நான் மடிக்கணினி பயன்படுத்தி வருகிறேன் .
மடிக்கணினி விபரம்:
HP Compaq 515
Processor : AMD Athlon X2 Dual Core 64 bit processor
Ram : 1 GB
Graphics : ATI
Sound Card:IDT High Definition Audio
WiFi :Broadcom 802.11 b/g WLAN
Bluetooth Available,3 usb ports,internal modem,lan card.
என்னுடைய மடிக்கணினியில் நான் முதலில் நிறுவிய லினக்ஸ் sabayon liux ஏனென்றால் sabayon linux ல் ஆடியோ நன்றாக வேலை செய்தது ஆனால் கம்பியில்லா தொடர்பு வசதி வேலை செய்யவில்லை .ஒரு சில நாட்கள் வரையிலும் sabayon linux ஐ பயன்படுத்தி வந்தேன்.
ஒரு குறிபிட்ட நாட்கள் sabayon linux ஐ பயன்படுத்தி விட்டு அதன் பிறகு Debian 5.0 லினக்ஸ் ஐ நிறுவினேன் அதிலும் கம்பியில்லா தொடர்பு வசதி வேலை செய்யவில்லை .அதன் பிறகு எந்த லினக்சையும் நிறுவ நினைக்கவில்லை.
ஒரு சில மாதங்கள் கழித்து Ubuntu 9.04 லினக்சை Live CD ஆக பயன்படுத்தி பார்த்தேன் என்னுடைய மடிக்கணினி இனுடைய அனைத்து வன்பொருளுக்கும் சரியான Driver கலை நிறுவி மிகவும் நன்றாக கம்பியில்லா தொடர்பு வசதியுடன் (WiFi )இயங்கியது அதனால் Ubuntu 9.04 யினை விண்டோசுடன் இரட்டை நிறுவல்லாக (Dual booting) நிறுவினேன் மீண்டு ஒரு பிரச்சனை உண்டானது .Sound Card வேலை செய்யவில்லை Sound Card வேலை செய்யாமல் இருப்பது எனக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை .
ஒரு நாள் நான் எதார்த்தமாக எனக்கு Linux For You Magazine உடன் வந்த Linux Mint 5.0 CD யினை live ஆக பயன்படுத்தி பார்த்தேன் அதுவும் நன்றாக வேலை செய்தது.ஆனால் அதிலும் கம்பியில்லா தொடர்பு வசதி வேலை செய்ய வில்லை.
ஆனால் Linux Mint 5.0 -ல் control center -ல் Ndiswrapper வசதி இருந்தது அதில் விண்டோ இயங்கு தளத்தில் கம்பியில்லா தொடர்பு வசதிக்காக நிறுவியிருந்த .inf file யினை நிறுவினேன்
என்ன ஆச்சரியம் கம்பியில்லா தொடர்பு வசதி நன்றாக வேலை செய்தது .
அதனுடன் Linux Mint 5.0 வில் mp3,DVD போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளது.
Windows XP க்கு சரியான மாற்று இயங்கு தளமாக Linux Mint 5.0 எனது மடிக்கணினியில் அமைந்தது.
No comments:
Post a Comment