Jan 26, 2010

லினக்சில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 3


இந்த தொடரில் நாம் பார்க்கபோகும் கட்டளை mv
இந்த கட்டளை ஒரு file யினை நகர்த்த (move) செய்ய பயன்படுகிறது
எடுத்துக்காட்டாக $mv file1 file2 என்று கட்டளை கொடுத்தால் file1 ல் உள்ளதை file2 விற்கு நகர்த்திவிடும் .நகர்த்திவிட்டு file1 ஐ அழித்துவிடும் .விண்டோ சில் cut பண்ணி paste செய்வது போல.

கட்டளை அமைத்தல் :

Terminal ஐ திறந்து கொள்ளுங்கள் கீழ்கண்டவாறு கட்டளையை கொடுத்து செயல்படுத்தி பாருங்கள்

$cat > file1
PERIYAR VAAZHKA
TAMIL VAAZHKA

போன்று உங்களுக்கு தேவையான தகவலை உள்ளீடு செய்து கொள்ளுங்கள் .
உள்ளீடு செய்து முடித்தவுடன் Ctrl+D key யினை ஒரு சேர அழுத்துங்கள் இப்பொழுது நீங்கள் உள்ளீடு செய்த தகவலானது file1 என்ற பெயருடன் சேமிக்கப்படும். இப்பொழு நீங்கள் வெற்றிகரமாக ஒரு file யினை உருவாகிவிட்டிர்கள் . நீங்கள் இந்த file1 என்னும் file யினை file2 என்ற பெயருக்கு நகர்த்த வேண்டுமானால்

$mv file1 file2

என்று கொடுங்கள் .

குறிப்பு: (cat கட்டளையை பற்றி பின்வரும் தொடர்களில் பார்க்கலாம் . Ctrl+d யானது file யினை சேமிக்க உதவுகிறது .)

file1 file2 என்று நான் கொடுத்திருக்கும் பெயர்களுக்கு பதிலாக நீங்கள் உங்களுக்கு தேவையான, பிடித்தமான பெர்யர்களை கொடுத்துக்கொள்ளலாம் .
mv கட்டளையை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள file களையும் வேறொரு பெயர்களுக்கு நகர்த்திக்கொள்ளலாம் .