May 14, 2010

தினத்தந்தி நாளிதளின் Font ஐ லினக்சில் நிறுவுவது எப்படி? லினக்சில் தினத்தந்தி நாளிதழை படிப்பது எப்படி ?

Font install செய்யாததற்கு முன்பு தினத்தந்தி

எனக்கும் ரொம்ப நாளாக தினத்தந்தி நாளிதழை லினக்ஸ் இயங்குதளத்தில் படித்துவிட வேண்டும் என்று ஆசை.ஒரு தமிழன் தினத்தந்தியினை படிக்க முடியாமல் இருந்தால் எப்படி.நாம் தினத்தந்தி நாளிதழை அதனுடைய Font நிறுவாமல் இணையத்தில் படிக்க முடியாது.விண்டோஸ் இயங்குதளத்தில் மிக எளிதாக நிறுவிவிடலாம்.லினக்சில் எப்படி நிறுவுவது என்று எனக்கு தெரியவில்லை.சந்தேகத்தை கூகிள் பெரியவரிடமே கேட்டேன்.அவரும் மிகவும் சீக்கிரத்திலேயே வழிக்காட்டினார்.இதை நான் Linux Mint 5.0 வில் செய்து பார்த்தேன்.உபுண்டு லினக்சிலும் இதை செய்யலாம்.அதற்க்கான வழிமுறையினை கீழே கொடுத்துள்ளேன்.
  • முதலில் நீங்கள் root பயனாளராக login (நுழைந்து) ஆகியிருக்கவேண்டும்.இது ரொம்பவும் முக்கியம்.
  • தினத்தந்தி யினுடைய Font ஐ அதனுடைய இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன்.தரவிறக்கம் செய்து Desktop இல் சேமித்துள்ளேன்.Font னுடைய பெயர் Eltapan-n.ttf என்று இருக்கும்.
  • Desktop ல் தரவிறக்கம் செய்துவைத்த Eltpan-n.ttf Font னை Copy செய்து Computer => File System => usr => share => fonts => trutype => ttf-tamil-fonts எனும் அடைவிற்குள் (Folder) Paste செய்தேன்.அவ்வளவுதான் முடிந்தது வேலை (இது Linux Mint ற்க்கு).
  • நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயனாளராக இருந்தால் Computer => File System => usr => share => fonts => trutype எனும் அடைவிற்குள் (Folder) Paste செய்ய வேண்டும்.(உபுண்டு லினக்சிலும் நீங்கள் root பயனாளராக login செய்திருக்க வேண்டும்.சாதாரணமாக நீங்கள் உபுண்டு லினக்சில் root பயனாளராக நுழையமுடியாது.root பயனாளராக நுழைவதற்கு உண்டான வழிமுறைகளை இங்கு மற்றும் இங்கு கொடுத்துள்ளேன்)
  • லினக்சில் logout செய்துவிட்டு மறுபடியும் login செய்தேன். உபுண்டு ,Linux Mint எது பயன்படுத்தினாலும் சரிகண்டிப்பாக logout செய்து மறுபடியும் login செய்ய வேண்டும்.தினத்தந்தி நாளிதழ் மிகத்தெளிவாக தெரிந்தது(கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்).அப்புறம் என்ன படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதானே.
Font நிறுவியதற்கு பின்பு தினத்தந்தி நாளிதழ்

Font நிறுவியதற்கு பின்பு தினத்தந்தி நாளிதழ்

3 comments:

Kumaresan Rajendran said...

பயனுள்ள தகவல்,
அருமை பகிர்வு.

Anonymous said...

Very good info.

இரா.கதிர்வேல் said...

// Menporul.co.cc said...

Very good info.//
நன்றி சார்