Jan 24, 2014

உபுண்டு 12.04 இல் NetBeans IDE நிறுவுதல்

கணினி நிரலாளர்களும், மாணவர்களும் NetBeans IDE ஐ நிரல்கள் எழுதுவதற்காக பயன்படுத்துகின்றனர். பொதுவாக IDE க்கள் அனைத்துமே நாம் நிரல் எழுதும் வேலையை சுமூகமாக்குகிறது. Eclipse ஐப் போன்றே NetBeans IDE யும் பயன்படுத்துவதற்கு சிறப்பாக இருக்கும். விண்டோஸ், ஆப்பிள் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் NetBeans IDE நிறுவி பயன்படுத்த முடியும்.

NetBeans IDE யின் அண்மைய பதிப்பு 7.4 ஆகும். NetBeans இணையதளத்திலிருந்து லினக்ஸிற்கான பதிப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி இங்கே. 



All எனும் வகையில் உள்ள NetBeans ஐ நான் முனையத்தில் wget கட்டளை மூலமாக தரவிறக்கம் செய்தேன். நீங்கள் உங்களுக்கு உகந்த முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 198MB அளவு இருந்தது. netbeans-7.4-linux.sh எனும் ஒற்றை கோப்பாகத்தான் தரவிறக்கம் ஆகும்.

கவனத்திற்கு:
Netbeans ஐ நிறுவ வேண்டுமானால் உங்கள் உபுண்டு இயங்குதளத்தில் Java அவசியம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். உபுண்டுவில் ஜாவவை நிறுவுவது எப்படி என தெரிந்து கொள்ள நான் எழுதிய பதிவிற்கு செல்லவும்.

முனையத்தில், cd கட்டளையின் உதவியுடன் கோப்பு தரவிறக்கம் ஆன அடைவுக்குள் செல்லவும். சென்ற பிறகு முனையத்தில் sudo chmod +x netbeans-7.4-linux.sh என கொடுக்கவும். இந்த கட்டளை netbeans-7.4-linux.sh எனும் கோப்பினை Executable ஆக மாற்றும்.


அதன்பின் முனையத்தில் sudo ./netbeans-7.4-linux.sh எனும் கட்டளையை இயக்கவும். சிறிது நேரத்தில் உங்களுக்கு Netbeans நிறுவுதலுக்கான Graphical Interface கிடைக்கும். அதன்பின் நிறுவுதலை நீங்கள் எளிமையாக தொடரலாம்.











No comments: