Nov 9, 2011

Place Menu வில் உள்ளவைகள் vlc Media Player -ல் Open ஆவதை சரி செய்வது எப்படி?

ஒரு சில நேரங்களில் உபுண்டுவில் Places Menu வில் உள்ளவைகள் vlc Media Player -ல் Open ஆகிறது. இந்த பிரச்சினையினை மிகவும் எளிதாகச் சரி செய்து விடலாம்.


Desktop -ல் Right Click செய்து Create New Folder கொடுத்து ஒரு Folder னை உருவாக்கிக் கொள்ளுங்கள். Untitled folder என உருவாகும்.


அதன் மீது Right Click செய்து Open With Other Application என்பதைக் சொடுக்குங்கள்.

அதனைத் தொடர்ந்து கிடைக்கும் Window -ல் Open Folder எனபதைத் தேர்வு செய்து Open Button ஐ அழுத்துங்கள்.

அவ்வளவுதான் இனிமேல் Places Menu வில் உள்ளவைகள் Nautilus -ல் எப்பொழுதும் போல் திறக்கும்.

Nov 3, 2011

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?

படம்-1
படம்-2
படம் - 3
என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தையும், உபுண்டு லினக்ஸ் 10.10 இயங்குதளத்தையும் இரட்டை நிறுவலாக நிறுவி வைத்திருந்தேன். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி இரண்டு வருடமாகிவிட்டது, விண்டோஸ் இயங்குதளத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை, அவ்வப்போது ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்திற்காக பயன்படுத்துவேன். ஒரு பொறியியல் படிக்கும் மாணவன் என்ற முறையில் உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் எனக்கு போதுமானதாக இருக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனமே பயனாளர்களுக்கு பரிந்துரைக்கிறது. அப்படி இருக்கையில் நான் விண்டோஸ் இயங்குதளத்தை இரண்டு வருடம் வரை மாற்றாமல் வைத்திருந்ததெல்லாம் , விண்டோஸ் இயங்குதளத்திற்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

என்னதான் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள்களை நாம் நிறுவி வைத்திருந்தாலும், வைரஸ் தொல்லை என்பது விண்டோஸிற்கு உடன்பிறப்பாகவே ஆகிவிட்டது. உருவத்துடன் வரும் நிழல் போல.

அத்துடன் நீலத்திரை மரணம் என்பது விண்டோஸில் இயல்பானது. என்னுடைய மடிக்கணினியில் இருந்த விண்டோஸிற்கு இந்த மரணம் வந்துவிட்டது. ஆகையால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்த முடியவில்லை.

எனவே விண்டோஸ் இயங்குதளத்தை மீண்டும் நிறுவலாம் என முடிவு செய்தேன். ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. விண்டோஸ் இயங்குதளதை நிறுவினால் ஏற்கனவே நிறுவியுள்ள உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் காணாமல் போய்விடும்.


விண்டோஸ் இயங்குதளத்துடன் லினக்ஸை நிறுவும் பொழுது, கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளைத்தை லினக்ஸ் கண்டறிந்து, தன்னுடன் சேர்த்துக்கொண்டு பயனாளருக்கு இரண்டு இயங்குதளத்தையும் காட்டும். அதில் பயனாளருக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இந்த விண்டோஸ் இயங்குதளம் மட்டும் கணினியில் உள்ள எந்த இயங்குதளத்தையும் கண்டுகொள்ளாது அது மட்டும் வன்வட்டில் இருந்து கொள்ளும். (என்ன கொடுமை சார் இது. இப்படியும் ஒரு இயங்குதளமா!!!)

மறுபடியும் உபுண்டு லினக்ஸை நிறுவி , இணையத்தை இணைத்து நம்முடைய பயன்பாட்டிற்குண்டான மென்பொருள்களை நிறுவி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் நம்முடைய நிறைய நேரம் விரையாமாகியிருக்கும்.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உபுண்டு லினக்ஸை மீண்டும் புதிதாக நிறுவாமல் ஏற்கனவே நிறுவி வைத்திருப்பதையே கொண்டு வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என யோசித்தேன்.

இது தொடர்பாக ஏற்கனவே தோழர் மு.மயூரன் அவர்கள் "வின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்" என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த பதிவு ஓரளவு அடிப்படையினை புரிந்து கொள்ள உதவியது.



படம்-4

தோழர் மயூரன் எழுதியிருக்கும் வழிமுறைகள் உபுண்டு 9.04 வரையிலும் செல்லுபடியாகும். உபுண்டு 9.10 லிருந்து, உபுண்டு வினுடைய GRUB Boot Loader Upgrade செய்யப்பட்டுள்ளது.

நான் நிறுவியுள்ளது உபுண்டு 10.10. ஆகையால் மயூரன் எழுதியிருந்த வழிமுறைகள் வேலை செய்யவில்லை. அப்புறம் என்ன இருக்கவே இருக்கிறார் கூகுளார், அவரிடமே கேட்டேன் கொடுத்தார் வழிமுறைகளை.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருக்கும் உபுண்டுவினை கொண்டு வருவது மிக மிக எளிமையான ஒன்று. எனவே நாம் உபுண்டு போய்விடுமோ, மறுபடியும் நிறுவ வேண்டி வருமோ என பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இதற்கு தேவையானவை:

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகுதான், நாம் உபுண்டுவை திரும்பப் பெறும் வேலையை ஆரம்பிக்க போகிறோம்.

உபுண்டு 9.10 அல்லது அதற்கு பிறகு வெளிவந்த உபுண்டு வில் ஏதாவது ஒரு உபுண்டு வட்டு (Ubuntu CD). இது மிகவும் முக்கியம்.

உபுண்டுவினை நிறுவியிருக்கும் Partition னினுடைய Partition Number. இதை நீங்கள் உபுண்டுவில் System => Administration => Disk Utility சென்று தெரிந்து கொள்ளலாம். அல்லது Gpartition Editor மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.

Root Mount Point னுடைய Number னை மட்டும் குறித்துக்கொண்டால் போதுமானது.

Boot Mount Point யினை தனியாக பிரித்து இருந்தால் /boot னுடைய Partition Number ஐயும் குறித்துக்கொள்ளுங்கள் (கண்டிப்பாக).

அவ்வளவுதான் முதற்கட்ட வேலைகள் முடிந்தது.

இப்பொழுது உபுண்டு வட்டினை (9.04 க்கு பிறகு வெளியிடப்பட்ட பதிப்பு) சி.டி டிரைவினுள் நிழைத்து சி.டி யிலிருந்து கணினியினை Boot செய்யுங்கள். நிகழ் வட்டாக பூட் செய்ய வேண்டும். அதாவது Live CD யாக.

சி.டி யிலிருந்து கணினி Live ஆக Boot ஆகிய பிறகு. உபுண்டு வினுடைய Desktop உங்களுக்கு கிடைக்கும், கிடைத்த பிறகு

Applications => Accessories => Terminal சென்று Terminal ஐ திறந்துக்கொள்ளுங்கள். முனையம் திறந்த வுடன் கீழ்கண்ட கட்டளைகளை கொடுங்கள்.

sudo mount /dev/sdaX /mnt

இங்கு /dev/sdaX என்பதில் X என்னுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே உபுண்டு நிறுவியிருக்கும் root Partition னினுடைய எண்ணினை குறித்து வைத்திருப்பீர்கள் இல்லையா அதை கொடுக்கவும்.

உதாரணமாக என்னுடைய வன்வட்டில் root partition னுடைய எண் /dev/sda9 ஆகையால், நான் /dev/sda9 என கொடுத்திருக்கிறேன். (sudo, mount, /dev/sdaX, /mnt இவற்றுக்கு இடையில் single space கட்டாயாம் இருக்க வேண்டும்.)

நீங்கள் /boot ற்கென தனியாக ஒரு partition உருவாக்கியிருந்தால் கீழே உள்ள கட்டளையினை கொடுங்கள், இல்லையென்றால் வேண்டாம்.

sudo mount /dev/sdaY /mnt/boot

இங்கு /dev/sdaY என்பதில் Y என்னுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே உபுண்டு நிறுவியிருக்கும் boot Partition னினுடைய எண்ணினை குறித்து வைத்திருப்பீர்கள் இல்லையா அதை கொடுக்கவும்.

உதாரணமாக என்னுடைய வன்வட்டில் boot partition னுடைய எண் /dev/sda10 ஆகையால், நான் /dev/sda10 என கொடுத்திருக்கிறேன். (sudo, mount, /dev/sdaY, /mnt/boot இவற்றுக்கு இடையில் single space கட்டாயாம் இருக்க வேண்டும்.)

மேலே உள்ள கட்டளைகளைக் கொடுத்த பிறகு இறுதியாக இந்த கட்டளையினைக் கொடுக்கவும்.

sudo grub-install --root-directory=/mnt/ /dev/sda


இந்த கட்டளையினைக் கொடுத்து முடித்தவுடன். Installation Finished. No error reported. என ஒரு வெளியீட்டு செய்தி கிடைக்கும். அவ்வளவுதான் முனையத்தை மூடி விட்டு, கணினியினை Restart செய்யவும்.

Restart செய்து கணினியினை ஆரம்பித்தவுடன் உங்களுக்கு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டுவினுடைய GRUB Boot Loader கிடைக்கும்.

நான் மேலே கொடுத்துள்ள படம் -4 னை பெரிதுப்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எளிமையாக இருக்கும்.

உங்களுக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். உபுண்டு வேண்டுமென்றால் உபுண்டு , விண்டோஸ் வேண்டுமென்றால் விண்டோஸ்.

குறிப்பு:

இங்கு /dev/sda என குறிப்பிட்டுள்ளது Serial ATA தொழில்நுட்பம் கொண்ட வன்வட்டிற்குண்டானது. இன்றைக்கு பெரும்பாலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட வன்வட்டுதான் பயன்பாட்டில் உள்ளது. ஒரு வேளை உங்களுடைய வன்வட்டு IDE தொழில்நுட்பம் கொண்டதாக இருந்தால் /dev/hda என வரும்.


Oct 15, 2011

2009 ஆம் ஆண்டில் வெளிவந்த LINUX For You Magazine - PDF வடிவில்

2009 ஆண்டு வெளிவந்த LINUX For You Magazine இதழ்கள் PDF வடிவில் LINUX For You Magazine உடன் வரும் வட்டில் இருந்தது. ஒரு வருடமாகியும் வலைப்பூவில் ஏற்றும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை. இந்த இதழ்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். அனைத்து இதழ்களும் (12 இதழ்களும் சேர்த்து) 400 MB க்கும் குறையாமல் இருக்கும்.

Sep 27, 2011

லினக்ஸ் மரம் - Linux Tree


படத்தின் மீது சொடுக்கி பெரிது படுத்திப் பாருங்கள். ஒவ்வொரு லினக்ஸ் வழங்கல்களும் எந்த குடும்பத்தில் இருந்து வந்தது எனத் தெரியும். ஒரு பதிவு கூற வேண்டிய செய்தியினை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.

Sep 19, 2011

உபுண்டுவின் கூகுள் குரோம் இணைய உலாவியில் இருந்த தமிழ் யுனிகோடு பிரச்சனைக்குத் தீர்வு

உபுண்டு லினக்ஸிலும் சரி, விண்டோஸ் இயங்குதளத்திலும் சரி நாம் இணையத்தில் உலாவுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தும் உலாவி நெருப்பு நரியும், கூகுள் குரோமும் தான். நான் அதிகம் குரோம் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் உபுண்டு இயங்குதளத்தில் கூகுள் குரோம் உலாவியினையும் நிறுவி வைத்திருந்தேன்.

ஏன் குரோம் பயன்படுத்துவதில்லை என்றுக் கேட்டால் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை. தமிழ் எழுத்துருக்கள் பிய்ந்தோ அல்லது கட்டம் கட்டமாகவோ தெரிந்தது. நிறைய தமிழ் வலைப்பூக்களில் Email Subscribe செய்து வைத்திருக்கிறேன். நிறைய நண்பர்கள் தமிழில்தான் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ஆகையால் கூகுள் குரோமினைப் பயன்படுத்துவதில்லை

ஒரு நாள் சரி முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று முடிவு செய்து கூகுளாரிடம் கேட்டேன் ஏதேதோ காட்டியது, எந்தெந்த இணையதளத்திற்கெள்ளாமோ அழைத்துச் சென்றது தீர்வுக் கிடைக்கவில்லை.

ஒரு வழியாக கூகுள் மூலமே கண்டுபிடித்தேன். ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதும் நண்பர் ஒருவர் இந்த இணைப்பினைக் கொடுத்து உபுண்டுவில் நிறுவியிருக்கும் கூகுள் குரோமினுடைய யுனிகோடு தமிழ் எழுத்துரு பிரச்சனைக்கு தீர்வு கூறியிருந்தார். அதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டேன்.


படம்-1

மிகவும் எளிமையான தீர்வு /usr/share/fonts/truetype/freefont எனும் அடைவிற்குள் உள்ள அனைத்து எழுத்துரு கோப்புகளையும் நீக்கி விட்டால். தமிழ் எழுத்துருக்கள மிக அழகாக உபுண்டுவின் கூகுள் குரோம் உலாவியில் காட்சியளிக்கும். குரோமினை நீங்கள் திறந்து வைத்திருந்தால் ஒரு முறை மூடிவிட்டு திறக்கவும்.

படம் -2
குறிப்பு:
/usr/share/fonts/truetype/freefont எனும் அடைவிற்குள் உள்ள எழுதுருக்களை நீக்க முடியவில்லை என்றால் முனையத்தை திறந்து sudo chmod 777 /usr/share/fonts/truetype/freefont/* எனக் கொடுத்து என்டர் கீயினை அழுத்துங்கள். பிறகு சென்று நீக்குங்கள். எழுத்துருக்கள் நீங்கும்.

எவ்வளவு அருமையாகவும், தெளிவாகவும் கூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் தெரிகிறது பாருங்கள்.




Sep 18, 2011

லினக்ஸ் கோப்புகளை, Partition -களை விண்டோஸ் இயங்குதளத்திலும் பார்க்கலாம், பயன்படுத்தலாம்

நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள கோப்புகள் அனைத்தையும் உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு எடுத்து பயன்படுத்த முடியும். இது லினக்ஸ் இயங்குதளங்களினுடைய சிறப்பு. ஆனால் நம்ம அண்ணன் பில்கேட்ஸ் வெளியிட்டிற்கும், வெளியிட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு லினக்ஸில் இருக்கும் கோப்புகளை நாம் எடுத்து பயன்படுத்த முடியாது. இதை விண்டோஸ் இயங்குதளங்களினுடைய ஒரு மாபெரும் குறை என்றே கூட கூறலாம். சுருக்கமாக சொல்லப்போனால் விண்டோஸினுடைய Partition களை லினக்ஸ் இயங்குதளத்தால் அணுக முடியும் ஆனால் லினக்ஸினுடைய Partition களை விண்டோஸ் இயங்குதளத்தால் அணுக முடியாது.

எவ்வளவோ கண்டுபிடிப்புகளையும், புதிது புதிதாக இயங்குதளங்களையும், மென்பொருள்களையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் மென்பொருள் நிறுவனத்தால் இது போன்ற (விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்துக் கொண்டு லினக்ஸ் இயங்குதளங்களினுடைய Partition களை அணுகுதல்) ஒரு சிறப்புமிக்க செயல்களை கூட செய்ய முடியாதா என்ன.

இதற்குப் பின்னால் ஏதாவது அரசியல் இருக்கலாம். அல்லது அவர்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கும் Monopoly வியாபாரத் தந்திரத்திற்கு ஊறு விளைவிக்க கூடியதாக இருக்கலாம்.

எனக்கும் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் விண்டோஸில் இயங்குதளத்தில் FAT16, FAT32, NTFS இந்த File Format களைத் தவிர வேறு எதுவுமே பயன்படுத்த முடியாதா?. இதில் NTFS கோப்பு முறை அண்மைய வருடங்களில் தான் கொண்டு வரப் பட்டது. ஒரு கோப்புமுறையினைக் கூட புதிதாக விண்டோஸ் இயங்குதளத்தில் கொண்டு வர முடியாதா? அல்லது கொண்டு வந்தால் விண்டோஸ் இயங்குதளத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதா?. ஆனால் லினக்ஸ் இயங்குதளங்களை எடுத்துக்கொண்டால் 100 மேற்ப்பட்ட கோப்பு முறைகளை கையாளும் வகையில் வடிவமைத்திருக்கின்றனர்.

லினக்ஸில் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கோப்பு முறை ext4 கோப்பு முறை. இந்த ext4 கோப்பு முறை பல சிறப்புகளைக் கொண்டது. இதைப் பற்றிக் கூற வேண்டுமானால் தனியாக ஒரு பதிவில்தான் கூற வேண்டும் இப்பொழுது வேண்டாம். லினக்ஸினுடைய இருப்பியல்பான கோப்பு முறைகள் ext2, ext3, ext4. அதாவது ext வகையாறாக்கள். இந்த கோப்பு முறைகளைத் தவிர வேறு கோப்பு முறைகளக் கொண்டும் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் மேலே கண்ட மூன்று கோப்பு முறைகளைத் தவிர வேறு கோப்பு முறைகளில் நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்த முடியுமா?.

இதுவரை பதிவினுடைய தலைப்பிற்கு சம்பந்தமில்லாத தகவல்களைப் பார்த்தோம். இப்பொழுது பதிவினுடைய தலைப்பிற்குள் செல்வொம்.

உபுண்டு லினக்ஸ் மட்டுமல்லாது மற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்ன வென்றால் லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்துக் கொண்டு விண்டோஸ் இயங்குதளத்தினுடைய கோப்புகளை எடுக்க முடியும் என்பது. அதாவது விண்டோஸ் இயங்குதளத்தினுடைய கோலன்களை ( C: D: E: F: .........) அணுக முடியும். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு லினக்ஸில் இருக்கும் ஒரு கோப்பினை எடுக்க முடியாது.

உதாரணமாக உபுண்டு லினக்ஸில் இணையத்தினைப் பயன்படுத்தி ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்கிறோம் அதை விண்டோஸிற்கு கொண்டு வந்து பயன்படுத்த வேண்டுமானால் தரவிறக்கம் செய்த அந்த கோப்பினை விண்டோஸினுடைய கோலனுக்குள் Copy & Paste செய்து பயன்படுத்த வேண்டும்.

இந்த பிரச்ச னையைத் தீர்க்கத்தான் ext2fsd எனும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளின் அளவு 2.5 MB தான். இதை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

இந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருளின் இணையதள முகவரி : http://www.ext2fsd.com/ .

எப்படி பயன்படுத்துவது:

தரவிறக்கம் செய்த கோப்பு .zip முறையில் சுருக்கப்பட்டு இருக்கும் , முதலில் Extract செய்ய வேண்டும். முதல் படி முடிந்து விட்டது.

பிறகு விண்டோஸினுடைய Command Prompt னை திறக்க வேண்டும்.

விண்டோஸினுடைய Command Prompt னை திறக்க எளிய வழி Windows Key + R கொடுத்து கிடைக்கும் விண்டோவில் cmd என தட்டச்சு செய்து Enter key னை அழுத்தவும்.

Command Prompt -ல் CD கட்டளையினப் பயன்படுத்தி ext2fsd மென்பொருளை எங்கு Extract செய்து வைத்திருக்கிறீர்களோ அங்கு செல்லவும்.

உதாரணமாக:
நான் E:\SOFTWARES\ext2fsd என Extract செய்து வைத்திருந்தேன். இதற்காக நான் Command Prompt -ல் கொடுத்த கட்டளை.

E: (என்டர் கீயினை அழுத்தினேன்)
CD SOFTWARES (என்டர் கீயினை அழுத்தினேன்)
CD ext2fsd (என்டர் கீயினை அழுத்தவும்)

நீங்கள் எங்கு Extract செய்து வைத்திருக்கிறீர்களோ அதற்குத் தகுந்தாற் போல் கொடுத்துக் கொள்ளுங்கள்.

படம்-1

இந்த கட்டளையெல்லாம் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் ext2fsd அடைவிற்குள் இருப்பீர்கள். இப்பொழுது cd Setup எனக் கொடுத்து என்டர் கீயினை அழுத்துங்கள். இப்பொழுது Setup என்னும் அடைவிற்குள் இருப்பீர்கள்.

dir எனக் கட்டளைக் கொடுத்தால் உள்ளே உள்ள கோப்புகள் அனைத்தையும் காட்டும்.


படம்-2

setupu.bat என தட்டச்சுச் செய்து என்டர் கீயினை அழுத்துங்கள். அழுத்தியவுடன் நிறுவுதலுக்குண்டான அமைப்புக் கட்டளைகள் காட்டப்படும். நீங்கள் நிறுவியிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பொறுத்து நிறுவுதல் கட்டளைக் கொடுக்கவும்.

உதாரணமாக: நீங்கள்

Windows XP நிறுவியிருந்தால்
setup wxp i386 எனக் கொடுக்கவும்.

Windows 7 நிறுவியிருந்தால்
setup wlh i386 எனக் கொடுக்கவும்.

கட்டளைகளைக் கொடுத்து என்டர் கீயினை அழுத்தினால் உங்களுக்கு driver successfully installed என ஒரு செய்திக் கிடைக்கும்.

படம்-3

அவ்வளவுதான் Command Prompt -ல் வேலைகள் முடிந்து விட்டது. Command Prompt -னை Minimize செய்து வைத்து விட்டு. நீங்கள் Extract செய்தவைத்திருக்கும் ext2fsd Folder க்குள் சென்று Ext2Mgr என்று ஒரு கோப்பு இருக்கும். அதை Double Click செய்யுங்கள்.


படம்-4
Click செய்தவுடன் படம்-4 உள்ளதைப் போன்று Ext2fsd Manager கிடைக்கும் அதில் வன்வட்டினுடைய அனைத்து Partition -களும் காண்பிக்கப்படும் லினக்ஸ் Partition கள் உட்பட.

படம்-5
அதில் உங்களுக்கு லினக்ஸினுடைய எந்த Partition ஐ விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதன் சுட்டியினை வைத்து Right Click செய்யுங்கள். உங்களுக்கு கிடைக்கும் தேர்வில் Change Drive Letter என்பதை சொடுக்குங்கள். நீங்கள் சொடுக்கியவுடன் படம் -6 ல் உள்ளது போன்ற திரை கிடைக்கும்.

படம்-6

அதில் Add எனும் பொத்தானை அழுத்துங்கள். அழுத்தியவுடன் படம் -7 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.



படம்-7
இதில் Drive Letter னை அதுவே Default ஆக அமைத்துக்கொள்ளும். இதை நீங்கள் விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஒரு நிபந்தனை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் Drive Letter களை நீங்கள் கொடுக்கக் கூடாது. ஆகையால நீங்கள் இதில் ஒன்றும் மாற்றம் செய்ய வேண்டாம்.

இந்த திரையில் உள்ள OK எனும் பொத்தனை அழுத்துங்கள். அழுத்தியவுடன் படம்-8 ல் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.



படம்-8

இந்த திரையில் அமைக்கப்பட்ட Drive Letter Mount Points எனும் வரிசைப் பெட்டியினுள் காண்பிக்கப்படும். அவ்வளவுதான் Done எனும் பொத்தானை அழுத்துங்கள்.

படம்-9
அழுத்திய பிறகு Menu bar க்குச் சென்று Tool என்பதினை சொடுக்கி Refresh and Reload என்பதைத் தேர்வு செய்து சொடுக்குங்கள்.

படம்-10
படம்-11
லினக்ஸினுடைய Partition -ல் உள்ள கோப்புகளை பார்வையிட My Computer செல்லுங்கள். அதில் நாம் அமைத்த Drive Letter உடன் கோலன் உருவாகியிருக்கும். அதை திறந்து லினக்ஸினுடைய கோப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

படம்-12
என்னுடைய மடிக்கணினியில் உள்ள உபுண்டு 10.10 லினக்ஸினுடைய root அடைவின் கோப்புகள்

என்னுடைய மடிக்கணினியில் உள்ள உபுண்டு 10.10 லினக்ஸினுடைய home அடைவின் கோப்புகள்

Sep 15, 2011

லினக்ஸ் இப்பொழுது.........

படத்தின் மீது சொடுக்கி பெரிதுப்படுத்தி பாருங்கள். அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் லினக்ஸ் எப்படி வளச்சியடைந்து இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

Aug 30, 2011

ஏன் வன்வட்டில் (Hard Disk) நான்கு Primary Partition களுக்கு மேல் பிரிக்க முடிவதில்லை


நம்மால் வன்வட்டில் நான்கு Primary Partition களுக்கு மேல் பிரிக்க முடியாது. இதற்கு MBR (Master Boot Record) னுடைய அமைப்புத்தான் காரணம். Master Boot Record ஆனது Partition Table னை சேமித்து வைக்க 64-Bytes னை மட்டும்தான் எடுத்துக்கொள்கிறது.

ஒரு Partition னினுடைய தகவலை சேமிக்க 16 - Bytes னை எடுத்துக்கொள்கிறது. ஒரு Partition க்கு 16 - Bytes வீதம் 4 Partition களுக்கு 64 Bytes. அதாவது 64 Bytes -ல் நான்கு Partition களினுடைய தகவலைதான் சேமிக்க முடியும். 4 Primary Partition கள் பிரித்தது போக மீதம் உள்ள Bytes கள் Unusable ஆக மாற்றப்படும்.

சரி அப்படியென்றால் ஒரு வன்வட்டில் நான்கு Partition கள் தானே வைத்துக்கொள்ள முடியும். ஆனால் நாம்தான் நிறைய Partition பிரித்து வைத்திருக்கிறோமே என்று கேட்கலாம். வன்வட்டில் 4 primary partition களுக்கு மேல் பிரிக்க முடியாது என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. (கவனிக்க வேண்டிய விஷயம் நமக்கு 4 Primary Partition களுக்கு மேல் தேவைப்பட்டால் Extended Partition ல் உள்ள Logical Partition ஐ Primary Partition ஆக பயன்படுத்திக்கொள்ளலாம்).

வன்வட்டில் Primary Partition போக அடுத்ததாக பிரிக்கப்படும் Extended Partition அதாவது Logical Partition னின் தகவல்கள் Master Boot Record ல் சேமிக்கப்படாது. Extended Boot Record ல் சேமிக்கப்படும். Master Boot Record -ல் உள்ளது போல மீதம் உள்ள இடம் Unusable ஆக மாற்றப்படும்.


Jul 31, 2011

இந்திய நீதிமன்றங்களில் உபுண்டு லினக்ஸ்

இந்தியாவினுடைய அனைத்து நீதிமன்றங்களும் கடந்த நான்கு வருடங்களாக RHEL (Redhat Enterprise Linux) 5.0 யினை பயன்படுத்திக்கொண்டிருந்தன. ஆனால் தற்பொழுது இந்தியாவினுடைய உச்சநீதிமன்றம், இந்தியாவினுடைய அனைத்து நீதிமன்றங்களும் உபுண்டு 10.4 -னைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. தோராயமாக 17,000 நீதிமன்றங்கள் இருக்கலாம். மேலும் உச்ச நீதிமன்றம் , அனைத்து நீதிமன்றங்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட (மறு உருவாக்கம் செய்யப்பட்ட) உபுண்டு DVD யினை கொடுத்துள்ளது.

ஒவ்வொரு நீதிமன்றமும் குறைந்தது ஐந்து கணினிகளைப் பயன்படுத்தி கொண்டு இருக்கிறது. ஐந்து கணினிகளையும் 17,000 நீதிமன்றங்களுடன் பெருக்கினால் , 85,000 கணினிகள் உபுண்டு லினக்ஸைப் பெறும்.

உச்சநீதிமன்றம் உபுண்டு லினக்ஸினைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இதை ஒரு சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து அரசுத்துறை நிறுவனங்களும், அலுவலகங்களும் லினக்ஸினைப் பயன்படுத்த முன் வர வேண்டும். இந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. நான் கீழே கொடுத்திருக்கும் இணைப்பிணை சொடுக்கி உச்ச நீதி மன்றம் உபுண்டு லினக்ஸிற்காக என்னென்னவெல்லாம் செய்திருக்கிறது என்று பாருங்கள். உபுண்டு நிறுவுதலும் மற்றும் சிறப்புகளும் எனும் தலைப்பில் ஒரு காணொளியினையும் அளித்திருக்கிறது.

இதைப்போல் தமிழக அரசு அளிக்கவிருக்கும் இலவச மடிக்கணினியில் லினக்ஸை நிறுவிக்கொடுத்தால் தமிழக அரசிற்கு 91.2 கோடி மிச்சமாகும். அத்துடன் லினக்ஸை பயன்படுத்தும் ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழும். ( ரிச்சர்ட் ஸ்டால்மன் ஒருமுறை கேரளாவிற்கு வந்திருக்கும் பொழுது , கேரளாவைப் போல் தமிழகமும் அனைத்துப் பள்ளிகளிலும் லினக்ஸைப் பயன்படுத்தி ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டார் ).

மேலும் தெரிந்துக்கொள்ள:
http://www.sci.nic.in/e-committee.htm
http://fullcirclemagazine.org/issue-51/

May 16, 2011

உபுண்டு லினக்ஸில் ASP .NET

எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த பருவத்திற்குண்டான WebTechnology பாடத்திற்கு WebTechnology Lab உள்ளது.இந்த WebTechnology Lab க்கான பாடத்திட்டத்தில் Java, JSP, Servlet, JDBC Connectivity, Servlet+Database Connectivity, HTML, JavaScript, CSS , ASP.NET இந்த தலைப்புகளில்லெல்லாம் பயிற்சிகளினை செய்து பார்த்தோம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பயிற்சிகளையெல்லாம் நாங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் செய்து பார்க்கவில்லை அனைத்துப் பயிற்சிகளையும் முழுவதுமாக அகம் திறந்த மென்பொருள்களின் (Open Source)மூலம் செய்து பார்த்தோம்.

இதற்கு முழு முதற் காரணம் இந்த பாடத்தினை எங்களுக்கு கற்பித்த ,எங்கள் மரியாதைக்குரிய பேராசிரியர்தான் (பாடத்தை தெளிவாகவும், விரிவாகவும் கற்றுக்கொடுப்பவர், புதுமையாக செய்ய வேண்டும் என்று சிந்திப்பவர்.)

மூண்றாமாண்டில் உள்ள மற்ற மாணவர்களெல்லாம் இந்த பயிற்சிகளினை விண்டோஸ் இயங்குதளத்தில் செய்து பார்த்த பொழுது , எங்கள் மாணவர்கள் மட்டும் லினக்ஸ் இயங்குதளத்தில் பயிற்சிகளினை செய்தோம். இந்த பாடத்திற்கு நாங்கள் பயன்படுத்திய அகம் திறந்த மென்பொருள்கள்.

இயங்குதளம் (Operating System) : உபுண்டு 10.04 LTS
IDE (Integrated Development Environment) : Eclipse JEE Helios
இணைய வழங்கி (Web Server) : Apache Tomcat 7.0
தகவல் தளம் (Database) : PostgreSql , PgAdmin III, MySQL
இணைய உலாவி (Web Browser) : Mozilla Firefox 3.6.x
உரை எழுதி (Editor) : gEdit, nano , VI

நான் மேலே கூறியுள்ள மென்பொருள்களின் உதவியோடு இணைய தொழில்நுட்பம் பாடத்தினை சிறப்பாக கற்றுக்கொண்டோம்.

இந்த பாடத்தில் ஒரே ஒரு பயிற்சிக்காக மட்டும் நாங்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த பயிற்சி ASP.NET. இதையும் நாங்கள் அகம் திறந்த மென்பொருள்களின் உதவியோடு செய்ய முடியுமா என முயற்சி செய்த பொழுது முடியும் என விடை கிடைத்தது அந்த மென்பொருள்தான் Mono Develope இந்த Mono Develope மென்பொருளைக்கொண்டு எப்படி .NET Program களை இயக்குவது என்பதைப் பற்றிதான் இந்த பதிவு.

படம் -2

படம்-3
நாம் எப்படி Servlet, JSP (Java Server Pages) களை இயக்க Apache Tomcat Server -னை பயன்படுத்துகிறமோ, .NET Application களை இயக்க IIS, PWS பயன்படுத்துகிறமோ அது போல Mono Develope மூலம் .NET Program களை இயக்க லினக்ஸில் (நான் உபுண்டு லினக்ஸில் நிறுவினேன்) XSP எனும் Server வேண்டும்.

முதலில் Mono Develope னை ubuntu Software Center சென்று நிறுவிக்கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் XPS server நிறுவ வேண்டுமல்லவா அதற்கு Synaptic Manager சென்று search box -ல் xsp எனக் கொடுத்து Version 2 என்பதை தேர்வு செய்து Apply கொடுங்கள்.

இப்பொழுது இணைய இணைப்பின் உதவியிடன் உபுண்டு xsp serverனை நிறுவும். நிறுவல் முடியும் வரை காத்திருக்கவும். அவ்வளவுதான் முடிந்து வேலை நாம் இனிமேல் .NET Application களை உபுண்டு லினக்ஸிலேயே பயன்படுத்தலாம்.

ஒரு சிறிய நிரலை எப்படி எழுதி இயக்குவது என்று பார்ப்போம்:

படம் -4

Applications ->Programming -> சென்று Mono Develop மென்பொருளை திறந்துக்கொள்ளுங்கள் (பார்க்க படம் -2 ).

MonoDevelop மென்பொருளின் Menu Bar -ல் File ->New ->WorkSpace என்று கொடுங்கள்.(பார்க்க படம் -4)

படம்-5
WorkSpace ஐ Click செய்தவுடன் கிடைக்கும் சாளரத்தில் C# -> ASP.NET-> WebApplication என்பதை தேர்வு செய்து Name : என்பதில் நிரலினுடைய பெயரினை கொடுத்து OK button ஐ அழுத்தவும். (பார்க்க படம் -5)

படம் - 6
OK button ஐ அழுத்திய பிறகு கிடைக்கும் சாளரத்தில் நம்முடைய நிரலை எழுத தொடங்க வேண்டியதுதான். எனக்கு .NET தெரியாது, இதில் நான் எழுதியிருக்கும் நிரல் சோதனை செய்து பார்பதற்காக எழுதியது. (பார்க்க படம் - 6)


படம் -9

நீங்கள் ஏற்கனவே Java Servlet, JSP (Java Server Pages) க்காக Tomcat Web Server ஐ நிறுவியிருந்தால் ஒரு சிறிய பிரச்சனை வரும். அது என்னெவென்றால் Tomcat Web Server ஆனது தனது பயன்பாட்டிற்காக 8080 என்ற Port No ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும்.

ஆகையால் நமது MonoDevelp காகான் XSP Web Server னினுடைய Port No ஐ மாற்ற வேண்டும். அதற்கு Menu Bar ல் Project -> நீங்கள் கொடுத்த நிரலுக்குண்டான பெயருடன் Options என்று இருக்கும். அதை Click செய்யுங்கள்.

உதாரணமாக நான் HelloWorlKathirvel என்று கொடுத்திருக்கிறேன். அப்படியானால் HelloWorldKathirvel Options என்று இருக்கும். (பார்க்க படம் -9)

படம் - 10

Options Menu வை Click செய்தவுடன் கிடைக்கும் சாளரத்தில் Run ->XSP Web Server என்பதை click செய்யுங்கள். Click செய்தவுடன் வலது பக்கமாக கிடைக்கும் விபரபட்டியலில் Port No என்பதில் 8080 என்று இருக்கும். அதை 8081 என்று மாற்றி விடுங்கள். மாற்றம் செய்து OK button ஐ அழுத்துங்கள்.(பார்க்க படம் -10) அவ்வளவுதான்.

கவனிக்கவும் 8080 Port No ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது என்ற பிழைச்செய்தி கிடைத்தால் மட்டும் மாற்றவும் அல்லது ஏற்கனவே Apache Tomcat Web Server நிறுவியிருந்தால் மட்டும் மாற்றவும்.

இப்பொழுது நிரலை இயக்குவதற்கு MenuBar ல் Build சென்று Build All கொடுங்கள் அடுத்து MenuBar -ல் Run என்பதை Click செய்யுங்கள்.

இப்பொழுது உங்களது நிரலுக்குண்டான வெளியீடு இணைய உலாவியின் (FireFox - நெருப்புநரி ) மூலம் நமக்கு கிடைக்கும்.

ஏதேனும் சந்தேகம் அல்லது புரியவில்லை என்றால் படத்தைப் பெரிது படுத்திப் பார்த்துக்கொளுங்கள்.




நான் எழுதிய நிரலுக்குண்டான வெளியீடு இணைய உலாவியில் காண்பித்தப் பொழுது.

Apr 23, 2011

Full Circle Magazine னினுடைய 48-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

Full Circle Magazine இதழ் தனது நான்காவது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது.

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 48-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

Mar 26, 2011

Full Circle Magazine னினுடைய 47-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 47-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

Mar 4, 2011

ஒருவேளை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்திருந்தால் (நகைச்சுவைக்காக மட்டும்)

கூகுளை உருவாக்கியிருந்தால் ?


பாராசூட்டை கண்டுபிடித்திருந்தால்?



Intelligent Car -ஐ கண்டுபிடித்திருந்தால்

Toilet உதவியாளரை உருவாக்கியிருந்தால்?

Monopoly - யினை உருவாக்கியிருந்தால் (ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் ) இல்லை,இல்லை நான் இந்த விளையாட்டில் சொன்னேங்க


Leaornardo Da vinci யினுடைய வரைப்பலகையை கண்டுபிடித்திருந்தால்?

WalMart -ஐ வாங்கியிருந்தால் ?


Marriage Album த்தை வடிவமைத்திருந்தால் ?