இந்த தொடரில் நாம் history என்ற கட்டளையை பற்றி பார்ப்போம்.இந்த history கட்டளையின் பயன் நாம் இதுவரை கொடுத்த கட்டளைகளை வரிசைப்படுத்தி காண்பிக்கும்.அதோடு history யில் காண்பிக்கும் கட்டளைகளுக்கு ஒரு எண் இட்டு இருக்கும் அந்த எண்ணிற்கு முன்னாள் ! சேர்த்து கொடுத்தால் அந்த எண் குறிப்பிடும் கட்டளையை நீங்கள் தட்டச்சு செய்யாமலே செயல்படுத்தலாம்.
இந்த கட்டளையை செயல்படுத்த முனையத்திற்கு (Terminal) சென்று history என கொடுத்து Enter பொத்தானை அழுத்தவும்.உண்டனே நீங்கள் இதுவரை கொடுத்து செயல் படுத்திய கட்டளைகளை காண்பிக்கும்.
இதை நீங்கள் clear செய்ய முனையத்தில் (termianl) history -c என்ற கட்டளையை கொடுங்கள்.
சுருக்கமாக:
history கட்டளையை செயல்படுத்த:
$history
history -யினை clear செய்ய:
$history -c
history கட்டளையை குறிப்பிட்டுள்ள எண்ணுடன் உள்ள கட்டளையை தட்டச்சு செய்யாமல் செயல் படுத்த.history கட்டளையை கொடுத்து அது காண்பிக்கும் என்னை குறித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக:- history கட்டளை கொடுத்த பிறகு இவ்வாறு காண்பித்தால்.
1 pwd
2 top
3 clear
4 ls
ls கட்டளையை செயல்படுத்த.இவ்வாறு அமைக்கலாம்.
$!4
No comments:
Post a Comment