Feb 5, 2010

கட்டற்ற மென்பொருள் - விளக்கம்


கட்டற்ற மென்பொருள் என்பதில் உள்ள 'Free' என்ற சொல் விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகி கொண்டது . இதனை இலவசம் என்று அர்த்தம் கொள்ளாமல் சுதந்திரம் என்ற பொருளில் தாங்கள் கருத வேண்டும்.

இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அந்த மென்பொருளை இயக்க, படியெடுக்க விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக்கூடிய உரிமைகளைப் பற்றியது . குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனர் ஒருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான் சுதந்திரைப பற்றியது.

  • எதன் பொருட்டும் நிரலினை இயக்கக்கூடிய சுதந்திரம் .(முதலாவது சுதந்திரம் )
  • நிரல் பணியாற்றும் விதத்தை கற்று தமது தேவைகேற்றார் போல் ஆக்கிகொள்ளக்கூடிய சுதந்திரம்முதலில் நிரலின் மூலத்தினை அணுகக்கூடிய உரிமம் இதற்க்கு கொடுக்கப் பட்டிருத்தல்வேண்டும் .
  • பிறரும் பயனுற வேண்டி நகல் எடுத்து விநியோகிப்பதற்க்கான சுதந்திரம்.
  • ஒட்டு மொத்த சமூகமும் பயன்பெற வேண்டி , நிரலினை மேம்படுத்தி , செய்த மாற்றங்களை பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம் . முதலில் நிரலின் மூலத்தினை அணுகக்கூடிய உரிமம் இதற்க்கு கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.(நான்காவது சுதந்திரம்)
குறிப்பு: இந்த தகவல் கட்டற்ற மென்பொருள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments: