Aug 2, 2010

பெடோரா லினக்ஸ் 13

பெடோரா லினக்ஸ் Redhat நிறுவனத்தால் வெளிடப்படும் ஒரு லினக்ஸ் வழங்கலாகும்.பெடோரா லினக்ஸைப் பற்றிய தகவல்களை http://fedoraintamil.blogspot.com/ வலைப்பூவில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.சமீபத்தில் பெடோரா லினக்ஸின் புதிய வெளீயீடான பெடோரா லினக்ஸ்-13 வெளிடப்பட்டுள்ளது.நீங்கள் பெடோரா லினக்ஸின் புதிய பதிப்பினை (பெடோரா-13) http://fedoraproject.org/ தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.இந்த தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கம் செய்யும் இயங்குதளத்தினுடைய கோப்பு ISO வடிவில் இருக்கும்.இந்த ISO கோப்பினை CD/DVD யில் எழுதும் மென்பொருள்களின் உதவியுடன் Bootable CD/DVD யாக எழுதிக்கொள்ளுங்கள்.CD/DVD யில் எழுதி முடித்தவுடன் நீங்கள் பொடோரா லினக்ஸ் 13 இயங்குதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பெடோரா லினக்ஸை நிறுவுவது எப்படி என்பதை PDF கோப்பாக உருவாக்கிக் கொடுத்துள்ளேன்.இங்கு சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

பெடோரா லினக்ஸ் தமிழில்

பொடோரா லினக்ஸின் புதிய பதிப்பான பெடோரா-13 னை Live பதிப்பாக தரவிறக்கிக்கொண்டேன்.675 MB அளவு இருக்கிறது பல்கலைக்கழகத்தினுடைய WiFi இணைய வசதி மூலம் தரவிறக்கிக் கொண்டேன்.சரியாக ஒன்றரை மணி நேரத்தில் முழுவதும் தரவிறங்கிவிட்டது.தரவிறக்கிய கோப்பினை என்னுடைய பென்டிரைவில் Live USB Creater மென்பொருளின் உதவியுடன் பூட்டபிள் ஆக எழுதிக்கொண்டேன்.இரண்டு நிமிடத்தில் பெடோரா லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த தயாராகிவிட்டது. பெடோரா லினக்ஸினை பென்டிரைவில் எப்படி பூட்டபிள் ஆக பயன்படுத்துவது என்பதை இங்கு கொடுத்துள்ளேன்.

3D Compiz Fusion அமைப்பு

பென்டிரைவினை எனது மடிக்கணினியில் உள்ள USB Port ல் இணைத்து மடிக்கணினியினை பென்டிரைவில் இருந்து தொடங்கினேன்.தொடக்கத்திரையே மிகவும் அழகாக இருந்தது.விரைவாக பூட் ஆகுமாறு வடிவமைத்து இருக்கிறார்கள்.ஒலி வசதி மிகவும் துல்லியமாக வேலைச் செய்தது.இதுவரையில் வந்த எந்த பொடோரா லினக்ஸிலும் என்னுடைய மடிக்கணினியில் உள்ள WiFi வசதி வேலை செய்யவில்லை.இந்த பெடோரா-13 பதிப்பிலும் WiFi வேலை செய்யவில்லை.
பெடோரா லினக்ஸினை முதன் முதலாக இந்த பதிப்பில்தான் தமிழ் மொழியில் பயன்படுத்திப் பார்த்தேன்.அவ்வளவு நேர்த்தியாக தமிழ் படுத்தியிருக்கின்றனர்.

உலகில் முன்னனியில் உள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் வழங்கும் இயங்குதளத்தை பயனாளர்கள் பல ஆயிரங்களைக் கொடுத்து இயங்குதளத்தைப் பெற்று பயன்படுத்துகின்றனர்.ஆனால் அவ்வாறு அவர்கள் விற்பனை செய்யும் ,இயங்குதளத்தை பெறும் பயனாளர்கள் அவரவர்கள் மொழியில் பயன்படுத்துமாறு செய்துகொடுக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நினைப்பே இல்லையென்றே நினைக்கிறேன்.

ஆனால் இலவசமாக வழங்கப்படும் பெடோரா,உபுண்டு மற்றும் இலவசமாக வழங்கும் இன்னும் எத்தனையோ லினக்ஸ் பதிப்புகள் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகளில் தமிழ் உட்பட வெளிவருகிறது.
இவ்வாறு எற்படுத்தி வைத்திருக்கும் வசதிகளைக்கூட மிகவும் அழகாக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.இதற்கு பெடோரா 13 லினக்ஸில் உள்ள தமிழில் பயன்படுத்தும் வசதியினை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

சாளரத்தினை சலனத்துடன் படம்பிடித்தது

பெடோரா லினக்ஸினை நான் நிகழ்வட்டு பதிப்பாகத்தான் பயன்படுத்திப்பார்த்தேன்.நிகழ் பதிப்பு என்பதால் OpenOffice வசதியினை இணைக்காமல் வைத்திருக்கிறார்கள்.இதை நான் பெடொரா லினக்ஸினுடைய ஒரு மிகப் பெரிய குறை என்றே கூறுவேன்.புளூடூத் வசதி மிக அருமையாக வேலை செய்தது.

ஒலி வசதி வேலை செய்து பாடல் கேட்டப்பொழுது


கணினியினை மறுதொடக்கம் செய்தபொழுது
மொத்தத்தில் பொடோரா -13 ஒரு அழகான இயங்குதளம்.இதில் என்னை மிகவும் கவர்ந்தது இதைத் தமிழ்மொழி இடைமுகப்புடன் வடிவமைத்திருந்தது.(பெடோராவின் முந்தைய பதிப்பிலும் இந்த வசதி இருக்கிறது.)

பெடோரா லினக்ஸைப் பற்றிய விக்கிபீடியா கட்டுரை

2 comments:

இந்த தளத்தின் தற்காலிக உரிமையாளர். said...

தங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை.

இரா.கதிர்வேல் said...

// பா.ரமேஷ் said...
தங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை.//


Thanks Lot Ramesh