Oct 18, 2013

KDE Environment -ல் GTK Applications(gnome applications) அழகாக மற்றும் தெளிவாக தெரிய


oxygen-gtk widget நிறுவுவதற்கு முன் Mozilla Firefox 


                                    oxygen-gtk widget நிறுவிய பின் Mozilla Firefox

                                   
                                   oxygen-gtk widget நிறுவுவதற்கு முன் Libreoffice Writer


                                   oxygen-gtk widget நிறுவிய பின்  Libreoffice Writer 

Libreoffice, Chromium, Google Chrome, gEdit TextEditor ஆகியவைகள் GTK அடிப்படையிலான பயன்பாடுகள் என்பதால் oxygen theme ஐ பயன்படுத்தாமல் ஒரு மாதிரியாக windows 98 காலத்து Theme மைப்போல பழமையாக தெரிந்தது.  இந்த பிரச்சனையினை எப்படி சரி செய்வது என்று மறுபடியும் தேடுதல் வேட்டையில் இறங்கினேன்.   அதற்கும் கிடைத்தது தீர்வு.


Software Management -ல் oxygen எனத் தேடி oxygen-molecule என்பதை நிறுவிக்கொள்ளவும். 

oxygen-gtk எனும் Theme ஐ நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து GTK+Appearance பயன்பாட்டை KDE menu மூலமாக திறந்து Widget style என்பதில் oxygen-gtk என்பதை தேர்வு செய்து Apply button ஐ சொடுக்க(click) வேண்டும்.



இதை கொடுத்த பின்பு Gnome application களும் KDE யில் பயன்படுத்தப்படும் oxygen theme போல மிகவும் அழகாக தெரியும்.

இந்த settings ஐ மாற்றிய பிறகு Libreoffice Writer -ல் மட்டும் தமிழ் தட்டச்சு வேலை செய்யாது ஆகையால் home அடைவிற்குள் இருக்கும் .bashrc கோப்பினைத் திறந்து அதில் கீழ்காணும் ஒற்றை வரியினை சேர்க்க வேண்டும்.

export OOO_FORCE_DESKTOP=gnome

.bashrc கோப்பினை சேமிக்கவும்.  .bashrc கோப்பினை மூடிவிட்டு, ஒரு முறை logout செய்து விட்டு login செய்யவும்.  இப்பொழுது Libreoffice Writer அழகாக தோன்றுவதுடன், தமிழில் தட்டச்சும் செய்ய முடியும்.


7 comments:

Unknown said...

Sir,

Your blog is very useful...

I have installed Ubuntu with dual boot windows

while installing i chose /dev/sda2 (Windows) as device for boot loader installation.

when i choose windows in grub it again shows boot menu only
i ma unable to load windows now

how can i solve this problem....

Advance thanks for your reply

இரா.கதிர்வேல் said...

நன்றி முருகானந்தம்.

/dev/sda வில் தான் grub boot loader ஐ நிறுவ வேண்டும். /dev/sda1 மற்றும் /dev/sda2 ஆகியவைகள் விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டிற்கானது நீங்கள் /dev/sda2 எனக் கொடுத்ததால் விண்டோஸ் இயங்குதள கோப்புக்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் முக்கியமான கோப்புக்களை பேக்கப் செய்துவிட்டு மறுபடியும் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிவிட்டு பிறகு உபுண்டுவினை நிறுவுங்கள் boot loader location ஐ /dev/sda எனக் கொடுங்கள். பிரச்சனைக்கான தீர்வும் இதுதான். மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்..

Unknown said...

நன்றி ...
இப்போது உபுண்டு ல் KDE இன்ஸ்டால் செய்தேன். ஆனால் font சரி இல்லை என்ன செய்வது

Unknown said...

நன்றி ...
இப்போது உபுண்டு ல் KDE இன்ஸ்டால் செய்தேன். ஆனால் font சரி இல்லை என்ன செய்வது

இரா.கதிர்வேல் said...

நன்றி முருகானந்தம்.
Tamil Font or English font இவையிரண்டில் எது சரியாக தெரியவில்லை.

Unknown said...

thanks for you support


i tried in anti alising...now it is working fine

இரா.கதிர்வேல் said...

நன்றி முருகானந்தம். உங்களது தீர்வினை பகிர்ந்து கொள்ளுங்கள். பல பயனர்கள் தெரிந்து கொள்ளுவார்கள். நானும்தான்.