Jun 19, 2013

அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமும், தமிழ்வழிக் கல்வியின் அவசியமும்!


 
தமிழ்வழிக் கல்வி குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய இளம் தலைமுறை என்ன கருதுகிறது என்பதாக இந்த வாசகரின் எண்ணம் அமைந்துள்ளது. ``சென்ற தலைமுறையினர் செய்த தவறை நாம் இனிமேலும் தொடரக்கூடாது. பிற நாட்டவரின் அறிவியல் தொழில்நுட்பங்களை முந்தைய தலைமுறையினர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் இன்று தமிழ்வழிக் கல்வியா அல்லது ஆங்கிலவழிக் கல்வியா என்ற விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

இந்தத் தலைமுறையினராகிய நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க முழு முயற்சியுடன் களமிறங்க வேண்டும். அனைவரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் பிற நாட்டவரின் அறிவியல் தொழில் நுட்பங்களைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துப் போதிக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொள்கிறார்களே தவிர, ஆங்கிலக் கல்வி முறையை ஊக்குவிப்பது இல்லை.   இன்று நடைமுறையில் பார்த்தோமானால், மெட்ரிக் பள்ளி களில் படித்த பெரும் பாலானவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகுகூட தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை அற்றவர்களாகவே உள்ளனர் என்பது நடைமுறை உண்மை. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத் தெரிவதில்லை என்பதும் நடைமுறை உண்மை. இதுகூட பரவாயில்லை. இவர்களில் எத்தனை நபர்கள் தாங்கள் பயின்ற பாடத்திட்டங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு படித்திருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

நான் இளங்கலை வரையில் தமிழ் வழியில்தான் படித்தேன். முதுகலையில் ஆங்கிலவழிக் கல்வி மட்டும்தான் என்ற நிர்ப்பந்தத்தால் அனைத்துப் பாடங்களையும் தமிழில் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுத பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டேன். இன்றுகூட என்னுடைய விடைத்தாள்களை எடுத்துப் பார்த்தால், நான் என் சொந்த நடையில்தான் எழுதியிருப்பேன். தமிழ்வழிக் கல்வியால் தாழ்வு மனப்பான்மை  என்று ஏதேதோ சொல்கிறார்கள். ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் பேசுவதைப் பார்க்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை வரும் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலம் என்பது ஒரு மொழி, முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் தாழ்வு மனப்பான்மை என்ற சொல் நம் அகராதியில் இருக்காது.

இனிமேலும் தாமதம் செய்யாது நாம் முதலில் மொழிபெயர்ப்பினைத் தொடங்குவோம். பிறகு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்போம்.

- கணேஷ் ஏழுமலை

Jun 15, 2013

உபுண்டு 12.04 LTS ல் கணினியின் பெயரை(Host Name) மாற்றுவது எப்படி?

நமது கணினியினுடைய பெயரை உபுண்டுவில் மிகவும் எளிதாக மாற்றலாம்.  நாம் நிறுவும் பொழுது மேசைக்கணினியோ அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் இருப்பியல்பாகவே உபுண்டுவானது கணினியினுடைய பெயரை எடுத்துக்கொள்ளும்.  அதை நாம் நிறுவும் பொழுதே மாற்றிக்கொள்ளலாம் அந்த வாய்ப்பை தவறவிட்ட பட்சத்தில்  (உபுண்டு நிறுவலின் போது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடும் பொழுது கேட்கும்) எப்படி மாற்றுவது என பார்ப்போம்.

சரி, உபுண்டுவில் நமது கணினியினுடைய பெயரை தெரிந்து கொள்வது எப்படி? என கேட்கிறீர்களா மிகவும் எளிமை.

முனையத்தை திறந்து கொள்ளுங்கள் அதில் @ குறியீடுக்கு அடுத்ததாக இருப்பதுதான் கணினியினுடைய பெயர்.



கணினியின் பெயரை மாற்றுவது எப்படி?

முனையத்தை திறந்து அதில் gksu gedit /etc/hostname என கொடுத்து கட்டளையினை இயக்கவும்.



கட்டளை இயக்கப்பட்டவுடன்  உரைதிருத்தியில் இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் கணினி பெயர் இருக்கும் அதை அழித்து விட்டு உங்களுக்கு பிடித்தமான பெயரை கொடுக்கவும். கொடுத்து விட்டு சேமிக்கவும்.

அடுத்ததாக முனையத்தில் gksu gedit /etc/hosts என கொடுத்து கட்டளையை இயக்கவும். அதில் உரை திருத்தியில் பழைய பெயர் இருக்கும் அதை அழித்து விட்டு ஏற்கனவே நீங்கள் கொடுத்த பெயரையே இங்கும் கொடுத்து விட்டு சேமிக்கவும்.




முனையத்தை மூடிவிட்டு மறுமுறை திறக்கும் பொழுது மாற்றப்பட்ட புதிய பெயருடன் காண்பிக்கப்படும்.


பெயர் மாற்றத்துடன் முனையம்!

Jun 14, 2013

உபுண்டுவில் நிறுவப்பட்டுள்ள அனைத்து Application களையும் Unity Environment -ல் பார்ப்பது எப்படி?

உபுண்டுவினுடைய அண்மைய பதிப்புகள் அனைத்தும் Unity Environment உடனே வெளிவருகிறது.  நாம் ஒரு Application ஐத் திறக்க வேண்டுமென்றால் Dash ஐ Click செய்தோ அல்லது Windows Key ஐ அழுத்தியோ Application பெயரை தட்டச்சு செய்து திறந்து பயன்படுத்தலாம்.


சில நேரங்களில் நமது உபுண்டு இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து Application களையும் பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படும்.  எனக்கு இந்த அவசியம் ஏற்பட காரணம் தேவையில்லாத Application களை நீக்க வேண்டும் என நினைத்தேன் அதற்கு எந்தெந்த Application களை நீக்க வேண்டும் என்ற பட்டியல் தேவைப்பட்டது.  அது போல உங்களுக்கும் ஏதாவது அவசியம் ஏற்படலாம்.

சரி எப்படி செய்வது?

Dash Home Button அல்லது Windows பொத்தானை அழுத்துங்கள்.  இப்பொழுது Unity யினுடைய Search பயன்பாடு கிடைக்கும்.  அதில் அடிப்பாகத்தில் Home Icon க்கு பக்கத்தில் இருக்கும் Applications Icon ஐ Click செய்யவும்.



அடுத்து Search Box க்கு கீழே Installed See 173 more results என்று இருக்கும் அதை Click செய்தவுடன் உபுண்டுவில் நிறுவப்பட்டுள்ள அனைத்து Applications களும் காண்பிக்கப்படும். (173 என்பது இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ள Applications எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்)




PostgreSQL மற்றும் pgAdmin III


PostgreSQL என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஓப்பன் சோர்ஸ் RDBMS தகவல்தளம் ஆகும்.  பெரும்பாலான இயங்குதளங்களுடன் இது ஒத்தியங்குகிறது. Linux, Windows, Mac, BSD உட்பட.

சாதரணமாக நாம் ஒரு தகவல்தளத்தில் பயன்படுத்தும் அனைத்து விதமான தரவு வகைகளையும் ஆதரிக்கிறது. மேலும் படங்கள், ஒலிகள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றை சேமித்து வைக்கவும் ஆதரவு தருகிறது.

C, C++, JAVA, PYTHON, TCL போன்ற நிரல் மொழிகளுடன் சிறப்பாக  இயங்குகிறது.

pgAdmin III என்பது PostgreSQL க்கான ஓப்பன் சோர்ஸ் Administration and Management tool ஆகும்.  லினக்ஸ், விண்டோஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் சிறப்பாக இயங்க கூடியது.

நிறுவுதல்:

முனையத்தில்  sudo apt-get install postgresql pgadmin3 என கொடுத்து இரண்டையும் நிறுவிக்கொள்ளலாம்.


pgAdmin III ஐ தயார் செய்தல்:

நாம் முனையத்தின் மூலமாகவும்  PostgreSQL ஐ பயன்படுத்தலாம்.  Database களை  உருவாக்கலாம், Table களை உருவாக்கலாம், தகவல்களை உள்ளீடு செய்யலாம் பார்வையிடலாம். இருந்தாலும் இவைகளுக்காக அதிகமான Query களைக் தட்டச்சு செய்து வெளியீடுகளைப் பெற வேண்டி வரும். ஆனால், நாம்  இவையனைத்தையும் pgAdmin III மூலமாக Graphical இடைமுகப்புடன்  மிகவும் எளிதாக செய்யலாம்  என்பதே இதன் சிறப்பம்சம்.

அதை எவ்வாறு தயார் செய்வது என்பதை பார்ப்போம்.




படி 1:

முனையத்தை திறந்து

sudo su postgres -c psql

என கொடுக்கவும் உங்கள்  பயனர் கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

படி 2:

postgres=# என முனையத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.  அதில் 

ALTER USER postgres WITH PASSWORD 'password';  என கொடுத்து கட்டளையினை இயக்கவும்.  இங்கு 'password' என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை Single Quote (' ') சேர்த்து கொடுக்கவும்.


pgAdmin III ஐ திறக்கவும்

படத்தில் உள்ளவைகளை வரிசைப்படி பார்த்தால் போதும் எப்படி செய்வது என உங்களுக்கு புரியும்.  ஏதேனும் சந்தேகம் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.  















pgAdmin III பயபடுத்த தயார், அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதானே நம்ம வேலையை!