என்னுடைய 8-ம் வகுப்பு ஆசிரியர் இன்றைய தேதி வரை நான் படித்த உயர்நிலைப்பள்ளியிலேயே பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.நான் இன்றைய தேதி வரையிலும் என்னுடைய ஆசிரியருடன் தொடர்பில் உள்ளேன். அறிவு வேறு கல்வி வேறு என்று உணர்த்தியவர்.எனக்கு என்னுடைய கல்வி சம்பந்தமாக நிறைய உதவியவர்.கடந்த ஒரு வருடமாக கணினி பயன்படுத்தி வருகிறார்.அவர் இணையத்தை பயன்படுத்துவதற்க்காக Reliance Netconnect LXU-800 USBமோடத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.பள்ளி கோடை விடுமுறை என்பதால் ஊருக்கு சென்றுவிட்டார்.நான் மடிக்கணினி வைத்திருப்பதால் அவர் ஊருக்கு செல்லும் போது என்னிடம் Reliance Netconnect LXU-800 USBமோடத்தை நான் இணையத்தை பயன்படுத்துவதற்காக கொடுத்துவிட்டு சென்றார்.
- நான் என்னுடைய கணினியில் உபுண்டு 9.04 லினக்ஸை விண்டோஸ் இயங்குதளத்துடன் Install Inside Windows என்ற வசதியின் மூலம் நிறுவியுள்ளேன்.கணினியினை மறுதொடக்கம் செய்து உபுண்டு லினக்ஸை தேர்வு செய்து GRUB boot loader னுடைய menu விற்கு செல்வதற்க்காக Esc key யினை அழுத்தினேன்.Esc key யினை அழுத்தியவுடன் ஐந்து தேர்வுகளைக் காட்டியது
- அதில் முதலாவதாக இருந்த Ubuntu 9.0, kernel 2.6.28-11 generic என்பதை தேர்வு செய்து தட்டச்சு பலகையில் உள்ள ' e ' என்ற key யினை அழுத்தினேன்.
- அழுத்தியவுடன் மறுபடியும் மூன்று தேர்வுகளைக் காட்டியது அதில் இரண்டாவதாக இருந்த kernel /boot/vmlinuz-2.6.28-11 generic root=UUID......... என்பதை தேர்வு செய்து தட்டச்சு பலகையில் ' e ' key யினை அழுத்தினேன்.
- அழுத்தியவுடன் ........ro quit splash என்பதற்கு அருகில் தட்டச்சு பலையினுடைய சுட்டி(cusor) வந்து நின்றது.
- .........ro quit splash என்பதிலிருந்து single space விட்டு usbserial.vendor=0x0eab usbserial.product=0x9357 என்று தட்டச்சு செய்து Enter key யினை அழுத்தினேன்.
- Enter key யினை அழுத்தியப்பிறகு தட்டச்சு பலையில் ' b ' யினை அழுத்தினேன் அழுத்திவுடன் உபுண்டு லினக்ஸ் boot ஆகியது.
- முனையத்தை திறந்து lsusb என்று கொடுத்து ஒரு முறை சரி பார்த்துக்கொண்டேன்.
- அடுத்து Places => Computer => FileSystem => etc சென்று wvdial.conf என்ற கோப்பினை gEdit Text Editor -ல் திறந்துக் கொண்டேன்.
- அந்த கோப்பில் உள்ள அனைத்தையும் தேர்வுசெய்து Delete செய்து விட்டு கீழே கொடுத்துள்ள தகவலை copy செய்து paste செய்துக் கொண்டேன்.
Init1 = ATZ
Init2 = ATE0V1
Stupid Mode = Yes
Modem Type = Analog Modem
Baud = 115200
New PPPD = yes
Modem = /dev/ttyUSB0
ISDN = 0
Phone = "#777"
Password = 9363398504
Username = 9363398504
- password,username ஆகியவற்றில் என்னுடைய Reliance Netconnect LXU-800 மொடத்துக்கான எண்ணினை கொடுத்துள்ளேன்.நீங்கள் உங்களினுடைய மோடத்துக்கான எண்ணினை கொடுங்கள்.
- இந்த paste செய்து விட்டு கோப்பினை சேமித்தேன்.கோப்பினை சேமிப்பது மிகவும் முக்கியம்.கோப்பினை சேமித்து விட்டு முனையத்தை திறந்து wvdial என்று தட்டச்சு செய்து Enter key யினை அழுத்தினேன்.அவ்வளவுதான் மிக அழகாக Internet Connect ஆகியது.Internet Connect ஆகியவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
- இணைப்பை துண்டிக்க wvdial கட்டளையை பயன்படுத்திய அதே முனையத்தில் Ctrl+c பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும்.
- உபுண்டு 9.04 லினக்ஸில் இருப்பியல்பாக உள்ள நெருப்பு நரி உலாவியில் (Mozilla Firefox Browser) என்னால் இணையத்தை தொடர்ப்புக்கொள்ளமுடியவில்லை
- Reliance Netconnect LXU-800 usb மோடத்தைப் பயன்படுத்தி மென்பொருள்களையெல்லாம் விரைவாக நிறுவமுடிந்தது.
- இதை பயன்படுத்தி Applications=>Add / Remove Applications சென்று Internet பிரிவில் Arora என்னும் உலாவியை நிறுவிக்கொண்டேன்.இந்த உலாவியின் மூலம் இணையத்தில் உலாவ முடிந்தது என்னதான் இருந்தாலும் நம்ம நெருப்பு நரி மாதிரி இல்லீங்க.
- சரி வேறு எதாவது ஒரு வழியில் நெருப்பு நரியை பயன்படுத்தலாம் என்று wine மென்பொருளின் மூலம் நிறுவினேன்.இவ்வாறு நிறுவிய நெருப்பு நரி மூலம் இணையத்தில் உலாவ முடிந்தது.ஆனால் தமிழ் வலைப்பூக்கள் Font (எழுத்துரு) பிரச்சனையால் சரிவர தெரியவில்லை.
- சரி பொறுமையாக இருந்து விரைவிலேயே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவோம்.உங்களுக்கு தெரிந்தாலும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்
5 comments:
இந்த பதிவு கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. எனது உபுண்டு 9.10 இல் யூ எஸ் பி மோடத்தை நிறுவ முயற்சித்து பலனில்லாமல் இருந்தது. விண்டோஸ் கணணியில் முதன் முதலாக யுஎஸ்பி மோடத்தை இணைக்கும் போது போது அதில் உள்ள மென்பொருள் தானாக நிறுவிக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பை ஏற்படுத்த முடிந்தது. உபுண்டுவில் இந்த மென்பொருளை நிறுவும் வழிமுறை தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்க்கிறேன்.
வணக்கம் இரா.கதிர்வேல்.
எனக்கும் பிரகாஷ் அவர்களுக்கு இருக்கும் அதே கஷ்டம்தான்.
இணையம் செல்வதற்காக மட்டுமே நான் விண்டோஸ் பாவிக்கின்றேன்
நான் வைத்திருப்பது "Reliance Netconnect LXU-800 USB மோடம்
முடிந்தால் உதவவும்
இராஜராஜன்
//வனம் said...
வணக்கம் இரா.கதிர்வேல்.
எனக்கும் பிரகாஷ் அவர்களுக்கு இருக்கும் அதே கஷ்டம்தான்.இணையம் செல்வதற்காக மட்டுமே நான் விண்டோஸ் பாவிக்கின்றேன்
நான் வைத்திருப்பது "Reliance Netconnect LXU-800 USB மோடம்//
இந்த பதிவு Reliance Netconnect LXU-800 usb மோடத்துக்காக எழுதப்பட்டதுதான்.இதில் நான் கூறியிருக்கும் வழிமுறைப்படி முயற்சித்துப்பாருங்களேன்.
வணக்கம் இரா.கதிர்வேல்.
முயர்சித்து பார்கின்றேன், பின் தெரியப்படுத்துகின்றேன்
நன்றி
இராஜராஜன்
root@Kumar:/# wvdial
--> WvDial: Internet dialer version 1.61
--> Cannot open /dev/ttyUSB0: No such file or directory
--> Cannot open /dev/ttyUSB0: No such file or directory
--> Cannot open /dev/ttyUSB0: No such file or directory
Post a Comment