உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 41 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Sep 26, 2010
Sep 18, 2010
LINUX For Yor Magazine -ல்வெளிவந்த GIMP தொடரின் PDF கோப்புகள்
நான் கடந்த மூன்று வருடமாக LINUX For You Magazine க்கு சந்தாதாரராக இருக்கிறேன்.இந்த இதழை முதன் முதலில் எங்கள் பாலிடெக்னிக்னினுடைய(அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி,அறந்தாங்கி,புதுக்கோட்டை மாவட்டம்) நூலகத்தில் பார்த்தேன்.அப்பொழுது இந்த இதழை படிக்கும் பொழுதெல்லாம் ஒன்றும் புரியாது ஆனால் இதழில் உள்ள படங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவேன்.ஏனென்றால் கணினி என்றாலே விண்டோஸ் இயங்குதளத்தினுடைய சாளாரங்களைப் பார்த்து போரடித்து போன எனக்கு ஏதோ புதிதாக ஒரு அதிசயத்தைப் பார்த்தது போன்ற உணர்வு இருக்கும்.இந்த இதழை நூலகர் கணினி துறை மாணவர்களுக்கும்,மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களுக்கு மட்டுமே கொடுப்பார் படித்துவிட்டு அவரிடமே திருப்பி ஒப்படைத்து விட வேண்டும்.பாலிடெக்னிக் இறுதியாண்டு படிக்கும் பொழுது சந்தாதாரராக ஆகினேன் ஏனென்றால் கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டால் இதழை படிக்க முடியாது அல்லவா.
ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியிலிருந்து 12-ம் தேதிக்குள் எங்கள் கிராமத்தினுடைய தாபால் காரர் மூலம் எனக்கு கிடைத்து விடும்.லினக்ஸை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள இதழ்,வசதியுள்ள மாணவர்கள் சந்தாதாரகிக்கொள்ளலாம்.ஒவ்வொரு மாதமும் இதழுடன் DVD+CD சேர்த்து வழங்குகிறார்கள்.
சென்னை,கோயம்புத்தூர்,திருச்சி போன்ற முக்கியமான இடங்களில் கண்டிப்பாக கிடைக்கும்.ஒரு தனி இதழின் விலை 100 ரூபாய்.இதழுடன் வரும் DVD யில் ஒரு சிறந்த,முக்கியமான லினக்ஸ் இயங்குதளத்தை கொடுக்கின்றனர் இயங்குதளத்தின அளவு 4.GB க்கு மேல் இருக்கும்,இந்த இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார்பது என்பது முடியாத காரியம் தரவிறக்கம் செய்ய நேரமும்,செலவும் அதிகம் பிடிக்கும்.CD யில் Kernel னுடைய புதிய பதிப்புக்குண்டான Package யும் , பயனுள்ள மென்பொருள்களையும் ,தொடராக வெளிவந்த கட்டுரைகளையும் PDF கோப்பாகவும் கொடுக்கின்றனர்.இதழில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையாக உள்ளது.
இதழின் இணையதள முகவரி மற்றும் சந்தா விபரம் தெரிந்து கொள்ள http://www.linuxforu.com

என்னப்பா பதிவுக்கு கொடுத்த தலைப்புக்கும் நீ சொலவதற்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீங்க,ரொம்ப நாளாக சொல்லனும்னு நினைத்தது.அவ்வளவுதான்.
நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தும் Photoshop மென்பொருளைப் போல GIMP -ம்(Gnu IMage Manipulation) லினக்ஸில் பயன்படுத்தும் ஒரு மென்பொருள்.இதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள பிரபு சாரினுடைய சுதந்திர கிம்ப் வலைப்பூவிற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த GIMP மென்பொளைப் பற்றிய தொடர் LINUX For You Magazine -ல் பிப்ரவரி-2009 லிருந்து ஜூலை -2010 வரை தொடராக வெளிவந்தது.எனக்கு வந்த இந்த மாத இதழில் அனைத்து தொடர்களையும் PDF கோப்பாக CD -யில் கொடுத்திருந்தனர் இவையனைத்தையும் இணையத்தில் ஏற்றி அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன்.தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நான் இங்கு கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் முழு உரிமையுடன் நீங்கள் தெரிவிக்கலாம்.சுதந்திரம் மனிதனின் உரிமை
Sep 14, 2010
Compaq515 மாடல் மடிக்கணினியில் ,உபுண்டு 10.10 இயங்குதளத்தில் Broadcom WiFi Wireless Driver யினை நிறுவுவது எப்படி ?
என்னுடைய மடிக்கணினி Compaq515 மாடல்.என்னவோ தெரியவில்லை உபுண்டு 9.04 ஐத்தவிர வேறு உபுண்டுவின் எந்த பதிப்பும் என்னுடைய மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை.தற்பொழுது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு 9.04 ஐ நிறுவி சரியாக ஒருவருடத்திற்கும் மேலாகி விட்டது.என்னுடைய மடிக்கணினியில் நிறுவியிருக்கும் உபுண்டு 9.04 லினக்ஸில் ஒலி வசதியும்,ATI Radeon Graphics Driver 1231 ம் வேலை செய்யவில்லை ஆனால் WiFi Wiresless வேலைசெய்கிறது (எங்களுடைய பல்கலைக்கழகத்தில் 24 மணிநேர WiFi இணையம் வசதி உள்ளது),உபுண்டு 9.04 க்குப் பிறகு வெளியிடப்பட்ட அடுத்தப் பதிப்பான உபுண்டு 9.10 ஆனது பூட்டிங்கோடு நின்றுக்கொண்டது அதற்கு அப்புறம் ஒரு அடிகூட நகரவில்லை,அதற்கு அடுத்தப் பதிப்பான 10.04 வெளியிடப்பட்டது Ubuntu 10.04 Desktop,Kubuntu 10.04 ஐயும் உபுண்டுவின் தளத்தில் விண்ணப்பித்து இரண்டு வட்டுக்களையும் பெற்றுக்கொண்டேன்.விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் ஆசையாக உபுண்டு 10.04 நிகழ்வட்டு தேர்வினை தேர்வுசெய்து இயங்கிப்பார்த்தேன் அதுவும் பூட்டிங்கோடு நின்றுக்கொண்டது.
சரி இது இருக்கட்டும் Kubuntu 10.04 ஐ நிகழ் வட்டாக இயக்கிப்பார்த்தேன் இது நன்றாக வேலைசெய்தது ஒலி வசதி வேலை செய்தது,ஆனால் WiFஇ யும் ATI Radeon Graphics Driver உம் வேலை செய்யவில்லை,இதுபோலவே Ubuntu10.04 Netbook Edition -னும் வேலை செய்தது.
இந்த பதிப்புகளிலெல்லாம் எனக்கு என்ன பிரச்சனை என்றால் ஒலி வேலை செய்தால் , WiFi வேலை செய்யாது.WiFஇ வேலை செய்தால் ,ஒலி வசதி வேலை செய்யாது.நானும் இந்த பிரச்சனைகளையெல்லாம் சரிசெய்ய முயற்சிக்கவில்லை,உள்ளதையே பயன்படுத்துவோமே என திருப்திப்பட்டுக்கொண்டு உபுண்டு 9.04 ஐ இன்றைய தேதிவரையிலும் பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த சனிக்கிழமை இரவு உபுண்டுவின் இணையத்தளத்தைப் பார்வையிட்ட பொழுது அடுத்த மாதம் வெளிடப்பட இருக்கும் உபுண்டு10.10 பதிப்பினுடைய பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யும் இணைப்பினைக் கொடுத்திருந்தனர்.சரி தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்போமே என்று தரவிறக்கம் செய்தேன்.சரியாக ஒன்னேமுக்கால் மணி நேரத்தில் தரவிறக்கம் முடிந்தது(695 MB). தரவிறக்கம் செய்த ISO கோப்பினை என்னிடம் இருந்த DVD/RW வட்டில் எழுக்கொண்டேன்.
உபுண்டு10.10 இயங்குதளம் தயாராகி விட்டது,மடிக்கணினியினுடைய BIOS ற்க்கு சென்று F9 பொத்தானை அழுத்தி First Bootting Device , CD/DVD ஆக மாற்றி சேமித்துக்கொண்டேன்.மடிக்கணினியினை மறுதொடக்கம் செய்தேன் மடிக்கணினி வட்டில் இருந்து தொடங்கியது ,அட என்னங்க உபுண்டுவின் முதல் திரையே மிகவும் அழகாக இருந்தது,ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு நிறுவுதலின் திரை வந்தது அதில் Try Ubuntu ,Installation நிகழ்வட்டாக இயக்கிப் பார்ப்போம் என்று Try Ubuntu எனும் தேர்வினை தேர்வு செய்தேன்.
உபுண்டு Desktop வந்துவிட்டது,மிக அருமை,சரி முதலில் ஒலி வசதி வேலை செய்கிறதா என்று பார்ப்போம் என்று உபுண்டு லினக்ஸிற்கென மாற்றி வைத்திருந்த .wav வடிவ பாடலில் இருந்து ஒரு பாடலினை இயக்கிப் பார்த்தேன் ஆச்சரியம் ஒலி வசதி மிகச் சரியாக வேலை செய்தது.சரி முதல் பிரச்சனை தீர்ந்தது.அடுத்து Graphics Display Driவெர் அட அதுவும் முகவும் சரியாக வேலை செய்தது,Desktop Preferences -> Visual Effects -> Normal,Extra இரண்டும் வேலை செய்த்தது அட அடுத்தப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி ,இதையெல்லாம் விட எனக்கு மிகவும் முக்கியமானது WiFi இங்கேதான் வந்தது பிரச்சனை எப்பொழுதும் போல WiFi வேலை செய்யவில்லை.சரி பார்த்துக்கொள்வோம் என்று உபுண்டு10.10 ன் மூலமே உபுண்டு10.10 உள்ள Startup Disk Creator உதவியின் மூலம் பென்டிரைவில் இருந்து இயங்குமாறு தயார் செய்துக்கொண்டேன்.
அட இப்படியே போய்கிட்டு இருந்தா இதுக்கு என்னதான்யா முடிவு,இப்படியே விடக்கூடாது என நினைத்து அன்று இரவே கூகுள் பெரியவரிடமும் ஐடியா கேட்டேன்.அவரும் தெளிவான இணைப்புகளைக் கொடுத்தார் அதில் ஒன்றிரண்டு இணைப்புகளைச் சொடுக்கி படித்துப் பார்த்தேன் ஓரளவு ஐடியா கிடைத்தது.அதில் ஒரு சிறப்பான இணைப்புக் கிடைத்தது.அந்த இணைப்பு http://wireless.kernel.org/en/users/Drivers/b43#devicefirmware இந்த இணைப்பில் அனைத்து WiFi Driver களையும் எப்படி லினக்ஸில் பயன்படுத்துவது எனும் வழிமுறைகளை கொடுத்திருக்கின்றனர்.

இதில் கொடுக்கப்பட்டிருந்த வழிமுறைகள் மிகவும் எளிமையாக இருந்தது. இதில் என்ன முக்கியமா பார்க்க வேண்டியது என்னவென்றால் உபுண்டு10.10 லினக்ஸில் இணையத்தைப் பயன்படுத்த முடியாது,ஆகையால் என்னுடைய உபுண்டு 9.04 லினக்ஸில் உள்ள இணையவசதி மூலம் இதற்கு தேவையான வழிமுறைகள்,மென்பொருள்கள் அனைவற்றையும் தரவிறக்கம் செய்துக்கொண்டேன்.தேவையான கருவிகள்,மென்பொருள்கள்,வழிமுறைகள் இவற்றையெல்லாம் தயார்படுத்திக்கொண்டு வேலையில் இறங்க ஆரம்பித்தேன்.
என்னுடைய மடிக்கணினியில் உள்ள WiFi வன்பொருளின் விபரம்:
06:00.0 Network controller [0280]: Broadcom Corporation BCM4312 802.11b/g [14e4:4315] (rev 01).நீங்கள் உங்கள் கணினியினுடைய WiFi வன்பொருளின் விபரம் அறிய lspci -vnn | grep 14e4 எனும் கட்டளையை முனையத்தில் கொடுக்கவும்.
நான் என்னுடைய மடிக்கணியில் WiFi யினை இணைக்கத் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொதிகளையும்(Packages) தரவிறக்கம் செய்துகொண்டேன்.இந்த இரண்டு பொதிகளையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
நான் எப்படி இணைத்தேன் அதற்கான வழிமுறைகள்:

- b43-fwcutter-013.tar.bz2
- broadcom-wl-4.178.10.4.tar.bz2
நான் எப்படி இணைத்தேன் அதற்கான வழிமுறைகள்:
- Startup Disk Creater மூலம் உருவாக்கிய உபுண்டு 10.10 இயங்குதளம் உள்ள பென்டிரைவினை யூ.எஸ்.பி Port ல் இணைத்தேன்.கணினியினை பென்டிரைவில் இருந்து தொடங்குமாறு BIOS ல் மாற்றம் செய்து சேமித்து விட்டு,கணினியினை மறுதொடக்கம் செய்தேன்.கணினி பென்டிரைவில் இருந்து பூட் ஆகியது,சரியாக இரண்டே நிமிடத்தில் உபுண்டு 10.10 ன் அழகான Desktop கிடைத்தது.(இதில் நான் சொல்லியிருக்கும் அனைத்தும் லைவ் பதிப்பில் செய்து பார்த்தது).
- அடுத்து இந்த வேலைகளையெல்லாம் செய்ய கண்டிப்பாக root பயனாளரும்,root பயனாளர் அனுமதியும் வேண்டுமல்லவா,அதனால் புதியதாக ஒரு Administrator Rights உள்ள ஒரு பயனாளரை உருவாக்கினேன்.அதற்க்குப்பிறகு root account ஐ Enable செய்தேன்.
Administrator Rights உடன் ஒரு பயனாளரை உருவாக்க: System=>Administration=>Users and Groups என்பதை click செய்தவுடன் படம்-1 ல் உள்ளது போன்ற ஒரு திரைக் கிடைக்கும் அதில் Add எனும் Buttton ஐ அழுத்தவும்,அழுத்தியவுடன் படம்-1 ல் உள்ளதுபோன்ற ஒரு திரைக்கிடைக்கும் அதில் Name மற்றும் User name ஆகியவைகளை உள்ளிட்டு OK button ஐ அழுத்தவும்.இப்பொழுது ஒரு புதிய பயனாளர் உருவாகியிருக்கும்.(பார்க்க படம்-3)
படம்-3
இப்பொழுது புதிதாக உருவாக்கிய பயனாளர் பெயரும் காட்டப்படும்,அந்த பயனாளரை தேர்வு செய்து Account Type என்பதற்கு நேராக உள்ள change எனும் button ஐ அழுத்தவும் அதில் Administrator எனபதை தேர்வு செய்து ok button ஐ அழுத்தவும்.அவ்வளவுதான் பயனாளர் உருவாக்கும் வேலை முடிந்தது.அடுத்து root account ஐ enable செய்யும் வேலை
படம்-4
- இதை செய்ய Liver Session User லிருந்து logout ஆகவும்,logout ஆகிய பிறகு புதியதாக உருவாக்கிய பயனாளருக்குள் நுழையவும் (அதாங்க பயனாளர் பெயரையும்,கடவுச்சொல்லையும் உள்ளிட்டு செல்வோமல்லவா அதுதான்).
- நாம் உருவாக்கிய புதிய பயனாளருக்குள் நுழைந்த பிறகு Applications=>Accessories =>Terminal சென்று முனையத்தை திறந்து கொள்ளவும்.
- முனையத்தில் sudo passwd root என கட்டளை கொடுக்கவும்,கொடுத்தவுடன் Enter New Unix Password : என்று கேட்கும் இப்பொழுது root account க்கான கடவுச்சொல்லை உள்ளிடவும்,உள்ளிட்டு Enter key யினை அழுத்தவும் அழுத்தியவுடன் Retype new Unix Password: என்று கேட்கும் இதில் ஏற்கனவே உள்ளிட்ட கடவுச்சொல்லை மீண்டும் தட்டச்சு செய்து Enter key யினை அழுத்தவும்.root account ஐ Enable செய்யும் வேலை முடிந்து விட்டது.
படம்-5
cd b43-fwcutter-013
make
cd ..
- முனையத்தில் su எனக்கொடுத்து Enter key யினை அழுத்தவும்,அழுத்தியபிறகு கடவுச்சொல்லை உள்ளிடச்சொல்லிக் கேட்கும் இதில் root account ற்க்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்தவும்.இப்பொழுது முனையத்தின் $ குறியீடானது # என மாறியிருக்கும்.
- இப்பொழுது தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் b43-fwcutter-013.tar.bz2, broadcom-wl-4.178.10.4.tar.bz2 இரண்டு கோப்புகளையும் எங்கு தரவிறக்கி வைத்திருக்கிறீர்களோ அங்கிருந்து copy செய்து Places => Home Folder க்குள் சென்று Paste செய்து கொள்ளவும்.
- முதலில் நாம் நிறுவவேண்டிய package, b43-fwcutter-013.tar.bz2 இதை நிறுவ முனையத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
cd b43-fwcutter-013
make
cd ..
படம்-6
இந்த கட்டளைகளை கொடுத்து முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை முனையத்தில் கொடுக்கவும்.
export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"
export FIRMWARE_INSTALL_DIR="/lib/firmware"
அடுத்து broadcom-wl-4.178.10.4.tar.bz2 package ஐ நிறுவ வேண்டும்.இதை நிறுவ முனையத்தில் கீழேகொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
tar xjf broadcom-wl-4.178.10.4.tar.bz2
cd broadcom-wl-4.178.10.4/linux
sudo ../../b43-fwcutter-013/b43-fwcutter -w "$FIRMWARE_INSTALL_DIR" wl_apsta.o
இறுதியாக உள்ள இந்த கட்டளையை முனையத்தில் ஒரே வரியில் கொடுக்கவும்.ஒரு வேளை உங்கள் உலாவியில் மடங்கி இரண்டு வரியாக தெரிந்தால் நீங்கள் இரண்டு வரியில் உள்ளிட முயற்சிக்காதீர்கள்.
Connectin Establish ஆகிய இணையத்துடன் இணைந்து என்னுடைய வலைப்பூவை பார்வையிட்டபொழுது
நான் என்னுடைய மடிக்கணினிக்கு மிகவும் பொருத்தமான உபுண்டு லினக்ஸை தேர்வு செய்ய ஒரு வருடம் காத்துக்கொண்டிருந்தேன்.இப்பொழுது அனைத்து வசதிகளுடன் உபுண்டு 10.10 லினக்ஸ் வந்து விட்டது.எங்கள் பல்கலைக்கழகத்தில் 500 பேர்களுக்கு மேல் Compaq515 மாடல் மடிக்கணினி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு இந்த பதிவு ஒரு கையேடாக அமையும் என நம்புகிறேன்.இதை நான் செய்து முடித்தபொழுது லினக்ஸில் எதையுமே மிகவும் எளிமையாக செய்து முடிக்கலாம் என நம்பிக்கை அதிகமாகியது.என்னைப் போன்ற பயனாளர்களுக்கு உபுண்டு10.10 பதிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
Sep 4, 2010
உபுண்டு லினக்ஸிற்கான கூகுள் தேடுபொறி
Googl ubuntu என்பது உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்திற்க்கான கூகுள் நிறுவனத்தினுடைய தேடுபொறி ஆகும்.நாம் இந்த தேடுபொறியில் இருந்து உபுண்டு லினக்ஸ் தொடர்பான செய்திகள்,பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,உதவிக்குறிப்புகள்,வழிகாட்டிகள்,இன்னும்.... போன்றவற்றைப் பெறலாம்.இந்த தேடுபொறியில் இருந்து கிடைக்கும் தகவல்களை நாம் ஆங்கிலம்,ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளிலும் படித்துக்கொள்ளலாம்.
Ubuntu.com, Kubuntu.com, Edubuntu.org, Launchpad.net, ubuntuforums.org, Kubuntuforums.net, ubuntuguide.org, getdeb.net, google groups «ubuntulinux» and «kubuntu», ubuntu-es.org, kubuntu-es.org, planetubuntu.es, ubuntips.com.ar, guia-ubuntu.org, cesarius.net, tuxpepino.wordpress.com, ubuntulife.wordpress.com, google groups on spanish.
நாம் நெருப்பு நரி உலாவியில் Google,WikePedia,Yahoo,Creative Commons போன்றவற்றிற்கான கருவிகளை இயல்பிருப்பாக பயன்படுத்துவொமல்லவா அதுபோல் Googl Ubuntu தேடுபொறிக்கு உண்டான கருவியையும் இவைகளுடன் இணைத்துக்கொண்டு,Googl Ubuntu கருவியை தேர்வு செய்து கொண்டு நமக்கு தேவையான தகவல்களை நேரடியாக இந்த கருவியில் உள்ளிட்டு தேடலாம். இந்த Googl Ubuntu கருவியை நெருப்பு நரியில் நிறுவுவதற்க்கான இணைப்பு GooglUbuntu னுடைய முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்ம அனைவரும் பயன்படுத்தும் நண்பர் உபுண்டு அவர்களுக்காக தனியாக ஒரு தேடுபொறியே உருவாக்கப்பட்டு விட்டது.ரொம்ப மகிழ்ச்சி தேடுபொறியினை உருவாக்கி அளித்த கூகுள் நிறுவனத்துக்கும் நன்றி.

Subscribe to:
Posts (Atom)