PostgreSQL என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஓப்பன் சோர்ஸ் RDBMS தகவல்தளம் ஆகும். பெரும்பாலான இயங்குதளங்களுடன் இது ஒத்தியங்குகிறது. Linux, Windows, Mac, BSD உட்பட.
சாதரணமாக நாம் ஒரு தகவல்தளத்தில் பயன்படுத்தும் அனைத்து விதமான தரவு வகைகளையும் ஆதரிக்கிறது. மேலும் படங்கள், ஒலிகள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றை சேமித்து வைக்கவும் ஆதரவு தருகிறது.
C, C++, JAVA, PYTHON, TCL போன்ற நிரல் மொழிகளுடன் சிறப்பாக இயங்குகிறது.
pgAdmin III என்பது PostgreSQL க்கான ஓப்பன் சோர்ஸ் Administration and Management tool ஆகும். லினக்ஸ், விண்டோஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் சிறப்பாக இயங்க கூடியது.
நிறுவுதல்:
முனையத்தில் sudo apt-get install postgresql pgadmin3 என கொடுத்து இரண்டையும் நிறுவிக்கொள்ளலாம்.
pgAdmin III ஐ தயார் செய்தல்:
நாம் முனையத்தின் மூலமாகவும் PostgreSQL ஐ பயன்படுத்தலாம். Database களை உருவாக்கலாம், Table களை உருவாக்கலாம், தகவல்களை உள்ளீடு செய்யலாம் பார்வையிடலாம். இருந்தாலும் இவைகளுக்காக அதிகமான Query களைக் தட்டச்சு செய்து வெளியீடுகளைப் பெற வேண்டி வரும். ஆனால், நாம் இவையனைத்தையும் pgAdmin III மூலமாக Graphical இடைமுகப்புடன் மிகவும் எளிதாக செய்யலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.
அதை எவ்வாறு தயார் செய்வது என்பதை பார்ப்போம்.
படி 1:

முனையத்தை திறந்து
sudo su postgres -c psql
என கொடுக்கவும் உங்கள் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 2:
postgres=# என முனையத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதில்
ALTER USER postgres WITH PASSWORD 'password'; என கொடுத்து கட்டளையினை இயக்கவும். இங்கு 'password' என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை Single Quote (' ') சேர்த்து கொடுக்கவும்.
pgAdmin III ஐ திறக்கவும்
படத்தில் உள்ளவைகளை வரிசைப்படி பார்த்தால் போதும் எப்படி செய்வது என உங்களுக்கு புரியும். ஏதேனும் சந்தேகம் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
pgAdmin III பயபடுத்த தயார், அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதானே நம்ம வேலையை!
No comments:
Post a Comment