எங்களது பல்கலைக்கழகத்தில் விடுதியில் உள்ள WiFi
இணைய வசதி இணைப்பில் மட்டும் PNG
வடிவ படக்கோப்புகளை வலைப்பூவில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
ஆனால் JPG
அல்லது JPEG வடிவ படக்கோப்புகளை வலைப்பூவில் பதிவேற்றம் செய்ய முடிந்ததது.
லினக்சைப் பொறுத்த வரை Screenshot
இல்லாமல் பதிவுகள்எழுதுவது என்பது அவ்வளவு நன்றாக இருக்காது.Screenshot
உடன் கொடுத்தால் எளிதில் புரியும்.அதற்காக உபுண்டு லினக்சில் Screenshot எடுக்கும் போது இருப்பியல்பாக .png வடிவத்திலேயே சேமிக்கும்.இந்த வடிவத்தில் உள்ள படக்கோப்பினை வலைப்பூவில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.அதற்க்கு ஒரு மென்பொருள் வேண்டுமல்லவா அந்த மென்பொருள் கட்டளை வடிவில் முனையத்தில் இயக்குமாறு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

எனக்கு லினக்சில் முனையத்தின் வழியாக லினக்சை பயன்படுத்த மிகவும் பிடிக்கும்.சரி முனையத்தின் வழியாக படக்கோப்பினை எவ்வாறு மாற்றலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.அப்புறம் என்ன கூகுள் பெரியவரின் உதவினை நாடினேன்.கூகுள் பெரியவரும் உதவி செய்துவிட்டார்.
- convert கட்டளையின் மூலம் இந்த வேலையினை செய்யலாம் என கூகுள் மூலம் தெரிந்தது.
- உடனே முனைத்தை திறந்து convert கட்டளையினை கொடுத்தேன்.imagemagick என்ற மென்பொருளை நிறுவச்சொல்லிக் கூறியது.
- முனையத்தில் apt-get install imagemagick எனக் கொடுத்து imagemagick மென்பொருளை நிறுவினேன்.நிறுவி முடித்தவுடன் convert எனக் கொடுத்து சோதனைச்செய்துப் பார்த்துக்கொண்டேன் நன்றாக வேலை செய்தது.
சரி கோப்பினை எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்:
- முனையத்தை திறந்து கொள்ளுங்கள்
- su எனக் கொடுத்து root பயனாளரினுடைய கடவுச்சொல்லை உள்ளிட்டு root பயனாளராக மாறிக்கொள்ளுங்கள்.
- apt-get install imagemagick எனக் கொடுத்து imagemagick மென்பொருளை நிறுவிடவும்.நிறுவிய பிறகு
- cd கட்டளையின் உதவியுடன் நீங்கள் படக்கோப்பினை வைத்திருக்கும் அடைவிற்குள் சென்றுக்கொள்ளுங்கள்.
- உதாரணமாக 1.png என்ற படக் கோப்பினை வைத்திருக்கிறீர்கள் என்றால் இதை jpg (அல்லது) jpeg கோப்பாக மாற்ற முனையத்தில்
- convert 1.png 1.jpg என்று கட்டளையினை கொடுங்கள்.அவ்வளவுதான் ஒரு வினாடியில் கோப்பினை மாற்றிவிடும்.
- இங்கு 1.png என்பது நான் வைத்திருக்கும் படக்கோப்பின் பெயர் இதில் நீங்கள் என்ன பெயருடன் வைத்திருக்கிறீர்களோ அதைக் கொடுத்துக்கொள்ளுங்கள்.
- 1.jpg என்பதில் 1 என்பது நான் சேமிக்க விரும்பிய பெயர் அதற்க்கு பதிலாக நீங்கள் உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு:இந்த பதிவில் இடப்பட்டிருக்கும் படங்கள் convert கட்டளையினைப் பயன்படுத்தி மாற்றப்பட்டது.
4 comments:
You show how to overcome practical difficulties in using linux.
That is very good.
Thank you sir
Thank you sir
நன்றி கதிர்...
Post a Comment