Jan 15, 2014

லினக்ஸ் பாதி, விண்டோஸ் பாதி கலந்து செய்த கலவை நான்! - உபுண்டு லினக்ஸிற்குள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?




நேற்றுதான் என்னுடைய உபுண்டு லினக்ஸில் Virtual Box ஐ நிறுவினேன். Wine Software மூலமாக விண்டோஸில் இயங்கக்கூடிய மென்பொருள்களை லினக்ஸில் இயக்க முடியும் என்றாலும். அனைத்து மென்பொருள்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் Wine இல் இயங்குமா? என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். ஆகையால் Virtual Box ஐ நிறுவி அதனுள் Windows7 இயங்குதளத்தை நிறுவினேன்.

எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் Windows7 இயங்குதளம் மிகவும் நன்றாக, உபுண்டு லினக்ஸிற்குள் இயங்குகிறது. இரண்டாவதாக உள்ள படத்தில் என்னுடைய மடிக்கணினியின் வன்பொருள்களின் பயன்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. உபுண்டு, Windows7 இரண்டு இயங்குதளத்திற்கும் சேர்த்து Processor 14% சதவீதம்தான் பயன்படுத்தப்படுகிறது. உபுண்டுவிற்குள் இருக்கும் கோப்புகள் அனைத்தையும் Virtual Box ற்குள் இருக்கும் Windows7 இயங்குதளத்திற்குள் காண முடிகிறது. இது ஒரு மிகப்பெரிய வசதியாகும்.



முழுமையாக லினக்ஸை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆசைப்படுபவர்கள், உபுண்டுவில், லினக்ஸில் செய்ய முடியாத சில வேலைகளுக்காக விண்டோஸ் இயங்குதளத்திற்குள் செல்ல வேண்டியுள்ளது.  அதற்கு சரியான தீர்வு Virtual Box ஆகும்.

அதெல்லாம் சரி தம்பி இதனால எங்களுக்கென்ன இலாபம்? அப்படினு கேக்குறீங்களா? நிறைய இருக்குங்க சொல்றேன் கேளுங்க.

இலாபம் ஒன்று:
உங்களுக்கு உபுண்டு லினக்ஸ்தான் மிகவும் பிடித்த இயங்குதளம். ஆனால் சில தவிர்க்க முடியாத வேலைகளுக்காக விண்டோஸ் இயங்குதளத்திற்குள் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக கணினியினை மறுதொடக்கம் செய்ய வேண்டியுள்ளது. Virtual Box ற்குள் Windows7 இயங்குதளத்தை நிறுவி வைத்தால், முக்கியமான இந்த பிரச்சனை சரியாகி விடும். விண்டோஸ் இயங்குதளம் வேண்டுமானால Virtual Box ஐ திறந்து windows7 இயங்குதளத்தை இயக்கி உங்களுடைய வேலைகளை செய்து விட்டு மூடி விடலாம். மறுதொடக்கம் செய்ய வேண்டியதில்லை அதனால் உங்களுக்கு நேரமும் அதிகம் மிச்சமாகும்.

இலாபம் இரண்டு:
இணையத்தில் இருந்து ஒரு கோப்பை தரவிறக்கம் செய்கிறீர்கள், ஆனால் அந்த அந்த கோப்பு .docx வடியில் இருக்கிறது. அதை Libreoffice Writer இல் திறக்கும் போது சரிவர தெரியவில்லை என்றால், உடனே அந்த கோப்பை virtual box ற்குள் இருக்கும் windows7 இயங்குதளத்திற்குள் சென்று திறந்து பார்த்துக்கொள்ளலாம்.

இலாபம் மூன்று:
உபுண்டு இயங்குதளத்திற்குள் இருக்கும் கோப்புகளையும் Virtual Box ற்குள் இருக்கும் Windows7 இயங்குதளத்திற்குள் கொண்டு வந்து பயன்படுத்த முடியும் என்பதால் நேரம் நமக்கு மிச்சமாகும். நமது வேலைகளையும் மிகவும் விரைவாக செய்ய முடியும்.

இதுபோல பல நன்மைகள் இதன்மூலம் உண்டு.



அடுத்தடுத்த பதிவுகளில் virtual box ஐ உபுண்டுவில் நிறுவுதல் மற்றும் window7 இயங்குதளத்தை Virtual box ற்குள் நிறுவுதல் பற்றி பதிவு செய்கிறேன்.

References:

7 comments:

Samuel Johnson said...

interesting......Waiting for the next post... i am a regular follower

Anonymous said...

interesting......Waiting for the next post... i am a regular follower

இரா.கதிர்வேல் said...

Thanks Samuel Johnson

seetha said...

வணக்கம், Ubuntuவில் Virtualbox ஐ நான் கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். Virtualboxன் மூலம் Linuxல் எந்த லினக்ஸ் எந்த பதிப்பு வந்தாலும் நிறுவி பாா்த்து விடுவேன். இதுவரை என்னுடைய Virtualboxல் 12 OS நிறுவியிருக்கிறேன். என்னுடைய Polytechnic கல்லூரி Labல் 20 systemகளில் Ubuntu மற்றும் CentOSல் Virtualbox நிறுவியிருக்கிறேன். Virtualboxன் மூலம் என்னுடைய மாணவர்களுக்கு Server - Client mdoelல் அடிப்படையில் Network Labஐ ஓரே systemத்தில் நடத்தி வருகிறேன். என்னுடைய மாணவர்கள் CentOS, Windows 2008 Server மற்றும் பல OSகளை நிறுவி கற்று வருகிறார்கள். Virtualbox என்னுடைய favarite. இதன் மூலம் கற்ற விஷயங்கள் பல. இன்னும் பல விஷயங்கள் கற்று வருகிறேன்.

இரா.கதிர்வேல் said...

நன்றி seetha.

Siva Kay said...

I am very much eager for your next post. Thanks in Advance.

இரா.கதிர்வேல் said...

thanks siva kay