எனது பல்கலைக்கழ்கத்தில் 24 மணி நேர WiFi இணையதள வசதி உள்ளது.நான் வலைப்பூ ஆரம்பித்தது முதற்க்கொண்டு , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளில் 75% சதவிகித பதிவுகள் பல்கலைக்கழகத்தின் WiFi வசதியின் உதவியுடன்தான் எழுதியிருக்கிறேன்.இந்த பதிவுகூட பல்கலைக்கழ்கத்தில் உள்ள WiFi இணையதள வசதியின் மூலம்தான் எழுதினேன்.விடுதியிலும் WiFi வசதி 24 மணி நேரமும் உண்டு.நான் விடுதியில் இருப்பதால் இணைய வசதியினை பெரும்மளவு பயன்படுத்திக்கொள்கிறேன்.
கடந்த ஒரு வருடமாக WiFi இணைய வசதியினை மாணவர்கள் மடிக்கணினியில் எந்த விதமான அமைப்புகளையும் அமைக்கமால் பயன்படுத்திக்கொண்டிருந்தோம்.தற்பொழுது புதிதாக மடிக்கணினியில் அமைப்புகளை மேற்கொண்டால் மட்டுமே பயன்படுத்த முடியும்.நான் Windows XP இயங்குதளமும்,உபுண்டு இயங்குதளமும் பயன்படுத்தி வருகிறேன்.எங்கள் பல்கலைக்கழகத்தில் WiFi யினை மடிக்கணியில் இணைப்பதற்க்காக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டி கோப்பில் (Guide File in PDF Format) Windows XP,Windows-7,Windows Vista இந்த மூன்று இயங்குதளத்திற்கு உள்ள வழிகள் மட்டுமே இருந்தது.லினக்ஸ் இயங்குதளத்திற்கு உள்ள வழிகாட்டிகள் எதுவுமே கொடுக்கப்படவில்லை.என்னைப் போன்று லினக்ஸ் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயம்தான்.
Windows XP இயங்குதளத்தில், வழிகாட்டியில் கொடுத்துள்ளதுபடி செய்து பார்த்தேன்.ஏனோ தெரியவில்லை WiFi Configuration சரியாக அமையவில்லை.சரி உபுண்டு லினக்ஸில் முயற்சி செய்துப்பார்ப்போமே என முயற்சி செய்தபொழுது மிக எளிதாக WiFi யின் மூலம் இணையதள வசதியினை இணைத்துவிட்டேன்.இதை எப்படி செய்தேன் என்பதை பகிர்ந்துக்கொள்கிறேன்.இது எனது பல்கலைக்கழ்கத்தில் உபுண்டு லினக்ஸைப்பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறேன்.
செய்முறை:
- மடிக்கணினியில் WiFi க்கு உண்டான Power Button ஐ அழுத்தினேன்.
- Power Button ஐ அழுத்தியவுடன் உபுண்டு லினக்ஸில் மேல்புற பட்டையில் (Top Panel) Network Configuration னுடைய Icon இல் PERIYAR MANIAMMAI UNIVERSITY என்றுக் காட்டியது.
- PERIYAR MANIAMMAI UNIVERSITY என்பதைக் கிளிக் செய்தேன்.
- படம்-1 -ல் உள்ளதைப் போன்ற ஒரு சாளரம்(Window) தோன்றியது.மேலே படம்-1 கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
Wireless Security -------: என்பதில் WPA & WPA2 Enterprise... என்றுக்கொடுத்தேன்.
Authentication ------------: என்பதில் Protected EAP (PEAP) என்றுக்கொடுத்தேன்.
Anonymous Identity ----: என்பதில் எதுவும் கொடுக்கவில்லை
CA Certificate ------------: என்பதிலும் எதுவும் கொடுக்கவில்லை
PEAP Version -------------: என்பதில் Automatic என கொடுத்தேன்.
Inner Authentication----: என்பதில் MSCHAPv2 எனக்கொடுத்தேன்.
User Name ----------------: என்பதில் என்னுடைய பயனாளர் பெயரினையும்
Password -------------------: என்பதில் என்னுடைய கடவுச்சொல்லையும் கொடுத்தேன்
மேலே கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்தபிறகு Connect Button ஐ அழுத்தினேன்.இதைத் தொடர்ந்து அடுத்ததாக தோன்றிய Window வில் Ignorance எனும் Button ஐ அழுத்தினேன்.அவ்வளவுதான் மிக அருமையாக WiFi மூலம் இணைய வசதி இணைப்புக்கிடைத்தது.இந்த பதிவு முழுவதையும் இவ்வாறு செய்து கிடைத்த இணைப்பின் மூலமே எழுதினேன்.
என்னதான் இருந்தாலும் லினக்ஸ் லினக்ஸ் தாங்க , லினக்ஸைப் பயன்படுத்துவோம் நேரத்தை மிச்சப்படுத்துவோம்,மகிழ்ச்சியடைவோம்.
10 comments:
WIFI ok, Sound என்னாச்சு,
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி குமரேசன்.ஒலி வசதியினை இன்னும் சரிசெய்யவில்லை.
wifi connecting post is very usefull 4 (pmu) students.
thanks kathir..........
நன்றி சரவணன்
நல்ல அருமையான தகவல்
உன்னுடைய பதிவை இனணத்துவிட்டேன் நல்ல பதிவு என்றும் அன்புடன் நண்பன் சந்திரசேகரன்
Good article.keep it up . thanks
Thanks lot arulmozhi r sir
Thanks சந்திரசேகரன்
Thanks பொன்மலர்
Post a Comment