விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள ஒவ்வொரு கோலனையும் உபுண்டு லினக்ஸில் திறக்கும் பொழுது அந்த ஒவ்வொரு கோலனும் Desktop -ல் Hard Disk icon னுடன் தோன்றும் இவ்வாறு தோன்றுவதை நாம் டெஸ்க்டாப்பில் தோன்றாமல் செய்யலாம்.அத்துடன் உபுண்டு லினக்ஸில் இயல்பிருப்பாக Computer, Home Folder, Trash ஆகியவைகளினுடைய icon -கள் டெஸ்க்டாப்பில் இருக்காது இவற்றையும் நாம் டெஸ்க்டாப்பில் கொண்டு வரலாம்.சரி எப்படி என்று பார்ப்போமா.முதலில் டெஸ்க்டாப்பில் கோலனுடைய icon -கள் தோன்றாமல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Applications => Accessories => Terminal சென்று முனையத்தைத் திறந்துக்கொள்ளுங்கள்.முனையத்தில் gconf-editor என்று தட்டச்சு செய்து Enter Key -யினை அழுத்துங்கள்.அழுத்தியவுடன் Configuration Editor என்ற பெயருடன் ஒரு சாளரம் தோன்றும்.அதில் இடதுகைப் பக்கமாக இருக்கும் பகுதியில் apps என்பதின் மீது வைத்து Double Click (அதாவது இரண்டுமுறை சொடுக்கவும்) செய்யுங்கள் சொடுக்கியவுடன் விரியும் பகுதியில் nautilus என்பதின் மீது வைத்து Double Click செய்யுங்கள் சொடுக்கியவுடன் விரியும் பகுதியில் Desktop என்பதின் மீது வைத்து Click செய்யுங்கள் வலது புறமாக இருக்கும் பகுதியில் volumes_visible என்பது இயல்பிருப்பாக டிக் செய்யப்பட்டு இருக்கும்.அந்த டிக் கினை நீக்கிவிட்டால் கோலன்கள் டெஸ்க்டாப்பில் தோன்றாது.
இந்த பகுதியிலேயே computer_icon_visible, home_icon_visible, trash_icon_visible ஆகியவற்றை டிக் செய்து விட்டால் Computer, Home Folder, Trash ஆகியவைகளினுடைய icon -கள் டெஸ்க்டாப்பில் தோற்றமளிக்கும்.
1 comment:
Just like windows!!!. Great. I didn't know that.
Post a Comment