிட்ட கையடக்க சாதனங்களில்தான் அதிக அளவில் இணையத்தை பயன் படுத்துகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழக அரசு இணையதளங்கள் ‘டேப்லெட்’, ‘ஐ-பேட்’, செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் திரைக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு இணையதள தகவல்களை கணினியில் மட்டும் தான் சரிவர பார்க்க முடியும் என்ற அவல நிலை உள்ளது.

‘ரெஸ்பான்சிவ் வெப் டிசைன்’

எனவே, அனைத்து சாதனங்க ளுக்கும் ஏற்றவாறு ‘ரெஸ்பான்சிவ் வெப் டிசைன்’ வடிவமைப்பில் இணைய தளங்களை வடிவமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். மேலும், எந்தவொரு இணையதளத்தையும், அது செல்போனுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை கூகுளின் www.google.com/webmasters/tools/mobile-friendly/ என்ற இணையதளத்துக்கு சென்று, தொடர்புடைய இணைய தள முகவரியை பதிவிட்டு அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

நன்றி: தி இந்து(தமிழ்)

Dec 5, 2014

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம் மக்கள் பணம் ரூ.120 கோடி வீண்

நன்றி: தினகரன்
தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தைப் பற்றி "தமிழக அரசின்  இலவச மடிக்கணினித் திட்டம்" எனும் தலைப்பில் எனது கருத்துக்களை ஏற்கனவே நான் இங்கு பதிவு செய்துள்ளேன். இந்த திட்டம் பற்றி  ilug-chennai (Indian Linux Users Group - Chennai) - யின் ஒருங்கிணைபாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறிய கருத்துக்கள் LINUX For You Magazine  இல் வெளிவந்துள்ளது. இதைப்பற்றி Richard Stallman அவர்களும் விமர்சித்துள்ளனர்.

அதுபோல தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் இலவச மடிக்கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொடுப்பதால் மக்களின் பணம் எவ்வளவு வீணாகிறது என்பதைப்பற்றிய செய்தியை இன்றைய தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தினகரனில் வெளிவந்த செய்தி பின்வருமாறு

சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்களில்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளம் பயன்படுத்துவது என்ற தமிழக  அரசின் முடிவால், மக்கள் பணம் ரூ.120 கோடி வீணாகிறது. அதோடு,  மாணவர்களுக்கு வழங்கப்படும்போது இந்த இயங்குதளம்  காலாவதியாகிவிடும் என்பதால், கையில் கிடைத்தும் அதன் பலனை  அனுபவிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2  மாணவ, மாணவிகள், அரசு மற்றும் உதவிபெறும் கலை அறிவியல்  கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்  கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கம்ப்யூட்டர் பயிற்சித்திறனை  அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. 2011 செப்டம்பர் 15ம் தேதி அண்ணா  பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்,  2011-12ம் ஆண்டில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 790 லேப்டாப்களும், 2012-13ம்  ஆண்டில் 7 லட்சத்து 56 ஆயிரம் லேப்டாப்களும், 2013-14ம்  கல்வியாண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் லேப்டாப்களும் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை மூன்று கட்டங்களில் 17 லட்சம்  லேப்டாப்கள் மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதன் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடி எனவும் அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது, 2014-15ம் கல்வியாண்டில் 5.50 லட்சம் லேப்டாப்கள் மாணவ,  மாணவியருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக,  ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச லேப்டாப்  கொள்முதல் செய்யும் பொறுப்பு அரசு நிறுவனமான எல்காட்  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் டெண்டர் அறிவிப்பில்  இடம்பெற்ற நிபந்தனைகள், டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள்  உட்பட பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதில்,  ‘‘விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் அல்லது அதற்கு மேம்பட்ட இயங்கு தளம்,  ஓராண்டுக்கான உரிமத்துடன் கூடிய ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவ  வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது‘‘ இதன்படி, ஒரு லேப்டாப்பின்  மதிப்பு ரூ.20,000. டெண்டரின் மொத்த மதிப்பு ரூ.2,200 கோடி. இதுகுறித்து,  யுனைடெட் டெலிகாம் நிறுவனத்தின் துணை தலைவர் (மார்க்கெட்டிங்)  திபேஷிஸ் சவுத்ரி கூறியதாவது: டெண்டர் அறிவிப்பில் விண்டோஸ் 7  என்ற மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதளத்தை குறிப்பிட்டிருப்பதன் மூலம்  தமிழ்நாடு அரசின் வெளிப்படைத்தன்மை விதிமுறை மீறப்பட்டுள்ளது. 

இப்படி, விண்டோஸ் 7 இயங்குதளம் கண்டிப்பாக வேண்டும் என்று  வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதால், ஒரு லேப்டாப்புக்கு குறைந்தபட்சம்  ரூ.1,200 அதிகரிக்கும். இலவசமாக கிடைக்கும் மென்பொருளை  விட்டுவிட்டு விண்டோஸ் பயன்படுத்துவது செலவு அதிகரிப்பதோடு,  மாணவர்களுக்கு விண்டோஸ் மற்றும் ஆன்டிவைரஸ் அப்டேட் செய்ய  கூடுதலாக செலவு செய்வதை தவிர வேறுவழியே இல்லை என்ற நிலை  ஏற்படும். ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தின்போது  ‘இலவசமாக லினக்ஸ் இயங்குதளம் இருக்க, பணம் கொடுத்து வாங்க  வேண்டிய விண்டோஸ் 7 பயன்படுத்துவதற்கு அவசியம் என்ன?  இதன்மூலம், இலவசமாக லேப்டாப் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில்  சாப்ட்வேர் அப்டேட் செய்ய கூடுதலாக செலவு செய்யவேண்டி வரும்‘  என்று கேள்வி எழுப்பினோம். ஆனால், அரசு தரப்பில் இருந்து  திருப்திகரமான எந்த பதிலும் வரவில்லை. அதுமட்டுமின்றி, விண்டோஸ் 7  இயங்குதளத்துக்கான சேவையை ஜனவரி 2015ம் தேதியுடன்  மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்கிறது. இவ்வாறு திபேஷிஸ் சவுத்ரி  தெரிவித்தார்.

இலவச இயங்குதளம் வழங்கும் மைக்ரோசாப்ட்டுக்கு நேரடி போட்டி  நிறுவனமாக விளங்கும் ‘உபுன்டு‘வின் இந்தியா மற்றும்  தெற்காசியாவுக்கான மண்டல இயக்குநர் பிரகாஷ் அத்வானி கூறுகையில்,  ‘‘தமிழக அரசின் இலவச லேப்டாப்களின் பலனையும் சிறந்த  அனுபவத்தையும் மாணவர்கள் முழுமையாக பெறுவதற்கு ஏற்ப அதில்  இடம்பெறவேண்டிய இயங்குதளத்தை அரசு முடிவு செய்யவேண்டும்‘‘  என்றார். விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கான ஆதரவை மைக்ரோசாப்ட்  நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியுடன் நிறுத்தி விடும். இந்த  டெண்டரில் முடிவு செய்யப்பட்டு பெறப்படும் லேப்டாப்கள் எப்படியும் மார்ச்  அல்லது ஏப்ரல் மாதத்துக்கு பிறகுதான் வழங்கப்படும். எனவே,  மாணவர்கள் கையில் லேப்டாப் கிடைக்கும்போது அதன் இயங்குதளம்  காலாவதியானதாக இருக்கும். அதற்கு சில ஆயிரங்களை செலவு  செய்தால்தான் கணினியை அவர்களால் முழுமையாக பயன்படுத்த  முடியும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசின் ஐ.டி. செயலாளர் சில  மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இவர், எழுதிய 2014 மார்ச் 12ம் தேதியிட்ட கடிதத்தில்,  இலவசமாக கிடைக்கும் இயங்குதளம் பெரும்பாலும் வைரஸ்  தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதில்லை. இத்தகைய இயங்குதளத்தை  பயன்படுத்தினால் கணினியில் சேமித்து வைத்த தகவல்களை சைபர்  கிரிமினல்கள் திருடுவது போன்றவை தடுக்கப்படும் என்று
குறிப்பிட்டுள்ளார். ஆனால், மக்கள் பணம் பாழாகாமல் தடுக்கவும்,  திட்டச்செலவை குறைக்கவும் அளிக்கப்பட்ட இந்த நியாயமான பரிந்துரை  அரசால் பரிசீலிக்கப்படாதது ஏன் என்பது மர்மமாக உள்ளது. மாணவர்களின்  நலனுக்காக இலவச லேப்டாப்களை வழங்கும் அரசு இலவச  மென்பொருளை ஏற்காதது, முறைகேடு நடத்துவதற்காகவே திட்டமிட்டு  செயல்படுத்தப்படுகிறதா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களை  எழுப்பியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வணிக நோக்கத்தை பிரதானமாக கொண்டு  தனது சாப்ட்வேர் சேவையை அவ்வப்போது நிறுத்திக்கொள்வதும்  புதிதல்ல. இந்த நிறுவனம் விண்டோஸ் எக்ஸ்பிக்கான சேவையை 14-4- 2009 அன்றும், விஸ்டாவுக்கான சேவையை 10-4-2012 அன்றும்  நிறுத்திவிட்டது. விண்டோஸ் 8 சேவை 2018 ஜனவரி 9ம் தேதியுடன்  நிறுத்தப்பட்டு விடும் என அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 13ம் தேதி  காலாவதியாகும் விண்டோஸ் 7 ஹோம் எடிஷன் விலை தற்போது சுமார்  ரூ.5,500 ஆக இருக்கிறது. இது காலாவதியான பிறகு விண்டோஸ் 8  நிறுவுவதற்கு ரூ.6,500 வரை செலவிடவேண்டி வரும். எனவே, இலவச  லேப்டாப் வாங்கிய ஏழை மாணவர்கள் அதை வெறும் காட்சிப்பொருளாக  வைக்க வேண்டிவரும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சிலர்  கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரச்னை இல்லாத இலவச இயங்குதளம்

லினக்ஸ் இயங்குதளம் கடந்த 1991ம் ஆண்டு வெளியிடப்பட்டது.  முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இது, காலத்துக்கேற்ப வடிவமைத்து  வழங்கப்படுகிறது. கடைசியாக, கடந்த மாதம் 21ம் தேதி லினக்ஸ் புதிய  அப்டேப் வெளியிடப்பட்டுள்ளது. இதை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதால்  எந்த சிக்கலும் இல்லை. முற்றிலும் இலவசம் என்பதால் இதற்கு  எதிராகவோ, இதை குறிவைத்தோ வைரஸ்கள் எதுவும்  ஏற்படுத்தப்படுவதில்லை. 

ஆனால், இதற்கு நேரெதிரானது மைக்ரோசாப்ட் விண்டோஸ். இதில்  இலவச சேவை என்பதே கிடையாது. அதோடு, வைரஸ் தாக்குதலுக்கு  அதிகம் ஆளாகும் இயங்குதளமாக இது உள்ளது. எனவே,  கம்ப்யூட்டரையும், அதிலுள்ள தகவல்களையும் பாதுகாக்க தனியாக  வைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்துவது கட்டாயமாகிவிடும்.

References:

Jul 16, 2013

தமிழக அரசின் இலவச மடிக்கணினியில் உள்ள BOSS லினக்ஸின் GRUB Loader ஐ விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவிய பிறகு மீட்டெடுத்தல்




தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் ஆகிய இரண்டு இயங்குதளங்களும் இரட்டை நிறுவலாக நிறுவி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், நமது மாணவர்கள் இருக்கிறார்களே மிகவும் புத்திசாலிகள்  கொடுக்கப்பட்ட மடிக்கணினியில் CD/DVD Drive இல்லாவிட்டாலும் கூட பென்டிரைவ் மூலமாக விண்டோஸ்7 இயங்குதளத்தை மிகவும் எளிமையாக நிறுவி விடுகிறார்கள்.

பெரும்பாலும்  எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இயங்குதளத்தை நிறுவுவதற்காக வேறெங்கும் தனியாக Hardware Service Engineer ஐ தேடிச் செல்வதில்லை.  அவரவர்களே நிறுவிக்கொள்கிறார்கள்.  மிகவும் மகிழ்ச்சியான செய்திதான் இது!

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

ஆனால் கூடவே நிறுவப்பட்டுள்ள BOSS Linux ஐ மீட்டெடுப்பது எப்படி?  என்று எனது அருமை சகோதரர்கள்  இயந்திர பொறியாளர் பா.சக்திவேலும், கட்டிட பொறியாளர் வே.ஆதவனும்  கேட்டார்கள்.  அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க  நானும் அவர்களுடன் சேர்ந்து முயற்சியில் இறங்கினேன்.

நான் ஏற்கனவே, விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு உபுண்டு இயங்குதளத்தை மீட்டெடுப்பது எப்படி?  என ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  ஆனால் அந்த முறைகளைப் பின்பற்றிய பொழுது  GRUB மீட்டெடுக்கப்பட்டது.  ஆனால் இரண்டு இயங்குதளங்களும் உள்நுழைவதற்கு மிகவும் அடம்பிடித்தது.  காரணம் BOSS Linux க்கு அந்த கட்டளைகள் சரியாக வேலைசெய்யவில்லை.

மறுபடியும் இணையத்தையே உதவிக்கு நாடினோம். BOSS Linux -ன் விக்கி தளத்தில் இதற்கான உதவிகள் கொடுக்கப்பட்டிருந்தது.  அதைப் பின்பற்றியும்  GRUB ஐ மீட்டெடுக்க முடியவில்லை.

ஆனால் கூகுளின் தேடல் முடிவில் Noobs LAB -ல் Install/Recover Grub from Linux Live CD கட்டுரையின் இணைப்பு காட்டப்பட்டது.  இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல கட்டளைகளைப் பின்பற்றிய பொழுது.  எங்களால் வெற்றிகரமாக BOSS Linux GRUB ஐ மீட்டெடுக்க முடிந்தது.

GRUB Loader ஐ மீட்டெடுக்க அவசியம் தேவையானவை:

1. உபுண்டு லினக்ஸை(உபுண்டு 9.10 க்கு மேற்பட்ட பதிப்பு) Bootable ஆக மாற்றிய பென்டிரைவ் (தமிழக அரசின் மடிக்கணினிக்கு மட்டும்)

வழிமுறை:
  • உபுண்டுவை Bootable ஆக மாற்றிய பென்டிரைவ் மூலம்  மடிக்கணினியினை பூட் செய்யவும்.
  • Try Ubuntu வை தேர்வு செய்யவும் (நாங்கள் உபுண்டு 12.04 LTS பதிப்பை பயன்படுத்தினோம்)
  • முனையத்தை(Terminal)  திறந்து கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கவும்.  (மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளவும், உங்களுக்கு செய்முறைகள் தெளிவாக புரியும்)
sudo passwd root
su
sudo -i
sudo mount /dev/sda3 /mnt
sudo mount --bind /dev /mnt/dev
sudo chroot /mnt
grub-install /dev/sda

கட்டளைகளுக்கான விளக்கம்:

sudo passwd root - இந்த கட்டளையானது நிகழ்வட்டாக(Live OS) உள்ள உபுண்டுவின் root account னுடைய கடவுச்சொல்லை மாற்றுவதற்கானது.  ஏங்க  இந்த கடவுச்சொல்லை மாத்தனும்னு கேக்குறீங்களா?   இயங்குதளத்தின் அனைத்து கட்டளைகளையும், கணினியினுடைய அனைத்து வன்பொருள்களையும், அனைத்து அனுமதிகளோடும், உரிமைகளோடும் இயக்கக்கூடிய ஒரே நபர் இவர்தாங்க(root user). அவருக்கான கடவுச்சொல்லை நாம் அமைத்துக்கொண்டுதான் வேலையை தொடங்க வேண்டும் (நிகழ்வட்டு என்பதால் -  Live OS).

su - Switch User சாதரண பயனரிலிருந்து root பயனருக்கு மாறுவதற்கு.

sudo -i - பயனரின் Home Directory, .profiles and policy notes  போன்றவைகளை அணுகிக்கொள்ள.

sudo mount /dev/sda3 /mnt - இந்த கட்டளை BOSS Linux -ன் root directory யினை /mnt அடைவிற்குள்(folder) mount செய்ய.  பெரும்பாலும் அரசு மடிக்கணினியில் /dev/sda3 யில்தான் இருப்பியல்பாக BOSS Linux நிறுவப்பட்டு வருகிறது.  இதை உறுதி செய்ய இங்கு செல்லவும்.

sudo mount --bind /dev /mnt/dev - /dev அடைவின் அனைத்து கோப்புகளையும் இணைப்பதற்கு மற்றும் அணுகுவதற்கு.

sudo chroot /mnt - /mnt  அடைவோடு root பயனராக செயல்பட. (இந்த கட்டளையினை செயல்படுத்திய பின்பு முனையத்தில் நிறம் மாறியிருப்பதை காணலாம்).

grub-install /dev/sda - வன்வட்டில் GRUB Loader ஐ நிறுவுவதற்கு. இந்த கட்டளை இயக்கியவுடன் Installation Finished. No error reported. எனும் செய்தி நமக்கு கிடைக்கும் வேறு ஏதாவது பிரச்சனையென்றால் அந்த செய்திகளும் சுட்டிக்காட்டப்படும்.

அவ்வளவுதான் கணினியினை மறுதொடக்கம் செய்தவுடன்.  மடிக்கணினி வழங்கிய பொழுது எவ்வாறு BOSS Linux Grub Loader டன் இருந்ததோ அதே போலவே இயங்க தொடங்கியது.

இது தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் அல்லது உதவிகள் எதுவாக இருந்தாலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நன்றி:

இந்த கட்டுரையினை எழுதுவதற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும், மடிக்கணினிகளையும் கொடுத்து உதவியதோடு இந்த பதிவினை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்து ஊக்குவித்த

தோழர் பா.சக்திவேல் D.M.E., Government Polytechnic College, Aranthangi அவர்களுக்கும்
தோழர் வே.ஆதவன் D.C.E., Government Polytechnic College, Aranthangi அவர்களுக்கும்   எனது மனமார்ந்த நன்றிகள்.

May 14, 2013

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உபுண்டு லினக்ஸ்


நேற்று காலை (13.05.2013 திங்கள்) நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  திங்கள் கிழமையன்று வழக்கமாக மனுநீதி நாள் நடைபெறும்.  பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளையும், தேவைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி கொடுப்பார்கள். 

அந்த மனுக்கள் முதலில்,  மனுக்கள் பெறும் இடங்களில் பெறப்பட்டு அலுவலர்களால் வாசிக்கப்பட்டு கணினியில் பதியப்பட்டு பிறகு நமக்கு ஒரு ஒப்புகை சீட்டு (Acknowledgment) கொடுக்கப்படும்.

அப்பொழுது அங்கு கணினியில் நடந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் காரணம், அந்த கணினியில் உபுண்டு 10.04 LTS இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது.

நெருப்புநரி உலாவி (Online மூலம்தான் கோரிக்கைகள் பதியப்படுகின்றன) மூலம் பொதுமக்களின் மனுக்களில் உள்ள  கோரிக்கைகள்,
மனுதாரரின் பெயர்,
தந்தை பெயர்,
முகவரி,
வட்டம்,
பிரச்சனையின பிரிவு,
தொடர்பு அலுவலர்,

கோரிக்கை எண்,

என பலசெய்திகள் விவரங்களோடு பதிவு செய்யப்பட்டு பிறகு மனுதாரருக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படுகிறது.  விவரங்களை உள்ளிட ibus பயன்படுத்தப்படுகிறது.

ஒப்புகைச் சீட்டிற்காக பிரிண்ட் கொடுக்கும் பொழுது அது ஒரு PDF கோப்பாக வருகிறது.  அதன்பிறகு அந்த PDF கோப்பு பிரிண்ட் செய்யப்படுகிறது.

அங்கு பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் HP Printer. எந்த பிரச்சனையும் இல்லாமல் பிரிண்ட் வருகிறது.

HP நிறுவன Printer கள்  லினக்ஸ் இயங்குதளத்துடன் நன்றாக ஒத்துழைப்பதாக   தெரிகிறது.  குறிப்பாக உபுண்டு லினக்ஸுடன் நன்றாக ஒத்துழைக்கிறது.

எனது  அருமை தோழர் ம.பாண்டியராஜன்  அவர்களுக்கு ஒரு  HP Officejet பிரிண்டர் வாங்கினோம்.  தோழரும் லினக்ஸ் பயனாளர்தான்.  அவருடைய மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS நிறுவியிருந்தோம்.  மிகவும் நன்றாகவே அந்த பிரிண்டர் உபுண்டுவுடன் வேலை செய்கிறது.

தமிழக அரசினுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இவ்வளவு பெரிய புரட்சி நடந்ததே மகிழ்ச்சியான விஷயம்தான்.

இதென்ன பெரிய புரட்சி என்கிறீர்களா வேறென்ன செய்வது  இந்தியாவைப் பொறுத்தமட்டில்  மனிதகுலத்தில் இயல்பாக நடக்க வேண்டிய விஷயங்களெல்லாம் எப்பொழுதும் புரட்சியாகவும் , புரட்சி செய்தும்தான் பெற வேண்டியுள்ளது.
இதுபோன்று தமிழக அரசின் அத்தனை நடவடிக்கைகளும்  லினக்ஸு மூலமும் , Open Source தொழில்நுட்பம் மூலமும் மேற்கொள்ளப்பட்டால்  மிகவும் மகிழ்ச்சிதான்.

இதைத்தவிர,

தமிழ்நாடு  மின்சார வாரியத்தின் கட்டண பெறுவத்தற்காக இருக்கும் கணினிகளில் Redhat Linux பயன்படுத்தப்பட்டு வருகிறது.  (5-நாட்கள் மட்டும் நண்பருக்காக  Data Entry செய்தேன்)