உபுண்டுவினுடைய அண்மைய பதிப்புகள் அனைத்தும் Unity Environment உடனே வெளிவருகிறது. நாம் ஒரு Application ஐத் திறக்க வேண்டுமென்றால் Dash ஐ Click செய்தோ அல்லது Windows Key ஐ அழுத்தியோ Application பெயரை தட்டச்சு செய்து திறந்து பயன்படுத்தலாம்.
சில நேரங்களில் நமது உபுண்டு இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து Application களையும் பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படும். எனக்கு இந்த அவசியம் ஏற்பட காரணம் தேவையில்லாத Application களை நீக்க வேண்டும் என நினைத்தேன் அதற்கு எந்தெந்த Application களை நீக்க வேண்டும் என்ற பட்டியல் தேவைப்பட்டது. அது போல உங்களுக்கும் ஏதாவது அவசியம் ஏற்படலாம்.
சரி எப்படி செய்வது?
Dash Home Button அல்லது Windows பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது Unity யினுடைய Search பயன்பாடு கிடைக்கும். அதில் அடிப்பாகத்தில் Home Icon க்கு பக்கத்தில் இருக்கும் Applications Icon ஐ Click செய்யவும்.
அடுத்து Search Box க்கு கீழே Installed See 173 more results என்று இருக்கும் அதை Click செய்தவுடன் உபுண்டுவில் நிறுவப்பட்டுள்ள அனைத்து Applications களும் காண்பிக்கப்படும். (173 என்பது இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ள Applications எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்)
No comments:
Post a Comment