கணினியில் இருந்த இரண்டு வன்வட்டுகளில் இரண்டாவதாக இருந்த வன்வட்டினுடைய D: இல் உள்ள கோப்புகள் தெரியவில்லை. முதலில் Mount ஆகாமல் பிழைச்செய்தி காட்டியது. அதன்பின் Disk Utility இல் இருந்த Check Filesystem மூலம் ஏதாவது சரிசெய்ய முடியுமா என்று முயற்சித்துப் பார்த்தேன். முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் கிடைத்தது. Mount ஆகாமல் இருந்த D: அதன் பின் Mount ஆகியது. ஆனால் கோப்புகள்தான் தெரியவில்லை.
சரி ஒருவேளை அழிந்து போயிருக்குமோ என நினைத்து, Right Click செய்து Properties கொடுத்துப் பார்த்தேன். அதனுடைய படம்தான் மேலே முதலாவதாக கொடுத்துள்ளேன். 16.1GB Used என வந்தது. அப்படியென்றால் கோப்புகள் இருக்கிறது. வேறெங்கேயோ தவறு நடந்துள்ளது என நினைத்துக் கொண்டு, fsck கட்டளை மூலம் முயற்சித்துப் பார்த்தால் என்ன என தோன்றியது. முயற்சிக்கு வெற்றி இறுதியாக கிடைத்தது.

பிரச்சனை என்னவென்றால் File System Corrupt ஆனதுதான்.
முனையத்தில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் y என உள்ளீடு கொடுத்தேன். இறுதியாக D: இல் உள்ள கோப்புகளை நான் காணமுடிந்தது.
No comments:
Post a Comment