எனது நண்பர் சிவா அவர்கள் Acer TravelMate 5720 மாடல் மடிக்கணினி வைத்திருக்கிறார்.அவர் லினக்ஸ் பயனாளர் கிடையாது இயந்திரவியல் துறையைச் சேர்ந்தவர்.என்னுடைய மடிக்கணினியில் webcam வசதி கிடையாது ஆனால் எனக்கு லினக்சில் webcam ஐ இயக்கிப் பார்த்து விடவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.இதை நான் நிகழ் வட்டாக(Live CD) இயக்கித்தான் செய்துப்பார்த்தேன்.என்னிடம் ubuntu 9.10 வட்டு இருந்தது.நண்பரினுடைய Acer TravelMate 5720 மடிக்கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் உபுண்டு 9.10 லினக்சில் மிகவும் நன்றாக இயங்கியது.
- உபுண்டு 9.10 லினக்சில் நான் webcam ஐ இயக்க cheese மென்பொருளைப்பயன்படுத்தினேன்.விண்டோஸ் இயங்குதளத்தில் தெரிந்ததைவிட உபுண்டுவில் மிகவும் அருமையாக படம்பிடுத்துக் காட்டியது.
- Ubuntu Software Center சென்று cheese மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தானாகவே படம் பிடித்து தருவது,வீடியோ கோப்பாக பிடிப்பது,படத்திற்கு Effects கொடுப்பது என தனித்தன்மையுடன் cheese மென்பொருள் இருக்கிறது.
- நீங்களும் உங்கள் கணினியில் செய்துபாருங்கள்.
- webcam ஐ இயக்க cheese மென்பொருளை நிறுவியது தவிர நான் வேறு எந்த சிரமமும் படவில்லை.
எப்பவும் நாங்க (லினக்ஸ் ) கலக்கிகிட்டு இருப்போமுல்ல....
2 comments:
அருமையான பதிவு,
பகிர்விற்கு நன்றி.
அப்புறம் சிவா லினக்சுக்கு மாறினாரா?
Post a Comment